Thursday, March 05, 2009

பெண்ணின் பெருமை

பெண்மை இல்லாமல் வாழ்க்கை போரடிக்கும்.
இது ஏதோ பெண்ணீயவாதியாக சொல்வதாக
நினைக்க வேண்டாம். யோசித்து பாருங்கள்!!
உண்மை புரியும்..

ஒவ்வொரு நிலையிலும் பெண்ணோடு தான்
வாழ்வு பிணைந்திருக்கிறது.

ஆரம்பம் அன்னை.

அடுத்து அக்கா, தங்கையாக பாசத்தை பொழியும்
பெண்கள் திருமணமாகி போகும்பொழுது
தெரியும் அவர்களின் அருமை.
பதிவு இங்கே!




தோழி, காதலி, மனைவி என்று தொடரும்
பந்தம்.


தோழியின் அன்புக்கு இங்கே:

தோழி விடியலாம்:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனைவி்யாக மகிழ்விக்கிறாள்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

புதுகையில் வார,மாத புத்தகங்களின் ஏஜண்ட்
கணேசன் மாமா வீட்டில் 4 ஆண்குழந்தைகள்.
எனக்கு மட்டும் அந்த வீட்டில் பயங்கர செல்லம்.
அவர்கள் வீட்டில் என்ன செய்தாலும் எனக்கு
ஒரு பங்கு கட்டாயம். நெய் உருக்கிய பாத்திரத்தில்
அரிசிமாவு சர்க்கரை புரட்டி செய்யும் பொடிகூட
எனக்காக எடுத்து வைத்திருப்பார்கள்.
நவராத்திரியில் எனக்காக ட்ரெஸ்,
நாள்கிழமைகளில் வீட்டுப்பெண்ணாக தாம்பூலம்.

இதெல்லாம் ஏன் மாமி எனக்கு செய்யறீங்க?
நாராயணா(என் கிளாஸ் மேட்)சங்கர்
சண்டை போடறாங்க!” என்பேன்.
(இருவரும் அவர்களின் மகன்கள்தான்)

”வீட்டுல ஒரு பெண் குழந்தை இருந்தாத்தான்
அழகு, என் பெண் நீதான்!!” என்று சொன்னபிறகு
தான் எங்களின் சண்டை ஓய்ந்தது.

குட்டிக் குட்டிகால்களுடன் ஒரு பெண்குழ்ந்தை
தந்தையின் தோளைக் கட்டிக்கொள்ளும்பொழுது
கிடைக்கும் ஆனந்தம் தந்தை மட்டுமே
உணரக்கூடியது.





காய்ந்து போயிருக்கும் கைவிரல்களால்
தலைகோதும் பொழுது பாட்டியும் தாயாகிறாள்.

இப்பொழுது நான் சொன்னது சரிதானே!!

பெண் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தமில்லை.

வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் ஒவ்வொரு
பெண்ணும் போற்றத்தக்கவள்.

வாழ்வை மலரச் செய்யும் பெண்கள் அனைவருக்கும்
மனமார்ந்த மகளீர் தின வாழ்த்துக்கள்.


தாயன்பு- இது இல்லாவிட்டால் ஏது வாழ்வு?? இது ஒரு சுழலும் சக்கரம்.

24 comments:

வல்லிசிம்ஹன் said...

பாட்டுகள் இனிமை. என்னங்களும் இனிமை.
உண்மைதான்,. முன்னமேயே பெண்கள் உலகத்திலே...ன்னு பாட்டே வந்திருக்கு.
எப்பவும் வளத்தோடு வாழ வாத்துகள் தென்றல்.

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள் தென்றல்!

narsim said...

கலக்கல் தென்றல்.. அருமையான வரிகள்.. அன்னை பற்றி இன்னும் எழுதி இருக்கலாமோ???

சுட்டிக்கு நன்றி!

pudugaithendral said...

எப்பவும் வளத்தோடு வாழ வாத்துகள் தென்றல்.//

ஆஹா, மிக்க நன்றி

pudugaithendral said...

உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.

pudugaithendral said...

அன்னை பற்றி இன்னும் எழுதி இருக்கலாமோ???//

வாங்க நர்சிம்,

அன்னையைப் பற்றித்தான் எல்லோரும் எழுதுவாங்க. ஒரு பெண் பலநிலைகளிலும் உடன் இருக்கிறாள். இதுதான் நான் சொல்ல வந்தது.

ஆனாலும் கடைசியில் தாயன்புதான் வாழ்வு எனும் என் முந்தைய பதிவின் சுட்டியை இணைத்திருக்கிறேன். பாருங்கள்.

Vidhya Chandrasekaran said...

மகளிர் தின வாழ்த்துக்கள் சிஸ்டர்:)

நட்புடன் ஜமால் said...

தாய்

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

ராமலக்ஷ்மி said...

சுட்டிகளுக்கும் நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் அனைவருக்கும்..

pudugaithendral said...

உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வித்யா.

pudugaithendral said...

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை//

வருகைக்கு நன்றி ஜமால்

S.Arockia Romulus said...

super mam

Thamira said...

காதலி, மனைவி என்று தொடரும்
பந்தம்..//

இந்தக்கொடுமை பந்தங்களைத்த‌விர‌ ம‌ற்றெல்லாத்துக்கும் ஆமா போட்டுக்குறேன்.. ஹிஹி..

pudugaithendral said...

காதலி, மனைவி என்று தொடரும்
பந்தம்..//

இந்தக்கொடுமை பந்தங்களைத்த‌விர‌ //

ஹைய்யோ ஹைய்யோ,

நகைச்சுவையா இருக்கு. நான் எதுவும் சொல்லாட்டியும் ஃப்ரெண்டுக்கு புரிஞ்சிருக்கும்.

pudugaithendral said...

மனைவியையும் இந்த பந்தத்தில் சேத்துட்டா ரங்கமணீகளின் சங்கத்தலைவர் பதவி போயிடுமே! அப்புறம் ரமாவைப்பத்தி பதிவு போடும்போது வந்து ஏதாவது சொல்வேன்னு தான் நீங்க அப்படி சொன்னீங்கன்னு தெரியும்

:))

pudugaithendral said...

நன்றி ரோமுலஸ்

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள்!

*இயற்கை ராஜி* said...

மகளிர்தின வாழ்த்துக்கள்

Thamiz Priyan said...

நல்ல தொகுப்பு அக்கா! பெண் இல்லையேல் உலகமேது. வாழ்க்கையின் முழு அர்த்தமே பெண்களால் தானே வரும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

மோனிபுவன் அம்மா said...

குட்டிக் குட்டிகால்களுடன் ஒரு பெண்குழ்ந்தை
தந்தையின் தோளைக் கட்டிக்கொள்ளும்பொழுது
கிடைக்கும் ஆனந்தம் தந்தை மட்டுமே
உணரக்கூடியது.

உண்மை சம்பவம் தான் இது. அதற்கு அளவே இல்லை.

மகளிர் தின வாழத்துக்கள் வா

Kumky said...

:--))

வாழ்த்துக்கள் சிஸ்டர்.

(அக்கா என்றால் கோபித்துகொள்கிறீர்கள்)

Anonymous said...

உண்மை தான்...எங்கள மிஞ்ச யார் உண்டு அன்பில் :)

Ungalranga said...

மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!

அத்தோடு.. எனக்கு அம்மா சொன்ன விஷயத்தையும் சொல்லிட்டு ஓடிடுறேன்..

பெண்களை நன்றாக உணர ஆணால்தான் முடியும்னு சொன்னாங்க..

என்ன இருந்தாலும் லேடிஸ் பர்ஸ்ட்..
நன்றி.

~ரங்கன்