Thursday, February 19, 2009

கனவுக் காணும் வாழ்க்கையாவும்... இறுதிப் பகுதி

மைசூர் யுனிவர்சிட்டி முதன் முதலாக
வெளிநாட்டில் தனது எக்ஷ்டென்ஷன்
கல்லூரிக்கான பதிப்பை இலங்கையில்
கொடுத்திருந்தார்கள்.

மாணவர்களுக்கு ஹிந்தி, கட்டாய பாடமாக
இருந்தது. (மற்ற மொழிகள் அங்கே செய்ய
முடியாது என்பதால்)

அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் ஹிந்தி போதிக்க
இந்திய கலாச்சார நிறுவனத்தினரிடம் கேட்டிருக்கிறார்கள்.
பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு, “ஆனா, ஆவன்னா
கற்றுக்கொடுத்து, எழுத்துப் பயிற்சிக்கே 6மாதம்
ஆகும்! இதில் 6மாததிற்குள் பாடம், இலக்கணம்
இதெல்லாம் சாத்தியமில்லை என்றுகையை
விரித்துவிட்டார்கள்.

என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் என் உறவினர் மகன் அங்கு வேலைப்
பார்த்துக்கொண்டிருந்தவர்,”என் அத்தை
இருக்கிறார்கள்! பேசிப்பாருங்கள்என்றதும்
கல்லூரியிலிருந்து அழைப்பு வந்து போனேன்.

ஹிந்தி பாடத்திட்டத்தை காட்டி, கலாச்சார
மையத்தில் சொன்னதையும் சொன்னார்கள்.
”6மாதம் பாலபாடம் படிக்க அவர்கள் பச்சைக்குழந்தை
இல்லை. +2முடித்த மாணவர்கள். என்னால்
முடியும் செய்து காட்டுகிறேன்!” என்று
சொன்னேன். ஆங்கில இலக்கியம் படித்திருப்பதால்
ஆங்கிலம் + ஹிந்தி இரண்டையும் நடத்தச்
சொன்னார்கள்.

கல்லூரியில் பேராசிரியர்(விசிட்டிங் லெக்சரதான் என்றாலும் )
என் கனவாச்சே! சந்தோஷமாக அயித்தானுக்கு
போன் போட்டுச் சொன்னேன். மிக மகிழ்ச்சி
அடைந்தார். ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம்
தான் வேலை, பிள்ளைகள் வீட்டுக்கு வருவதற்குமுன்
நான் வந்துவிடலாம். சரி என்று சொல்லி
சேர்ந்தேன். (என் தோழிகள் எல்லோருக்கும் காதில்
பயங்கர புகை. அவர்கள் மற்ற இடங்களில் இப்படி விசிட்டிங்
லெக்சரராக முயற்சி செய்த பொழுது 1.30மணி
நேரத்திற்கு 400 ஸ்ரீலங்கன் பணம் கொடுப்பதாகச்
சொன்னார்கள். எனக்கு 600 ரூபாய் :)))


ஹிந்தியில் ஒன்றும் தெரியாதே! எப்படி
பாடம், இலக்கணம் எழுதுவோம் என்று
பயந்து கிடந்த பிள்ளைகளிடம்,”ஹிந்தி
எனக்கும் தாய்மொழி இல்லை. தென் இந்தியாவைச்
சேர்ந்த என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள
முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்!
முடியும் என்று நம்பித் துவங்குவோம். பிறகுச்
சொல்லுங்கள்!!” என்றேன். இவ்வரிகள்
செய்த அவர்களுக்குள் மாஜிக் செய்தது.

1 மாதத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமல்ல
வார்த்தைகள் எழுதும் அளவுக்குத் தயாரானார்கள்.
(என் பாடம் நடத்தும் ஸ்டைல் மிகவும்
பிடித்திருபப்தாக நிர்வாகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்)
3ஆவது மாதம் நான் போர்டில் எழுதுவதை
நிறுத்தி விட்டு பாடக் குறிப்புக்களை
சொல்லச் சொல்ல அவர்கள் தானே எழுத ஆரம்பித்தனர்.
நாங்கள் இந்த செமஸ்டரில் அனைவரும் பாஸ்
செய்து காட்டுவோம்!” என்று சந்தோஷமாக
சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சாதித்த
திருப்தி தந்தது.

ரொம்ப நாளைக்கப்புறம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர்,
வோர்ட்ஸ்வொர்த் ஆகியோரின் பாடங்களுடன்
என ஆங்கில வகுப்பும் அருமையாக இருந்தது.
படித்த, மனதிற்கு மிகவும் பிடித்த வகுப்புக்களை
எனக்குக் கொடுத்து என் கல்லூரி பேராசிரியரார்
கனவையும் ஆண்டவன் நனவாக்கி விட்டான்.


முதல் செமஸ்டர் பரிட்சை நடத்த மைசூர்
யுனிவர்சிட்டியிலிருந்து வந்திருந்த பேராசிரியர்
ஹிந்தியில் மாணவர்களுக்கு தான் ஒரு டெஸ்ட்
வைத்துப் பார்த்து தேறினார்கள் என்றால் மட்டுமே
பரிட்சைக்கு அனுமதிப்பேன் என்றார்! விடைத்தாளைத்
திருத்திவிட்டு நேராக வந்து," you are a dedicated
teacher" என்று பாராட்டினார்.


நாம் ஆசைப்படுவது நியாயம் என்றால் அது கண்டிப்பாய்
நிறைவேறும். கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும்
ஓடமாகாது. நம் கனவு நனவாகும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

கல்லூரிப் படிப்புத் தடைப்பட்ட பொழுது மிக வருந்தினேன்.
என் கனவு நொறுங்கிபோனதில் துயரம் அதிகமாக
இருந்தது. அந்த வலியை மனதில் வைத்து வாழ்க்கை
என்னை இழுத்துச் சென்ற பாதையில் சென்று அங்கும்
என் வேலையை சிறப்பாகச் செய்தேன்.

அதன் பயன் தான் என் கனவு நனவானதாக நினைக்கிறேன்.
உன்கனவு நனவாகிவிட்டதில் மிக்க சந்தோஷ்ம் என
அப்பா, அம்மா, அயித்தான் எல்லோரும் மகிழ்ச்சி
அடைந்தனர்.

கனவு மெய்பட வேண்டும்என்று பாரதி கூட
ஏக்கத்துடன் பாடியிருக்கிறார். கனவு கண்டிப்பாய்
மெய்படும்.

12 comments:

நட்புடன் ஜமால் said...

அடுத்த பகுதியா

படிச்சிட்டு வாரேன்,

நட்புடன் ஜமால் said...

\\ஹிந்தி
எனக்கும் தாய்மொழி இல்லை. தென் இந்தியாவைச்
சேர்ந்த என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள
முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்!\\

சரியான ஊக்கம் தான்.

நட்புடன் ஜமால் said...

\\”நாங்கள் இந்த செமஸ்டரில் அனைவரும் பாஸ்
செய்து காட்டுவோம்!” என்று சந்தோஷமாக
சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சாதித்த
திருப்தி தந்தது.\\

ஆம்.

நட்புடன் ஜமால் said...

\\you are a dedicated
teacher" என்று பாராட்டினார்.\\

வாழ்த்துக்கள் டீச்சர்.

நட்புடன் ஜமால் said...

\\நாம் ஆசைப்படுவது நியாயம் என்றால் அது கண்டிப்பாய்
நிறைவேறும். கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும்
ஓடமாகாது. நம் கனவு நனவாகும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.\\

சரியே அக்கா ...

வித்யா said...

கனவு மெய்பட்டதில் சந்தோஷம் அக்கா:)

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

வருகைக்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

கனவு மெய்பட்டதில் சந்தோஷம் அக்கா:)//

உங்களின் வருகைக்கும் மிக்க நன்றி வித்யா.

நாகை சிவா said...

ரொம்ப சந்தோஷம்.

உண்மை தாங்க. அடிக்கடி நம் கனவில் காணும் விசயம் ஒரு நாள் நிஜமாக நடக்கும் போது அப்பொழுது இருக்கும் மகிழ்ச்சி இருக்கு பாருங்க சான்ஸ்சே இல்ல... (சிறுவயதில் கண்டது இப்பொழுது தான் ஒன்னு ஒன்னா நனவாக ஆரம்பித்து உள்ளது)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

'ஹிந்தி' பற்றி நீங்க கொடுத்த வாக்குறுதி ஒன்னு காத்துல பறந்து போய்டுச்சி....:)

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

\\ஹிந்தி
எனக்கும் தாய்மொழி இல்லை. தென் இந்தியாவைச்
சேர்ந்த என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள
முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்!\\

சரியான ஊக்கம் தான்./


நீர் ஒரு பின்னூட்ட ஊக்கி ...:)