Wednesday, March 18, 2009

ஆண்டவா அனைவரையும் காப்பாத்து!!!!

சித்தார்த் நடிச்ச படம் என்பதால் ஆஷிஷ் போக
ஆசைப்பட்டான்.” நான் வேண்டாம், எனக்குத் தெரிஞ்ச
வரைக்கும் கதை நார்மல் கதைதான்ன்னு” சொன்னேன்.
அயித்தான் ”,பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு”
சொல்ல ”சரி, போய்தான் பாப்போம்னு” போனோம்

படத்தின் பெயர் கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்.
KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.

இரவு 9.30க்குத்தான் நைட்ஷோ. தியேட்டரில்
டிக்கெட் வாங்கும்பொழுது மணி 8.15. பக்கத்துல
தானே ஹோட்டல் போய் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துட்டு வந்தோம்.வழமையான காதல் கதை. சித்தார்த் தன் ஸ்டைலை
கொஞ்சம் மாத்திக்கணும்னு யாரோ சொல்லியிருக்காங்க
போல, அதனால் ஹேர் ஸ்டைல மட்டும் மாத்திகிட்டாரு.

கதையில் பெண்கள் பின்னாடி சுத்துவது, கொஞ்சம் பொறுப்பில்லாத
பையன் என அவரின் பழைய படங்களின் நெடி அதிகம்.

பிராகாஷ் ராஜும், சித்தார்த்தும்(தகப்பன்,மகன்)
வரும் காட்சிகள் ”பொம்மரில்லு”வை ஞாபகப்படுத்துகின்றன
என்றால் ரம்யா கிருஷ்ணனும்,சித்தார்தும் வரும்
காட்சிகள் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமியை
ஞாபகப்படுத்த தவறவில்லை.படத்தின் கதைக்கு இந்த விக்கிபீடியாவை பாருங்கள்.

பல இடங்களில் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிடுகிறது.
இண்டர்வெல் வரைக்குமே தாங்கமுடியவில்லை.

தன் தந்தையையும் தாயையும் இணைக்க சித்தார்த்
எடுக்கப்போகும் நடவடிக்கைகளாவது நன்றாக இருக்கும்
என்று பார்த்தால் செம சொதப்பல். இன்னும் சிறப்பாக
காட்சிகள் கொடுத்திருந்தால் அவர்கள் சொல்ல வந்த
மெசெஜ் நன்றாக மனதில் பதிந்திருக்கும்.

படத்தில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள்
அப்ளாஸ் அள்ளிச் செல்கிறது.

GACHIBOWLI DIWAKARஆக கலக்குயிருக்கிறார்
பிரம்மானந்தம். அவருக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்.


”பேசாம ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்”,அப்படின்னு
அம்ருதா சொல்ல நாங்கள் ஆஷிஷை ஜாலியாக முறைத்தோம்.
என் தங்கையோ கிளைமாக்ஸ் என்ன வென்று்? என்னைக் கேட்க
”நீ படம் பாக்கலியா?” என்றதற்கு,” போரடிக்கவே தூங்கிட்டேன்க்கா!!!”
என்றாள். இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தோம்.

டெக்கான் க்ரோனிகல் இதழ் இணையத்தில்
இந்தப் படத்தைப் பற்றி கொடுத்திருக்கும்
விமர்சனம் இது:
The story is just another predictable Tollywood saga where you inevitably know what the next scene will be. The father-son scenes between Sidharth and Prakash Raj reminds one of their previous film Bommarillu and lacks complete originality. Music by Shanker-Ehsaan-Loy is mediocre. Only Bramhanandam and Venu Madhav manage to tickle the funny bone of viewers.
The only thing impressive is the cinematography. It is a visual treat to watch the pretty song sequences. Overall, the movie is a blend of many stereotypical Tollywood love stories, making it a forgettable, light-hearted weekend watch.


சரி இதுக்கு ஆண்டவன் ஏன் எங்களை காப்பாத்தணும்னு?
கேக்கறீங்களா?? வர்றேன். அந்த மேட்டருக்கு வர்றேன்.

இப்ப நம்ம கோலிவுட்டில் தெலுங்குபடத்தை ரிமேக்குவதான்
ட்ரெண்ட். அந்த வரிசையில் இந்தப் படமும் தமிழில் வர
விருக்குதாம்!!!

தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான”சந்தமாமா”
தமிழில்”அ,ஆ,இ,ஈ” எனும் பெயரில் வந்தது.
(இந்தப்படத்துக்கு ஏன்ப்பா யாரும் விமர்சனமே
எழுதலை???!!)

பாடல் காட்சிகளை பார்க்கும்பொழுதே “சந்தமாமா
பாடல்கள் எங்கே? இந்தப் பாடல்கள் எங்கேன்னு?”
வருத்தப்பட்டேன். நல்ல கதையம்சம் உள்ள
படத்துக்கே இந்தக் கதின்னா ”கொஞ்சம் இஷ்டம்”
படமெல்லாம் சொல்லவே வேணாம்.

அதனால்தான் உங்கள் அனைவரையும்
ஆண்டவன் காப்பாத்த வேண்டிக்கொண்டேன்.

மொத்தத்தில் KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.
படம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்
எக்குவ கஷ்டம்”
:)))) (எக்குவ- நிறைய)

23 comments:

நட்புடன் ஜமால் said...

\\பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு\\

நிறைய பேர் இப்படி நினைக்கிறாங்களோ

நட்புடன் ஜமால் said...

\\பொம்மரில்லு\\

மிக அழகா இருக்கும் தெலுங்கில் பார்க்க

தமிழில் ... ம்ம்ம் என்ன சொல்ல

ஹீரோவுக்கு லவ் முகம் இல்லப்பா

நட்புடன் ஜமால் said...

\\மொத்தத்தில் KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.
படம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்
எக்குவ கஷ்டம்” :)))) (எக்குவ- நிறைய)\\

ஹா ஹா ஹா

கார்க்கி said...

அப்பாடா.. நான் எஸ்கேப்பு..

புதுகைத் தென்றல் said...

நிறைய பேர் இப்படி நினைக்கிறாங்களோ//

ஆமாம் ஜமால்,

ஒரு நல்ல கலைஞனை வீணடித்துவிட்டார்கள் என்றே தோணுது.

புதுகைத் தென்றல் said...

மிக அழகா இருக்கும் தெலுங்கில் பார்க்க//

ஆமாம் ஜமால்

தமிழில் ... ம்ம்ம் என்ன சொல்ல

ஹீரோவுக்கு லவ் முகம் இல்லப்பா//

:))))))))) ரொம்ப மெச்சூர்டா இருப்பார் ஜெயம் ரவி. எம் குமரனில் ஜெயம் ரவி பரவாயில்லை ஏனெனில் தெலுங்கில் ரவிதேஜா.

S.Arockia Romulus said...

மொத்தத்தில் கொஞ்சமும் இல்லை இஷ்டம்.....
ரொம்ப ரொம்ப கஷ்டமா.?...............

புதுகைத் தென்றல் said...

அப்பாடா.. நான் எஸ்கேப்பு..//

:))

Thooya said...

தமிழ் படமே அவ்வளவு பார்க்காததால் எனக்கு தெலுங்கு படங்களால் கண்டமே இல்லை சிஸி ;)

புதுகைத் தென்றல் said...

தமிழ் படமே அவ்வளவா பார்க்காததால் தப்பிச்சீங்க. (தெலுங்குபடங்கள் தற்போது ரீமேக்கி வருது.)

புதுகைத் தென்றல் said...

கொஞ்சமும் இல்லை இஷ்டம்.....
ரொம்ப ரொம்ப கஷ்டமா.?.............//

கொஞ்சம் இஷ்டம் ரோமுலஸ். அதான் கச்சிபொளலி திவாகர் இருக்காரே!!!

வண்ணத்துபூச்சியார் said...

தமிழ் / தெலுங்கு சினிமா உருப்படவே உருப்படாது..

வித்யா said...

தமிழ்ல வரட்டும். ஜெயம் ரவி எப்படி பண்றாருன்னு பார்க்கலாம்:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அப்ப இஷ்டப்ப்ட்டு கஷ்டப்பட்டிருக்கீங்க.. :)

புதுகைத் தென்றல் said...

தமிழ் / தெலுங்கு சினிமா உருப்படவே உருப்படாது..//

இந்த நினைப்பு எனக்கும் இருந்துச்சு.
ஆனா சமீபகாலமா தெலுங்கில் நல்ல படங்கள் வருகிறது.(அதை டப்பும்போதோ, ரீமேக்கும்போதோ சொதப்பிடறாங்க)

புதுகைத் தென்றல் said...

ஜெயம் ரவி எப்படி பண்றாருன்னு பார்க்கலாம்//
:))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

ஓ அப்ப இஷ்டப்ப்ட்டு கஷ்டப்பட்டிருக்கீங்க..//

ஆமாம் கய்ல் :)

narsim said...

சித்தார்த் ஸ்டைல் மாத்துன மேட்டர செம நக்கலா சொல்லி இருக்கீங்க..

வளமையான காதலா, வழமையானவா.. அர்த்தம் மாறுமேன்னு கேட்டேன்..

புதுகைத் தென்றல் said...

வளமையான காதலா, வழமையானவா.. அர்த்தம் மாறுமேன்னு கேட்டேன்..//

ஓ அப்படி ஒண்ணு இருக்கோ!

புதுகைத் தென்றல் said...

மாத்திட்டேன். நன்றி நர்சிம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லவேளையாய் ஒரு முன்னெச்சரிக்கை பதிவு போட்டீங்க.

அப்புறம் ப்ரகாஷ் ராஜ் இருக்காரேன்னு நம்பி படத்தை பார்க்கவேண்டியிருந்திருக்கும்.

அப்புறம் உங்கள் மைத்துனரின் உடல்நிலை எப்படியிருக்கிறது.

புதுகைத் தென்றல் said...

நல்லவேளையாய் ஒரு முன்னெச்சரிக்கை பதிவு போட்டீங்க.//


அப்புறம் ப்ரகாஷ் ராஜ் இருக்காரேன்னு நம்பி படத்தை பார்க்கவேண்டியிருந்திருக்கும்.//

:))

அப்புறம் உங்கள் மைத்துனரின் உடல்நிலை எப்படியிருக்கிறது.//

கவலைக்கிடமான நிலைதான் இன்னமும். பிராத்தனை தொடர்கிறது

:(((((

மங்களூர் சிவா said...

"ஆண்டவா அனைவரையும் காப்பாத்து!!!!" - பொருத்தமான அருமையான தலைப்பு