Tuesday, March 17, 2009

கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது...

என்னை நான் மீட்டெடுக்க வேண்டிய நிலை.
மனதை மாற்ற பதிவெழுத வந்துவிட்டேன்.
அடுத்து நேராக சென்றது விசாகப்பட்டிணத்தின்
சிறப்பான ஆர்.கே பீச்.

பவதாரிணி கோவில்


இது கொழும்பு கால் பேஸை நினைவூட்டும்.
வலது புறம் கடல், இடது புறம் கட்டிடங்கள்.
பாண்டிச்சேரியையும், சென்னையையும் கொஞ்சம்
கலந்தமாதிரியான ஒரு பீச்.

மச்யதர்ஷிணி எனும் aquarioum.அங்கே சென்று நான் வந்துவிட்டேன் என்று
போன் செஞ்சா? நான் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்,
வர 30 நிமிஷம் ஆகும்னு”சொன்னாரு அயித்தான்.
சரிதான்னு பிள்ளைகள் கூட்டிகிட்டு கடற்கரைக்கு
போனேன். கடற்கரைக்கு போய் கடலலையில்
கால் வைக்காட்டி சாமிகுத்தமாகிடும்ல...
பிள்ளைகள் தண்ணீரில் அளவளாவினர்.
நானும்தான். உடனிருந்த தங்கைக்கும்
கொண்டாட்டம்தான். கொஞ்சமாக இருட்ட
ஆரம்பித்த நேரத்தில் அயித்தான் போன்
செய்தார். பீச்சில் 10 நிமிடம் இருந்தோம்.

அடுத்து செல்வதாக இருந்த இடம் வெளிச்சத்தில்
சென்றால்தான் நன்றாக இருக்கும் என்பதால்
ஹோட்டலுக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்துகொண்டோம்.
இரவு உணவு பக்கத்திலேயே இருந்த கையேந்தி
பவனில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது
ஆஷிஷ்,”அப்பா தியேட்டர் பக்கத்துலதான்
இருக்கு!! சினிமா போகலாம்பா,” என்றான்.

விதி வலியது!!

.

21 comments:

நிஜமா நல்லவன் said...

Me the first?

நிஜமா நல்லவன் said...

/விதி வலியது!! /


என்ன படம் பார்த்தீங்க? மோகன் பூர்ணிமா நடிச்ச விதி படமா?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்படி என்ன படங்க அது..? :)

வித்யா said...

அக்கா நானும் விசாகப்பட்டிணம் பீச்சுக்கு போயிருக்கேன். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி. கிட்டத்தட்ட 6 மணிநேரம் செமையா ஆட்டம் போட்டோம்:)

புதுகைத் தென்றல் said...

என்ன படம் பார்த்தீங்க? //

தெலுங்கு படம்தான். :))
மோகன் பூர்ணிமா நடிச்ச விதி படமா?//

அது ரொம்ப நல்ல படமாச்சே.

புதுகைத் தென்றல் said...

அப்படி என்ன படங்க அது..? //

நாளைக்கு பதிவுலபாத்தா தெரிஞ்சிடப்போகுது கயல்

:))

புதுகைத் தென்றல் said...

6 மணிநேரம் செமையா ஆட்டம் போட்டோம்//

ஆஹா, பீச் நல்லா இருக்குல்ல.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

மீண்டு வாருங்கள் தோழி.. வாழ்த்துகள்.!

(நட்சத்திரவாரத்துக்காக டெய்லி ரெண்டு பதிவுன்னு போட்டுக்கொண்டிருக்கிறேன்.. கொஞ்சம் பிஸி. ரெண்டு நாளுக்குள்ளேயே கண்ணு வெளியே வந்துடும் போலயிருக்குது.. நீங்க எப்பிடி ஜமாய்க்கிறீங்க..?)

நட்புடன் ஜமால் said...

என்னை நான் மீட்டெடுக்க வேண்டிய நிலை.\\

நல்ல நிலை தான் ...

ராமலக்ஷ்மி said...

வலிய விதி மாட்டி விட்ட படம் என்னவோ:)?

தமிழ் பிரியன் said...

வில்லு படம் மாதிரி பார்த்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்... அதான் இந்த ஃபீலிங் ஆப் மகாத்மாவா இருக்கீங்க

புதுகைத் தென்றல் said...

மீண்டு வாருங்கள் தோழி..//

அதற்கான முயற்சிகள்தான் நடக்கிறது ஃப்ரெண்ட்.

புதுகைத் தென்றல் said...

ரெண்டு நாளுக்குள்ளேயே கண்ணு வெளியே வந்துடும் போலயிருக்குது.. நீங்க எப்பிடி ஜமாய்க்கிறீங்க..?)//

3 மணிநேர பரிட்சையை 11/2 மணிநேரத்துல எழுதறதுன்னு நான் எப்பவுமே கொஞ்சம் ”வித்தியாசமா”
இருப்பேன். இப்பவும் அந்த வேகம்தான் கைகொடுக்குது.

புதுகைத் தென்றல் said...

நல்ல நிலை தான் ..//

நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

10 நிமிஷத்துல பதிவு வருது ராமலக்‌ஷ்மி
:)))

வல்லிசிம்ஹன் said...

நானும் பதிவுகள் பக்கம் நிறைய வரவில்லை தென்றல். எதனால் மீட்டெடுக்க வேண்டிய நிலை?

எப்படியிருந்தாலும் சிறப்பாக வருவீர்கள் வந்துவிட்டீர்கள்.
வலிய விதியைத் தெலுங்கு படம் மூலம் பார்க்க நேர்ந்து விட்டதா:))))

புதுகைத் தென்றல் said...

எதனால் மீட்டெடுக்க வேண்டிய நிலை?//

மாமா(கணவரின் அண்ணன்) உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருக்கிறார்.

நான் மிகவும் மதிக்கும் மனிதர் அவர் அதான். :(((

புதுகைத் தென்றல் said...

வலிய விதியைத் தெலுங்கு படம் மூலம் பார்க்க நேர்ந்து விட்டதா//

ஆந்திராவுல தெலுங்குபடம் தான் வல்லிம்மா. பதிவு வருது பாருங்க.

:)))))))))

புதுகைத் தென்றல் said...

வில்லு படம் மாதிரி பார்த்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...//

கார்க்கி தம்பிக்கு கோபம் வரும் ஆனாலும் சொல்றேன்” விஜய் படமெல்லாம்
தியேட்டருக்கு போய் பாப்பதில்லைன்னு”
ஒரு நல்ல முடிவோடத்தான் இருக்கேன்.

(டீவியில போட்டா சேனலை மாத்திடலாமே!!)

வல்லிசிம்ஹன் said...

உங்கள் கணவரின் அண்ணனுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

நன்றி வல்லிம்மா