Wednesday, March 11, 2009

சிம்ஹாசலம்...

தனது பக்தன் பிரஹலாதனுக்காக தூணி்லிருந்து

வெளிப்பட்ட விஷ்ணு அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.

அரக்கன் ஹிரண்யகசிபு சாகாவரம் பெறுவதற்காக
பஞ்ச பூதங்களினாலோ, மனிதர்களலோ, மிருகத்தாலோ,
பூமியிலோ, ஆகாயத்திலோ,காலை,மாலை,இரவு வேலைகளிலோ
தனது உயிர் போகக்கூடாது
என கேட்டு வரம் பெற்றான்.


ஆனால் அவனது அட்டாகாசம் தாங்காமல்
”தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
தூயவன் ஜோதி நாரயாணன்” என பக்தியொழுக
பாடிய பிரஹலாதனுக்காக தூணைப்பிளந்து
வந்து வாயிற்படியில்,மதியமும்,அந்தியும்
கலக்கும் நேரத்தில் தனது கூர்மையான நகங்களால்
ஹிரண்யகசிபுவைக்கிழித்து் வதம் செய்கிறார்.அந்த உக்கிர நரசிம்மரின் கோபத்தை தணிக்க
பிரஹாலதன் பாடிய பாடல்கள் பிரசித்தமானவை.

பிரஹாலத்னைக்காக்க நரசிம்மர் எழுந்தருளிய
இடத்தில்தான் சிம்ஹாசலம் கோவில் எழுப்பப்பட்டுள்ளாதாக
கூறப்படுகிறது.

இதுதான் சிம்ஹாசலம் கோவிலின் கோபுரம்.அந்தாரலய தரிசனம்(சன்னிதிக்கு அருகில்)மற்றும் அர்ச்சனை
சீட்டு வாங்கிக்கொண்டு நாங்கள் கோவிலுனுள் நுழைந்த பொழுது
கல்யாணமண்டபத்தில் லட்சுமி, நரசிம்ம திருக்கல்யாணத்தில்
மாங்கல்யதாரணம் நடந்து கொண்டிருந்தது.. வரிசையை விட்டு
நேராக அங்கே ஓடினேன். காணக்கிடைக்கா காட்சியாயிற்றே!!

மாங்கல்யதாரணம் முடிந்து ”தலம்ப்ராலு”
தெலுங்கு சம்ப்ரதாயத்தில் ஒரு நிகழ்வு
தரிசித்து பிறகுதான் ஆலயத்தினுள் நுழைந்தேன்.

சிம்ஹாசலத்துள் அருள்பாலிக்கும் நரசிம்மரின்
மூலரூபம் இதுதான்.

இந்தியாவில் இருக்கும் 18 நரசிம்ம சேத்திரங்களில்
இதுவும் ஒன்று. திருப்பதிக்கு அடுத்து அதிகமாக
வருமானம் ஈட்டும் கோவி்ல்கள் வரிசையில்
இந்தியாவிலேயே இந்தக்கோவிலுக்குத்தான்
இரண்டாவது இடம்.

சந்தனக்காப்பு அலங்காரத்திலேயெ எப்போதும் இருக்கும்
இறைவன். அவரின் நிஜரூப தரிசனம் காண மக்கள்
அக்‌ஷ்ய திருதியை அன்று கூட்டம் கூட்டமாக செல்வார்கள்.
12 மணிநேரம் மட்டும் தான் நிஜரூப தரிசனம், அதாவது
சந்தனம் பூசபப்டாமல்.

சரி அக்‌ஷயதிருதியைக்கு என்ன விசேடம்??

அன்றுதானே ஹரியின் ஹிருதயகமலவாசினி
மஹாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்த நாள்!!

தமிழகத்தின் வில்லிபுத்தூரிலிருந்து ப்ரத்யேகமாக
கொண்டுவரப்பட்ட சந்தனத்தை அரைத்துத்த்தான்
சாத்துவார்கள். 120கிலோ சந்தனம் தேவைப்படுமாம்
இவரை அலங்கரிக்க.
விஷ்ணுவின் ஹிருதயகமலத்தில் லட்சுமி என்றென்றும்
இருக்கிறாள். எனக்கு லட்சுமி நரசிம்மாவதாரம் மிக
பிடிக்கும்.

நரசிம்மர் லட்சுமி தேவியை தனது மடியில்
இருத்தி காட்சி தருவார். இங்கே ஹைதையிலிருந்து
1 மணிநேர பயணத்தில் இருக்கும் யாத்கிரிகுட்டாவும்
நரசிம்ம சேத்திரம் தான். குகைக்குள் ஸ்ரீ லக்‌ஷ்மி ந்ரசிம்மராக
அருள் பாலிக்கிறார்.

உந்தன் மடிதானே உலகின் நாற்காலி
ஒருநாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி-என்று
லட்சுமிதேவி்யும் பாடியிருப்பாளோ!! ஒருநாள்
என்ன? எப்போதும் என்னுடனேயே இரு! என
மடியில் இருத்திக்கொண்டு “எங்களைப்போல்
இருங்கள் தம்பதிகளே” என்று மெசெஜ் தருகிறானோ
என நினைப்பேன்.


சரி சரி.... விசாகப்பட்டிணத்திலிருந்து மிக
அருகில் 12 கிமீட்டர் தூரத்தில் இருக்கிறது
சிம்ஹாசலம். மலைமேல் எழுந்தருளியிருக்கிறார்
இறைவன்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே.

அருமையான தரிசனம் முடிந்து நாங்கள்
ஹோட்டலுக்கு திரும்ப அயித்தான் அலுவலக
வேலையைப் பார்க்க போய்விட்டார்.

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு
நன்றாக தூங்கினோம்(அதான் முதல் நாள் தூங்கலையே!!)
”வண்டி அனுப்பிவைக்கிறேன் வந்திடுங்க”ன்னு
சொல்லியிருந்தார் அயித்தான்.

போன இடம் எங்கேப்பா??

நாளைக்குச் சொல்றேன்..

13 comments:

நட்புடன் ஜமால் said...

எனக்கு புதிய தகவல்கள்

நட்புடன் ஜமால் said...

\\போன இடம் எங்கேப்பா??

நாளைக்குச் சொல்றேன்..\\

காத்திருக்கிறோம் ...

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்.

ராமலக்ஷ்மி said...

பயண விவரங்களை அருமையாய் தொகுத்திருக்கிறீர்கள். சந்தனக் காப்பு அலங்காரத்தில் இறைவன் அழகு.

நீங்கள் தந்த “நரசிம்மர் தரும் மெசேஜ் ”-ம் சூப்பர்:)!

புதுகைத் தென்றல் said...

நீங்கள் தந்த “நரசிம்மர் தரும் மெசேஜ் ”-ம் சூப்பர்:)!//

:))))))

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி.

எம்.எம்.அப்துல்லா said...

போன இடம் எங்கேப்பா??

நாளைக்குச் சொல்றேன்..

//

அக்கா டூர் கட்டுரை எழுதுனா இந்த வார்த்தை டெம்ப்ளட்பா :))

புதுகைத் தென்றல் said...

அக்கா டூர் கட்டுரை எழுதுனா இந்த வார்த்தை டெம்ப்ளட்பா //

:))

Anonymous said...

naanum poga poren..

narsim said...

அருமையான பயணக்கட்டுரை மேடம்.. படங்கள் அற்புதம்..

புதுகைத் தென்றல் said...

ஆஹா சந்தோஷம் தூயா

புதுகைத் தென்றல் said...

அருமையான பயணக்கட்டுரை.. படங்கள் அற்புதம்..//

நன்றி நர்சிம்.

வடுவூர் குமார் said...

ஆமாம்,அந்த டவர் ஏன் அப்படி சாய்ந்திருக்கு? ஏதாவது டிரிக் செய்தீர்களா?

புதுகைத் தென்றல் said...

ஆமாம்,அந்த டவர் ஏன் அப்படி சாய்ந்திருக்கு? //

அது விசாகப்பட்டிணம் டீவி டவர்.

இப்பல்லாம் யாரு டீடீ பார்க்கறாங்க.
அந்த சோகத்துல அதுவே சாஞ்சிடுச்சு போல

:(( :))