Thursday, March 05, 2009

எங்கவீட்டு செஃப்கள்!!!!

அம்ருதம்மாவிற்கு அடுப்படியில் என்னுடன் நிற்பதென்றால்
சந்தோஷம்.

சப்பாத்தி செய்ய ஆரம்பித்தால் போதும் தனது
குழவியையும், சப்பாத்திக் கல்லையும் எடுத்து
வந்துவிடுவாள்.



நானும் செய்கிறேன் என்று ஒரு உருண்டை மாவு
எல்லாம் எடுத்து தனியாக வைத்துக்கொண்டு
செய்ய ஆரம்பிப்பாள்.


இதோ அம்ருதம்மா செய்த சப்பாத்தி.
இட்லி ஊற்ற, காய் வதக்கினால் தானும் வதக்க
என வந்து நின்று கொள்வாள்.





”இப்பவே என்ன உனக்கு”! என்று கேட்டு வெளியே
தள்ளினால் பிறகு சமையற்கலை மீதே வெறுப்பு வந்துவிடுமே!
சின்னச் சின்ன வேலைகள், உருளைக்கிழங்கு தோலுரித்தல்,
வெங்காயம் தோலுரித்தல் போன்றவை கொடுப்பேன்.

ரொம்ப சந்தோஷப்படுவாள் என் அம்ருதம்மா. :))







ஆஷிஷ் தவழ ஆரம்பித்த காலத்தில் இரவில் பக்கத்தில்
படுத்திருந்த குழந்தையைக் காணவில்லை. (தரையில்தான்
படுத்திருந்தேன்) அயித்தானும் ஊரில் இல்லை. பயந்துவிட்டேன்.
ஏதோ சப்தம் வேறு!!! பயந்து கொண்டே சப்தம் எங்கேயிருந்து
வருகிறது என்று பார்த்தால் சமையற்கட்டிலிருந்து!!!!

பின் கதவை அடைக்க மறந்துவிட்டேனா!!! ஏதும்
உள்ளே புகுந்து சாமான்களை புரட்டுகிறதான்னு பயம்.
ஆனாலும் குழந்தையை காணவில்லையே என்று
தேடி்க்கொண்டு கிச்சனில் போனால் அங்கே இருந்தது
ஆஷிஷ் தான். ஜீரோ வால்ட்ஸ் பல்ப் வெளிச்சத்தில்
ஐயா ஹாயாக உட்கார்ந்துகொண்டு வாணலி+ கரண்டியுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறார்!!! :))

கார் பொம்மைகள் எத்தனை இஷ்டமோ அதே அளவுக்கு
கடாய், பாத்திரங்களுடன் விளையாடுவதும் அப்பொழுதே
ஆஷிஷுக்கு இஷ்டம். 8 வ்யதுக்கு ஆஷிஷ் சப்பாத்தி
சுட வந்துவிடுவான். அதன் பிறகு தோசை ஊற்றக் கற்றுக்
கொண்டான். தற்போது ப்ரெட் ரோஸ்ட், தோசை, இட்லி
டீ, காபி, போர்ன்விடா போன்றவை செய்து விடுவான்.
(ஆஷிஷ் ஷ்பெஷல் காபி ஒவ்வொரு ஞாயிறும் உண்டு)


”ஆண்பிள்ளைக்கு சமையற்கட்டில் என்ன வேலை?” என்று
விரட்டியதில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாத
நேரங்களில் ஆஷிஷ்தான் தங்கைக்கு உணவு தயாரித்து
கொடுப்பான்.


சென்றவாரத்தில் ஒரு நாள் ஆஷிஷ் என்னிடம் வந்து
“அம்மா, ஹாபி கிளாசில் ஆர்ட் & க்ராப்டிற்கு
பதில் குக்கரி எடுத்துக்கொள்கிறேன் ” என்றான்.

(இங்கு பிள்ளைகள் படிக்கும் பள்ளியில்
சனிக்கிழமைகளில் ஹாபி கிளாஸ் உண்டு.
ஓவியம்,கராத்தே, கிரிக்கெட்,பாஸ்கட்பால்,
நீச்சல்,பியானோ, என வகுப்புக்கள் நடக்கும்.
ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் இருவேறு
கலைகள் பயில வேண்டும். இதற்கு மிக மிக
நாமினல் ஃபீஸ் தான். ஆஷிஷ் கிரிக்கெட் & ஆர்ட்
அம்ருதா பாஸ்கட்பால் & பியானோ கற்றுக்கொண்டார்கள்.)



ஓவியம் அவனுக்கு பிடித்தமான ஒன்று.(என்னைப் போல!!!

சரி சரி.. மேட்டருக்குவர்றேன் :)) )

ஏன் கண்ணா? என்றேன்.

”இல்லம்மா, குக்கரி கிளாசில்னா ஏதாவது புதுசா கத்துக்கலாம்ல”?
என்றான். சரி உன் இஷ்டம் போல் அடுத்த வருடம்
மாத்திக்கலாம் என்றது ரொம்ப சந்தோஷம்.

***********************************************

இரவில் பாத்திரத்தை உருட்ட ஆஷிஷ் தினமும் செல்ல
ஆரம்பித்ததால் சத்தத்தை வைத்து கண்டுபிடிக்க
காலில் தண்டை போட்டு வைத்திருந்தேன்.
அதில் வரும் ஓசைக்காக காலில் அவன் தாளம்
போடும்பொழுதே அயித்தானிடம் சொன்னேன்
“நம்ம ஆஷிஷுக்கு டான்ஸும் நன்றாக
வரும் பாருங்கள் “ என்று. (எனக்கு நடனம்
ஆடப் பிடிக்கும். பெண்ணுக்கு என்ன நடனம்??!!
என்று வீட்டில் அடக்கியதால் உள்ளுக்குள்
புதைந்து போயிற்று. தம்பி நல்லா ஆடுவான்)

யாரிடமும் கற்காமல் ஆஷிஷ் எந்த
பாட்டுக்கும் ஆடுவான். இந்த விடுமுறையில்
டான்ஸ் கற்க வேண்டும் என்று கேட்டிருக்கிறான்.
கண்டிப்பாய் செய்வேன்.

11 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல உதவிதான் ...

நட்புடன் ஜமால் said...

\\”இப்பவே என்ன உனக்கு”! என்று கேட்டு வெளியே
தள்ளினால் பிறகு சமையற்கலை மீதே வெறுப்பு வந்துவிடுமே!\\


அரோக்கியம்.

வாழ்த்துகள் மருமகளே

நட்புடன் ஜமால் said...

\\”ஆண்பிள்ளைக்கு சமையற்கட்டில் என்ன வேலை?” என்று
விரட்டியதில்லை.\\

அவசியம் ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

pudugaithendral said...

இந்த மாமாக்களுக்குத்தான் தன் மருமகப் பிள்ளைகளை வாழ்த்தும்போது எம்புட்டு சந்தோஷம்.. :))

நட்புடன் ஜமால் said...

\\புதுகைத் தென்றல் said...

இந்த மாமாக்களுக்குத்தான் தன் மருமகப் பிள்ளைகளை வாழ்த்தும்போது எம்புட்டு சந்தோஷம்.. :)\\

அவர்களும்

எமது பிள்ளை போல உணர்வு வருவதாலே ...

ராமலக்ஷ்மி said...

பிள்ளைகளின் ஆர்வத்துக்குத் தடை போடாது வளர்ப்பது அவர்கள் தன் காலில் நிற்க உதவும்தான்.

உங்கள் வீட்டுக்கு வரும் வாய்ப்பு அமைந்தால் ஆஷிஷ் கையால் ஒரு கப் காஃபி, அம்ருதா கையால் 2 சப்பாத்தி. ஆர்டர் பண்ணி வச்சுக்கறேன் இப்போதே:)!

Vidhya Chandrasekaran said...

பசங்க பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்:)

pudugaithendral said...

உங்கள் வீட்டுக்கு வரும் வாய்ப்பு அமைந்தால் ஆஷிஷ் கையால் ஒரு கப் காஃபி, அம்ருதா கையால் 2 சப்பாத்தி. ஆர்டர் பண்ணி வச்சுக்கறேன் இப்போதே//

ஆர்டர் புக் செஞ்சிடுவோம். :))

pudugaithendral said...

வாங்க வித்யா,

வர்ற சம்மர் ஹாலிடேஸில் நிறைய
செஞ்சு ”காட்டப்போவதாக” அண்ணனும் தங்கையும் நேற்றே அக்ரிமெண்ட் போட்டுவிட்டார்கள்.

:(( :))

எம்.எம்.அப்துல்லா said...

சம்மர் ஹாலிடேஸில் நிறைய
செஞ்சு ”காட்டப்போவதாக” அண்ணனும் தங்கையும் நேற்றே அக்ரிமெண்ட் போட்டுவிட்டார்கள்

//


காட்டுற மாதிரி இருக்கக்கூடாது. சாப்பிடுற மாதிரி இருக்கனும்னு மருமகன்கிட்டயும்,மருமகள்கிட்டயும் சொல்லிடுங்க

:)

Vidya Poshak said...

I was in Hyd yesterday and tried to reach you, but could not get you in phone. Next time I will try to meet you.