Wednesday, March 25, 2009

நண்பர்களின் ஞாபகம்....

நட்பு என்பது உறவுக்கும் மேலானது. என் மாண்டிசோரி ஆசிரியை
சொன்னது போல் உறவு நாம் பிறக்கும்பொழுதிலிருந்தே நம்முடன்
இருப்பது. நட்பு என்பதுநாம் அறிந்து தெளிந்து உருவாக்கிக்கொள்வது.

“உடுக்கை இழந்தவன் கைபோல” வருவது நட்பு மட்டும்தான்.
இதனால் எனக்கு நட்பு எப்போதும் ஒரு படி மேலே தான்.

என்னைப்போலவே அயித்தானுக்கு நண்பர்கள் அதிகம்.

டிசம்பர் 16 1995 திருமணம் முடிந்து முதன் முதலாக
ஹைதையில் கால் வைத்த நாள். இவ்வளவு தெளிவாக
அந்த நாள் ஞாபகம் இருக்க காரணம் அயித்தானின் நண்பர்கள். :))


மாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை இவருக்கு.
தனது சாமான்களை வைக்க மட்டும் இடம் போதும்
என்பதால் நல்லகுண்டா ஏரியாவில் ஒரு வீட்டின்
கார் ஷெட்டின் மேல் ஒரு ரூம் தான் இவரின் வீடு.
அந்த சின்ன ரூமில் போர்டபிள் டீவி, வாஷிங் மெஷின்,
டேப்ரிக்கார்டர், காபி போட கேஸ் அடுப்பு இவைகள் இருக்கும்.

இவர் சில நாள் நண்பர்களுடன் போய் தங்குவார்.
அவர்கள் சில நாள் இவருடன் வந்து தங்குவார்கள்.
கரண்கட் சமயங்களில் ஏரியா மாற்றி போய்
மிஸ்ஸாகமல் மேட்ச் பார்ப்பார்கள்.

சரி டிசம்பர்16 என்ன நடந்தது?

காலை 8மணிக்கு வந்திறங்கினோம்.
உள்ளே நுழைந்த என் பார்வையில் படவேண்டும்
என்பதற்காக மிகப் பெரிய சார்ட் பேப்பர் ஒன்று
காத்திருந்தது!!

அயித்தானின் நண்பர்கள் ஒவ்வொருவரும்
ஒரு டிப்பார்ட்மெண்டின்
(தம்மாலஜி, மிக்‌சிங்காலஜி, கட்டிங்....
என உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட
பழக்கங்களிலும்)ப்ரொபசர்களாகவும்,
அயித்தான் ஒவ்வொரு துறையிலும் முதல்
மாணவன் எனும் ரீதியில் பாராட்டு பத்திரம்
வைத்திருந்தார்கள்!!!!

சிரித்துக்கொண்டே அதை நான் படித்துக்கொண்டிருக்கும்
நேரத்தில் எதிர் வீட்டிலிருந்து போன் வந்திருக்கு
என அழைக்க அயித்தான் போனார்.

அவரது நண்பர்கள் தான்!! அந்த சார்ட்
பேப்பரை பார்த்து அயித்தானின் நிலை என்ன!!??
என்று தெரிந்து கொள்ள அழைத்திருந்தார்கள்.
:))))))

”அடி வாங்கி மயங்கி கிடப்பயோன்னு நினைச்சோம்!
ஒண்ணும் ஆகலைன்னு நினைக்கும்போது வருத்தமா
இருக்கு!! அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வர்றோம்.
சிஸடருக்கு நல்லா காபிப் போடத் தெரியுமான்னு
டெஸ்ட் வைப்போம்,” என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

:(((

ஹைதைக்கு வந்திறங்கிய 2 மணி நேரத்திலேயே
டெஸ்டான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்.
அயித்தான் கடைக்கு போய் தேவையான சாமான்களை
வாங்கி வந்தார். கன் போட்ட மாதிரி அரை மணி
நேரத்தில் அத்தனை பேரும் ஆஜர்.

பிரகாஷ், காங்கேயம் கார்த்தி, சந்தர், பாஷா,
ராஜூ, சத்தியம், ஸ்ரீகாந்த் என அவரின்
நண்பர்கள். இதில் இருவர் தவிர மற்றவர்கள்
நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 4 பேர்
இவருடன் ஹிந்துஸ்தான் லீவரில் வேறு
டிவிஷனில் வேலை. வார இறுதிகள் எப்போதும் இவர்களுடன்
தான்.

அறிமுகப் படலம் முடிந்ததும்,”அந்த சர்டிபிகேட்டை
பார்த்து நீங்க ஸ்ரீராமை கும்மிருப்பீங்கன்னுநினைச்சோம்,
சப்புன்னு ஆகிடுச்சு!!!” என்றனர்.
” சரி! சரி காபி கொண்டாங்க. போடத் தெரியுதான்னு
பாப்போம்!!!!!” என்றதும் காபி கொடுத்தேன்.

காபி குடித்து விட்டு,” காபி டெஸ்ட்ல பாஸ் செஞ்சிட்டீங்க!
மசாலா டீ நல்லா போடுவீங்கன்னு ஏற்கனவே மெசெஜ்
வந்திருச்சு!!!! சமையல் எப்படின்னு டெஸ்ட் வெச்சு
பாத்திருவோம், அதுக்கொரு நாளை ஃபிக்ஸ் செஞ்சிட்டு
ஸ்ரீராம் கிட்ட சொல்லி அனுப்பறோம்!!!!!” என்று
சொல்லிவிட்டு சென்றனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள்.
இவர்களின் குருப்பில் சில திருமணமாணவர்களும் உண்டு.
வார இறுதியில் திருமணமாணவர்களின் வீட்டுக்குச்
சென்று வேண்டியதைச் செய்யச் சொல்லி
சாப்பிடுவது வழக்கம் என்றார் அயித்தான்.(இவரும்
போனதுண்டு)

ஸ்ரீதர் என்றொரு நண்பர். அவரும் லீவரில்தான்
வேலை. திருமணமாகி ஒரு பெண் குழந்தை.
”நான் இந்த வாரம் ஊரில் இல்லை. டூர் போறேன்!”
என்று முன்னறிவிப்பு கொடுத்தாலும்,
“நீங்க இல்லாட்டி என்ன? அக்காதானே சமைக்க
போறாங்க!! நாங்க வீட்டுக்கு போயி வேணுங்கறதை
வாங்கிக் கொடுத்து பாத்துக்கறோம்!!!!” என்று
சொல்வார்களாம்.

இதையெல்லாம் கேள்வி பட்டதும் கதி கலங்கவில்லை.
அம்மம்மா வீட்டிலும் யார் வந்தாலும் மினிமம்
டிபன்/காபியாவது கொடுத்துத்தான் அனுப்புவது
பழக்கம். இவர்கள் என்ன மெனு கொடுக்கப்
போகிறார்கள் என்பது தான் குழப்பம்.


இவருக்கு மாற்றலாகக்கூடிய வாய்ப்புக்கள் இருந்ததால்
எந்த சாமானும் கொண்டு வரவில்லை. ஒரு சின்ன
குக்கர், 1 வாணலி, 4 தட்டு, 6 டம்ப்ளர், 2 பாத்திரம்
இவைகளுடன் என்ன விருந்து செய்ய முடியும்??

என்ன மெனு கொடுத்தார்கள்? விருந்து எப்படி
நடந்தது? டெஸ்டில் பாஸா? ஃபெயிலா?

எல்லாம் அடுத்த பதிவில். அதுவரை
ஆனந்தமாக இந்த பாட்டை ரசியுங்கள்.
அயித்தானின் ஆல் டைம் ஃபேவரைட். தனது
நண்பர்களுடனான நாட்களை நினைவு படுத்துவதாக
சொல்வார்.

15 comments:

நட்புடன் ஜமால் said...

“உடுக்கை இழந்தவன் கைபோல” வருவது நட்பு மட்டும்தான்.
இதனால் எனக்கு நட்பு எப்போதும் ஒரு படி மேலே தான்.\\

சரியானத சொன்னீங்க அக்கா

S.Arockia Romulus said...

நட்புக்கு இணையா உலகத்துல எதுவும் இல்லை....

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நட்புக்கு இணையா உலகத்துல எதுவும் இல்லை...//

ஆமாம் ரோமுலஸ்.

பரிசல்காரன் said...

இதுக்கு பின்னூட்டம் போடம போனா வரலாறு என்னைத் தப்ப பேசும்.

நல்ல ஃப்ளோங்க எழுத்துல. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.

உங்க அயித்தானையும், உங்களையும்விட அந்த நண்பர்கள் குடுத்துவெச்சவங்க...

பரிசல்காரன் said...

போன பின்னூட்டத்துல இருக்கற எழுத்துப்பிழைகளுக்கு மன்னிப்பு கேட்கறதுக்காக இந்தப் பின்னூட்டம்!

ஆயில்யன் said...

நட்பு தொடர்பில் அழகாய் ஒரு பதிவு !


கொடுத்து வைத்தவர்கள் உங்கள் நட்பு பெற்ற அவர்கள் & நாங்களும் கூட :))

ஆயில்யன் said...

//அயித்தான் ஒவ்வொரு துறையிலும் முதல்
மாணவன் எனும் ரீதியில் பாராட்டு பத்திரம்
வைத்திருந்தார்கள்!!!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

புதுகைத் தென்றல் said...

நல்ல ஃப்ளோங்க எழுத்துல. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.


நன்றி பரிசல்.

புதுகைத் தென்றல் said...

நட்பு தொடர்பில் அழகாய் ஒரு பதிவு !

நன்றி ஆயில்யன்

கொடுத்து வைத்தவர்கள் உங்கள் நட்பு பெற்ற அவர்கள் & நாங்களும் கூட //

ஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்தான் அழகான நட்பு அமையும் என்பது என் எண்ணம்.

நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

Thamizhmaangani said...

ரொம்ம்பவே ரசித்து படித்தேன்:)

புதுகைத் தென்றல் said...

ரொம்ம்பவே ரசித்து படித்தேன்//

மகிழ்ச்சி தமிழ்மாங்கனி

நிஜமா நல்லவன் said...

:)

ராமலக்ஷ்மி said...

நல்ல நினைவுகள்:)!

புதுகைத் தென்றல் said...

nandri ramalakshmi