Thursday, March 12, 2009
மீனவ நண்பர்களுடன் ஒரு மாலைப்பொழுது...
வண்டியை அனுப்பிவைக்கிறேன் 5 மணிக்கு மீன் பிடிக்கும்
பக்கம் பிள்ளைகளுடன் வந்துவிடு, அங்கே கடலில் போட்டிங்
போகலாம்னு அயித்தான் போன் செஞ்சார். சரின்னு கிளம்பி
நாங்க விசாகப்பட்டிணத்தின் மீன் பிடிபடகுகள் இருக்கும்
இடத்திற்கு சென்றோம்.
5 மணியோடு படகுப்பயணம் முடிவடைந்துவிட்டதுன்னு
சொன்னாங்க. ஆஹா, சரின்னு இவருக்கு போனைப்போட்டு
மேட்டரைச் சொன்னேன். “சரி! அங்கையே இருங்க
நான் வந்திடறேன்னு” சொன்னார்.
சும்மா நிப்பதுக்கு ஒரு ரவுண்டு அடிச்சு மேட்டர் ஏதும்
தேறுதான்னு பார்க்கலாம்னு கிளம்பினேன். பல
சுவாரசியமான தகவல்கள் கிடைச்சது.
வலைகளை சரி செஞ்சு ரெடியாக வெச்சுக்கிறாங்க.
52 கிலோ எடை வரை இந்த வலைகளில் தாங்குமாம்!!!
பிடித்த மீன்களை கரை சேரும் வரை காக்க ஐஸ்
கட்டிகளை படகில் ஏற்றுகிறார்கள்.
அவர்களிடம் கேட்டு ஆஷிஷும் அம்ருதாவும்
ஆளுக்கு ஒரு கூடை ஐஸ் நிரப்பிக்கொடுத்தார்கள்.
“அம்மா! எப்படிம்மா ஃபாஸ்டா செய்யறாங்க!
ஒரு கூடை ரொப்பினதுக்கே கை வலிக்குதுன்னு”
சொன்னாங்க பசங்க.
1 மாதத்திற்குத் தேவையான உணவு ஆகியவைகளுடன்
படகுகள் தயாராகி கடலுக்குச் செல்கின்றன.
இதோ படகுகள் தயார்நிலையில்.
தன்னை நம்பிவரும் மக்களை கடலன்னை ஏமாற்றுவதில்லையாம்.
3 நாளிலேயே அதிக லாபத்தோடு திரும்ப வருவார்களாம்.
குறைந்த பட்ச லாபம் அல்லது லட்ச கணக்கில் லாபம்
கிடைக்கும் அளவுக்கு மீன்களோடுதான்
கறைக்குத் திரும்புவார்களாம்.
அப்போதுதான் கறைக்கு வந்து சேர்ந்த
படகிலிருந்து சுறாக்கள் எடை போட
பட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொன்றும் 50 கிலோவுக்கு மேற்பட்ட
எடை!!!!
மீன்களின் எடையை பார்த்து பிள்ளைகள் வியந்தார்கள்.
54கிலோ எடையுள்ள சுறாவை வண்டியில் ஏற்றுகிறார்கள்.
சின்னதும் பெரிதுமாக பல வகை மீன்கள் அங்கே!
”அக்கா உங்களையும் மீன் கூடையும் சேர்த்து போட்டோ
எடுக்கட்டுமா” அப்படின்னு கேட்டதும் சந்தோஷமா
போஸ் கொடுத்தாங்க.
”என்ன? பொம்பளைங்களை மட்டும்தான் போட்டோ
எடுப்பீங்களா”ன்னு கேட்ட அண்ணாச்சியிடம்
“ஹா, நீங்க மூட்டை தூக்குங்க நான் போட்டோ
எடுக்கறேன்னு,” சொன்னதும், டக்குன்னு இந்த
மூட்டையத் தூக்க, நான் பட்டுன்னு போட்டோ
எடுத்ததும் அண்ணாச்சிக்கு சிரிப்புத் தாங்கலை!!!
கப்பல் கட்டுற விசாகப்பட்டிணம் இது விசாகப்பட்டிணத்தின் சிறப்பு.
இயற்கையாகவே அமைந்திருக்கும் துறைமுகம் இது.
கப்பல் கட்டுற இடத்தைப்பார்க்க முடியவில்லை. அதற்கு
சிறப்பு பர்மிஷன் வேணுமாம்.
கப்பல் கட்டுற விசாகப்பட்டிணத்துல படகு கட்டுறதை
பாத்தேன். அதை உங்களுக்காக கிளிக்கி கொண்டாந்திட்டேன்.
மொத்தத்தில் மீனவநண்பர்களுடனான அந்த மாலைப்பொழுது
ரம்மியமாக இருந்தது.
இவ்வளவு போட்டோ எடுத்து, அவங்ககிட்ட பேசி எல்லாம்
முடிச்சும் அயித்தான் வந்து சேரலை!!!
அவரே போன் செஞ்சு.”ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கு!
நீ நேரா ...... வந்திடு!!!” அப்படின்னு சொல்லிட்டாரு.
எங்க வரச்சொன்னாரு?
................
யெஸ் அதேதான்!!! அடுத்த பதிவுல
சொல்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
கடல் ஓர ஊரிலே வாழும் எனக்கு
மீண்டும் அங்கே சென்று விட்டு வந்த உணர்வுகள்
இங்கேயும் சஸ்பென்ஸ் தொடரா!
கடல் ஓர ஊரிலே வாழும் எனக்கு
மீண்டும் அங்கே சென்று விட்டு வந்த உணர்வுகள்//
ஓ அப்படியா!!
இங்கேயும் சஸ்பென்ஸ் தொடரா!//
:))))))))
ஆக மொத்தம் கடலுக்கு போகலியா..?
அதுவும் நல்லதுதான் அந்த உப்பு காத்து தொடர்ந்து சுவாசிச்சா வாமிட் வரும். அதுக்கு கொஞ்ச நாள் பழகனும்.
மீனவ நண்பர்கள் லட்ச கனக்குல லாபம் சம்பாதிப்பதாக சொல்ல வருகிறீர்கள்.ஆனால் அவர்தம் வாழ்வு அப்படியொன்றும் சுக வாழ்வாக தெரியவில்லையே...
ரைட்...
அடுத்து சந்திப்போம்
ஆக மொத்தம் கடலுக்கு போகலியா..?
அதுவும் நல்லதுதான் அந்த உப்பு காத்து தொடர்ந்து சுவாசிச்சா வாமிட் வரும். அதுக்கு கொஞ்ச நாள் பழகனும்.//
அதான் 5 மணியோட போட்டிங் டைம் முடிஞ்சு போச்சே.(அதுக்காக விட்டுருவோமா.. பதிவு வரும்ல)
மீனவ நண்பர்கள் லட்ச கனக்குல லாபம் சம்பாதிப்பதாக சொல்ல வருகிறீர்கள்.//
ம்ம் மீனவ நண்பர்கள் சொந்த படகோடு சென்றால் லாபம் தான்.
//ஆனால் அவர்தம் வாழ்வு அப்படியொன்றும் சுக வாழ்வாக தெரியவில்லையே...//
பட்டுத்துணி நெய்யறவங்க வீட்டுல
கட்டுத்துணிக்கூட பஞ்சமுன்னு சொலவடையே இருக்கே.
அடுத்து சந்திப்போம்//
நிச்சயம் சந்திப்போம் சிவா.
அக்கா எனக்கு பிளாக்ல எழுதேன்னு சொல்லிக்குடுத்த மாதிரி இப்படி அழகா எழுதவும் சொல்லிக்குடுங்க
:)
அக்கா எனக்கு பிளாக்ல எழுதேன்னு சொல்லிக்குடுத்த மாதிரி இப்படி அழகா எழுதவும் சொல்லிக்குடுங்க///
avvvvvvvvv
நாகையில் கூட இதே மாதிரி ஒரு இடம் இருக்கு - வாசம் சும்மா ஆளை அப்படியே தூக்கிடும்.
வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும்..
எங்க போனாலும் நிறைய விடயம் கத்துக்க முயற்சி பண்றீங்க :)
கலகுங்கோவ் :)
வாசம் சும்மா ஆளை அப்படியே தூக்கிடும்.//
oo அப்படியா?
மும்பை ரயில்களிலில் எனக்கு இந்த வாசம் பரிச்சயம்
வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும்..//
ஆமாம் பாசமலர்.
பிள்ளைகளுக்கு நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பு. மீன் பிடிதொழிலைபற்றி பாடப்புத்தகத்தில் படிப்பதை விட நேரில் பார்த்த அனுபவம்
நிறைய கற்றுகொடுத்திருக்கும்.
எங்க போனாலும் நிறைய விடயம் கத்துக்க முயற்சி பண்றீங்க //
கற்றது கைமண் அளவு என்பது நம்ம பாலிசி ஆச்சே!!
வருகைக்கு நன்றி எஸ்.கே
படமும் விவரங்களும் அருமை.
நல்ல அனுபவங்கள்.! (போட்டோக்கள் நீங்கள் எடுத்தவையா? நம்பவே முடியலை.. நல்ல சென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ளன.. ஹிஹி.. பாராட்டுகள்)
நல்ல கமகமன்னு வாசனையா இருந்திருக்குமே!?
:))))
/
பட்டுத்துணி நெய்யறவங்க வீட்டுல
கட்டுத்துணிக்கூட பஞ்சமுன்னு சொலவடையே இருக்கே.
/
அருமையா சொன்னீங்க!
:)
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
(போட்டோக்கள் நீங்கள் எடுத்தவையா? நம்பவே முடியலை.. நல்ல சென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ளன..//
avvvvvvvvvvv
பாராட்டுக்கு நன்றி ப்ரெண்ட்
நல்ல கமகமன்னு வாசனையா இருந்திருக்குமே!?
ஆமாம் சிவா,
கருவாட்டுக்கு காயற மீன், உப்புத்தண்ணின்னு ஏரியாவே கமகமதான்.
:))
Post a Comment