Tuesday, March 17, 2009

புத்தகங்களின் ஞாபகம்...

வெகுநேரமாக நானும் மாமாவும் தாத்தாவின்
வருகைக்கு காத்திருந்து காத்திருந்து தூங்கிபோயிருப்போம்!!

காலையில் எப்போது கண்விழிப்போம் என்று சித்தி ரெடியாக
காத்துக்கொண்டு பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்.
கண்விழித்ததும் முதலில் அந்த வருடத்து புதுபுத்தகங்களுடன்
தான் குட்மார்னிங் சொல்வார் சித்தி.

புது பேக்(ஜோல்னா துணிப்பைதான். அதில் ஜிப் இருந்தால்
அது போன வருடத்தில் ஏதோ புண்ணியம் செய்திருப்போம்!!)
கைவிரல்கள்போன்ற மூடிவைத்த பெரிய பென்சில்,
எல்லாம் இருக்கும்.

மீனாட்சி பதிப்பகத்தில் சொல்லிவைத்து தாத்தா
வாங்கிவருவார்.

புது புத்தகங்களின் வாசனையை நுகர்வதற்காக
முதலில் ஓடி பல்துலக்கி வருவோம்..

புது புத்தகங்களுடன் ஒவ்வொரு முறையும்
அம்மம்மாவீட்டிலிருந்துதான் புதுவகுப்புக்கு செல்வேன்.
(நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு பெயராக
வாசித்து அந்த மாணாக்கரை தூக்கி அடுத்த கிளாச்
வாத்தியாரிடம் கொடுப்பார்கள். தமாஷாக இருக்கும்)

புது புத்தகம் ஒரு நாள் கூட என்னிடம் இருக்காது!!
எம்ஜிஆர் சார்( பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்
என்பது மட்டுமல்லாமல் பார்க்கவும் கொஞ்சம்
அவரைப்போலவே இருப்பார் என்பதால் நான்
வைத்த பெயர். என் பள்ளி ஆசிரியர்)வந்து
புத்தகங்களை பைண்ட் செய்ய வாங்கிப்போய்விடுவார்.


என்ன கலர் பைண்டிங் செய்வாரோன்னு காத்திருப்பேன்.
சில சமயம் மேலே ஒட்டும் பேப்பரை கொண்டுவந்து
”என்ன கலர் வேணும்னு சொல்லு!!” என்று
கேட்டு செய்து கொடுப்பார்.

பைண்டிங் புக் வைத்திருப்பது ரொம்ப சந்தோஷமகவும்
கவுரமாகவும் இருக்கும். பைண்டிங் நூலால்
இரண்டு பக்கமும் சமமாக வைக்க கஷ்டம்,
பேக்கில் கணம் அதிகம்னு கஷ்டம் இருந்தாலும்
பைண்டிங் செய்வதால் ரொம்ப நாளைக்கு கிழியாமல்
வருமே!!

6ஆம் வகுப்பு முதல் ஆங்கில மீடியம்.
அப்போது முதல் நிலை மாறிவிட்டது.!!ஆங்கில
மீடியம் புக் எல்லாம் மீனாட்சி பதிப்பகத்தில்
கிடைக்காது. திருச்சியில்தான் முழுதும் கிடைக்கும்.
அப்பா திருச்சிக்கு செல்லும்பொழுது, நேரம் இருந்தால்
வாங்கி வருவார். சில சமயம் புத்தகம் கிடைக்க
தாமதமாகும். வகுப்பிலோ ஆசிரியை திட்டுவார்!!!

ப்ரவுன் ஷீட் போடுவது பெரியவேலை.
அதை பாதுகாக்க அதன் மேல் நியூஸ் பேப்பர்
வேறு போட்டுத்தருவார் அம்மா.(இன்ஸ்பெக்‌ஷன்
போது நியூஸ் பேப்பரை எடுத்துவிட்டால்
அட்டை புதுசா இருக்குமே!)

கம்மோடு இருக்கும் லேபில்கள் விலை ஜாஸ்தி,
கம்மில்லாத லேபில்கள் 2 ரூபாய்க்கு 12 கிடைக்கும்.
அம்மா 1 ரூபாய்க்கு வாங்கி கட்டுரை நோட்
போன்றவற்றிற்கு மட்டும் அதை ஒட்டித்தருவார்.
மீதி புத்தகங்களுக்கு பேப்பரில் வெட்டி ஸ்கெட்ச்
பேனாவால் பார்டர் போட்டு, பெயர் எழுதித் தருவார்
அம்மா.


6ஆம் வகுப்பிலிருந்து மட்டும் புத்தகங்கள்
தலையணை சைஸுக்கு போனது ஏனோ தெரியவில்லை!!
கங்கா கைடு, கோனார் நோட்ஸாவது கிடைக்குமா
என்று அல்லாடியது, 7ஆம்வகுப்பில் கொஞ்சம் தெளிவாகி
அக்காக்களிடம் பழைய புக்குக்கு சொல்லிவைத்தது
என பல ஞாபகங்கள்...இப்போது பள்ளிகளிலேயே புத்தகங்கள் கொடுத்துவிடுகிறார்கள்.
பணத்தைக்கட்டி உடன் மொத்த புத்தகங்கள், நோட்புக்குகள்
கொடுத்துவிடுகிறார்கள்.

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இதோ அடுத்த
கல்வியாண்டு துவங்குகிறது.

புத்தகம் வாங்கியாகிவிட்டது. நோட்புக், புத்தகம்,
லேபிள், நோட்புக்கிற்கு ப்ளாஸ்டிக் கவர்,
கலர் பென்சில், ப்ளாஸ்டிக் ப்ரவுன் ஷீட் எல்லாம்
செட்டாக கொடுத்துவிடுவார்கள். (இவை எல்லாம்
ஃபீஸிலேயே அடக்கம்)

இதோ என் அம்மாவைப்போல நானும்
பிள்ளைகளின் புத்தகங்களுக்கு அட்டை போடுகிறேன்.
கம் வைத்த லேபில் ஒட்டும்போதெல்லாம்
எனக்கு என் லேபில் ஞாபகம் வரும்.

இப்படி ரெடி மேடாக கிடைக்கும்பொழுது எனக்கு
பழைய ஞாபகங்கள் ஓடும்.

காத்திருத்தலின் சுகத்தை இப்போதைய
பிள்ளைகள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதுவும் ஒரு வித அனுபவம்தான்.

ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை.
புதுபுத்தகம் வந்ததும் மட்டும் எல்லோரும்
அதிகமாக படிப்பது. :))9 comments:

நட்புடன் ஜமால் said...

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

வித்யா said...

\\ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை.
புதுபுத்தகம் வந்ததும் மட்டும் எல்லோரும்
அதிகமாக படிப்பது. :))\\

:)
காலேஜ் போய்கூட எங்களை ரெக்கார்ட் நோட்டிற்க்கு பிரவுன் ஷீட் போடும்படி கட்டாயப்படுத்தினார்கள். என்னாது சின்னப்புள்ளதனமாருக்குன்னு சவுண்ட்வுட்டப்புறம் தான் இந்தப் பழக்கம் கைவிடப்பட்டது.

நாகை சிவா said...

நல்ல கொசுவத்தி!

அது எல்லாம் பள்ளியோட போச்சு, கல்லூரி வந்த பிறகு நோட்ஸ் (மொழி பாடங்களுக்கு மட்டும்) ப்ரீட்சைக்கு முதல் போய் தான் கடையில் வாங்குவது. ;)

//காத்திருத்தலின் சுகத்தை இப்போதைய
பிள்ளைகள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதுவும் ஒரு வித அனுபவம்தான்.//

நியாயமான வருத்தம். அவர்கள் தேவைப்படுவது (கேட்பது) எல்லாமே உடனடியாக பெரும்பாலும் கிடைத்து விடுகிறது.

இராகவன் நைஜிரியா said...

வயசு எவ்வளவு ஆனாலும் பள்ளி ஞாபகங்கள் மாறுவதில்லை.

//காத்திருத்தலின் சுகத்தை இப்போதைய
பிள்ளைகள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதுவும் ஒரு வித அனுபவம்தான்.//

இந்த சுகத்தை மட்டுமா இழக்கின்றார்கள். இன்னும் எவ்வளவோ இழக்கின்றார்கள்.

ராமலக்ஷ்மி said...

நட்புடன் ஜமால் said...

// ஞாபகம் வருதே//

வழிமொழிகிறேன். காத்திருப்பு,புதுப் புத்தகம் அதன் வாசனை ஹும்ம்ம்ம்!

புதுகைத் தென்றல் said...

காலேஜ் போய்கூட எங்களை ரெக்கார்ட் நோட்டிற்க்கு பிரவுன் ஷீட் போடும்படி கட்டாயப்படுத்தினார்கள். என்னாது சின்னப்புள்ளதனமாருக்குன்னு சவுண்ட்வுட்டப்புறம் தான் இந்தப் பழக்கம் கைவிடப்பட்டது.//

:)))))))))

புதுகைத் தென்றல் said...

ஞாபகம் வருதே//

வெரிகுட்

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

கொசுவத்திதரும் பழைய நினைவுகள் என்றென்றும் இனிமையானவை.

வருகைகு நன்றி

புதுகைத் தென்றல் said...

காத்திருப்பு,புதுப் புத்தகம் அதன் வாசனை ஹும்ம்ம்ம்!//

ஆமாம் ராமலக்‌ஷ்மி,
நம் சிறுவயதுக்குள் சென்றுவிட்டு வந்த நினைப்புத் தருகிறதல்லவா?

வருகைக்கு மிக்க நன்றி