Tuesday, April 07, 2009

பங்குனி உத்திரமும் பல ஞாபகங்களும்

முருகன் மீது பக்தி அப்பாவால் வந்தது.
அப்பா சஷ்டி கவசம் சொல்லக் கேட்டு
அவரோடு போட்டி போட்டு 10 வயதில்அப்பாவுக்குத்
தெரியாமல் மனப்பாடம் செய்து அப்பாவிடம்
பாராட்டு வாங்கினேன்.

இலங்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணம்
அப்பாவும், கந்தனும் தான்.
அப்பாவிடம் ஒரு வாழ்த்து(அவர்களின் திருமணத்தி்ற்கு
அப்பாவின் நண்பர்கள் கொடுத்தது)இருக்கும். அதில்
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தன் என போட்டிருக்கும்.
என் ஃப்வேரிட் போட்டோ அது. வீட்டை விட்டுக்
கிளம்பும்போது கண்ணில் படுவது போல் மாட்டிவைத்து
அன்றாடம் பார்த்துவிட்டுத்தான் செல்வேன், வீட்டில்
நுழைந்ததும் அந்தப் படம் தான் கண்ணில் முதலில்
படும்.

இந்தக் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்ட
பொழுது அப்பா இலங்கைக்கு பயணம் போய் வந்து
கதிர்காமம் பற்றிச் சொன்னார். அன்று ஆரம்பித்தது
எனக்கு இலங்கை மீதான காதல். வாழ்வில் ஒருமுறையாவது
கதிர்காமத்தை தரிசித்திடவேண்டும் என்று நினைப்புக்கு
ஆண்டவன் 7 வருடங்கள் அவனை விடாமல் தரிசிக்க
வைத்தான்.

நல்லூர் கந்தனை மட்டும் பார்க்கமுடியவில்லை.
அதற்காகவேனும் ஒருமுறை இலங்கை செல்வேன்.
இறைவனைக் கண்ணாரக் காண்பேன் எனும்
நம்பிக்கை இருக்கிறது.அங்கே இருந்த வரை வருடம் தவறாமல் கதிர்காமம்
சென்று வந்தோம். கொழும்புவில் பல இந்து கோவில்கள்
இருந்தாலும் எனக்கு கொம்பனித் தெரு முருகன்
கோவில்தான். (ஸ்லேவ் ஐலேண்ட் முருகன்)


பிரதி செவ்வாய்கிழமை மாலை வேளையில் கோவிலில்
சஷ்டி கவசம் படிப்பார்கள்.

பங்குனி உத்திரம் என்றால் உண்ணா நோன்புதான்.
விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வேன். இலங்கை
போயிருந்த புதிதில் பங்குனி உத்திரத்தன்று
நாள் முழுதும் பட்டினி இருந்து பூஜை செய்து
கொம்பனித்தெரு கோவிலுக்குச் சென்றோம்.

அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கொண்டு
சன்னதிக்கு அருகில் வந்த நேரம்
கோவில் பூசாரி அருகில் வந்து ,”இன்று
உங்கள் பெயரில் சாமி பூஜை செய்து,
சாமி புறப்பாடு செய்யலாமா?” என்று
கேட்டது அதிசயம் + ஆச்சரியம்.

அந்த பூசாரிக்கு எங்களை முன்னம் தெரியாது.
ஆண்டவனாக எங்களை பூஜை செய்ய வைத்திருக்கிறான்
என சந்தோஷப்பட்டு உடன் ஒத்துக்கொண்டோம்.
என் விரதத்தை ஆண்டவன் மனமார ஏற்றுக்
கொண்டுள்ளான் என சந்தோஷப்பட்டேன்.
ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் கோவில்
செல்வோம். நான் அங்கே இருந்த பொழுதுதான்
கொம்பனித் தெரு கோவிலுக்கு கும்பாபிஷேகம்
நடை பெற்றது.

கானா பிரபாவின் இந்தப் பதிவு
எனக்கு பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது.

சிட்னி முருகனின் தேரோட்டம்

மாமாவின் மறைவால் இந்த வருடம் பங்குனி
உத்திரத்திற்கு கோவில் செல்ல முடியாதே என்று
நினைத்துக்கொண்டிருந்தேன். பிரபா கொடுத்த
லிங்கால் மனமார கந்தனை தரிசித்தேன்.
கு்றை தீர்ந்தது. நன்றி பிரபா.

17 comments:

நட்புடன் ஜமால் said...

வாங்க யக்கோவ்!

Anonymous said...

முருகன் எனக்கும் பிடிக்கும்..

Anonymous said...

சந்நதி முருகன் தெரியாதா?

புதுகைத் தென்றல் said...

வந்திட்டேன் ஜமால்

புதுகைத் தென்றல் said...

சந்நதி முருகம் தெரியாதே தூயா!!

முருகனை யாருக்குத்தான் பிடிக்காது.

ஆயில்யன் said...

முருக கடவுளென்றால் எனக்கும் ரொம்ப புடிக்கும் !


கட்டாயம் எல்லா விசேஷங்களுமே ஸ்பெஷலாய் கடைப்பிடிப்பவன் ஆனா இங்கு இப்பொழுது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!

மனதிற்கு நிறைவாய் முருகன் பாடல்கள்!
வீட்ல போயி கேக்கணும்!

ராமலக்ஷ்மி said...

கந்தனுக்கு வேல் வேல்
முருகனுக்கு வேல் வேல்

நன்றி தென்றல், பாடல்களின் லிங்க்குகளுக்கும்!

புதுகைத் தென்றல் said...

மனதார நினைத்தாலே போதும் ஆயில்யன்.

பாடலைக்கேளுங்க அதுவே போதும்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

கானா பிரபா said...

நல்லூர் முருகனைப் பார்க்கும் அந்த பாக்கியம் உங்களுக்கு கூடிய சீக்கிரம் கிட்டட்டும். பதிவுக்கும் நன்றி

S.Arockia Romulus said...

//இலங்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணம்//

அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )


முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்

கண்டுமுன் இதயம் உருகவில்லையா?


உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)

காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்

மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது

அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)

அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்

துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?

சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்

உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)


இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

வித்யா said...

பக்தி மனம் கமழுது:)

புதுகைத் தென்றல் said...

உங்க வாக்கு பலிக்கும்னு நம்பறேன் பிரபா.

(நீங்க சொல்லித்தான் பத்ராசலம் பயணம் கன்பார்மாச்சு.)

அருள் வாக்குசித்தர்னு போர்ட் வெச்சுக்கலாம் ப்ரபா.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரோமுலஸ்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வித்யா,
அப்பப்போ பக்தி மணமும் வீசட்டும்னுதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னோட ஃபேவரிட்டும் முருகர் தான்.

டி.எம்.எஸ்ஸோட முருகர் பாடல்களை கேட்டா, முருகனை பிடிக்காதவங்களுக்கு கூட பிடிச்சிடும்.

புதுகைத் தென்றல் said...

டி.எம்.எஸ்ஸோட முருகர் பாடல்களை கேட்டா, முருகனை பிடிக்காதவங்களுக்கு கூட பிடிச்சிடும்.//

ஆமாம் அமித்துஅம்மா

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை நான் மறவேன்,

கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவன் ...

என்ன பாட்டுக்கள்.
வருகைக்கு நன்றி