Monday, February 09, 2009

ரொமான்ஸ் ரகசியங்கள்..................

பதிவு போடணும்னு முடிவு
எடுத்தாச்சுன்னா நானே என் பேச்சைக் கேக்க மாட்டேன்.
(தாமிரா திட்டாதீங்க.:))

சரி தலைப்பை பாத்து கன்னாபின்னான்னு எதுவும்
நினைச்சுகிட்டு ஓடி வந்தீங்கன்னா நான் அதுக்கு
பொறுப்பு இல்லை. :))))))))))))காதலர் தினத்திற்கு இன்னும் 5 நாள் தான்
இருக்கு. எங்கெங்கு நோக்கினும் காதலர் தின
சிறப்பு தான். நாளிதழ்கள், வார இதழ்கள்
அனைத்திலும் கொண்டாட்ங்கள் எப்படி எல்லாம்
இருக்கலாம் என்று வந்த வண்ணம் இருக்கின்றன்.

நான் மிக ரசித்த ஒரு கட்டுரையை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன். காதலர் தினம் காதலர்களுக்கு
என்பது எல்லோருக்கும் தெரியும். கல்யாணம் கட்டிகிட்டு
காதலித்துக்கொள்வர்களும் உண்டு. அவர்கள் அனைவரையும்
சிரம் தாழ்த்தி வாழ்த்திக்கிறேன்.

நான் படித்த அந்தக் கட்டுரையில் வித்தியாசமாக
திருமணத்திற்கும் பிறகும் பிரபலமாக இருக்கும்
சிலரின் பேட்டி இருந்தது. அது படித்த பொழுது
(அதுல சொல்லியிருக்கற மாதிரி அவங்க
இருக்காங்களான்னு நாம் சிபிஐ வெச்சு பாக்கப்போறதில்லை(
கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.

திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை
துவங்குகிறது. ஆனால் நிஜத்தில்
நடப்பது என்ன?

“கல்யாணமாகி இரண்டு பிள்ளைங்க இருக்கு.
இன்னமும் குலுக்கிகிட்டு போறா?” என்பது
போனற பேச்சுக்கள்....

“குழந்தை பெத்தவங்க மாதிரியா இருக்காங்க
ரெண்டு பேரும்”

இதெல்லாம் என்ன பேச்சு? தாய்மை எத்தனை
உயர்வோ அத்தனை உயர்வானது தனது
கணவனுக்கு மனைவி என்பதும். (ஆண்களுக்கும்
பொருந்தும். கல்யாணத்துக்கப்புறம் தங்கஸ்
நல்லா சமைச்சு போட்டாங்க. எப்படி இருந்த நான்?
இப்படி ஆயிட்டேன்? என்று மாமிச மலையாக
இருப்பவர்களும் உண்டு)

பல பெண்கள் ஒரு குழந்தை பிறந்ததும்
தான் மனைவி என்பதை மறந்து அந்த
பிள்ளைக்கு தாயாக மட்டுமே இருக்கிறார்கள்.
(சில குடும்பங்களில் ஒரு பெண்மணியின்
மகள் வயதுக்கு வந்துவிட்டால் அந்தப் பெண்
தலை ஜடை போடக்கூடாது. கொண்டை
தான் போடவேண்டுமென இருக்கிறது)

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி/காரராக இருக்க
வேண்டாம். தன் கணவருக்காக/ மனைவிக்காக
தன்னை அலங்கரித்துக்கொள்வது தவறா?

இருமணம் இணைவது திருமணம்.
ஒரு குழந்தை பிறந்ததும் அந்த உறவு
மறந்து/ மாறிப்போவது முறையல்ல.

கணவன் மனைவி தங்களுக்கென ப்ரத்யேக
நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அருகருகில் அமர்ந்து தேநீர் அருந்துதல்,

வார இறுதியில் இயன்றால் இருவருக்குமட்டுமே
ஆன டின்னர்.

இப்படி எல்லாம் சொல்லியிருந்தாங்க.

டின்னரை விடுங்க. புருஷன் பொஞ்சாதி
ரெண்டு பேரும் பக்கத்துல உக்காந்து
பேசிக்கறது உண்டா??

பக்கத்துல உக்காந்தா தப்பு.

இப்போ பெண்கள் பாண்ட் சர்ட் போடுகிறார்கள்.
அது திருமணத்திற்கு பிறகும் போட்டால்
அம்புட்டுதான். அதுவும் ரெண்டு பிள்ளை
பிறந்த பிறகுன்னா கை கொட்டி சிரிக்க
மட்டும்தான் மாட்டாங்க.

கல்யாணம் ஆகிடிச்சு, குழ்ந்தை பொறந்திடிச்சு
அம்புட்டுதாங்கற மனப்பான்மை மாறனும்.
திருமண பந்தம் நிலைத்து நிற்க சின்னச்
சின்ன அன்னியோனியங்கள் தேவை.

WE NEED TO KEEP OUR MARRIAGE ALIVE.
அருமையான வாக்கியம்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் காதல்
திருமணம் புரிந்தவர். இரண்டு
பெரிய குழந்தைகளுக்குத் தாய்.
22 வருட அவரது திருமண வாழ்க்கை
பற்றி அவர் அடிக்கும் கமெண்ட்.

OURS IS LOVE MARRIAGE. NOW ONLY MARRIAGE IS THERE
NOT LOVE. :((

இந்த நிலைக்கு பெயர்தான் திருமண வாழ்க்கை
என்றால் திருமணமே செய்து கொள்ள வேண்டாம்.

ஆகவே அன்புத் தோழிகளே/ தோழர்களே உங்கள்
அனைவரிடமும் என் வேண்டுகோள்.
திருமணம் எனும் பந்தம் நிலைத்து நிற்க
ஆவன செய்வோம் என இந்தக் காதலர்
தினத்தில் உறுதி எடுத்து செயல்படுவோம்.

காதல் புனித மானது. உலகை இயங்கச்
செய்வதும் காதல் தான்.

அன்பே கடவுள்!

52 comments:

முரளிகண்ணன் said...

யோசிக்க வச்சுட்டீங்க

ரங்கன் said...

மீ த.. ஃபர்ஸ்ட்...
அருமையான பதிவு...

காதலர் தின வாழ்த்துக்கள்...

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு..

டைமிங் க‌ட்டுரை..

அ.மு.செய்யது said...

// இருமணம் இணைவது திருமணம்.
ஒரு குழந்தை பிறந்ததும் அந்த உறவு
மறந்து/ மாறிப்போவது முறையல்ல.

கணவன் மனைவி தங்களுக்கென ப்ரத்யேக
நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அருகருகில் அமர்ந்து தேநீர் அருந்துதல்,

வார இறுதியில் இயன்றால் இருவருக்குமட்டுமே
ஆன டின்னர். //

நோட் ப‌ண்ணிக்கிறேன்.

பின்னால‌ க‌ண்டிப்பா உத‌வும்.

வித்யா said...

நல்ல பதிவு:)

கோபிநாத் said...

மி த ஒன்னு ;))

நட்புடன் ஜமால் said...

அட அக்கா

அதுக்காக இப்பிடியா

இன்று எத்தனையாவது போஸ்ட் இது.

புதுகைச் சாரல் said...

நான்தான் மொதல்ல!

புதுகைச் சாரல் said...

காதல் புனித மானது. உலகை இயங்கச்
செய்வதும் காதல் தான்.
superup

புதுகைச் சாரல் said...

//தலைப்பை பாத்து கன்னாபின்னான்னு எதுவும்
நினைச்சுகிட்டு ஓடி வந்தீங்கன்னா நான் அதுக்கு
பொறுப்பு இல்லை//
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று

கோபிநாத் said...

இப்போதைக்கு அனைவருக்கும் வாழ்த்து ;))

புதுகைச் சாரல் said...

//நாளிதழ்கள், வார இதழ்கள்
அனைத்திலும் கொண்டாட்ங்கள் எப்படி எல்லாம்
இருக்கலாம் என்று வந்த வண்ணம் இருக்கின்றன்.//
celebrating valentines day.They threatens to forcibly marry off couples found ...

புதுகைச் சாரல் said...

//திருமண பந்தம் நிலைத்து நிற்க சின்னச்
சின்ன அன்னியோனியங்கள் தேவை.//
very good

அபி அப்பா said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க!

நட்புடன் ஜமால் said...

\\“கல்யாணமாகி இரண்டு பிள்ளைங்க இருக்கு.
இன்னமும் குலுக்கிகிட்டு போறா?” என்பது
போனற பேச்சுக்கள்....

“குழந்தை பெத்தவங்க மாதிரியா இருக்காங்க
ரெண்டு பேரும்”\\

இதுக்கு காரணம் கண்டு பிடித்தீர்களா

நட்புடன் ஜமால் said...

\\OURS IS LOVE MARRIAGE. NOW ONLY MARRIAGE IS THERE
NOT LOVE. :((\\

:(((((

இராகவன் நைஜிரியா said...

Me the first...

இராகவன் நைஜிரியா said...

இதற்குத்தானே காத்துகிடந்தாய் பாலகுமாரா..

படித்து இருக்கின்றீர்களா..

அதுமாதிரி மீ த பர்ஸ்ட் போட காத்துகிட்டு இருந்தேன்... போட்டுட்டேன்.

(நிச்சயமா நான் முதலா இருக்காது.. அப்படி இருந்துச்சுன்னா இந்த பின்னூட்டம் சரி..)

இராகவன் நைஜிரியா said...

// பதிவு போடணும்னு முடிவு
எடுத்தாச்சுன்னா நானே என் பேச்சைக் கேக்க மாட்டேன்.
(தாமிரா திட்டாதீங்க.:)) //

அதனா... நம்ம பேச்ச நாமே கேக்கரதா...

ரொம்ப தப்பு..

இராகவன் நைஜிரியா said...

// கணவன் மனைவி தங்களுக்கென ப்ரத்யேக
நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அருகருகில் அமர்ந்து தேநீர் அருந்துதல்,

வார இறுதியில் இயன்றால் இருவருக்குமட்டுமே
ஆன டின்னர். //

வார இறுதிக்கு போயீட்டீங்க...

மாசத்துல ஒரு நாள் இருக்கா பாருங்க..

பணம், பணம் அப்படின்னு அலைஞ்சு வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள்.

இராகவன் நைஜிரியா said...

// ஒல்லிக்குச்சி உடம்புக்காரி/காரராக இருக்க
வேண்டாம். தன் கணவருக்காக/ மனைவிக்காக
தன்னை அலங்கரித்துக்கொள்வது தவறா?
//

அதானே....

அலங்காரம் பண்ணினா கூட தப்பா..

இராகவன் நைஜிரியா said...

முழுவதும் படித்தபின் எனக்கு தோன்றிய விசயம்...

எப்படி இருந்தாலும் இந்த காலத்துல விமர்சனம் பண்ணுவாங்க...

ஆண் ஜீன்ஸ், டி-சர்ட் போட்டுகிட்டா.. இதென்னது ஜீன்ஸ் இந்த வயசுல அப்படின்னு,

சுடிதார் போட்டா... இதென்ன சின்ன பெண்ணாட்டாம் சுடிதார் போட்டுகிட்டு..

நான் கேள்விபட்டதிலேயே... இந்த தோடு வாங்கிக்கங்க நல்லா இருக்கு அப்படின்னு சொன்னா, இதெல்லாம் சின்ன பொண்ணுங்க போடறது அப்படின்னு ஒதுக்குவாங்க..

என்ன பண்ணாலும் அதுக்கு கமெண்ட் அடிக்கத்தான் செய்வாங்க..

நாமதான் கவலைப் படாம நமக்கு தோணியத செய்யணும்.

இராகவன் நைஜிரியா said...

இந்த கமெண்ட் எல்லாம் எப்ப பிரசுரமாகுங்க...

புதுகைத் தென்றல் said...

வாங்க முரளிகண்ணன்,

அந்தக் கட்டுரையைப் படிச்சதுக்கப்புறம் நானும் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

முரளிகண்ணன் முந்திட்டாரு ரங்கன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

பயனுள்ள பதிவு..

டைமிங் க‌ட்டுரை..//

நன்றி செய்யது

புதுகைத் தென்றல் said...

நோட் ப‌ண்ணிக்கிறேன்.//

மைண்ட்ல ரெஜிஸ்டர் செஞ்சு வெச்சுக்கோங்க.

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

மிஸ் ஆகிடுச்சு கோபி

புதுகைத் தென்றல் said...

இன்று எத்தனையாவது போஸ்ட் இது.//

4 தான் ஜமால்

புதுகைத் தென்றல் said...

வாங்க புதுகைச் சாரல்

வருகைக்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க அபி அப்பா,

அந்தக் கட்டுரையைப் படிச்சதுக்கப்புறம் என் கருத்தையும் இதில் சேர்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

இதுக்கு காரணம் கண்டு பிடித்தீர்களா?//

எனக்கு அப்படி வார்த்தைகள் கேட்டு அனுபவமில்லை. அத்னால் காரணம் தெரியவில்லை.

தெரிஞ்சவங்க சொல்லுங்க மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

இதற்குத்தானே காத்துகிடந்தாய் பாலகுமாரா..


மிஸ் ஆகிடுச்சு இராகவன்.

புதுகைத் தென்றல் said...

பணம், பணம் அப்படின்னு அலைஞ்சு வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள்.//

கரெக்டா சொன்னீங்க
அப்புறம் வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது என்று புலம்பல்கள் வேறு.

புதுகைத் தென்றல் said...

நாமதான் கவலைப் படாம நமக்கு தோணியத செய்யணும்.//

சரியா சொன்னீங்க. கமெண்ட்றவங்க கமெண்டிகிட்டுத்தான் இருப்பாங்க.

ஆனா நிஜத்துல மக்கள் அந்தப் பேச்சுக்கு பயந்து ரொம்பவே அடங்கி போயிடறாங்க.

புதுகைத் தென்றல் said...

இந்த கமெண்ட் எல்லாம் எப்ப பிரசுரமாகுங்க...//

இதோ ஆயிடிச்சிங்க.

இராகவன் நைஜிரியா said...

// Blogger புதுகைத் தென்றல் said...

இதற்குத்தானே காத்துகிடந்தாய் பாலகுமாரா..


மிஸ் ஆகிடுச்சு இராகவன். //

அதான... எப்படி மிஸ் ஆக இருக்கும் அப்படின்னு நினைச்சேன்...

மிஸ் ஆவதெல்லாம் சகஜமப்பா..

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல பதிவு.

என் குரு ஒஷோ :

Falling in love you remain a child; rising in love you mature.

By and by love becomes not a relationship, it becomes a state of your being. Not that you are in love - now you are love.....

VIKNESHWARAN said...

//அன்பே கடவுள்!//


அது சிவம்ல?

குசும்பன் said...

எக்ஸ்கூயுஸ் மீ யக்கோவ்!

வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்?

Manikandan said...

Super!!!!

malar said...

ONLY MARRIAGE IS THERE
NOT LOVE.

இது தான் இப்போது நிரைய குடும்பதில் இருக்கு.அழகா டிரஷ் பன்னுவது ,பூவைப்பது,மை போடுவது போன்ர அலங்காரம் பண்னும் போது வீட்டில் உள்ளவ்ங்களும் வெளியில் உள்ளவங்களும் கல்யாண வயதில் அவளுக்கு 2 பிள்ளைகள் இருக்கு அவ அலங்காரத்தை பாரு என்று சொல்கிறார்கள் .சில வீடுகளில் கணவனுககு கூட பிடிப்பதில்லை.

"கணவன் மனைவி தங்களுக்கென ப்ரத்யேக
நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அருகருகில் அமர்ந்து தேநீர் அருந்துதல்,

வார இறுதியில் இயன்றால் இருவருக்குமட்டுமே
ஆன டின்னர்"
இது எங்க சார் நடக்கிறது கனவு தான் கானவேண்டும்.

இந்த உலகம் பெண்களை அடிமை படிதியே பழகிவிட்டது.

ஆனால் இனி வரும் காலங்லளில் நடக்கவே நக்காது.

புதுகைத் தென்றல் said...

வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்?//

தனிப்பதிவே போட்டு விளக்கியாச்சு

புதுகைத் தென்றல் said...

வாங்க மணிகண்டன்,

நன்றி.

புதுகைத் தென்றல் said...

கல்யாண வயதில் அவளுக்கு 2 பிள்ளைகள் இருக்கு அவ அலங்காரத்தை பாரு என்று சொல்கிறார்கள் .சில வீடுகளில் கணவனுககு கூட பிடிப்பதில்லை.//

அதாங்க பிரச்சனையே. அழகா ட்ரெஸ் செஞ்சா சில ரங்குகளுக்கு பிடிக்காது.

தான் அழகா இளமையா இருக்கணும். ஆனா பொண்டாட்டி அசிங்கமாத்தான் இருக்கணும்.

எனக்குத் தெரிந்து ஒருவர் 50 வயது. தான் தலைக்கு டை அடித்து ட்ரிம்மாக இருப்பார். மனைவி வாக்கிங் போயிட்டு வர்றேங்க என்று சொல்லும்போது
“பொம்பளையா லட்சணமா வீட்டைப் பாத்துக்க!!” என்பார்.

புதுகைத் தென்றல் said...

இது எங்க சார் நடக்கிறது கனவு தான் கானவேண்டும்.//

:(

இந்த உலகம் பெண்களை அடிமை படிதியே பழகிவிட்டது.

ஆனால் இனி வரும் காலங்லளில் நடக்கவே நக்காது.//

அதுதான் வருத்தம். அந்த நிலை வரக்கூடாது.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

Subbu said...

நல்லா இருக்கு

Thamizhmaangani said...

//பல பெண்கள் ஒரு குழந்தை பிறந்ததும்
தான் மனைவி என்பதை மறந்து அந்த
பிள்ளைக்கு தாயாக மட்டுமே இருக்கிறார்கள்//

சரியா சொன்னீங்க. :)

புதுகைத் தென்றல் said...

நல்லா இருக்கு//

நன்றி சுப்பு

புதுகைத் தென்றல் said...

சரியா சொன்னீங்க//

நன்றி தமிழ்மாங்கனி