நடிகை ரோஜா இப்பொழுது பிசியான அரசியல் மங்கை.
தெலுங்குதேசம் கட்சியின் மகளீர் அணித்தலைவி.
இந்திரா பார்க் பக்கம் நடக்கும் தர்ணாக்களீல்
பல சமயம் இருப்பார். (அந்த ஏரியாவே அதுக்குத்தான்னு
முடிவு கட்டிட்டாங்க எல்லோரும்)
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து
சோபாராணி எனும் பெண் எதிர்கட்சியின்
மகளீர் அணீத்தலைவரான ரோஜாவை பற்றி
பகிரங்கமாக கமெண்ட் அடித்திருக்கிறார்.
சினிமாவில் இருக்கும்பொழுது எப்படி உடை அணிந்தார்?
என பல கேட்டிருப்பார் போலிருக்கிறது.
இதற்கு ரோஜா டீவி 9ல் கொடுத்த பேட்டி
நன்றாக இருந்தது. சிரஞ்சிவீயை அவர்
கேட்ட கேள்விகளும் நியாயமானதாக தோன்றுகிறது.
அரசியலுக்கும் இந்தப்பதிவுக்கும் எந்த சம்பந்தமில்லை
என்றாலும், ரோஜாவின் கேள்விகள் எப்போதும்
என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகள்
என்பதால் இந்தப்பதிவு.
நான் சின்ன உடை அணிந்து கவர்ச்சியாக
நடித்தேன் என்றால், அப்பொழுது என் பக்கத்தில்
நடித்த சிரஞ்சீவி அதை ஏன் தடுக்கவில்லை?
இப்படி உடை அணிந்தால் நான் நடிக்க மாட்டேன்
என்று ஏன் சொல்லவில்லை?
அப்போது அவரும் தானே என்னுடன் நடித்தார்?
அப்போது நடித்து ஹிட் படங்கள் கொடுத்தோம்,
இப்போது எனக்கு மட்டும் இப்படி பெயர்
சூட்டுகிறார்களே? இது நியாயமா?
இன்றைக்கு என்னைப்பற்றிக் கேவலமாக
பேசும் சென்சார்போர்டு பெண் அதிகார்
அன்று ஏன் முறையாக சென்சார் செய்யாமல்
விட்டார்கள்? அதற்கு எத்தனை பணம்
வாங்கிக்கொண்டார்களோ!!
என்று பேசினார் ரோஜா.
அதென்னவோ தெரியவில்லை சினிமாவில்
சில இப்படித்தான் டைப் இருக்கிறது.
1. ஹீரோ கனவு சீனோ ஏதோ ஒரு வகையில்
குலுக்கு நடிகையுடன் குத்து பாட்டு ஆடலாம்.
(தற்போது ஹீரோயினே அந்த ரேஞ்சுக்குத்தான்
உடை அணிகிறார் என்பது தனி ட்ராக் )
ஆனாலும் அவர் பத்தினன். இது சமுதாயத்திற்கு
சீர் கேடு விளைவிக்கும் காட்சி அல்ல.
2. கிளி போல மனைவி இருந்தாலும் .....
வைப்பார்கள் என்பார்களே அது மாதிரி அழகான
ஹீரோயின் இருந்தாலும் இவர்கள் முமைத்கான்,
மும்தாஸ் அந்நாளீல் டிஸ்கோ சாந்தி, அனுராதா
போன்றவர்களுடன் நடனம் ஆடலாம். இது எதுக்கு?
2. தன் காதலன்/கணவன்
அடுத்த பெண்ணிடம் பேசினாலே உண்டு இல்லை
என்று ஆக்கிவிடுவார்கள் என்பதுதான் நிஜம்.
ஆனால் சினிமாவில் மட்டும் ஹீரோக்கள்
என்ன செய்தாலும் ஒத்துக்கொள்வது போல்
காட்டுகிறார்கள்.
3. ரஜினியிலிருந்து அனைத்து நடிகர்களும்
பெண் அடக்காமாக இருக்கணும், அப்படி இருக்கணும்னு
இப்படி இருக்கணும்னு பெண்களுக்காக பல
அட்வைஸ்கள் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் படத்தின் ஹீரோயின்
அணிந்து வரும் உடையின் நிலை?????
ஹீரோயினின் உடையில் பாந்தம் வேண்டும்,
கவர்ச்சி உடை கூடாது என ஏன் சொல்லமாட்டார்கள்?
ஹீரோயின் கவர்ச்சியும்
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு அவசியம்!!!
4. ஆபாசமான க்ளோசப் காட்சியில் நடிக்க மாட்டேன்
என்று நடிகை சொன்னால் அவருக்கு பர்த்தி வேறு
நடிகைஇதுதான் நிலை. ஆனால் ஆபாசமான
பாடிமூவ் மெண்டுகளுக்கான பாடலுக்கு நடிக்க
மாட்டேன் என்று நடிகர்கள் சொல்லுவதா?
சரித்திரமே இல்லை.
5. தனக்கு ஹீரோயினாக நடித்த நடிகைகளுடனே
வெக்கமில்லாமல் அம்மா, அக்கா கேரக்டர்கள்
நடிக்கிலாம் தப்பில்லை!!
6. தனது மகள் வயது நடிகையாக இருந்தாலும்
அவர் ஹீரோயின்!!!
இப்படி கேட்டுக்கொண்டே போனால் நிறைய
கேள்விகள் வரும். ஆபாசம் என்பதற்கு
அளவுகோல் என்ன? இதைப் பற்றி
சமீபத்திய விகடனில் படித்தேன்!! அதிர்ந்தேன்.
விகடனில் பழைய விகடனிலிருந்து சில பக்கங்களை
தருவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அதில் ஆபாசம் என்பதற்கு அளவுகோல்
என்ன? என பலர் கூறியிருந்தார்கள்.
டி.ஜே சண்முகம் என்பவர் கூறியிருந்ததைப்
படித்த போதுதான் இந்த அதிர்ச்சி. அவர் சொன்னதற்கும்
தற்போது நடைமுறையிலிருப்பதற்கும் மடுவுக்கும்
மலைக்கும் உள்ள வித்தியாசம்!!!
ஒரு நாடகத்தில் தனது தங்கையின் தலையை
அண்ணன் வாஞ்சையாக தடவுவது போல் காட்சியாம்.
இதுவே தவறு,தொடாமல் நடிக்கவேண்டும் என
மு.வ அவர்கள் அவருக்கு கடிதம் எழுதியிருந்தாராம்!!!!
அண்ணன் தங்கையே தொட்டுக்கொள்ளக்கூடாது என்றால்
இப்போது வரும் திரைப்படங்களை பார்த்தால் என்ன
சொல்ல முடியும்.
இலைமறைவு காய்மறைவாக “தொட்டால் பூ மலரும்!
தொடாமல் நான் மலர்வேன்” டைப் பாடல்கள் அந்தக்
காலமென்றால் அதையே ரீமிக்ஸாக்கி நடக்கும்
கொடுமைகள் இந்தக் காலம்.
இந்த ஆபாசங்களை தடுக்கப்போவது யாருன்னு?
கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு?
ஸ்டைலில் நாமும் ஒரு சேனல் ஆரம்பித்து
பேசினால் கூட தீராது போலிருக்கு பிரச்சனை.
மக்கள் விரும்புவதைத்தான் தருகிறோம்”
அப்படின்னு சிலர் சொல்றாங்க. அப்ப
திரைகக்தையை மட்டுமே நம்பி எடுத்த
படங்கள் வெற்றி பெறவில்லையா???
இதெல்லாம் டீவி மூலமாக சென்சார் இல்லாமல்
நம் வீட்டு வரவேற்பறைக்கு வந்துவிடுகிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளம்..
பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போல்
இந்த அவலநிலையை எப்படி மாற்றுவது எனும்
கேள்விக்கு விடைத்தெரியாமல் பலரும் குமுறுவதுதான்
உண்மை நிலை.
எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கும்.
இந்த ஒரு கேள்விக்கு மட்டும்( இந்த அவலநிலையை எப்படி மாற்றுவது?)
விடை கிடையாதோ??????
17 comments:
// எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கும்.
இந்த ஒரு கேள்விக்கு மட்டும்( இந்த அவலநிலையை எப்படி மாற்றுவது?)
விடை கிடையாதோ??????//
மில்லியன் டாலர் கேள்விங்க இது.
இதுக்கான பதில் யாருக்கும் தெரியாது.
அதுக்கும் மேல ஒன்றை விட்டுடீங்க சார், ஆபாசமா காமிச்சிட்டு, நடிகையோ, இயக்குநரோ ஒரு வரி சொல்லுவாங்க, “கவர்ச்சியா நடிக்கறது தப்பில்லை, ஆபாசமா நடிக்கறதுதான் டப்பு ச்சீ தப்புன்னு” தத்துவம்லாம் சொல்லுவாங்க...
இதே ரோஜா, தமிழ்ல ஒரு படம் வந்தது, அதுல, ஒரு பெண் அரை குறை ஆடையுடன் இருப்பவரைப் பார்த்து “மூடிட்டு இருக்கணும், இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்” என்பார், எனக்கோ செம சிரிப்பு
அதுசரி சினிமால நடிச்ச ஒரே காரணத்துக்காக அரசியலில் ஆதரிக்கிற மக்கள் இருக்கிற வரை இவங்களும் இப்படித்தான் இருப்பாங்க....
நரேஷ்
nareshin.wordpress.com
அதுக்கும் மேல ஒன்றை விட்டுடீங்க சார், ஆபாசமா காமிச்சிட்டு, நடிகையோ, இயக்குநரோ ஒரு வரி சொல்லுவாங்க, “கவர்ச்சியா நடிக்கறது தப்பில்லை, ஆபாசமா நடிக்கறதுதான் டப்பு ச்சீ தப்புன்னு” தத்துவம்லாம் சொல்லுவாங்க...
இதே ரோஜா, தமிழ்ல ஒரு படம் வந்தது, அதுல, ஒரு பெண் அரை குறை ஆடையுடன் இருப்பவரைப் பார்த்து “மூடிட்டு இருக்கணும், இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்” என்பார், எனக்கோ செம சிரிப்பு
அதுசரி சினிமால நடிச்ச ஒரே காரணத்துக்காக அரசியலில் ஆதரிக்கிற மக்கள் இருக்கிற வரை இவங்களும் இப்படித்தான் இருப்பாங்க....
நரேஷ்
nareshin.wordpress.com
வாங்க ராகவன்,
இதுக்கான பதில் யாருக்கும் தெரியாது//
யாராவது ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும். :((
சினிமால நடிச்ச ஒரே காரணத்துக்காக அரசியலில் ஆதரிக்கிற மக்கள் இருக்கிற வரை இவங்களும் இப்படித்தான் இருப்பாங்க//
வாங்க நரேஷ்,
சரியா சொன்னீங்க. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
எம்ஜீஆருக்கோ,எண்டீராமராவுக்கு சினிமா கலைஞர்கள் என்றதால் மட்டும் பதவி கிடைத்துவிடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
ஒரு காலத்துல பிள்ளைங்கள கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்க. அப்புற்ம் எங்கள கேட்டீங்க, இப்ப திரைத்துறையைக் கேக்குறீங்க. இப்பிடியே பிக்கப் பண்ணி பிரதமர், ஜனாதிபதி வரைக்கும் கேளுங்க :))
\\ஆபாசம் என்பதற்கு
அளவுகோல் என்ன?\\
எவ்வளவு பேசினாலும் முழுமையான விடைகாண இயலாது.
அவர் அவருக்கு ஒர் அளவுகோல்
எல்லாவற்றிலும் கொடுமை....பனிசூழ் பிரதேசத்தில் ஆடும்...பாடும் போது கதாநாயகன் ஃபுல் சூட்டில் இருப்பான்..ஆனால் நாயகியோ..உடல் முழுதும் காட்டிக்கொண்டு( குளிரிலும் ) இருப்பாள்.பாவம்.,
கேள்வி கேட்போம், யாருக்காவது மண்டையில் உறைச்சு ஏதாவது நல்லது செய்யறாங்களான்னு பார்ப்போம்.
:((
எவ்வளவு பேசினாலும் முழுமையான விடைகாண இயலாது.
அவர் அவருக்கு ஒர் அளவுகோல்//
நமக்கு எம்புட்டு வேணும்னாலும் அளவுகோல் வெச்சுக்கலாம் ஜமால்.
சினிமா போன்ற மீடியாக்களின் தாக்கம்
அதிகம்.
எல்லாவற்றிலும் கொடுமை....பனிசூழ் பிரதேசத்தில் ஆடும்...பாடும் போது கதாநாயகன் ஃபுல் சூட்டில் இருப்பான்..ஆனால் நாயகியோ..உடல் முழுதும் காட்டிக்கொண்டு( குளிரிலும் ) இருப்பாள்.பாவம்.,//
ஆமாம், கேட்டா கதைக்கு இந்தக் கவர்ச்சி தேவைம்பாங்க.
நியாயமான கேள்விகள்..
வருகைக்கு நன்றி
வண்ணத்துப்பூச்சியாரே!!
//எம்.எம்.அப்துல்லா said...
ஒரு காலத்துல பிள்ளைங்கள கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்க. அப்புற்ம் எங்கள கேட்டீங்க, இப்ப திரைத்துறையைக் கேக்குறீங்க. இப்பிடியே பிக்கப் பண்ணி பிரதமர், ஜனாதிபதி வரைக்கும் கேளுங்க :))
//
LOL!
"திரைகக்தையை மட்டுமே நம்பி எடுத்த
படங்கள் வெற்றி பெறவில்லையா???" சரியான கேள்வி.பாராட்டுக்கள்.
நல்ல கேள்விகள். விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்:)
கே.விஸ்வநாத்தும் தான் படம் எடுத்தார். ஒருபோதும் பெண்களை தரக்குறைவாகக்காட்டவில்லையே? அதிலும் தெலுங்கில் நாயகிகளை கொஞ்சம் அதிகமாகவே எக்ஸ்பிளாயிட் செய்த்தாகவே எனக்கு தோன்றியது.90களில் நான் பார்த்த முக்காலேமூணு வாசி படங்களில் காமடி என்ற பேரில் extra marital affair ஐ அபத்தமாக நியாயப்படுத்தி காட்டி இருந்தார்கள்.
Post a Comment