Wednesday, March 04, 2009

நாயிடம் நாங்கள் படும் பாடு!!!

உங்க வீட்டுல நாய் வளக்கறீங்களா? அப்படின்னா
இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

வீட்டுல நாய் வளக்காதவங்களுக்கு- இது உங்களோட
அனுபவமாவும் இருக்கலாம். சேம் பளட்ன்னு பின்னூட்டம்
போடுவதற்காகவும் படிக்கலாம்.

நாய் கடிச்சா ஊசி போடணும் அது இதுன்னு
கேள்விபட்டது(பலரைப்பாத்தது) ஏதோ ஒண்ணு
எனக்கும் நாயைக் கண்டா பெம்மாத்தான் இருக்கும்.


பாலகுமாரன் தன்னோட ஏதோ ஒரு நாவலில்
“பருவத்தில் பன்னிகூட அழகாத்தான் இருக்கும்னு”
சொல்லியிருப்பாரு. அது எனக்கு நிறைய இடத்துல
ஞாபகம் வரும். இந்த நாய் விஷ்யத்துல கண்டிப்பா.
குட்டியா இருக்கும்போது அழகா இருக்கும். பெரிய
நாய்களைப் பாத்தா,” கால்கிலோ சதையை கவ்விடுமோன்னு”
இருக்கும்.

ஆஷிஷும் அம்ருதாவும் ரொம்ப நாளா
“எங்களுக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுங்கம்மான்னு”
கேட்டுகிட்டே இருக்காங்க. சான்சே இல்லைன்னு சொல்லிட்டேன்.
இருவருக்கும் போரோன்கைடீஸ். இதுல இந்த மாதிரி
வளர்ப்புப் பிராணிகள் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.
ஆனாலும் நாயை வளர்க்க ஆரம்பிச்சா அதோட
போராட்டம் ஜாஸ்தி.

சரி இப்ப மேட்டர் என்னன்னு கேக்கறீங்களா?
அதுவும் சரிதான் மேட்டருக்கு வருவோம்.

நாய் நன்றி உள்ள மிருகம். எல்லாம் ஓகே.
நாயைக் கண்டா பயப்படறவங்க நாய் இருக்கறவங்க
வீட்டுக்கு போனா என்னா ஆகும்? அந்த வீட்டில
இருக்கறவங்க கொடுக்கற ரியாக்‌ஷன் எனக்கு
ரொம்பவே கோபம் வரவைக்கும்.

நாயை வளர்க்கறவங்க. அதோடு அன்றாடம்
பார்க்க பழகன்னு இருக்காங்க. அதனால்
கடிக்காது. உங்களுக்கு அது செல்லம். நாங்க
இல்லைன்னு சொல்லலை. அதுக்காக
வீட்டுக்கு விருந்தாளியா 1 மணிநேரம்
போயிருந்தாக்கூட நாயை அவிழ்த்துவிட்டு
“இட் வோண்ட் பைட்!!!” பயப்படாதீங்கன்னு
சொல்றீங்களே இது நியாயமா??

அதை விடக் கொடுமை,” இப்படி எல்லாம்
பயப்பட்டா எப்படின்னு” நாயைப் பத்தி
லெசன் வேற எடுக்கறீங்களே??? அவ்வ்வ்வ்வ்..

அயித்தானின் நண்பர் வீட்டுக்கு போயிருந்தோம்.
அவங்க வீட்டுல நாய் இருக்குன்னு தெரியாது.
(தெரிஞ்சிருந்தா கண்டிப்பா போயிருக்க மாட்டோம்)
உள்ளே போன கொஞ்ச நேரத்துலையே நாய்
வெளியே வந்து காலைச் சுத்த ஆரம்பிச்சிடுச்சு!!!!
மோப்பம் தான் பிடிக்குதுன்னு அவங்க சொன்னாலும்
பசங்க பயந்து போய் சோபாவிலே சம்மணம் போட்டு
உக்காந்திட்டாங்க!!!
ரொம்ப கஷ்டப்பட்டோம்.

”பயப்படாதீங்க. ரொம்ப ஃப்ரெண்டிலி டாக்”
அப்படின்னு நண்பர் சொல்ல,”எங்களுக்கு நாய்னா
அலர்ஜி, 30மினிட்ஸ் கட்டி வெச்சா நாங்க கிளம்பிடறோம்.
(கல்யாணம் விசாரிச்சு கிப்ட் கொடுக்க போயிருந்தோம்)
அப்படின்னு சொன்னதுக்கு நண்பரோட மனைவிக்கு
கோபம் வந்திடுச்சு.

“நாயை எங்க வீட்டுல புள்ளையாத்தான் வளர்க்கறோம்!!!
வர்றவங்க போறவங்களுக்காக கட்டி போட முடியாது.
நாய் சுதந்திரமா இருக்கணும்.... அது இதுன்னு
பேச நாங்க கிளம்பி வந்திட்டோம்.

அப்புறமா அந்தம்மா போன் செஞ்சு
“மன்னிச்சுக்கோங்க! எங்கவீட்டு நாயைக் கண்டு
பயம்னு சொன்னதும் கோபம் வந்திடுச்சு!!!!”
அப்படின்னு சொன்னாங்க. அயித்தானுக்கு
கோபம் வந்து நல்லா கிளாஸ் எடுத்திட்டு
போனை வெச்சிட்டாரு.

நாயை சுதந்திரமா வளர்க்கணும்னா வீட்டுல
வைச்சுப்பானேன், தெருவுல விட வேண்டியதுதானே?

நாயை வளர்க்கக்கூடாதுன்னு சொல்ல வர்லை.
வளர்ப்பது அவரவர் இஷ்டம். ஆனா வீட்டுக்கு
வர்றாவங்களும் அந்த நாயைக் கண்டு பயப்ப்டக்கூடாதுன்னு
சொன்னா எப்படி??? குரைக்கும் சத்தத்துக்கே
குலை நடுங்கும்போது இதெல்லாம் டூ மச்சா
இருக்கு.

அப்பத்திலேர்ந்து யாராவது எங்க வீட்டுக்கு
வாங்கன்னு கூப்பிட்டா!! “உங்க வீட்டுல
செல்ல பிராணி ஏதும் இருக்கான்னு” கேட்டு
விசாரிச்சுகிட்டுத்தான் போவதா? இல்லையான்னு?
முடிவு செய்யறதை பழக்கமாக்கிகிட்டேன்.

வீட்டுலதான் தொந்திரவுன்னு பார்த்தா ரோட்டுலையும்
அதை விடக் கொடுமையா இருக்கு.
அயித்தான் ஊருக்கு போனாலும் விடாம
வாக்கிங்(வாக்கிங்கிற்கும் அவர்தானே பார்டன்ர்,
சேந்து பேசிக்கிட்டே நடக்கும்போது அலுப்புத்
தெரியாது)போவேன். அப்படி ஒருநாள்
போயிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது
ஒரு நாய் மூச்சிரைக்க ஓடிவருது!!!

அந்த நேரத்தில் நான் மட்டும் தான்
நாய்க்கு பக்கத்தில். ரொம்ப தூரத்தில்
ஒருத்தர் வந்துகிட்டிருந்தார்.

என்ன செய்யலாம்!! இனி அயித்தான்
இல்லாட்டி வாக்கிங் வரப்டாதோன்னு!
யோசிசுகிட்டே நிக்கறேன், தூரத்துல
இருந்த அந்த மனிதர் கொஞ்சம் கிட்டத்துல
வந்துட்டு,”யு டோண்ட் ஸ்கேர் மேடம்.
இட் வோண்ட் பைட்!!! ஜஸ்ட் கிவிங்
ட்ரையிங் டு ரன்” அப்படின்னு சொல்ல
முதல்ல நாயைக் கயித்தப்பிடிச்சுகூட்டிகிட்டு
போயான்னு கத்தினேன்!!!

“ஐ அம் சாரி” அப்படின்னு சொல்ல
கைல ஏதாவது கிடைச்சிருந்தா அடிச்சிடலாம்னு
தோணிச்சு. அந்த ஆளோட நல்ல நேரம்
ஒண்ணும் கிடைக்கலை!!

ஏய்யா! நீங்க வாக்கிங் போக ரோடுல
போறவங்களுக்கு டெர்ரர் ஆக்கறீங்க!!!!
சிலர் கயித்தைக் கட்டி கூட்டிகிட்டு
வாக்கிங் வருவாங்க. அவங்களையும்
சேத்து இழுத்துகிட்டு நாய் ஓடுவதை
பாக்கும்போது” பாவ்ம் இவங்களுக்கு இது
தேவையான்னு” நினைப்பேன்.என்னவோ மனசுல பட்டுச்சு சொன்னேன்.
அம்புட்டுதாங்க.

42 comments:

நட்புடன் ஜமால் said...

பல முறை பயந்திருக்கிறேன் ...

ராமலக்ஷ்மி said...

பாயிண்ட் பாயிண்ட். சரியாச் சொன்னீங்க. இதே அனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது:)!

Anonymous said...

:)

வண்ணத்துபூச்சியார் said...

Nice.

புதுகைத் தென்றல் said...

இப்ப நான் சேம் ப்ளட் சொல்லணுமா ஜமால்.

:))

புதுகைத் தென்றல் said...

இதே அனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது:)!//

அப்ப உங்களுக்கு சேம் பளட் சொல்லிக்கிறேன் ராமலக்‌ஷ்மி.

புதுகைத் தென்றல் said...

நாங்க கஷ்டப் படுறதைச் சொன்னா
ஸ்மைலி போடறீங்களாதூயா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்.

:))))))))))

புதுகைத் தென்றல் said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே.

NTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

நட்புடன் ஜமால் said...

\\அதுக்காக
வீட்டுக்கு விருந்தாளியா 1 மணிநேரம்
போயிருந்தாக்கூட நாயை அவிழ்த்துவிட்டு
“இட் வோண்ட் பைட்!!!” பயப்படாதீங்கன்னு
சொல்றீங்களே இது நியாயமா??\\

கவுண்டமனி படம் பார்த்த மாதிரி இருக்கு

எம்.எம்.அப்துல்லா said...

//"நாயிடம் நாங்கள் படும் பாடு!!!"

//


என்னையத்தான் சொல்றீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

//நாயை சுதந்திரமா வளர்க்கணும்னா வீட்டுல
வைச்சுப்பானேன், தெருவுல விட வேண்டியதுதானே?

//

அதுனாலதான் என்னைய மெட்ராஸ்ல விட்டாய்ங்கபோல எங்க வீட்ல.

வித்யா said...

பயப்படாதீங்க கடிக்காதுன்னு சொல்லுவாங்க. நீங்க ஈப்படி சொல்றது நாய்க்கு தெரியுமான்னு திருப்பி கேட்பேன். எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம்:(

எம்.எம்.அப்துல்லா said...

நல்ல கடி..ச்சீய், கருத்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

இதே அவஸ்த்தையெல்லாம் நானும் பட்டுருக்கேன். ஆனா இத ஒரு மேட்டரா எழுதலாம்னு எனக்குத் தோனாம போய்ருச்சே...

பதிவுக்கு மேட்டர் எப்படியெல்லாம் புடிக்கணும்னு உங்ககிட்டதான் கத்துக்கனும் :))

பனங்காட்டான் said...

அருமையாகச் சொல்லியிருக்கீங்க. எனக்கும் நாய்ங்கன்னாலே பயந்தான். அதற்கு சின்ன வயசில நடந்த ஒரு சம்பவமும் ஒரு காரணம். அப்போ எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு வீடு ஒண்ணு கட்டிக்கிட்டு இருந்தாங்க. அங்கே ஒரு நாய பாதுகாப்புக்காக வச்சிருந்தாங்க. அது அந்த தெருவிலே யாரையும் வர விடாது. பயங்கரமா குரைத்துக்கொண்டே பாய்ந்து ஓடி வரும். அதனாலே அந்த வழியா போரதையே நிறுத்திட்டேன். ஒரு நாள் ஒரு நண்பனுடன் ஸ்கூலில் இருந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது அவனிடம் அந்த நாய் பிரச்சனையை பற்றி சொல்லி, நாம் வேற வழியில்தான் எங்க வீட்டுக்கு போகனும்னு சொன்னேன். உடனே அவன் நாம கையில பெரிய கல்லு ஒண்ணு எடுத்துக்கிடலாம், கல்லைப் பார்த்தா எந்த நாயும் பயந்து ஓடிவிடும் என்றான். அதன்படி நாங்கள் இருவரும் ஆளுக்கொரு கல்லை எடுத்திக்கிட்டு நாயின் கோட்டையை(?) நெருங்கினோம்.

நாங்கள் வருவதைக் கண்டு நாய் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்று வெளியே ஓடி வந்தது. கையிலிருந்த கல்லைப் பார்த்ததும் பயந்து தப்பிபதற்காக அப்படியே தெருவில் இறங்கி எதிர்திசையில் ஒடியது. உடனே என் நண்பன் ஒரு நல்ல(!) காரியம் செய்தான். நாய் தான் ஓடிவிட்டதே என்று கல்லைக் கீழே போட்டான். நாங்கள் வருகிறோமா என்று தெருமுனையில் நின்று திரும்பிப் பார்த்த நாய், அதை பார்த்ததும் அப்படியே எங்களை நோக்கி பாய்ந்து ஓடி வர ஆரம்பித்தது. நாங்கள் ஆளுக்கொரு திசையில் ஓட, நாய் என்னை நோக்கித் துரத்த எவ்வளவு தூரம் ஒடினேன் என்று தெரியவில்லை, நாய் கிட்டத்தட்ட என்னை நெருங்கி விட்டது, அந்த நேரம் பார்த்து ஒருவன் சைக்கிளில் அந்தப் பக்கமாக வந்தான். நல்லவேளையாக நாய் அவனைத் துரத்தத் துவங்கியது. நானும் தப்பித்தேன். அன்றிலிருந்து நாயென்றாலே அலர்ஜிதான்.

நாய் வளர்ப்பவர்களுடைய கொடுமை தாங்க முடியலப்பா! இவர்களுக்கு எதிராக யாராவது சங்கம் எதுனா ஆரம்பிச்சா தேவலை.

புதுகைத் தென்றல் said...

கவுண்டமனி படம் பார்த்த மாதிரி இருக்கு//

:))

புதுகைத் தென்றல் said...

என்னையத்தான் சொல்றீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன் :)


அதுனாலதான் என்னைய மெட்ராஸ்ல விட்டாய்ங்கபோல எங்க வீட்ல.//

:))

புதுகைத் தென்றல் said...

பயப்படாதீங்க கடிக்காதுன்னு சொல்லுவாங்க. நீங்க ஈப்படி சொல்றது நாய்க்கு தெரியுமான்னு திருப்பி கேட்பேன். எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம்:(//

வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகிக்கோங்க

புதுகைத் தென்றல் said...

இதே அவஸ்த்தையெல்லாம் நானும் பட்டுருக்கேன். ஆனா இத ஒரு மேட்டரா எழுதலாம்னு எனக்குத் தோனாம போய்ருச்சே...//

நமக்குத் தோணியது, அது அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும்னா எழுத வேண்டியதுதான். இது ந்ம்ம பாலிசி அப்துல்லா.

பதிவுக்கு மேட்டர் எப்படியெல்லாம் புடிக்கணும்னு உங்ககிட்டதான் கத்துக்கனும் //

ஆஹா...

புதுகைத் தென்றல் said...

நாய் வளர்ப்பவர்களுடைய கொடுமை தாங்க முடியலப்பா! இவர்களுக்கு எதிராக யாராவது சங்கம் எதுனா ஆரம்பிச்சா தேவலை.//

வாங்க பனங்காட்டான்,

நாமளே ஆரம்பிச்சிருவோம். இந்தப் பதிவுலையே எம்புட்டு பேரு சேந்திருக்காங்க.

உங்களின் முதல் வருகைக்கு மிக்க் நன்றி

இராகவன் நைஜிரியா said...

ஒரு ஜோக் சொல்றது வழக்கம்..

நாய் வளர்ப்பவர் : “குறைக்கிற நாய் கடிக்காது அப்படின்னு சொல்வாங்க” அதனால கவலைப் படாதீங்கன்னு சொல்லுவார்.

வந்திருப்பவர் : இது உங்களுக்குத் தெரியும், எனக்கும் தெரியும், ஆனா நாய்க்கு தெரியுமா அப்படின்னு கேட்பார்..

அது மாதிரி உங்க வீட்டு செல்ல நாய் உங்களுக்கு செல்லமா இருக்கலாம். வந்தவங்களுக்கு இல்லையே.

சில வீட்ல நாய்கள் வந்து மூஞ்சி, மொகரை எல்லாம் நக்க ஆரம்பிச்சா, எனக்கு பயங்கர டென்ஷன் ஆகிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிலர் வீட்டில் நாயை நாய் அப்படின்னு சொல்லக்கூடாது, பேர் சொல்லித்தான் கூப்பிடணும் அப்படின்னு படுத்துவாங்க பாருங்க, பளார்னு ஒரு அறை விடலாம் போல இருக்கும்.

பலருடைய கோபத்தை நீங்க எழுதிவிட்டீர்கள்.

மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

இதுக்குத்தான் பின்னூட்டம் படிக்காம, பின்னூட்டம் போடக்கூடாது என்பது.

நான் சொன்ன ஜோக்கை, நிஜமாவே வித்யா சொல்லிட்டாங்க...

வெரி, வெரி சாரி...

புதுகைத் தென்றல் said...

எல்லாவற்றிற்கும் மேலாக, சிலர் வீட்டில் நாயை நாய் அப்படின்னு சொல்லக்கூடாது, பேர் சொல்லித்தான் கூப்பிடணும் அப்படின்னு படுத்துவாங்க பாருங்க, பளார்னு ஒரு அறை விடலாம் போல இருக்கும்.//

வாங்க இராகவன்,

ஆமாம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நாயிடம் நீங்கள் படும் பாடு வேறு யாரும் படக் கூடாதென.. நாய் வளர்ப்பவர் வளர்க்காதவர் யாவரும் படிக்கட்டும் என..இப்பதிவு..விகடன் குட் ப்ளாக்ஸ் பிரிவில்..:)!

வாழ்த்துக்கள் தென்றல்!

ஜீவன் said...

யூத் விகடனில் இந்த பதிவு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

கும்க்கி said...

நான் எதிரணி..இந்த கருத்துக்குக்களுடன் மாறுபடுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

இப்போதுதான் பார்த்தேன் ராமலக்‌ஷ்மி,

வாழ்த்துக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!//

நன்றி ஜீவன்

புதுகைத் தென்றல் said...

ஓ அப்படியா,

வருகைக்கு நன்றி கும்க்கி

தாமிரா said...

பல கலவை உணர்வுக‌ளில் இந்த பதிவு ஜொலிக்கிறது.. நகைச்சுவை தெறிக்கிறது.. நியாயமான அறிவுரை.. காதல் (வாக்கிங்கிற்கும் அவர்தானே பார்டன்ர்).. பின்னிட்டிங்க தென்றல்..

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள்:)) விகடன் குட் பிளாக்கில் உங்கள் பதிவு:)

Iyarkai said...

:-))

goma said...

சிலருக்கு நாய் பாசம் தாய் பாசத்தை விட அதிகமா இருக்கும்
--------------------------
ஒரு ஹி ஹி
------------
...நீ எப்படி நாய்ன்னு சொல்லலாம்...!?*****

”ஐயோடா!உங்க நாயைச் சொல்லலை உங்க வீட்டுக்காரரத்தான் சொன்னேன் ...”

”...அதானே பார்த்தேன்...”

RamKumar said...

நாயை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் தெருவில் விட வேண்டியது தானே , நன்றாக இருக்கிறது உங்கள் கூற்று. அவர்கள் வீடு அவர்கள் உள்ளே சுதந்திரமாக உலவ விட்டுருகிறார்கள், உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் தெருவில் இருந்தே பேசிவிட்டு போக வேண்டியதுதானே.சமயங்களில் உறவினர்களும் நன்பர்களும் நம்மை விட்டு போய்விடுவார்கள், ஆனால் நாய் ஒன்றுதான் நன்றியுடன் என்றென்றும் இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

பின்னிட்டிங்க தென்றல்..//

என்னடா நம்ம ஃப்ரெண்டைக் காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

இப்பத்தான் சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள்:)//

நன்றி பூர்ணிமா.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி இயற்கை

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமா,

சிலருக்கு நாய் பாசம் தாய் பாசத்தை விட அதிகமா இருக்கும் //

ரசிச்சேன்.

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் தெருவில் இருந்தே பேசிவிட்டு போக வேண்டியதுதானே.//
ஆமாங்க அதுதான் என்னோட முடிவும்.

//சமயங்களில் உறவினர்களும் நன்பர்களும் நம்மை விட்டு போய்விடுவார்கள், ஆனால் நாய் ஒன்றுதான் நன்றியுடன் என்றென்றும் இருக்கும்.//

இதுக்கு என் பாணியில் பதில் சொல்வேன். எதுக்கு வம்புன்னு பேசாம இருக்கேன்.

எதுவும் தான் அனுபவித்தால்தான் புரியும்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

வெயிலான் said...

தனிமையில் இருப்பவர்களை நாயோ அல்லது ஏதோ செல்லப் பிராணிகளை வளர்க்கச் சொல்லி மருத்துவர்களே சிபாரிசு செய்கிறார்கள்.

நாய் வளர்ப்பது தவறில்லை. வீட்டிற்கு யாராவது வரும் போது கட்டி வைத்து விடலாம்.

என் கருத்து சரி தானே?

புதுகைத் தென்றல் said...

தனிமையில் இருப்பவர்களை நாயோ அல்லது ஏதோ செல்லப் பிராணிகளை வளர்க்கச் சொல்லி மருத்துவர்களே சிபாரிசு செய்கிறார்கள்.

நாய் வளர்ப்பது தவறில்லை. வீட்டிற்கு யாராவது வரும் போது கட்டி வைத்து விடலாம்.

என் கருத்து சரி தானே?//

மிகச்சரியே!!