Wednesday, March 25, 2009

நண்பர்களின் ஞாபகம்- நிறைவுப் பகுதி

முந்தைய பதிவிற்கு:

என்ன மெனுவா இருக்கும்னு மெர்சலாகிக் கிடந்த
என்னை என்னப்பன் கந்தப்பன் காப்பாத்திட்டான்.
எனக்கு அப்ப ரொம்ப நல்லா சமைக்கத்(அது மட்டும்தான்)
தெரிஞ்ச மெனு அது.

இந்த மெனுவை எனக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க
காரணம்,
1. அம்மா கை பக்குவமாக அனைவரும் நினைப்பது.
2. ஃப்ரைடு ரைஸ், பிரியாணி இதெல்லாம் ஹோட்டலில்
கிடைக்கும். இந்த மெனு வீட்டில் மட்டுமே கிடைக்கும்.
3. இதை சரியா செஞ்சிட்டா மத்த சமையலும்
நல்லா தெரியும்/தெரிஞ்சுக்கலாம் என்பது நண்பர்களின்
அபிப்ராயம்.

நீங்க திட்டறதுக்கு முன்னாடி மெனுவைச் சொல்லிடறேன்.

வெந்தயம்/வத்தல்குழம்பு, ஜீரகம் மிளகு ரசம், உருளைக்கறி/
கீரை மசியல். அப்பளம் பொறிச்சா கோச்சுக்கமாட்டோம்னு
சொல்லியிருந்தாங்க. :))

1 கிலோ உருளை வாங்கி வெங்காயக் காரக்கறி செய்தேன்.
எதுக்கும் இருக்கட்டுமென்று கீரை,பருப்பை தேங்காய் அரைத்து
மசியல், கம கமவென மணக்கும் ஜீரகமிளகு ரசம், தயிர்,
அப்பளத்துடன் சமையல் ரெடி. (ஸ்வீட் எதுவும் இந்த
காம்பினேஷன் சமையலில் செட்டாகாது என்பதால்
”பெருமனதுடன்” வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள்)

சோறு வைப்பதில் தான் சிறு பிரச்சனை! என்னிடமிருந்ததோ
மிக மிகச் சின்ன சைஸ் குக்கர். 500கிராம் அரிசிதான்
சமைக்க முடியும்.எதுக்கும் இருக்கட்டும் என்று 2 தடவை சோறு சமைத்து
வேறு பாத்திரத்தில் போட்டு வைத்தேன். ஆண்கள்
சாப்பிடும் அளவு கூட என்பதால் யோசனையுடனே
இன்னொரு குக்கர் சோறு ஏற்றி சமைத்து முடித்த
நேரம் வந்தார்கள் நண்பர்கள்.

”வேறு எதுவும் வேணாம். ஸ்ரைட்டா சாப்பாடுதான்!!”
என்றனர். “சரி! நீங்க உக்காருங்க, நான் பரிமாறுறேன்”
அப்படின்னு அயித்தான் சொல்ல எல்லோரும்
அமர்ந்தனர். நான் எடுத்துக்கொடுக்க அயித்தான்
பரிமாறினார்.

கொஞ்ச நேரத்தில் குழம்பு சட்டியை ஒருவர்
பக்கத்திலே எடுத்து வைத்துக்கொண்டு
மொத்தமும் தனக்குத்தான் என்று சொன்னார்.:))

சாப்பிடும் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம்
டென்ஷனாகி இருந்தது. வேற ஒண்றும் இல்லை.
ரசம் கூட வரவில்லை அதற்குள் ஒரு குக்கர்
சோறுதான் இருந்தது!!! இன்னும் ரசம்
தயிர் இருக்கே என்று அவசர அவசரமாக
குக்கர் ஏற்றினேன். அதுவும் காலியாகி
அடுத்த குக்கர், அப்போது அனைவரும்
சாப்பிட்டு முடிக்க சந்தருக்கு மட்டும்
மோர் சோற்றுக்கு சோறில்லை.

அதற்குள் நான் குக்கர் ஏற்றிருந்தேன்.
குக்கர் விசில் வந்து, ஸ்டீம் போய்
சோறு ரெடியாகும் வரை பொறுமையாக
உட்கார்ந்திருந்தார் சந்தர். போதும்டா!
வா! என்ற நண்பர்களிடம் சந்தர்
“இருங்கடா, நீங்க நல்லா சாப்பிட்டாச்சு.
மோர் சோறோடு உருளைக் கறி
சாப்பிடாட்டி ராத்திரி தூக்கம் வராது”ன்னு
சொல்லி பேசிச் சிரிச்சுகிட்டிருந்தாங்க.


அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்.
நானும் அயித்தானும் பாக்கி. அப்போதுதான்
சட்டியை பார்த்தேன். குழம்பு, ரசம் ஏதும்
மிச்சமில்லை!! கறி மட்டும் கொஞ்சமாக இருந்தது.
தயிர் 2 கரண்டிதான் மிச்சம். ஆனால்
மனது நிறைவாக இருந்தது.

பல ஆண்கள் உணவின் ருசியை பாராட்ட மாட்டார்கள்.
அவர்கள் அதிகமாக உண்ணும்பொழுது ருசிப்பதை
கண்டுபிடிக்கலாம் என அம்மம்மா சொல்வார்.
ஆனால் அன்று அத்தனை நண்பர்களும்
“சாப்பாடு நல்லா இருந்துச்சுன்னு நாங்க
சொல்ல வேணாம். சாப்பிட்ட மாதிரியை
பாத்தே தெரிஞ்சிருப்பீங்க. ஆனாலும்
மனமாரச் சொல்றோம் இந்த டெஸ்டிலும்
நீங்க பாஸ்!! வயிறு ஃபுல்லுங்க” என்று
சொல்லி பைக் ஓட்ட முடியாமல் ஒட்டப்போவதுயாருன்னு!
சண்டை போட்டுகிட்டு கிளம்பிப்போனார்கள்.

வெறும் தயிர் சோறோடு எங்கள் இரவுச்
சாப்பாடு நடந்தது.

இன்றும் பல நண்பர்கள் உணவருந்த வருகிறார்கள்.
சமைக்க பெரிய குக்கர், ரைஸ் குக்கர்,
ஒவன், போட்டு வைக்க பெரிய பெரிய பாத்திரங்கள்
எல்லாம் இருந்தும் கொஞ்சமே கொஞ்சம் பாத்திரத்துடன்
நடந்த அந்த விருந்து என்றும் நினைவில் நிற்கிறது.


30 நிமிஷத்தில் கிளம்பிவாங்க! என்று சொல்லி
நாங்கள் சென்றபோது சினிமா டிக்கட் ரிசர்வ்
செஞ்சு வெச்சு எல்லோரும் சினிமா பாத்தது.
(முத்து தெலுங்கு டப்பிங் :)) )

எங்க ஏரியாவில் கரண்ட் இல்ல.
மேட்ச் பாக்க வந்தா கோச்சுக்க மாட்டிங்கன்னு
தெரியும்!!:)) என்று சொல்லி வருவது.

நாங்கள் அங்கே செல்லும்பொழுது
அருமையாக கவனித்தது என பல நினைவுகள்.

அயித்தான் ஊரில் இல்லாத ஒரு சமயம்
கேஸ் தீர்ந்து போய்விட்டது. புக் செய்தாலும்
வர 1 வாரம் ஆகும். யோசனையுடன்
அமர்ந்திருந்த பொழுது அந்தப் பக்கமாக
வந்த நண்பர் ஒருவர் இவர் ஊரில் இல்லாத
காரணத்தால் உதவி ஏதும் தேவையோ என
பார்க்க வந்து விடயம் அறிந்து உடன்
தங்கள் அறையின் சிலிண்டரை கொண்டுவந்து
வைத்துவிட்டார்.” நாங்க ஹோட்டலில்
சாப்பிட்டுக்குவோம்” என்ற அன்பு.வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும்
இன்றும் தொடர்கிறது இவர்களின் நட்பு.

நாங்கள் குடியிருந்த அந்த கார் ஷெட்டின்
மேல் வீட்டை பிள்ளைகளை அழைத்துச்
சென்று காட்டினோம். எப்படி இங்கே இருந்தீர்கள்??
என ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள்.

சின்ன இடமாக இருந்தால் என்ன?
அந்த வீட்டின் பல இனிமையான நினைவுகள்
என்றென்றும் இனிக்கின்றன.

ஆர்.டீ.சி கிராஸ் ரோட் பக்கம் போகும்போது
இங்கேதான் முத்து படம் பார்த்துவிட்டு
வந்து சாப்பிட்டோம் என பிள்ளைகளுக்கு
சொல்லிக்கொண்டே எங்களின் இனிமையான
நினைவுகளுக்குள் அடிக்கடி போய் வருவோம்.

25 comments:

நட்புடன் ஜமால் said...

\\பல ஆண்கள் உணவின் ருசியை பாராட்ட மாட்டார்கள்.\\

அப்படியா!

நான் அதிலே இல்லைப்பா

புதுகைத் தென்றல் said...

அப்படியா!//

அப்படித்தான். பலருக்கு பாராட்டிட்டா
வாயில இருக்கற முத்து உதிர்ந்திடும்.

சிலர் அடுத்தவங்க சமைச்சதை மட்டும் விழுந்து விழுந்து பாராட்டுவாங்க.

நட்புடன் ஜமால் said...

சிலர் அடுத்தவங்க சமைச்சதை மட்டும் விழுந்து விழுந்து பாராட்டுவாங்க.\\

ஒரு கிக்கு தான்

narsim said...

பசி நேரத்துல நல்ல பதிவுங்க..

வெண்பூ said...

நல்ல பதிவு தென்றல்... படிக்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது..

வெண்பூ said...

//
narsim said...
பசி நேரத்துல நல்ல பதிவுங்க..

25 March, 2009 2:43 PM
//

இன்னும் சாப்பிடலையா? :(

வல்லிசிம்ஹன் said...

தென்றல் அதுதான் அன்பின் மகிமை. ஒப்புடன் முகம் மலர்ந்துன்னு வரும் பார்த்தீங்களா.
எனக்கு எங்க முதல் வருடக் குடித்தனமும்,இவருடைய நண்பர்கள் வரும் நேரம் இதே பூண்டு ரசம்,உ.கிழங்கு கறி,தக்காளிப்பச்சடி செய்தது நினைவுக்கு வருகிறது. நல்ல கொசுவர்த்தி.
வாசம் தூக்குதும்மா:)

புதுகைத் தென்றல் said...

பசி நேரத்துல//

நேரத்துக்கு சாப்பிடாம பதிவுக்கு வந்து பின்னூட்டம் வேறயா??

நேரத்துக்கு சாப்பிடுங்க.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வெண்பூ.

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லியம்மா,

வீட்டுக்கு யாரும் வந்தால் மனதுக்கு பயங்கர சந்தோஷம்.

உங்களுக்கும் கொசுவத்தி சுத்த வெச்சிட்டேன் போல.

கம கம வாசம் பிடிச்சேன்னு சாப்பிடாம இருக்காதீங்க.

வருகைக்கு நன்றி

நாகை சிவா said...

தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்கள் :)

அதுக்கு உண்மையிலே கொடுப்பினை வேண்ம். :)

புதுகைத் தென்றல் said...

தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்கள்//

ஆமாம் சிவா,

கொடுத்து வைத்திருந்தால்தான் நல்ல நண்பர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

திருமணமான புதிதில் எனக்கும் இது போன்ற அனுபவங்கள் இருந்திருக்கின்றன:))!

அழகாய் நினைவு கூர்ந்து அந்த தினத்தின் நிகழ்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள்:)!

மணிநரேன் said...

தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித்து படிக்க ஆரம்பித்த வலைபதிவுகளில் தங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்...

///இனிமையான
நினைவுகளுக்குள் அடிக்கடி போய் வருவோம்.///

இதில்தான் எத்துனை சுகம் உள்ளது!!!!அதுவும் நட்புவட்டம் என்று வந்துவிட்டால் அந்த மகிழ்ச்சிக்கு நிகரேது.

அபி அப்பா said...

புதுகை தென்றல்!

இப்பதான் உங்க பதிவு எல்லாம் படிச்சேன்! எனக்கு உங்க பதிவை விட நீங்க மீண்டு வந்தது ரொம்ப மகிழ்வா இருக்கு!

நானானி said...

பாத்திரங்களுடன் நிறைவான சாப்பாடு போட்டுவிட்டீர்கள். கடைசியில் சட்டி காலியானாலும் மனது நிறைந்ததே!!அதுவே பெரிய சந்தோஷம்!
எங்க பெரிய அயித்தான் எங்க வீட்டில் சாப்பிட்டவுடன் மறக்காமல் என்னிடம் வந்து 'சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது.
எப்படி இப்படியெல்லாம் சமைக்கிறாய்?' என்று வயிறார சப்பிட்ட திருப்தியுடன் மனமாரப் பாராட்டுவார்.

நானானி said...

போன கமெண்டின் முதலில் 'குறைவான' என்று போட்டுக்கொள்ளவும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

சேம் ப்ளட்டுன்னு சொல்லுங்க.

புதுகைத் தென்றல் said...

தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித்து படிக்க ஆரம்பித்த வலைபதிவுகளில் தங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்//

வாங்க மணிநரேன்,

தங்களின் முதல்வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுவேன்

புதுகைத் தென்றல் said...

நீங்க மீண்டு வந்தது ரொம்ப மகிழ்வா இருக்கு//

வாங்க அபி அப்பா,

மாமாவுக்கு நான் மனது வருத்தப்பட்டாலே பிடிக்காது. அப்படியிருக்க அழுதால் பாவம் அவரது ஆத்மா வருந்தும். மாமாவுக்கு எப்போதும் என் மீது கோபம் வரக்கூடாது என்பதால்தான் என்னை மாற்றிக்கொண்டேன்.

மாமாவின் கண்களை தானம் கொடுத்திருக்கிறோம். அதன் மூலம் என்னை பார்த்துக்கொண்டேதானே இருக்கிறார்!!

புதுகைத் தென்றல் said...

ஆமாம் நானானி,

பாராட்டுக்குஇணையேது.

இந்த காம்பினேஷன் சமையல் இறந்த என் மாமாவுக்கும் மிகவும் பிடிக்கும்.

முதன் முதலில் நான் சமைத்து அவர் சாப்பிட்டது இந்த உணவுதான். ரொம்ப நாளைக்குப் பிறகு(அவர் மனைவி ஆந்திரா சமையல் தான் செய்வார்) நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு(ஃபுல் கட்டு) கை கழுவ கூட எழும்ப முடியாமல் மாமா திணறியது ஞாபகம் வருது.

“ரொம்ப நாளைக்கப்புறம் ஃபுல் கட்டு கட்டிட்டேன்னு” சொன்னது இப்பவும் காதுல சுத்துது. :)))

" உழவன் " " Uzhavan " said...

//சாப்பிடும் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம்
டென்ஷனாகி இருந்தது. வேற ஒண்றும் இல்லை.
ரசம் கூட வரவில்லை அதற்குள் ஒரு குக்கர்
சோறுதான் இருந்தது//

உண்மைய சொல்லுங்க.. அடபாவிகளா அதுக்குள்ள 2 குக்கர் சோத்த காலிபண்ணிடீங்களானு மனசுல நினைச்சிங்கதான.. :-))

உங்கள் வீட்டின் குக்கர் விசிலின் சத்தமும், ரசம், மோர் எல்லாத்தையும் ஊற்றி உர்..உர்ர்ர் னு சாப்பிட்ட சத்தமும் காதில்கேட்ட ஒரு பீலிங் இருந்தது இத படிக்கும்போது.. அருமை.

மங்களூர் சிவா said...

/
கொஞ்ச நேரத்தில் குழம்பு சட்டியை ஒருவர்
பக்கத்திலே எடுத்து வைத்துக்கொண்டு
மொத்தமும் தனக்குத்தான் என்று சொன்னார்.:))
/

நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்க போல இருக்கே!

:))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

நன்றி உழவன்

புதுகைத் தென்றல் said...

நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்க போல இருக்கே!

:))))))))))))))))//

நீங்களே ஸ்மைலி போட்டுட்டீங்க. நான் என்னத்த சொல்ல

:))