Thursday, February 12, 2009
கொசுவத்தி சுத்துது....
நர்சிம் அவர்களோட இந்தப் பதிவு கொசுவத்தியை
சுத்திவிட்டுடுச்சு.
10த் முடிச்சதும் தான் டைப்ரைட்டிங் பரிட்சை
எழுத முடியும்னாலும் “ஸ்பீடு”!! வரணும்னு
எங்கப்பா 9த் அரைப்பரிட்சை முடிச்சதுமே
கொண்டு போய் சேத்துட்டாரு.
வாசவி தட்டச்சு பயிற்சி பள்ளி.
இது எங்க குடும்ப டைப்ரைட்டிங்
இன்சிடிட்யூட்!!! எங்க சித்தி, மாமா
எல்லோரும் இங்கதான் படிச்சாங்க.
அதனால் ஆவி!! வந்த இடம்னு என்னையும்
சேத்தாங்க.
முதல் நாளே, சரவணன் சார்,”உமாவோட
அக்கா பொண்ணா? வாம்மான்னு”
சொல்ல அங்க இருந்தவங்க மொத்தமும்
என்னிய பாத்தாங்க. தெரியாதவங்க
யாரும் அந்த ஊருல கிடையாது. அன்னைக்கு
அங்க தெரியாதவங்க இருந்திருந்தாங்கன்னா
அவங்களுக்கும் அறிமுகம் ஆகியிருக்கும்!!!
1 வாரத்துக்கு கை விரல்கள் வலி.
கண்டிப்பா போகணுமாம்மா? அப்படின்னா
அம்மா,”இது கத்துகிட்டாத்தான்
ஸ்டெனோவேலையாவது கிடைக்கும்?
கைத்தொழில் கற்றுக்கொண்டா நல்லது”
அப்படின்னு சொன்னதக்குப்புறம் மாட்டேன்னு
சொன்னா கொன்னே புடுவாங்க!!!
காலையில் பள்ளி என்பதால் 4மணிலேர்ந்து
5வரைக்கும் கிளாஸ். ஆரம்பத்துல
கஷ்டமா இருந்தது போகப்போக விரல்கள்
பழகிடுச்சு. அதைவிட சூப்பர் 2 மாதத்திலேயே
வேகமா அடிக்க ஆரம்பிச்சது.
கீ போர்டை பாக்காம வேகமா அடிக்க
நல்லா பழகி எக்சாம் வந்திருச்சு. அதுக்கு
முன்னாடி டெஸ்ட் அடிக்கடி வைப்பாங்க.
எல்லோருக்கு 10 நிமிஷம் ஆகும் நான்
6 நிமிஷத்துலேயே முடிச்சிட்டேன்.
சரவணன் சார் வந்தார்.
”இவ்வளவு சீக்கிரம் ஏன் முடிச்ச?
மிஸ்டேக் எவ்வளவுன்னு பாத்துட்டு
கச்சேரி இருக்குன்னாரு?? பயந்துகிட்டே
இருந்தேன். ஹை!! 6 மிஸ்டேக் தான்.
பரவாயில்லை. ஆனாலும் இவ்வளவு
சீக்கிரம் அடிக்கக்கூடாது.10 நிமிஷம்னா
10நிமிஷம் தான் அடிக்கணும்!! அப்படின்னு
ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.
இன்ஸ்டிட்யூட்ல ஸ்பீடு டெஸ்டுக்கு அடிச்சதெல்லாம்
ஆங்கிலம் இரண்டாம் பாடத்துக்கு கட்டுரைக்கு
உதவிச்சு. :)))
இன்சிடிட்யூட்ல சார், அவங்கப்பா, அவங்க
தங்கை எல்லோரும் சொல்லிக் கொடுப்பாங்க.
ஒழுங்கா எல்லாத்தையும் அடிக்கறேனா?
இல்லை டிமிக்கி கொடுக்கறேனான்னு
ஒவ்வொத்தங்களும் ஸ்பீட் டெஸ்ட்
கொடுத்திட்டு பக்கத்திலேயே நின்னு
பாப்பாங்க!!! (நம்ப மாட்டேங்கறாங்கப்பா)
டைப் அடிச்சதை படிக்கச் சொல்லி
திருத்தி பாத்ததுக்கப்புறம் தான்
ஒத்துகிட்டாங்க.
எவ்வளவு ட்ரை செஞ்சாலும் என்னால்
10நிமிஷம் வரை அடிக்க முடியலை.
அதிகம் போனால் 7 நிமிடத்திற்குள்
முடிச்சிடுவேன். :))))
லோயர் பரிட்சை புதுகை டீ யீ ஓ அலுவலகத்தில்
நடந்தது. பெல் அடித்ததும் ஸ்பீட் டெஸ்ட்.
அதுக்கு முன்னாடி சரவணன் சார்,” ஒழுங்கா
10நிமிஷம் அடிக்கற! அப்படின்னு கோபமா
சொன்னாரு. ”பாக்கறேன் சார்!”னு சொல்லிட்டு
ரெடியா இருந்தேன். பெல் அடிச்சதும்
பேப்பரை திருப்பி அடிக்க ஆரம்பிச்சேன்.
கட கட கடன்னு அடிச்சு முடிச்சேன்.
மணியைப் பாத்தா?7 நிமிஷம் தான்
ஆகியிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மத்தவங்க எல்லாம் டொக் டொக்குன்னு
தட்டிகிட்டு இருக்க நான் உக்காந்து
ஸ்பெல்லிங் செக் பண்ணிகிட்டு இருந்தேன்.
அதையும் முடிச்சு ஜன்னல் பக்கம் பார்த்தா,
“சரவணன் சார்!” அடிச்சிட்டியா?”ன்னு சைகை
காட்ட சிரிப்புதான் என் பதில். அதைப் பாத்து
தலையில் அடிச்சிகிட்டாரு.(எவ்வளவு
சொன்னாலும் திருந்த மாட்டா இவ அப்படின்னு
நினைச்சிருப்பாரா இருக்கும்!!!)
நான் என்ன செய்ய? கையில் அம்புட்டு
வேகமா செய்ய முடியுது. கீ போர்டை
பாக்காமலேயே வேகமா அடிக்க பழகிட்டேன்.
இப்ப வரை அப்படித்தான். அடிக்க வேண்டியதை
மனதில் முடிவு செய்துவிட்டு,” ஸ்டார்ட் ,
மீஜிக்”னு தட்ட ஆரம்பிச்சேன்னா மானிடரை
விட்டு கண்னை எடுக்கவே மாட்டேன்! :))
சென்ற வருடம் என் தங்கை வேலைக்குச்
சேரும் முன் கீ போர்டில் ஸ்பீட் பத்தாது
என்று அவளை ப்ராக்டீஸ் செய்யச் சொல்லி
வெப்சைட் ஒன்றை கொடுத்திருந்தார்கள்.
வேலைக்குச் சேரும் நாள் வரை தினமும்
அவள் அடிப்பாள். ரொம்ப நாளாச்சு டெஸ்ட்
செஞ்சுன்னு நான் ட்ரை செஞ்சா கரெக்டா
100 மார்க் வந்துச்சு.:)))
”நீ ட்ரை செஞ்சா ஈசியா பீபீஓ வில் வேலை
கண்டிப்பா கிடைக்கும், இந்த ஸ்பீடெல்லாம்
என்னால் சாத்தியமே இல்லைன்னு”
சொல்ல ஒரே புளகாங்கிதமா இருந்துச்சு.
சும்மாவா!! நிக்கும் போதும் நடக்கும்போதும்
கை தட்டிகிட்டே இருக்கும். கீ போர்டே
தேவையில்லை!!
ஆங்கிலம் லோயர்,ஹையர் முடிச்சதும்
அப்பா தமிழ் டைப் அடிக்கப் போகச்சொன்னாரு.
ஷிப்ட் போட்டு போட்டு சுண்டுவிரல்
காலி ஆகிடும் போல இருந்துச்சு. மாட்டேன்னு
தகராறு செஞ்சேன். சரி சார்ட்ஹேண்ட் கத்துக்கோன்னு
அப்பா ஆரம்பிக்க சரி போவோம்னு
போய் பாத்தா அதைக் கத்துக்கறதுக்கு பதில்
நான் எழுதறதே சீக்கிரமா இருக்கும்னு
தோணிச்சு”.என்னிய விட்டுடங்கப்பா!
என்னால முடியலை”ன்னு அப்பா கிட்ட
சொல்ல என்னவோ அரசாங்க வேலை
ஒண்ணு எங்க குடும்பத்துக்கு கிடைக்க
வேண்டியது கிடைக்காம போக விட்டுட்டேன்னு
திட்டித்தீத்தாரு. :(
(எங்க சித்தி ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர்,
ஹிந்தி ஹையர், சார்ட் ஹேண்ட் ஹையர்
முடிச்சிருக்காங்க. அவுங்க வாரிசா நானும்
இதெல்லாம் கத்துக்கணும்னு வாசவிலையும்
சரி வீட்டிலையும் சரி ரொம்ப வற்புற்த்தல்)
இந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது
வாசவி தட்டச்சு பள்ளி பக்கம் போயிருந்தேன்.
கணிணியில் வேகமாக வேலை செய்ய
தட்டச்சு உதவும். ஆகவே தட்டச்சு
கற்றுக்கொள்ளுங்கள்னு பேனர் கட்டியிருந்தாங்க.
அப்பாக்கு மட்டும் நான் தமிழ் டைப் அடிக்க
கத்துக்கலைன்னு வருத்தம் இருந்துச்சு.
போன முறை என்னைப் பார்க்க வந்திருந்த
பொழுது ,” இப்ப கம்ப்யூட்டர்ல எம்புட்டு
அழகா தமிழ் டைப் அடிக்கறேன்!பாத்து
சந்தோஷப் பட்டுக்கோங்கப்பா” அப்படின்னேன்.
ஆமா! நீ இப்ப அடிச்சு என்ன செய்யன்னு
கமெண்ட் அடிச்சாரு!!!!!
புள்ளைங்களுக்கு டைப் அடிக்கச்
சொல்லி கொடுக்க இங்கே நல்லா இருக்கும்!
உங்க ஸ்பீடு என்னன்னு சின்ன டெஸ்ட்
வெச்சுக்க சில சைட்கள்.(வெப் சைட்டைச்
சொன்னேன்.)
http://www.typingtest.com/
http://www.calculatorcat.com/typing_test/
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
மீ த ஃபர்ஷ்ட்டு :)
ஹை வாசவிலய டைப் கத்துக்கிட்டீங்க??? நானும் அங்கதான் கத்துக்கிட்டேன். புதுகையில் பாஹி பசங்கள பத்தாவது லீவுவுட்ட அடுத்த நாளே அங்க கொண்டே தள்ளிருவாங்க.
சரவணன் சாருக்கு அப்பல்லாம் 24 வயசுதான் இருக்கும். அதுனாலா அவருகிட்ட சார் மாதிரி ஃபீல் வராது. ஏதோ நம்ப வூட்ல இருக்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும் ::))
ரொம்ப நாளைக்கப்புறம் மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க.
வாழ்த்துக்கள்
லட்சுமி இன்ஸ்டியூட்ல சார் கொஞ்சம் கோபக்காரர், அதனால் எல்லோரும் வாசவிக்குத்தான் வருவாங்க.
இன்ஸ்டிட்யூட்ல இருக்கும்போது தான் சார். மத்த இடங்களில் அண்ணாதான். குடும்ப நண்பர்கள்.
பொறுப்போட சொல்லிக் கொடுப்பாங்க.
நல்லா சுத்து சுத்துன்னு சுத்தியிருக்கீங்க வத்திய:))
எப்பா அப்துல்லா வந்துட்டியா
சந்தோஷ்மா
ஹை வாசவிலய டைப் கத்துக்கிட்டீங்க??? நானும் அங்கதான் கத்துக்கிட்டேன். புதுகையில் பாஹி பசங்கள பத்தாவது லீவுவுட்ட அடுத்த நாளே அங்க கொண்டே தள்ளிருவாங்க.\\
பதிவு போட்டு அவங்க சுத்துறாங்க
நீ பின்னூட்டத்திலேயே சுத்துரியா
\\கைத்தொழில் கற்றுக்கொண்டா நல்லது\\
நல்ல தாய்
நல்லதாய் சொன்னார்கள்
\\நான் என்ன செய்ய? கையில் அம்புட்டு
வேகமா செய்ய முடியுது. கீ போர்டை
பாக்காமலேயே வேகமா அடிக்க பழகிட்டேன்.
இப்ப வரை அப்படித்தான். அடிக்க வேண்டியதை
மனதில் முடிவு செய்துவிட்டு,” ஸ்டார்ட் ,
மீஜிக்”னு தட்ட ஆரம்பிச்சேன்னா மானிடரை
விட்டு கண்னை எடுக்கவே மாட்டேன்! :))\
ஹையோ ஹையோ
இதுதான் எங்களுக்கு தெரியுமே
உங்க கொசுவத்தி எனனையும் ஒரு கொசுவத்தி சுத்த வைச்சுருச்சி...
எழுத்தும் நடையும் அருமை..
\\நான் என்ன செய்ய? கையில் அம்புட்டு
வேகமா செய்ய முடியுது. கீ போர்டை
பாக்காமலேயே வேகமா அடிக்க பழகிட்டேன்.
இப்ப வரை அப்படித்தான். அடிக்க வேண்டியதை
மனதில் முடிவு செய்துவிட்டு,” ஸ்டார்ட் ,
மீஜிக்”னு தட்ட ஆரம்பிச்சேன்னா மானிடரை
விட்டு கண்னை எடுக்கவே மாட்டேன்! :))\
ஹையோ ஹையோ
இதுதான் எங்களுக்கு தெரியுமே//
:))))))))))
உங்க கொசுவத்தி எனனையும் ஒரு கொசுவத்தி சுத்த வைச்சுருச்சி.//
ஆஹா கொசுவத்தி தொற்றிக்கொள்ளும் வத்தியாதான் இருக்கு.
எழுத்தும் நடையும் அருமை..//
நன்றிங்கோ
உங்க டைப்பிங் ஸ்பீட் பத்தியெல்லாம் சொல்லவே வேணாம்.. நீங்க பதிவு போடுற நீளத்துலயும் வேகத்துலயுமே தெரியுது... :))))
Net Speed: 270 CPM
(characters/minute)
Accuracy: 96%
Gross Speed: 280 CPM
(characters/minute)
உங்க டைப்பிங் ஸ்பீட் பத்தியெல்லாம் சொல்லவே வேணாம்.. நீங்க பதிவு போடுற நீளத்துலயும் வேகத்துலயுமே தெரியுது...//
ஆஹா...:))))
Net Speed: 270 CPM
(characters/minute)
Accuracy: 96%
Gross Speed: 280 CPM
(characters/minute)//
:))))))))
Post a Comment