Thursday, February 19, 2009

பிரிவும்!!! சந்தோஷமும்...

பிரிவு::

காலையில் காபிக்காக காத்திருக்க ஆளில்லாமல்
தனியே காபிக் குடிக்க முடியவில்லை.

மாலை வேளைகளில் டீ போடும் பொழுது
மறந்துபோய் ஒரு கப் அதிகமாகவே
தயாரித்து விடுகிறேன்.

டீயை கையில் வைத்துக்கொண்டு அந்திக் காற்று
வீச பால்கனியில் பேசிக்கொண்டே டீ அருந்தியதை
நினைத்துக்கொண்டே தனியாக டீ குடிக்கிறேன்.

பிள்ளைகள் ஏதும் கேட்கையில் ,”நாநா வந்ததும்
கேட்போம்!” என்றுச் சொல்ல ,”அம்மா நாநா
ஊருக்கு போயிருக்காங்க!!” என்று சோகமாக
முகத்துடன் சொல்வார்கள்.


மாத்திரை சாப்பிட்டியா? என நினைவூட்ட
ஆளில்லாததால் மாத்திரை சாப்பிடவே இல்லை.
(வந்ததும் அதுக்குத் தனி திட்டு இருக்கு :) )


அலுவலகம் போய் வீடுதிரும்பிவிடுவீர்கள்
எனும் நினைப்பிலேயே ஓட்டி ஊருக்குப்
போயிருப்பது இது போன்ற தருணங்களில்
உரைக்கும்பொழுது அதிகமாக
பிரிவை உணர்கிறேன்!!(இப்படி அடிக்கடி
ஊருக்குப் போவது நியாயமான்னு அயித்தான்
வந்த உடன் செல்லச் சண்டை போடுவேன், பேசி முடித்த
உடன் அடுத்த வாரம் ஊருக்குப் போவதாய்ச்
சொல்வார்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்முடியலை..)

********************************************
சந்தோ்ஷம்

அயித்தான் ஊருக்குபோனால் அண்ணனும் தங்கையும்
தலையனையை எடுத்துக்கொண்டு எங்கள் அறைக்கு
வந்துவிடுவார்கள். :)

இருவரும் கட்டிலில் படுக்க நான் கீழே படுத்துக்
கொள்வேன். நேற்று பயங்கரத் தலைவலி.
விடாமல் இருக்கவே மாத்திரை எடுத்துக்கொண்டு
படுக்கப்போனேன்.

சிறிது நேரத்தில் அம்ருதா அழைத்தாள்

என்னம்மா?”

R u feeling ok?
ம்ம் பரவாயில்லை.

கஷ்டப்படாதே அம்மா! மேலே படுத்துக்கொள்.
நான் கீழே படுத்துக்கொள்கிறேன் என்றாள்.

அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.

காலையில் பிள்ளைகளுக்கு சப்பாத்தி செய்து
ஆலு கறி கட்டிக்கொடுத்து மிச்சம் இருந்ததை
எனக்கு ஒரு டப்பாவில் எடுத்து வைத்தேன்.
பார்த்துக்கொண்டிருந்த அம்ருதா,”உனக்காம்மா!
இங்கே கொண்டா அம்மா, நான் எடுத்து
வைக்கிறேன்.நானும் பாத்துக்கிட்டு இருக்கேன்.
வரவர சரியாவே சாப்பிடுவதில்லை!!!!” என்றாள்.

ஆலு என்பதால் குறைவாகவே வைத்துக்கொண்டேன்
என்றும் என் உணவு ந்யூட்ரீஷயன் சொன்னபடிதான்
இருக்கிறது என்று சொன்னாலும் சமாதனமாகவில்லை
அவள்.

போஜ்யேஷு மாதா - என உணவளிக்கும் பொழுது
ஒரு பெண் தாய்போல் பார்க்கவேண்டும் என்று
சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

என அம்ருதம்மாபோஜ்யேஷு மாதாவாகி
என்னை கண்டிக்கிறாள்.

எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!

14 comments:

நட்புடன் ஜமால் said...

பிரிவுலையும் சந்தோஷம் பார்க்க நிறைய பேர் இருக்காங்க போல

நட்புடன் ஜமால் said...

\\கஷ்டப்படாதே அம்மா! மேலே படுத்துக்கொள்.
நான் கீழே படுத்துக்கொள்கிறேன் என்றாள்.

அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.\\

ஆரோக்கியம் ...

அமுதா said...

//அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.\\
காலையில் என் தோழி கூறிக் கொண்டிருந்தாள், பெண் குழந்தை ஒன்று மிகுந்த அன்புடன் தன் தாயைப் பார்த்துக்கொண்டது பற்றி. உங்கள் பதிவும் அதைக் கூறுகிறது. மகிழ்ச்சி

வித்யா said...

:(
:)

புதுகைத் தென்றல் said...

பிரிவுல சந்தோஷம் எங்கே ஜமால்?

இது பிரிவு, சந்தோஷம் இரண்டையும் சொல்லும் பதிவு.

புதுகைத் தென்றல் said...

பெண் குழந்தைக்கு இயல்பிலேயே தாய்மை இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன் அமுதா.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

ஸ்மைலிக்கு நன்றி வித்யா

பாச மலர் said...

அதெல்லாம் வர வேண்டிய நேரத்துல தானா வந்துரும் பிள்ளைங்களுக்கு அக்கறை..அதுவும் சரியான திட்ட்மிட்டு வளர்க்கும் கலாவின் மகள்ள் என்றால் சும்மாவா..

எம்.எம்.அப்துல்லா said...

//எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!

//


உங்களிடம் இருந்துதாஅன் :))

புதுகைத் தென்றல் said...

வாங்கபாசமலர்,

சில விடயங்கள் சொல்லிக் கொடுத்து வராது. தானே வரவேண்டும். அம்ருதாவின் அக்கறையும் அப்படித்தான் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

உங்களிடம் இருந்துதாஅன் :))//

ம்ம் சரியா இருக்கலாம். என் அம்மம்மா அடிக்கடி சொல்லும் வாக்கியம்,”நீ இன்று பிள்ளையைய் சரியாய் கவனித்து சோறு போட்டால், பிள்ளை வளர்ந்து உன் வயிற்றைக் காயவிடாது" என்பது தான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

தாமிரா said...

நெஞ்சைத்தொடும் பதிவு. கச்சிதமாக இருந்தது.

மங்களூர் சிவா said...

//
எம்.எம்.அப்துல்லா said...

//எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!
//
உங்களிடம் இருந்துதான் :))
//

ரிப்ப்ப்பீட்ட்டு