Wednesday, February 25, 2009
வண்ணத்துப்பூச்சி விருது
டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்!!!!
அப்படின்னு லிங்க் கொடுத்து நாகைசிவா பின்னூட்டம்
போட்டிருந்தாரு!!! அவ்வ்வ்வ்வ்வ்
இவங்க வரிசையில் நானா?? ஆஹா அப்படின்னு
அடிச்சு பிடிச்சு ஓடிபோய் பார்த்தா எனக்கு கூல்
ப்ளாகுக்கான விருது கொடுத்திருக்காரு. மனமார்ந்த
நன்றிகள் சிவா.
புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.
இந்த வரிகள் எனக்கு
நல்ல விஷயங்களை இன்னமும் எழுதணும்னு
ஊக்கத்தை கொடுக்குது. மறுபடியும் என் நன்றிகள் சிவா.
சரி நான் விருது கொடுக்க விரும்பும் நபர்கள்
1. ராமலக்ஷ்மி -
டைமிங்கான கவிதை. அழகான வார்த்தைகள். இவருக்கு நான்
ஏற்கனவே ”வலையுலகின் கவிக்குயில்” அப்படின்னு பட்டம்
கொடுத்திருக்கேன். இந்த வண்ணத்துப்பூச்சி விருதையும் கொடுப்பதில்
மகிழ்ச்சி. ஜெய்ஹோ கவிதை யூத்ஃபுல் விகடனில் வந்திருப்பதற்கும்
எனது பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.
2. நட்புடன் ஜமால் - அனைத்து
வலைப்பூக்களிலும் மீ த பர்ஸ்டாக வந்து பின்னூட்டம் இடுபவர்.
தனது வலைப்பூவில் மிக அழகாக கற்பிப்பார். கற்போம் வாருங்கள்.
இதுதான் இவரது வலைப்பூ. அன்புத் தம்பிக்கு விருது கொடுப்பதில்
சந்தோஷம்.
3. தேன் கிண்ணம் :
1000 மாவது பாட்டை சீக்கிரம் பதிவிடபோகிறார்கள்.
இசையைத்தவிர நம்மை கூலாக வைக்க என்ன இருக்கிறது.
தேன் கிண்ணத்து தேனீக்களுக்கு கூல்ப்ளாக் வண்ணத்துப்பூச்சி விருது.
4.சுரேகா -
அஷ்டாவதானி. பல வேலைகளுக்கு இடையேயும் பல
நல்ல பதிவுகளைத் தரும் இவருக்கு கூல் ப்ளாக் விருது.
5. மங்களூர் சிவா
the only cololurful blog - வீக் எண்ட் ஜொள்ளு படங்கள்
வந்த (அது ஒரு காலம்!!!) ப்ளாக். அப்புறம் கவுஜை கவிதைகளா
வந்துச்சு. இப்ப அப்பப்போ பதிவெழுதும் அன்புத் தம்பி
சிவாவிற்கு கூல் ப்ளாக்
விருது.
//இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம//
அப்படின்னு நாகை சிவா சொல்லியிருந்தாரு. நான்
கொடுக்க நினைத்தவங்களுக்கு கொடுத்திருக்கேன்.
இதை அவர்கள் யாருக்கேனும் கொடுக்க நினைத்தால்
கொடுக்கலாம். இல்லையேல் விருது வழங்கும் விழாவை
முடிச்சுக்கலாம்.
அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
*************************************
இது எனது 350ஆவது பதிவு. :))
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
ஹிஹி எதுமே இப்போதைக்கு எழுதாத எனக்கும் விருதா உங்க அன்புக்கு மிக்க நன்றி.
கீ போர்ட் தழுதழுக்கிறது (எம்புட்டு நாள்தான் நாக்கு தழுதழுக்கும்)
ஐ திங் மீ தி பர்ஸ்ட்
டெம்ப்ளேட் கலக்குதுங்கோ!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் விருதுக்கும்,
பதிவிற்க்கும் ( இது எனது 350ஆவது பதிவு)
விருதுப் பெற்றவர்களுக்கும்
விருது வழங்கிய உள்ளங்களும்
என்னுடைய வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
//5. மங்களூர் சிவா
the only cololurful blog - வீக் எண்ட் ஜொள்ளு படங்கள்
வந்த (அது ஒரு காலம்!!!)//
அது ஒரு கனாக்காலம்!!!!!!!!!!
இப்போதைக்கு எழுதாட்டியும் இதுக்கு முன்னாடி நிஜமாவே கலர்புல் ப்ளாக் உங்களுதுதானே சிவா. அதான் விருது
டெம்ப்ளேட் கலக்குதுங்கோ!!!
நன்றி சிவா
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அத்திரி
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி திகழ்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
அக்கா நெகிழ்வாய் இருக்கின்றது.
350ஆவது போஸ்ட்டா
மீண்டும் வாழ்த்துக்கள்
Vaazhthukkal.. 350-aavadhu padhivirkkum, vannathu poochi viruthukkum :D
350 பதிவு.//
மகிழ்ச்சியாய் உணர்கிறேன் அக்கா. வாழ்த்துகள்.
ஏனுங்க எங்களுக்கு எல்லாம் விருது கிடையாதா?
சரி சரி போகட்டும்.......
விருது பெற்றவர்களுக்கும், விருது பெறுபவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் பா
வாழ்த்துக்கள் சிஸ்டர். விருதுக்கும் 350 பதிவுக்கும்:))
நன்றி அமுதா,
வாழ்த்திற்கு நன்றி ஜமால்
நன்றி ஜி3
மகிழ்ச்சியாய் உணர்கிறேன் அக்கா. வாழ்த்துகள்.//
ஆஹா நன்றி அப்துல்லா
விருது பெற்றவர்களுக்கும், விருது பெறுபவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் பா//
நன்றிங்க
வாழ்த்துக்கள் சிஸ்டர். விருதுக்கும் 350 பதிவுக்கும்:))//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சிஸ்டர்.
அடுத்தவர்களுக்கு அன்புடன் விருதுகள் வழங்கி ஆனந்தப் படும் உங்கள் முன்னூற்றைம்பதாவது பதிவுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்றாட வாழ்க்கையில ஒருவர் சந்திக்க நேரும் எந்த ஒரு பிரச்சனைக்கும் உங்களது ஏதாவது ஒரு பதிவில் தீர்வு இருக்கும். நாகை சிவா சொல்வது சரியே. தொடரட்டும் உங்கள் பாஸிட்டிவ் அப்ரோச்.
உங்கள் கையால் இன்று வாங்கியிருக்கும் விருதும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஹிஹி கூடவே நீங்கள் தந்திருக்கும், அடிக்கடி குறிப்பிடும் அந்தப் பட்டம். அதற்கும் என் நன்றிகள். ஆனாலும் எனக்குப் பிடித்த வலையுலகக் கவிக்குயில்கள் யார் என்று கேட்டால், பேரிலேயே கவியைக் கொண்டு வார்த்தைகள் நயம்பட நர்த்தனைம் ஆடும் அருமையான கவிதைகளைப் படைக்கும் நம்ம கவிநயா. அடுத்து, கவிதைக்கும் அமுதென்று பேர் என நமக்கு அடிக்கடி அற்புதமாய் விருந்து வைத்து அசத்தும் அமுதா.
கலக்கல் வரிகளோடு அமுதாவுக்கும், கவிநயாவுக்கு பாராட்டு கொடுத்திருக்கீங்க.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி
ராமலக்ஷ்மி
congrats!!
//350ஆவது போஸ்ட்டா
மீண்டும் வாழ்த்துக்கள்//
wow.congrats again!!!
பட்டாம்பூச்சி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆஹா..இது இந்த வார இன்ப அதிர்ச்சியா?
உங்க அன்புக்கு மிக்க நன்றிங்க!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
விருதுகள் பெற்றவர்களுக்கும், 350-க்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தென்றல். 'வலையுலகின் கவிக்குயில்' கூவித்தான் இங்கே வந்தேன் :) அன்புக்கு இலக்கணமான ராமலக்ஷ்மிக்கு (அன்பாலதான் எம்பேர சொல்லீட்டாக!) என் மனமார்ந்த நன்றிகள்.
350க்கு வாழ்த்துகள் தோழி.. அப்படியே வண்ணத்துபூச்சிக்கும் வாழ்த்துகள்.!
ராமலஷ்மி மேடம் அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி
வாங்க புதியவன்,
மிக்க நன்றி
.இது இந்த வார இன்ப அதிர்ச்சியா?
வாங்க சுரேகா,
மனமார்ந்த பாராட்டுக்கள்
வாங்க கோபி,
மிக்க நன்றி
வலையுலகின் கவிக்குயில்' கூவித்தான் இங்கே வந்தேன் :)//
வாங்க வாங்க.
அன்புக்கு இலக்கணமான ராமலக்ஷ்மிக்கு (அன்பாலதான் எம்பேர சொல்லீட்டாக!) என் மனமார்ந்த நன்றிகள்.//
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!
வருகைக்கு மிக்க நன்றி கவிநயா
மிக்க நன்றி தாமிரா.
Post a Comment