Wednesday, February 25, 2009

கலர் டீவி.....

இப்ப சின்ன குடிசையில் கூட கலர் டீவி இருக்குது.

20 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பது
பெரிய விஷயம். கிரிக்கெட் மாட்ச் பார்க்க மட்டும்தான்
எங்கள் வீதியில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு செல்வோம்
நானும் தம்பியும். ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.

அந்த டீவி வீட்டுக்கு வந்ததில் எனக்கும் தம்பிக்கும்
செம சந்தோஷம்.

அது சாலிடர் டீவி!!
Solidaire for latest news
Solidaire for sports
Solidaire for sunday movies

Chorus:
Solidaire Solidaire So-lidaire
We want we want true color
We want we want clear sound
You know what we want we want Solidaire Solidaire!

எங்க தாரக மந்திரமா இந்தப்பாட்டுத்தான் இருந்துச்சு.
சாலிடர் டீவி வாங்கிருக்கோம்னு ரொம்ப பெருமை!!!


பெரிய ஆண்டனா,ரூபவாஹினிக்கு ஒண்ணு, டீடீக்கு
ஒண்ணுன்னு ரெண்டு இருக்கும் அதுல.

கலர் டீவியா? என்ன டீவிப்பான்னு நாங்க
கேக்க, அப்பா இது ப்ளாக் & வொயிட் தான்
அப்படின்னு சொல்லவும் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு.

பச்சை பசேல்னு புல்தரையில் கபில்தேவ்
ஓடி வந்து பந்து வீசுறதையோ, மனீந்தர் சர்மாவின்
சிரிப்பையோ க்ளியரா பாக்க முடியாதே!!


கலர் டீவி வாங்கியிருக்கலாம்பா! இது தம்பி.

புள்ளைங்க அக்கம் பக்கம் போயி டீவி பாக்கறாங்களேன்னு
டீவி வாங்கினா அதுக்கும் குத்தம் சொல்லுடா!!!
அப்படின்னு அப்பா கோபப்பட்டார்.

சரி சண்டை வேணாம்னு அம்மா சமாதனப்படுத்த
டீவி, ஆண்டனா எல்லாம் செட் செஞ்சாங்க

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் படம் பார்க்க
அம்மம்மா கடலையை உப்பு போட்டு அவிச்சு
கொண்டுவந்திருந்தாங்க :(
தாத்தா, மாமா என பெரிய கூட்டமே இருந்தோம்.

படம் என்னத் தெரியுமா?

சாந்த சக்குபாய். ஆன்னா பாட்டு, ஊன்னா பாட்டு
தம்பி தலையில அடிச்சுகிட்டான்.

அடுத்த வாரமும் கிருஷ்ணா முகுந்தா முராரேன்னு
பாகவதர் படம். எங்களுக்கு கொடுப்பினை இல்லைன்னு
நானும் தம்பியும் வெளியிலே போய் உக்காந்திட்டோம்.

கிரிக்கெட் மாட்ச், ஒளியும் ஒலியும், சித்ரஹார்
என பார்க்க அப்பாவிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.






ஹிந்தி ப்ரோக்ராம்களும் மிகவும் பிடிக்கும்.

நீவ்,ஹம் பன்சி ஹே எக் டால் கி, லஹர் லஹர் சங்கீத்,
நுக்கட், ரஜனி, புனியாத், த்ருஷ்ணா என பல சீரியல்கள்.

வரதுக்கு கல்யாணம், நகையே உனக்கொரு நமஸ்காரம்,
க்ரேசி மோகனின் தொடர்கள் என செம கலக்கலாக இருக்கும்.

டீடீ நியூஸ் ரீடர் மஞ்சர் ஜோஷி அப்பாவுக்கு மிகவும்
பிடிக்கும். எனக்கு சுனித் தந்தன்தான்.





ஆரதனா ஹிந்தி படம் அப்பா 16 முறை தியேட்டரில்
பார்த்தாராம். அந்தப் படம் திரையிடப்பட்ட அன்று
அப்பா முன்னதாகவே ஆஜர். ”குன் குனாரகே பவனு”
பாட்டை என் பாட்டி (60 வயது )பாடியது அதிசயம். :))

வீட்டில் டீவி பார்க்க அக்கம்பக்கத்தவர்கள் புக்கிங்
செய்து கொள்வார்கள். சில சமயம் சங்கடங்கள்,
சில சமயம் சந்தோஷம். சவுண்ட் வை, தள்ளி
உக்காருன்னு நம்மயே பேசுவாங்க!!

பேப்பரில் மஹாபாரதம் தமிழில் படித்துவிட்டு
அடுத்த சீன் இதான் என சஸ்பென்ஸ் உடைத்த
அப்பாவின் அலுவலக நண்பர்,

விளம்பரங்களை நானும் தம்பியும் ரசித்து பார்க்க
விளம்பரம் வரும்பொழுது டீவியை ஆஃப் செஞ்சு
வைக்கலாம்ல என்று சொன்ன பக்கத்து வீட்டு பாட்டி!!

ஒளியும் ஒலியும் பாடல்கள் பார்க்க நாங்கள்
காத்திருக்க எங்களுக்கு “சென்சார்” செய்ய ரெடியாக இருந்த
எங்கள் பாட்டி என பயங்கர கொசுவத்திதான்.

எங்கள் கலர் டீவி நச்சரிப்பை தாளாமல் அப்பா
”நாளைக்கு நீங்கள் பள்ளியிலிருந்து வரும்பொழுது
கலர் டீவி இருக்கும்”!!! என்றார்.

சந்தோஷமாக வீட்டுக்கு வந்தோம்.
டீவிக்கு கவர் போடப்பட்டிருந்தது!!
பழைய டீவிதானே! புது டீவீ எங்கே?
என பாட்டியை கேட்டதுக்கு,
” அப்பா வந்து பதில் சொல்வார்” அப்படின்னாங்க
பாட்டி. சாயந்திரம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாரு.

அவரு வந்துதான் ஓபனிங் செர்மனி(!!!!)
தூர்தர்ஷன் ஆரம்பிக்கும் முன்னாடி சுவிட்சைபோட்டு
கவரை எடுத்தாரு எங்களுக்கு ஷாக்.

ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி
கலர் கலரா கண்ணாடி பேப்பர்
நீலம், மஞ்சள், பச்சை, சிகப்புன்னு வாங்கி
தொங்க விட்டிருந்தாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதான் கலர் டீவி, உங்களுக்கு என்ன கலர் வேணுமோ
அந்தக் கலர்ல டீவி பாருங்கன்னு சொல்லிட்டாரு.

:(((((

நான் ரொம்ப நாளாத் தேடிகிட்டு இருந்த
இந்த வீடியோ கிடைச்சிடுச்சு.





டிடி வலைப்பூ இதில் அனைத்து
பழை டீடீ வீடியோக்கள் இருக்கிறதாம்.

45 comments:

நட்புடன் ஜமால் said...

டீவில கொசுவா

butterfly Surya said...

Nice. Xlent.

pudugaithendral said...

Nice. Xlent.//


thanks

நட்புடன் ஜமால் said...

\\ரூபவாஹினி\\

பேரே கேட்டாலே சுகமா இருக்கு

அபி அப்பா said...

அடடா, எனக்கு இந்த கொசுவத்தி மேட்டர் நியாபகம் வராம போச்சே! போட்டு தாக்கியிருக்கலாமே! சரி நாமளும் போட்டா போச்சு "டனயாரா டிவியும் டயானா மாமியும்"ன்னு தலைப்பு வச்சு போட்டுடுவோம்!

www.narsim.in said...

//ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.//

அப்பாவிற்கு வந்தனம்

pudugaithendral said...

பேரே கேட்டாலே சுகமா இருக்கு//

ஆமாம் ஜமால், லாட்டோ, ஆங்கர் மில்க், இந்த விளம்பரம் எல்லாம் கலக்கல்.

ஞானஒளி சினிமா அந்தச் சேனலில் தான் பார்த்தேன்.

pudugaithendral said...

டனயாரா டிவியும் டயானா மாமியும்"ன்னு தலைப்பு வச்சு போட்டுடுவோம்!//

ஆஹா வாங்க அபி அப்பா,
டயனோரா டீவியா சீக்கிரம் போடுங்க.

டயனோரா, சாலிடர் இந்த ரெண்டி டீவியின் பழைய விளம்பரம் தேடுறேன் கிடைக்கல...

pudugaithendral said...

அப்பாவிற்கு வந்தனம்//

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்.

மங்களூர் சிவா said...

எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்

நல்ல நினைவுகள்!

sakthi said...

enga veetin tharagamandhiram kuda athu thanungo
we want we want solidaire
antha kalathula

மங்களூர் சிவா said...

எங்க வீட்டுலயும் முதல் டிவி சாலிடர்தான்!!

Vidhya Chandrasekaran said...

நினைவுகளை போரடிக்கமால் பகிர்ந்திருக்கீங்க சிஸ்டர்:)

pudugaithendral said...

எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்//

same blood :))

pudugaithendral said...

we want we want solidaire
antha kalathula//

வாங்க சக்தி.

அப்பல்லாம் அதுதானே பேமஸ் டீவி

pudugaithendral said...

நினைவுகளை போரடிக்கமால் பகிர்ந்திருக்கீங்க //

நன்றி வித்யா

எம்.எம்.அப்துல்லா said...

உங்க அப்பா ரமணிசார் அந்த டி.வியை எங்கள் கடையில்தான் வாங்கினார்.(ராஜா எலக்ட்ரானிக்ஸ்)

புதுக்கோட்டையில் முதன்முதலில் டி.வி விற்கப்படது எங்கள் கடையில்தான். பிறகு 6 ஆண்டுகள் கழிந்துதான் பிற கடைகளில் விற்க துவங்கினர். மாலை கடைக்கு வெளியே இருக்கும் ஷோகேஸில் டி.வி யை வீதில் இருந்து பார்க்கும்படி வைப்போம். தினமும் திருவிழாக் கூட்டமே கூடி போலீஸ் எல்லாம் வந்து கட்டுப்படுத்தும் அளவிற்கு ஆகிவிட்டது.

இன்னைக்கு உங்களால் எனக்கும் கொசுவத்தி :))

நானானி said...

அப்போயெல்லாம் திருநெல்வேலிக்காரர்கள் கலர் டிவி9நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் விலைகொடுத்து) வாங்கி ரூபவாஹினி பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் அப்போது கலர் டிவி வராதகாலம்...ஒன்லி தூர்தர்ஷன்.
நெல்லை மக்களின் முகத்தில் வழியும் பெருமையைப் பார்க்க வேண்டுமே!!!!!!

தாரணி பிரியா said...

m niriya vishayangalai niyabagam paduthitinga :)

sunith Tandonthan en favourite kuda. kuttiya thadai vechi iruppare avarthane?

apprum colour tv matter athu enga veetulayum nadatha vishayam . nalu colour irukkume antha screela :).

nandri :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

செம கொசுவத்திங்க

எங்க வீட்டுல டெலிரமா, அதுக்கு பாக்ஸ்லாம் வெச்சு, பூட்டு சாவியோட
அமர்க்களப்படும்.

எங்க மாமா சாயந்திரம் வேலை முடிச்சு வந்த பின்பு தான் ஓப்பனிங் செரிமனி.

அதுக்காகவே சீக்கிரம் படிக்கனும்னு சொல்லி கருப்புஅஞ்சல் செய்வாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.//

what blood, same blood.

என் அக்கா பையன் சிறுவயது 1 1/2க்குள் பக்கத்து வீட்டில் அடிக்கடி டி.வி பார்க்க போய் நிக்க, அவர்கள் மேற்கூறியதை செய்ய, அதைப் பார்த்த என் மாமா அன்றே அப்போதே, போய் டெலிரமா ப்ளாக் & வொயிட் டி.வி வாங்கி வந்தார். அப்போது அது 3000 ரூபாய்.


(எங்களுக்கு அதற்கு பாக்ஸ் போட்டு பூட்டியதெல்லாம் அதற்கு அப்பாற்பட்ட கதை.)

KarthigaVasudevan said...

எங்க வீட்ல நான் 5 th படிக்கும் போது டயனோரா ப்ளாக் அண்ட் வைட் டி.வி தான் .அடடா...மறுபடி 5 th போக வச்சிட்டீங்களே புதுகை தென்றல்?! சுவாரஸ்யமான மலரும் நினைவுகள் .அதோட டி.வி விசயத்தில் எல்லா அப்பாக்களும் இப்படித் தான் போல? எப்படியோ டி.வி வந்ததுல சந்தோசம் .

தமிழ் அமுதன் said...

சூப்பரா எழுதி இருக்கீங்க! எங்க வீட்டுலையும் முதல்ல சாலிடர் டிவி தான்!

ஆனா கலர் டிவி! அதாவது டிவி தான் கலர்ல இருந்துச்சி! ''செவப்பு கலர் டிவி'' போர்டபிள் டிவி!

படம் கருப்பு -வெள்ளைதான்.டிவி விலை 2500 ரூவா ஆண்டனா வைக்க 2700 ரூவா
ஆச்சு! அதேபோல தான் ரெண்டு ஆண்டனா! தூர்தர்சனுக்கு ஒன்னு ரூபவாஹிநிக்கு ஒன்னு ! வெயில் நேரத்துல கிரிக்கெட் புள்ளி புள்ளியா தெரியும்! கண்ண சுருக்கிக்கிட்டு
பார்த்தா புள்ளி இல்லாம கொஞ்சம் தெளிவா தெரியும்.இல்லாட்டி நைஸ் துணிய கண்ணுகிட்ட வைச்சு பில்டேர் பண்ணி பார்ப்போம் !

Sasirekha Ramachandran said...

//ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி
கலர் கலரா கண்ணாடி பேப்பர்
நீலம், மஞ்சள், பச்சை, சிகப்புன்னு வாங்கி
தொங்க விட்டிருந்தாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதான் கலர் டீவி, உங்களுக்கு என்ன கலர் வேணுமோ
அந்தக் கலர்ல டீவி பாருங்கன்னு சொல்லிட்டாரு.//


ha ha ha!!!:-)

pudugaithendral said...

உங்க அப்பா ரமணிசார் அந்த டி.வியை எங்கள் கடையில்தான் வாங்கினார்.(ராஜா எலக்ட்ரானிக்ஸ்)//

ஆமாம். அப்பா என்ன வாங்கினாலும் அங்கே தான். அப்பாவுக்குன்னு இருக்கும் கடைகளில் உங்க கடையும் ஒன்னு.

pudugaithendral said...

வாங்க நானானி,

எங்களுக்கு தூர்தர்ஷனை விட ரூபவாஹினி தான் தெளிவா தெரியும்.

pudugaithendral said...

sunith Tandonthan en favourite kuda. kuttiya thadai vechi iruppare avarthane?//

ஆமாம் அவர்தான். :)

apprum colour tv matter athu enga veetulayum nadatha vishayam . nalu colour irukkume antha screela :). //

இல்லங்க. எங்கப்பா கிளாஸ் கலர் பேப்பரை வாங்கிவந்து டீவி முன்னடி தொங்கவிட்டு இதான் கலர் டீவின்னு சொன்னாரு. :(

pudugaithendral said...

அதுக்காகவே சீக்கிரம் படிக்கனும்னு சொல்லி கருப்புஅஞ்சல் செய்வாங்க.//

ஆமாம். அதுக்கு கண்காணிப்பு அதிகாரியாக பாட்டி வேற. அவ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

அடடா...மறுபடி 5 th போக வச்சிட்டீங்களே புதுகை தென்றல்?! சுவாரஸ்யமான மலரும் நினைவுகள் .//

மலரும் நினைவுகள் தரும் சுகமே சுகம் தானே. வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வெயில் நேரத்துல கிரிக்கெட் புள்ளி புள்ளியா தெரியும்! கண்ண சுருக்கிக்கிட்டு
பார்த்தா புள்ளி இல்லாம கொஞ்சம் தெளிவா தெரியும்.இல்லாட்டி நைஸ் துணிய கண்ணுகிட்ட வைச்சு பில்டேர் பண்ணி பார்ப்போம் !//

க்ரைன்ஸ் விழுதுன்னு ஆண்டனா சிக்னல் சரியா தெரியும் வரை அதை ஒரு ஆள் திருப்பிக்கிட்டே இருக்கணு,

இதுக்கு யூ எம் எஸ் பூஸ்டர் வேற :))

pudugaithendral said...

வாங்க சசி,

இப்ப எனக்கும் சிரிப்பா இருக்கு. ஆனா அப்ப கத்தவும் முடியாம, அழவும் முடியாம ஒரு பரிதாபமான நிலை தான்.

:(( :))

தேவன் மாயம் said...

20 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பது
பெரிய விஷயம். கிரிக்கெட் மாட்ச் பார்க்க மட்டும்தான்
எங்கள் வீதியில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு செல்வோம்
நானும் தம்பியும். ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.///
ஆமாங்க!!
டி வீ பாக்குறதே கஷ்டம்11

தேவன் மாயம் said...

\\ரூபவாஹினி\\

பேரே கேட்டாலே சுகமா இருக்கு//

ரூபவாஹினி சிலோன் டி வி

ராமலக்ஷ்மி said...

சாலிடேர் பாட்டு பிரசித்தம்தான் அப்போ. அப்போ நாங்க வாங்கிய கலர் டிவி டயனோரா. தூர்தர்ஷனில் என்னத்த போட்டாலும் ஆன்னு பாத்த காலம். சிலது நல்லவே இருக்கும்தான்.

ராமலக்ஷ்மி said...

அடப் பாருங்க நம்ம சமகாலத்து ஃப்ரெண்ட் ஏற்கனவே டயனோராவைப் பற்றி பேசிப், பதிவெழுதவும் கிளம்பிட்டாப்ல:)))!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

கோபிநாத் said...

எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்து.!..;)

nitmails said...

எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்

நல்ல நினைவுகள்!

பாச மலர் / Paasa Malar said...

இனிமையான கொசுவர்த்தி சுத்திட்டேன் நானும் கலா இதைப் படிச்சதும்...அதெல்லாம் ஒரு காலம் இல்லியா..

pudugaithendral said...

ரூபவாஹினி சிலோன் டி வி//

வாங்க தேவா,

அதே சிலோன் டீவிதான்.

pudugaithendral said...

தூர்தர்ஷனில் என்னத்த போட்டாலும் ஆன்னு பாத்த காலம். சிலது நல்லவே இருக்கும்தான்.//

ஆமாம் ராமலக்‌ஷ்மி,

பல சமயம் நல்லாவே இருந்திருக்கு. அளவான நேர ஒளிபரப்பு சென்சார் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என நல்லாத்தான் இருந்திருக்கு. இந்த 24 மணிநேரச் சேனல்கள் வந்தப்புறம் டீடியே தேவலைன்னு தோணுது.


என்ன இந்த 24 மணிநேர சேனல்கள் அடிக்கடி “தடங்கலுக்கு வருந்துகிறோம்” போட மாட்டாங்க.

:)

pudugaithendral said...

எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்து.!..;)//

வாங்க கோபி,

இதுக்கு முன்னாடி கூட பழைய விளம்பரங்களைத் தொகுத்து ஒரு பதிவு போட்டிருந்தேன். நேரம் கிடைக்கறப்ப பாருங்க.

pudugaithendral said...

எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்//

வாங்க நிட்மில்ஸ்,

சேம் ப்ளட்டா இருக்கீகளே.

pudugaithendral said...

அதெல்லாம் ஒரு காலம் இல்லியா..//

ஆமாம் பாசமலர்.

அது ஒரு பொற்காலம்.

Thamira said...

மீண்டும் ஓர் மலரும் நினைவுகள்.. அழகு.!