Wednesday, March 11, 2009

விசாகப்பட்டிணத்திற்கு ஒரு பயணம்..

கப்பல் கட்டுற விசாகப்பட்டிணத்திற்கு ஆஷிஷ் குட்டியாக
இருந்த பொழுது சென்றிருக்கிறோம்.

அங்கே சென்றபோது நடந்தவைகளை பிள்ளைகளுக்கு
அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்ததால்,”எப்போ கூட்டிகிட்டு
போறீங்க”ன்னு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பிள்ளைகளுக்கு முழுப்பரிட்சை முடிந்து 2 வார
காலம் விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். சென்ற
வெள்ளியன்று விசாகப்பட்டிணம் புறப்பட்டோம்.

15 நாள் அவகாசத்தில் முடிவு செய்ததால்
டிக்கெட் கிடைக்கவில்லை. எல்லாம் 14 தேதிக்கு மேல்தான்
கிடைத்தது. அப்போது அயித்தானுக்கு வேற வேலை இருப்பதால்
சென்ற வாரம் செல்ல முடிவு செய்தோம்.

இண்டர்நெட்டில் டிக்கட் புக் செய்ய தேடினால்
”கரீப் ரத்” என ஒரு ட்ரையின் கிடைத்தது. ஹை
இது ஏதோ நல்லா இருக்கும் போல இருக்கேன்னு
டிக்கெட்டின் விலை என்னன்னு பார்த்தால்
499 என்று வந்தது. பிறகுதான் தெரிந்தது
இந்த ட்ரையின் மொத்தமும் 3 டயர் ஏசி.

ஆஹா ஏசி வண்டிக்கு பேரு கரீப் ரத் (gareeb rath -ஏழைகளின்
ரதம்) அப்படின்னு பேரான்னு பாத்தா இது
பட்ஜட் ஏர்லைன்ஸ் போல் குறைந்த விலையில்
ஏசியில் பயணிக்க விரும்புபவர்களுக்காக என
புரிந்தது.

பெட் ரோல் கூட நாம் வாங்கிக் கொள்ள
வேண்டும் (ஒரு செட் 25 ரூபாய்)


முதன் முறை ஏர்டெக்கனில் பயணித்த பொழுது
ஒரு பயம் இருந்தது. விமானம் எப்படி இருக்குமோ?
என ஒரு அச்சம். அதே மாதிரி இதுக்கும் இருந்தது.
என்ன கண்டீஷனில் கோச் இருக்குமோன்னு பாத்தா
”பச்சக் கலரு ஜிங்குச்சான்னு” ட்ரையின் வந்துச்சு.
அவ்வ்ன்னு சொல்லிகிட்டே உள்ளே போனேன்.
பரவாயில்லை. நல்லாவே இருந்துச்சு.

ட்ரையின் எப்படி இருக்குமோன்னு பயந்துகிட்டிருந்தேன்,
அது நல்லா இருந்துச்சு. ஆனா கிரகம் மனுஷ பய
மனசு.... எனது அனுபவமா? என்னன்னு புரியலை.
ஆனா என் மனசுல இப்போ ஆழமா பதிஞ்சு போயிருக்கிறது
ஒன்றே ஒன்றுதான். அது மக்களுக்கு பொது இடங்களில்
எப்படி நடந்து கொள்வது என்பதைப் பற்றிய எண்ணம்
அறவே இல்லை. அடுத்தவன் எப்படி போனால் என்ன?
நான் நல்லா இருந்தாச் சரின்னு? நினைக்கற மனப்பான்மை
அதிகமாயிடுச்சு. :(

8.15க்கு ட்ரையின் புறப்பட்டது. சாப்பிட்டு 9.15 மணிவாக்கில்
உறங்கப்போயாகிவிட்டது. 10.30 மணியளவில் ஹோ,,ஹோன்னு
பெரிய அளவில் சிரிப்பு சத்தம். தூக்கிவாரிப்போட்டு எழுந்தேன்.
எங்களுக்கு 2 சீட் தள்ளி ஒரு கும்பல் ஆனந்தமாக பேசி,சிரித்து
மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். அவர்கள் எழுப்பிய சத்தம் தான்
அது:(. அந்தச்சத்தம் கேட்டு கைக்குழந்தை ஒன்று அழ
ஆரம்பிக்க அதை சமாதனம் செய்ய இயலாமல் அதன் அம்மா
தவித்துக்கொண்டிருந்தார்.

இந்தக் கூட்டத்தின் கொட்டம் ஓயவில்லை. பூனைக்கு யார்
மணிகட்டுவது எனும் தினுசில் யாரும் போய் அவர்களிடம்
பேசவும் இல்லை. காரணம் அங்கே கூட்டத்தில் மெஜாரிட்டி
பெண்கள். இப்போத்தான் பெண்களை ஏதாவது சொன்னால்
பெரிய குத்தமாச்சே!!

அயித்தான் போனார்,” மணி 10.45, அடுத்தவர்களையும்
தூங்கவிட்டால் சந்தோஷமாக இருக்கும்” அப்படின்னு
சொல்லிட்டு வந்தார். கேக்கற ஜன்மமா அதுங்க? 11.15க்கு
அந்தப்பக்கம் வந்த டிக்கெட் பரிசோதகரிடம் எல்லோரும்
சொல்ல அவர் போய் சொல்லியும் கேட்கவில்லை அவர்கள்.
மணி 11.45 ஆகியும் அடங்காமல் ஆடிக்கொண்டிருந்த
அடங்காப்பிடாரிகளிடம் போய் அயித்தான் கோபமாக
கத்த,” ஒரு தடவை சொன்னீங்க. பாப்போம் போங்கன்னு
சொல்ல”, இந்த முறை நான் களத்தில் குதித்தேன்
“1 தடவை இல்லீங்க அம்மணி 3 தடவை சொல்லியும்
நீங்க கேக்கற மாதிரி தெரியலை. கைக்குழந்தை விடாம
அழுவது கூட உங்களுக்கு கணக்கில்லை! உங்களுக்கு
உங்கள் சந்தோஷம் தான் முக்கியம்னு நினைக்கறீங்க
இது நியாமான்னு”கோபமான குரலில் கேட்டேன்.

அதற்கு அந்த கூட்டத்தில் ஒரு பெண்,”இடஸ் ஓகே!!”
என்றாள். கோபம் அதிகமானது. அடுத்தவங்களையும்
நினைங்கம்மா. இட்ஸ் நாட் அட் ஆல் ஓகே, பெட்டர்
யூ அண்டர்ஸ்டேண்ட் தட், அதர் வைஸ் யூ ஹேவ்
டு ஃபேஸ் த் சிக்குவன்ஸச்னு” சொல்லிட்டு வந்தேன்.

அதற்கு பிறகு ராஜமுந்திரியில் அவர்கள் இறங்கும்வரை
சத்தம் இல்லை.

ஆனாலும் நமக்குத் தூக்கம் கெட்டது கெட்டதுதானே?


நம்ம ரயில்வே துறை நல்லா முன்னேறிக்கிட்டு வருதுன்னு
சந்தோஷப்பட்டேன். அது பொறுக்கலை!!

லல்லுவின் லொல்லுவாகிய சைட் பர்த்திலும் மிடில்
பர்த்தால் வரும் குழப்பம் ஏராளம் ஏராளம்!!

நாம் பதிவு செய்யும் பொழுது கொடுக்கப்பட்டிருக்கும்
நம்பர் தான் நம்மளதுன்னு நினைச்சு போனா சார்ட்டில்
வேற நம்பர் இருக்கும். இதனால நாம சரியா பாத்து
உக்காந்தாலும் நம்ம கூட சண்டைக்கு வர்றவங்க தான்
ஜாஸ்தி.

இதுக்கெல்லாம் தடை உத்தரவு வாங்கினதா சொன்னாங்க.
ஆனாலும் இதும் தொடரும் தலைவலியா இருக்கு. :((
வரும்பொழுதும் ஒரு படித்த முட்டாளாலால் தூக்கம்
கெட்டது. ஏதோ தன் வீட்டில் உட்கார்ந்து கொண்டு
அழைப்பது போல் அவனுடன் வந்த கல்யாணி
எனும் பெண்(வந்ததுமே அப்பர் பர்த்தில் ஏறிப்படுத்துக்
கொண்டுவிட்டாள் அந்தப்பெண்)
கல்யாணி...... சிப்ஸ் சாப்பிடுகிறாயா?

கல்யாணி பிரியாணி சாப்பிடுகிறாயா?

கல்யாணி தூங்கிட்டியா?????

கல்யாணி தண்ணி வேணுமான்னு??

கத்திக் கத்தி கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவருடன் 2 பெண்கள் வந்திருந்தார்கள். இன்னொரு
பெண் ”பக்கத்திலேயே” அமர்ந்திருந்தாள்.

1 மணி நேரம் பொறுத்தது போதும்னு
எழுந்தேன், கீழே அமர்ந்திருந்த பெண்ணிடம்
“ஒண்ணு செய்யுங்க!! மேலே தூங்கிகிட்டு இருக்கற
பொண்ணையும் கீழே வந்திடச் சொல்லுங்க.
இந்தாளோட நச தாங்க முடியலைன்னு” சொன்னேன்.
”இல்லீங்க எந்த பிரச்சனையும் வராதுன்னு”
அந்தப் பொண்ணு சொல்ல மறுபடி கல்யாணி.... இழுக்க
ஆரம்பிக்க என் தங்கச்சி எந்திருச்சு முறைச்சதில
சுருதி இறங்கிடுச்சு.... :(

எப்பவும் இனிமை தரும் என் ரயில்பயணம் இந்த
முறை கசப்பான அனுபவத்தையே தந்தது.


ரயில் பயணம் மட்டும் தான் கசப்பான அனுபவம்.

விசாகப்பட்டிணம், சிம்ஹாசலம், அன்னவரம் இந்த
இடங்களில் சூப்பர் அனுபவம். மிக இனிமையாக இருந்தது.

அதுவும் வருது...

14 comments:

S.Arockia Romulus said...

என்னங்க புதுகை விஜயசாந்தியாயிட்டீங்க போல....

ஆயில்யன் said...

//கப்பல் கட்டுற விசாகப்பட்டிணத்திற்கு ஆஷிஷ் குட்டியாக
இருந்த பொழுது சென்றிருக்கிறோம்.//

இப்ப படு சுட்டியா இருக்கும்போது போயிட்டு வந்திருக்கீங்களா பாஸ்? :)))

நாகை சிவா said...

//இப்போத்தான் பெண்களை ஏதாவது சொன்னால்
பெரிய குத்தமாச்சே!!//

:))))))

புதுகைத் தென்றல் said...

என்ன ரோமுலஸ் செய்ய?
பொதுஇடத்தில் கொஞ்சமும் விவஸ்தை இல்லாம நடந்துக்கறப்ப கோவம் வருது.

நாகை சிவா said...

//மக்களுக்கு பொது இடங்களில்
எப்படி நடந்து கொள்வது என்பதைப் பற்றிய எண்ணம்
அறவே இல்லை. அடுத்தவன் எப்படி போனால் என்ன?
நான் நல்லா இருந்தாச் சரின்னு? நினைக்கற மனப்பான்மை
அதிகமாயிடுச்சு. :(//

நியாயமான வார்த்தை

புதுகைத் தென்றல் said...

இப்ப படு சுட்டியா இருக்கும்போது //

நானாசொல்லிக்கக்கூடாது பாஸ் ஆனாலும் சொல்றேன்,

ஆஷிஷ் இப்ப படுசுட்டி எல்லாம் இல்ல.
குட் பாய். :))

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி நாகை சிவா.

நட்புடன் ஜமால் said...

\\எப்பவும் இனிமை தரும் என் ரயில்பயணம் இந்த
முறை கசப்பான அனுபவத்தையே தந்தது.\\

வாழ்க்கைன்னா அப்படித்தான்.

ராமலக்ஷ்மி said...

பொது இடத்தில் இப்படி நடந்து கொள்பவர்களை நமக்கென்ன என்று இருந்து விடாமல் தட்டிக் கேட்ட விதத்துக்கு ஒரு ’சபாஷ்’!

kantha said...

ஏனுங்க... ஏன் நீங்க விசாகை பீச், ஊடா பார்க், கைலாஷ்கிரி, அருக்கு பாரஸ்டு போன்ற எடத்துக்குப் போனீகளா... அத சொல்லலையே...
கந்தசாமி

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா படிக்கும்போது பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

வாங்க கந்தசாமி,

ஒவ்வொண்ணா பதிவு வரும் பாருங்க.

புதுகைத் தென்றல் said...

பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்//

அது சரி