Wednesday, February 18, 2009

தனியே தன்னந்தனியே!!!!

விடுமுறை நாட்கள் சோம்பேறித்தனமாக
இருக்கும்.
அம்மா ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியாது!!
ஆனால் அம்மா வேலைக்குச் செல்லும்பொழுது
என்னை வீட்டில் வைத்து பூட்டிவிடுவார்.
பாட்டியிடமும் கண்டிப்பாக,” வெளியே
விடக்கூடாது !” என்று சொல்லிவிடுவார்.
அப்பாவும் எதுவும் சொன்னதில்லை.

வீட்டிலும் விளையாட்டுச் சாமான்கள்
கிடையாது(அம்மா தானே களிமண்ணால்
செய்து கொடுக்கும் சொப்பு சாமன்கள்
மட்டும் தான்)!!

நாங்கள் குடியிருந்த வீட்டில் 3 குழந்தைகள்.
இங்கோ நானொருத்தி மட்டும்!! அவர்களுடன்
கூட விளையாட அம்மா அனுப்ப மாட்டார்கள்.
வேலைகள் முடிந்த பின் பாட்டியுடன்
பல்லாங்குழி, தாயம் விளையாடலாம்.
சாயங்களில் ராமாயணம், மஹாபாரதம்
போன்ற கதைகள் சொல்வார் பாட்டி.

அம்மம்மா வீட்டுக்குச் செல்லும் பொழுது தான்
அம்மம்மா அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுடன்
விளையாட அனுப்புவார்.

தனிமை! தனிமை!தனிமை தான். எப்படிக்
கழித்தேன் அந்த நாட்களை என்று புரியவில்லை.
எனக்கு 8 வருடங்கள் கழித்து தம்பி. அவனோடுதான்
விளையாடுவேன். ஒரு தாயாய் அவனைப் பார்த்துக்
கொள்ள மிகவும் பிடிக்கும்.

”ஒரு நாள் அம்மாவிடம் எனக்கு போரடிக்கிறது”
என்றேன். புத்தகம் படிக்கிறாயா? என்றார்.
சரிம்மா! என்றேன். மாலை வரும்பொழுது
தனது பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்கள்
இதழ்கள் கொண்டுவந்துக் கொடுத்தார்.
அதில் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்த
ஒரு சின்ன புத்தகமும் இருந்தது. அடுத்த
நாள் மதிய உணவுக்கு முன்னரே படித்து
முடித்துவிட்டேன்.(அதான் போரடித்துக்
கொண்டு இருந்தேனே!!)

அம்மாவின் பள்ளி நூலகத்து புஸ்தகங்கள்
அம்மாவால் ஃபில்டர் செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டன. படிக்க படிக்க
இன்னும் இன்னும் என கேட்கும் நிலை
ஆனது. தினமும் தூக்கி வர அம்மா
கஷ்டப்படுவதைப் பார்த்து
“உங்களுக்குத் தொந்திரவு தராமல்
நானும் பள்ளிக்கு வந்து ஒரு ஓரத்தில்
அமர்ந்து எத்தனை புத்தகம் வேண்டுமோ
படிக்கட்டுமா?” என்றேன்.

ஒரு நாளைக்கு இவ்வளவு புஸ்தகம்
எடுக்கலாம் என்று வரம்பு இருக்கிறது,
ஆனாலும் வா பார்க்கலாம் என்றார்.

என் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து
அம்மாவுடன் வேலைப் பார்க்கும்
ஆசிரியைகள் தனது கணக்கில்
எனக்கு புத்தகம் எடுத்துக் கொடுப்பார்கள்.

அம்மா எங்கும் வெளியே செல்ல நேர்ந்தால்
எனக்கு மிகவும் பிடித்த கனகாம்புஜம் டீச்சர்
வகுப்பில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன்.

எத்தனையோ நாவல்கள்! விதம் விதமான
எழுத்தாளர்கள் எல்லாம் அப்போதுதான்
அறிமுகமானது.

படிக்கும் பழக்கத்தை அம்மாதான் ஏற்படுத்திக்
கொடுத்தார். என் தனிமை தீர்த்ததில், தீர்ப்பதில்
புத்தகங்களுக்கு முதல் இடம். அடுத்து என்
இனிய தோழி வானொலி.
:))

அன்று அம்மா என்னை வீட்டினுள் அடைத்து
வைத்ததும் நல்லதுக்குத்தான் என்று நான்
நினைக்கிறேன். இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை.என்
வேலை முடிந்ததும் வேறு என்ன செய்யலாம்?
என்று யோசித்து அதை முடிப்பேன்.

17 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல பாடல் அது

நட்புடன் ஜமால் said...

\\ஒரு தாயாய் அவனைப் பார்த்துக்
கொள்ள மிகவும் பிடிக்கும்.\\

மிக அழகு

நட்புடன் ஜமால் said...

\\என் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து
அம்மாவுடன் வேலைப் பார்க்கும்
ஆசிரியைகள் தனது கணக்கில்
எனக்கு புத்தகம் எடுத்துக் கொடுப்பார்கள்.\\

அப்பத்திலேர்ந்தா

வெண்பூ said...

//
இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை.என்
வேலை முடிந்ததும் வேறு என்ன செய்யலாம்?
என்று யோசித்து அதை முடிப்பேன்.
//

அய்யய்ய.. இன்னாது இது.. ஒரு இந்திய குடும்ப இஸ்திரீக்கான எந்த வேலையுமே நீங்க செஞ்சதில்லயா? வெரி பேட்.. வெரி பேட்.. :)))

அட்லீஸ்ட் மெகா சீரியல்???

ராமலக்ஷ்மி said...

தென்றல், நானும் அப்படியே உங்களைப் போலவே ஒரு home bird. நானுண்டு என் வேலையுண்டு.

தனியே தன்னந்தனியே என்று வருத்தப் படவே தேவையில்லை நம் மனதுக்கு நிறைவான ஹாபி இருந்தால்..சரிதானே?

கோபிநாத் said...

தனிமையில் இருக்கும் போது சில நல்ல பழக்கங்கள் கூட கத்துக்க முடியும்...இந்த பதிவுலகம் கூட அப்படி தான் வந்துச்சி எனக்கு ;))

நல்ல அனுபவம் ;)

ஆனா ஒன்னுக்கா உங்க டெம்லேட் கலரை முடிஞ்ச வேற கலருக்கு மாத்துங்க படிக்க கஷ்டமாக இருக்கு ;(

எம்.எம்.அப்துல்லா said...

சூப்பர் அக்கா....அனுபவம் முன் எதுவும் நிற்பதில்லை

:)

அமுதா said...

/*அன்று அம்மா என்னை வீட்டினுள் அடைத்து
வைத்ததும் நல்லதுக்குத்தான் என்று நான்
நினைக்கிறேன். இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை*/
உண்மை தான்

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அப்பவே புத்தகம் படிக்க ஆரம்பிச்சாச்சு.

pudugaithendral said...

அய்யய்ய.. இன்னாது இது.. ஒரு இந்திய குடும்ப இஸ்திரீக்கான எந்த வேலையுமே நீங்க செஞ்சதில்லயா? வெரி பேட்.. வெரி பேட்.. :)))//

ஆமாம் வெண்பூ


அட்லீஸ்ட் மெகா சீரியல்???//
அப்படின்னா என்ன??????
:( :)))

pudugaithendral said...

வருத்தமெல்லாம் படவில்லை ராமலக்‌ஷ்மி.

ஹோம் பேர்டாக இருப்பதால் தான் என்னால் பல வேலைகளைச் செய்ய முடிந்தது. ஹாபி இல்ல ஹாபீ....ஸ் இருக்கு அப்புறம் என்ன கவலை.

:))
வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

அனுபவம் முன் எதுவும் நிற்பதில்லை


ரொம்பச் சரியா சொன்னீங்க அப்துல்லா

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி அமுதா

தாரணி பிரியா said...

ஆஹா எனக்கும் புத்தகம் படிக்கும் அனுபவம் என் அம்மா ஒட்டி விட்ட பழக்கம். ஆனால் கொஞ்சம் உல்டா. நான் பக்கத்து வீட்டில் போய் அவர்களுக்கு தருகிற தொல்லைகளை தடுக்க என் அம்மா கையில் எடுத்த ஆயுதம் இது :).

இப்ப சாப்பிடும்போது கூட என் கையில் புத்தகம் இருக்கும்

pudugaithendral said...

இப்ப சாப்பிடும்போது கூட என் கையில் புத்தகம் இருக்கும்//

நீங்க கற்பனை செய்து பார்க்க முடியாத இடங்களில் கூட எங்கள் வீட்டில் புத்தகங்கள் இருக்கும்.

பாச மலர் / Paasa Malar said...

படிங்க..படிங்க..படிச்சுட்டே இருங்க..

pudugaithendral said...

படிங்க..படிங்க..படிச்சுட்டே இருங்க..//

கண்டிப்பா பாசமலர்.