Wednesday, March 18, 2009

கைலாஷ் ஹில்சில் கொண்டாட்டம்...

மி்தமான வெய்யிலுடன் கூடிய முன் காலைப்பொழுதில்
சென்றது கைலாஷ் ஹில்சிற்கு.
இங்கிருந்து ரிஷிகொண்டா மற்றும் ராமகிருஷ்ணா பீச்
(ஆர் கே) பார்ப்பது கொள்ளை அழகு.

மலை ஏறுவதற்கு ரோப்கார் வசதியும் இருக்கிறது.
நேரத்தை மிச்சம் பிடிக்க காரிலியே மலைக்குச் சென்றோம்.





போகும் வழியில் கைலாசநாதர் கோவில்.


கைலாஷகிரியில் இருக்கும் சிவபார்வதி சிலை.


மலையை சுற்றிவர அங்கே ரயில்சவாரி இருக்கிறது.



அழகான கடற்கரை.



கடலும் நகரத்தின் முகதுவாரமும் கைலாஷ் ஹில்சிலிருந்து
பார்க்க நன்றாக இருக்கும்.



அங்கேயிருந்து நகரத்தை தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம்.
2 நிமிடத்திற்கு 2 ரூபாய் என வாடகைக்கு கிடைக்கிறது.

“நீ சொன்னது நிஜம்தாம்மா. இந்த அழகை பகலில்தான்
ரசிக்க முடியும்” என்று பிள்ளைகள் சந்தோஷப்பட்டார்கள்.

அடுத்து சென்ற இடம் என் வாழ்நாளில் முதல்முறையாக
என்று சொல்லலாம்.(எல்லோருக்கும் தான்)

பார்த்து பார்த்து வியந்தோம். பல அறிய புகைப்படங்கள்
மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவு வரும்.

10 comments:

நட்புடன் ஜமால் said...

\\“நீ சொன்னது நிஜம்தாம்மா. இந்த அழகை பகலில்தான்
ரசிக்க முடியும்” என்று பிள்ளைகள் சந்தோஷப்பட்டார்கள்.\\

இரசனை தெரியுது

படங்கள் அழகுக்கா!

எம்.எம்.அப்துல்லா said...

//அடுத்து சென்ற இடம் என் வாழ்நாளில் முதல்முறையாக
என்று சொல்லலாம்//

போன இடம் எங்கேக்கா??

pudugaithendral said...

படங்கள் அழகுக்கா!//

நன்றி ஜமால், நானே எடுத்தது.

pudugaithendral said...

போன இடம் எங்கேக்கா??//

காதைக்கொண்டாங்க. 3 மணிக்கு பதிவு வரும். :))))))))

Vidhya Chandrasekaran said...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்கா. அந்த சிவன் பார்வதி கோவிலுக்கு நானும் போயிருக்கேன்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரயில் அழகா இருக்கே பிங்க் கலரில்...

pudugaithendral said...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க்கா. //

இதோ வந்துகிட்டே இருக்கு..

pudugaithendral said...

ரயில் அழகா இருக்கே பிங்க் கலரில்.//

ஆமாம். அங்கேயிருந்து விசாகப்பட்டிணத்தை பார்ப்பது ஒரு அழகுதான் கயல்

Vetirmagal said...

அழகிய படங்கள். மேலிருந்து கடலையும் அலைகளையும் பார்க்கும் ஆனந்தம் சொல்லுக்கு அடங்காதது.

pudugaithendral said...

அழகிய படங்கள். மேலிருந்து கடலையும் அலைகளையும் பார்க்கும் ஆனந்தம் சொல்லுக்கு அடங்காதது.//

ஆமாம் வெற்றிமகள்.

முதல் வருகைக்கு நன்றி