Thursday, April 02, 2009

அப்டேட்ஸ்...

ரயிலில் பயணிக்கும் பலருக்கு சமீபகாலமாக நிறைய
பிரச்சனைகள்!!! நாம் பயணச்சீட்டை பதிந்த பொழுது
கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணில் வேறொருவர் அமர்ந்து
கொண்டு “இந்த இடம் என்னிது”ன்னு குதிப்பார்.
நமக்கும் பயங்கர டென்ஷனாகும். பயணச்சீட்டு பரிசோதகர்
வந்து ”தீர்ப்பு” சொல்லும் வரை நிம்மதியாக உட்காரக்
கூட முடியாது.

எல்லாம் லல்லுவின் உபயமான ”சைட் பர்த்களிலும்
மிடில் பர்த்” திட்டத்தினால் வந்த குழப்பங்கள்.
அந்த மிடில் பர்த் கிடைத்தவர்கள் நிஜமாகவே
பாவப்பட்டவர்கள்தான். காற்றும்வராது. அந்த பர்த்தில்
ஏறி படுக்க தனித்திறன்!!! வேண்டும்.

நேற்று நெல்லூரிலிருந்து வந்த பொழுது அந்த
மிடில் பர்த்கள் மாயமாகிப் போயிருந்தது!!!!
அவை எடுக்கப்பட்டு விட்டனவாம்.
யார் செய்த புண்ணியமோ!! மக்களுக்கு
துயர் தந்த அந்த மிடில் பர்த்களை எடுக்கவைத்த
புண்ணியவன்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

****************************************


சென்றமுறை அவசரமாக நெல்லூர் செல்ல நேர்ந்த பொழுது
ரயிலில் டிக்கெட் இல்லாமல் காரில் செல்ல நேர்ந்தது.
முதன் முறையாக ஆந்திராவிற்குள் காரில் என் பயணம்.
மிக ரசித்தேன். சாலைகளின் இரு புறமும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென்று
பயிர் விளைந்த பூமியாக இருந்தது.
ஹைதை-மிரியால்குடா, அத்தன்கி,
ஓங்கோல், காவாலி, நெல்லூர், சென்னை என சாலை
நீள்கிறது.

அத்தன்கி,எனும் இடம் தாண்டிய பிறகு வருகிறது

National Highway 5 (NH 5) .

அந்த தேசிய நெடுஞ்சாலையை கண்ட பொழுது என் கண்களையே
என்னால் நம்ப முடியவில்லை!!!!
வழுக்கும் சாலை. மீடியேட்டர்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள்,
குறைவான வாகனங்கள்.(லாரிகள்தான் அதிகம்)

ஆங்காங்கே பஞ்சாபி தாபாக்கள். நிஜ்மாகவே இவை
பஞ்சாபி தாபாதானா என்ற சந்தேகத்துடன் நாங்கள்
சென்ற இடத்தில் பஞ்சாபிக்காரர் அருமையாக
பாலக், தால், சுடச்சுட சாப்பிட கொடுத்தார்.
(என்னுடைய சுத்த ஹிந்தியைக் கேட்டு
சொந்த கதை, சோகக்கதை எல்லாம் சொல்ல
ஆரம்பித்தார். :)) அம்மாக்கு இங்கேயும் ஃப்ரெண்ட்
கிடைச்சிட்டாங்கன்னு!! பசங்க கிண்டல்தான்.)



இந்த அருமையான சாலைகள் நான் ஏதோ வேற்று நாட்டில்
பயணித்ததைப் போலிருந்தன. மலேசியா நகரத்திலிருந்து
விமான நிலையத்திற்கு செல்லும் பயண அனுபவம் போல்
மிக அருமையாக இருந்தது.

***********************************************

மாமாவி்ன் காரியங்கள் நல்லமுறையில் நடந்து முடிந்தது.
காரியம் நடைபெறும் நாளில் பலவித தானங்கள் கொடுப்பது
பழக்கம். இவைகளை விட மாமாவின் கண்களை தானமாக
கொடுத்திருப்பதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.


மாமா சென்னை ட்ரஷரி டிபார்ட்மெண்டில்
கெஜடட் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர்.
மாமா ரிடையர்ட் ஆவதற்கு 3 வருடங்கள்
முன்பு அவருக்கு உதவியாளராக வேலைக்குச்
சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்கள் மாமாவின்
செய்தி கேட்டு உடன் ஓடி வந்திருந்தார். 10 ஆம்
நாள் காரியங்களுக்கும் வந்திருந்து “சுப்ரமண்யம்
அவர்கள் எனக்கு தெய்வம் போல. என அவர்
வேலைக்குச் சேர்ந்திருந்த நாளான்று மாமா
அணிந்திருந்த உடையின் நிறங்கள் வரை
தனக்கு நினைவிருப்பதாகச் சொல்லி மாமாவின்
ஞாபகமாக அந்த உடைகளை வாங்கிச் சென்றார்.


நீத்தார் பெருமை கூறும் நாளில் உறவினர் ஒருவர்
“திரு.சுப்ரமண்யம் ஒரு நிறைவான வாழ்வை
வாழ்ந்திருக்கிறார். ச்ராவணக்குமாரன் போல் பெற்றோருக்கு
தன் கடமையை விடாது செய்திருக்கிறார், ராமன்
தன் தம்பிகளை தன் கண்களாக பார்த்துக்கொண்டதுபோல்
தனது தம்பியை வளர்த்திருக்கிறார். தந்தையாக,
கணவராக, நண்பராக, உறவினராக, தாத்தாவாக
தனது வேலையை நிறைவாகச் செய்து ஒரு பூர்ணமான
வாழ்வை வாழ்ந்திருக்கிறார். அவர் காட்டியிருக்கும்
வழியில் நாம் சென்று அவரைப்போல இருக்க முயல்வதாலேயே
அவரின் ஆத்மா சாந்தி அடையும் ” என்று சொன்னார்.
சத்தியமான வார்த்தைகள் என ஒவ்வொருவர்ம்
மனமார ஏற்றுக்கொண்டனர்.
*************************************
ஒரு வாரம் விடுமுறை முடிந்து விட்டது
வந்துவிட்டேன் என்று சொல்லவே இந்த அப்டேட்ஸ்.
வந்திட்டேன். வந்திட்டேன் வந்திட்டேன். :)))

28 comments:

ராமலக்ஷ்மி said...

//அவர் காட்டியிருக்கும்
வழியில் நாம் சென்று அவரைப்போல இருக்க முயல்வதாலேயே
அவரின் ஆத்மா சாந்தி அடையும்//

அதை நீங்களும் மனதார ஏற்று மீண்டு வந்து மீண்டும் பதிவுகளை பழைய உற்சாகத்துடன் தர ஆரம்பித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

//ச்ராவணக்குமாரன் போல் பெற்றோருக்கு
தன் கடமையை விடாது செய்திருக்கிறார், ராமன்
தன் தம்பிகளை தன் கண்களாக பார்த்துக்கொண்டதுபோல்
தனது தம்பியை வளர்த்திருக்கிறார். தந்தையாக,
கணவராக, நண்பராக, உறவினராக, தாத்தாவாக
தனது வேலையை நிறைவாகச் செய்து ஒரு பூர்ணமான
வாழ்வை வாழ்ந்திருக்கிறார்.//

கவனிக்க வேண்டிய பாடம் அவரது வாழ்க்கை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தென்றல்.

நிஜமா நல்லவன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

நாகை சிவா said...

வாங்கோ வாங்கோ!

Vidhya Chandrasekaran said...

மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி அக்கா. மாமாவின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும்.

நட்புடன் ஜமால் said...

வாங்க அக்கா!

அபி அப்பா said...

அருமையான அப்டேட்ஸ்!

பெரியவர் கண்ணள் தானம் செய்தது அருமையான விஷயம்.

மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

ஜமாளு! மீ த பஸ்ட் போடா வந்து நல்லா ஏமாந்தியா:-)) என் பிரண்ட் போட்டுட்டாங்க:-))

வல்லிசிம்ஹன் said...

ஒரு அருமை மாமா மறைந்து இறைவனடி சேர்ந்தாலும், மற்றவருக்கு ஒளியேற்றி வைத்திருக்கிறார்.
நல்ல ஆத்மாக்கள் வாழ்ப் பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் போட்ட படங்களைப் பார்த்து வியப்பூ முடியவில்லை எனக்கு. நம் ஊர் தானா!!!!

Unknown said...

நீத்தார் பெருமை சொல்வதைப் படிக்கும் போதே கண்கள் நிறைகின்றன... கொடுத்து வச்சவங்க நீங்க.

நான் இதுவரை இந்தியாவில் சென்ற துஷ்டிகளில் ('இப்ப எங்க இருக்க? !##! கூட அங்க இருக்கான். உனக்கு என்ன சம்பளம்?') மனவருத்தம் பார்த்ததே இல்லை, வளந்த மகன்/மகள் கூட பெற்றோரின் நீத்தார்-பெருமை கேட்டு அழுததில்லை.... அதுக்கும் சேத்து நான் நொந்துக்குவேன். நான் சொல்வதுக்குக் காரணம் இது மாதிரி உறவுகள் உங்களுக்குக் கிடைத்தமைக்காக, அந்த நினைவுகளை சுமக்கும் வாய்ப்புக்காக - கொடுத்து வச்சவங்க நீங்க.

//அவரைப்போல இருக்க முயல்வதாலேயே
அவரின் ஆத்மா சாந்தி அடையும்// //பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தென்றல்.// ஆம் & ஆம்!

pudugaithendral said...

ஆஹா நீங்கதான் மீ த பர்ஸ்டா ராமலக்‌ஷ்மி. வாழ்த்துக்கள்.

//கவனிக்க வேண்டிய பாடம் அவரது வாழ்க்கை.//

ஆமாம் ராமலக்‌ஷ்மி, நல்லவர்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் தீராது.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க நி.நல்லவன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்கோ வாங்கோ!//

:))))))

pudugaithendral said...

வாங்க வித்யா,

எப்போதும் போல இனி வலம் வருவேன்.

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வந்திட்டேன் ஜமால்,

pudugaithendral said...

வாங்க அபி அப்பா,

மாமா தன் கண்களால் எங்களை பாத்துகிட்டு இருக்கும்பொழுது நாங்க சோகமா இருந்தா வருத்தப்படுவார் அதான் சந்தோஷமா இயல்பு நிலைக்கு திரும்பிட்டேன்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,
மற்றவருக்கு ஒளியேற்றி வைத்திருக்கிறார்.//

ஆமாம். மிக நல்ல மனிதர்


//நீங்கள் போட்ட படங்களைப் பார்த்து வியப்பூ முடியவில்லை எனக்கு. நம் ஊர் தானா!!!!//

எனக்கும் அதே வியப்பு இருந்துச்சு.
நாலஞ்சு வாட்டி கண்ணை கசக்கி பாத்தேன். நம்ம நாட்டுலதான்.

பெங்களூர்-மைசூர் சாலைக்கூட அருமையா இருக்கு. அதைவிட இது சூப்பரோ சூப்பர்.

pudugaithendral said...

வாங்க கெக்கே பிக்குணி,

நீங்க சொல்வது மிகச்சரி. துஷ்டி வீடுகளில் கூட தேவையில்லாத பேச்சுக்கள் தான்.

நீத்தார் பெருமை சொல்லும்பொழுது அழக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள். மிகக் கட்டுபடுத்திக்கொண்டிருந்தேன். அவரது மகள் அழுது அவளை சமாதானம் செய்தேன்.

கண்கள் கலங்கிவிட்டன.

//உறவுகள் உங்களுக்குக் கிடைத்தமைக்காக, அந்த நினைவுகளை சுமக்கும் வாய்ப்புக்காக - கொடுத்து வச்சவங்க நீங்க.//

ஆமாம். மிக மிக கொடுத்துவைத்தவள். ஆண்டவனுக்கு நன்றி

கணினி தேசம் said...

வாங்கோ வாங்கோ!

1.
ரயில் பயணங்கள் மறக்க முடியாதவை. விமானச்சேவை பயன்படுத்த துவங்கியபின் ரயில் பயணம் இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது எனக்கு :((

2.
நம்ம ஊர்ல கூட இதுமாதிரி ரோடெல்லாம் வந்தாச்ச மகிழ்ச்சி.


3.
//இவைகளை விட மாமாவின் கண்களை தானமாக
கொடுத்திருப்பதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.//
பாராட்டவேண்டிய விடயம்.


பகிர்வுக்கு நன்றி.

Muruganandan M.K. said...

"மாமாவின் கண்களை தானமாக
கொடுத்திருப்பதுதான் ..."
நல்ல வழிகாட்டியாக மறைந்தும் வாழ்கிறார்

எம்.எம்.அப்துல்லா said...

தருமி : பிரிக்க முடியாதது??

சிவன் : தென்றல் அக்காவும் இரயிலும்

*******************

//அம்மாக்கு இங்கேயும் ஃப்ரெண்ட்
கிடைச்சிட்டாங்கன்னு! //

பஞ்சாபியைப் பற்றி படிக்கும் போதே நினைத்தேன்...அக்காவுக்கு எங்க போனாலும் ஃபிரண்ட்ஸ்னு :)


******************

//மாமாவி்ன் காரியங்கள் நல்லமுறையில் நடந்து முடிந்தது.

//

நம்மை விட இறைவனுக்கு அவர் தேவையாக இருந்து இருக்கின்றார். என்ன செய்வது?? :(

மங்களூர் சிவா said...

updates OK. welcome back.

கோபிநாத் said...

வாங்க அக்கா..வாங்க ;-)))

pudugaithendral said...

வாங்க கணிணி தேசம்,

வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

நல்ல வழிகாட்டியாக மறைந்தும் வாழ்கிறார்//
வாங்க டொக்டர்,
மாமாதான் கண் தானம் செய்த முதல் குடும்ப உறுப்பினர்.

pudugaithendral said...

தருமி : பிரிக்க முடியாதது??

சிவன் : தென்றல் அக்காவும் இரயிலும்//

:)))))))))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அப்துல்லா.

pudugaithendral said...

வாங்க சிவா,

வந்திட்டேன். தங்கமணி நலமா??

pudugaithendral said...

வருகைக்கு நன்றி இராகவன்

pudugaithendral said...

ஆஹா என்ன ஒரு வரவேற்பு கோபி.

:))