பசங்களுக்கு புக் வாங்க கடைக்கு போயி்ருந்தேன்.
செல்போன் சிணுங்கிச்சு. அயித்தான் தான்.
“எங்கப்பா இருக்க?” :)) (அடிக்கடி அது வாங்க,
இதுவாங்கன்னு கிளம்பிடுவோம்ல)
”ஹிமாலயா புக் ஷாப்லதான் இருக்கேன்.
பசங்களுக்கு புக்ஸ் வாங்க வந்தேன்பா”
”ஹிமாலயாவா சரி. போனதடவை அங்க
ஒரு வெயிட் மிஷின் பாத்தேன். வரும்போது
அதையும் வாங்கிகிட்டு வந்திடு!!!”
ரொம்ப நாளா வெயிங் ஸ்கேல் வாங்கணும்னு
ப்ளான். சரி வாங்கிகிட்டு போனேன்.
அப்ப பிடிச்சு அந்த மிஷினுக்கு பிடிச்சது
ஏழரை, தலைவலி எல்லாம். :)))
ஞாயிற்றுக்கிழமை ”வெயிட் செக்கிங் டே”வாக
அறிவிக்கப்பட்டது. அம்ருதா ஒரு நோட் புக்,
பேனா எடுத்துக்கொண்டு “எல்லோரும் வெயிட்
செக் பண்ண வாங்கன்னு” அறிவிப்பு கொடுத்ததும்
எல்லோரும் வெயிங் மிஷின் இருக்கற ரூம்ல ஆஜர்.
ஸ்டிரிக் டீச்சர் போல அம்ருதா, ”குனியாதீங்க, நேரா
பாருங்க, உங்க வெயிட்டை நான் பாத்து நோட்
செஞ்சுக்கறேன்னு” சொல்லிகிட்டே இருப்பா.
இந்த ரெக்கார்ட் மெயிண்டன் செய்வதால் நாம்
எடை அதிகரித்திருக்கிறோமா இல்லை குறைஞ்சிருக்கோமா!!!
அப்படின்னு தெரிஞ்சுக்கத்தான்னாலும் அடுத்தவங்க
முன்னாடி நம்ம வெயிட் தெரிஞ்சிடுமே(!!!)ன்னு
”என்னோட ட்ரெஸ் இப்ப வேற போட்டிருக்கேன்!!”
அதனாலதான் வெயிட் கூட காட்டுது” போன்ற
டயலாக்குகள் கேட்கும்.
ஞாயிற்றுக்கிழமை எடை பார்க்கும்பொழுது அதே
எடை இருக்கவேண்டும் என்பதால் அடிக்கடி
மிஷின் மேல் ஏறி வெயிட் செக்க ஆரம்பமானது.
சாப்பிட்டபின், சாப்பிடும் முன், வாக்கிங்கிற்குமுன்
வாக்கிங்கிற்கு பின் என ஒரே செக்கிங்தான்.
இப்படி அடிக்கடி ஏற ஆரம்பித்ததில் வெயிட்மிஷின்
பாவம் இளைத்திருக்கும். :))) வாயிருந்தால்
“என்னை விடுங்க!!” ப்ளீஸ்”னு வாய் விட்டு
கதறியிருக்கும்.
எடை பத்தி நினைக்கும்பொழுது இந்தப் பாடல்
எப்போதும் எனக்கு நினைவில் வரும்.
டூயட் படத்தில் பிரபுவை ””வர்ணித்து””
பாடல்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
26 comments:
\\எடை பத்தி நினைக்கும்பொழுது இந்தப் பாடல்
எப்போதும் எனக்கு நினைவில் வரும்.
டூயட் படத்தில் பிரபுவை ””வர்ணித்து””
பாடல். \\
ஹா ஹா ஹா
கத்திரிக்காயா!
என்னப்பார்த்து என் நண்பர்கள் பாடுவார்கள்
ஹா ஹா ஹா
(சொ.செ.சூ)
(சொ.செ.சூ)//
:))))))))))
கிகிகிகி
நான் கூட ஒன்னு வாங்கனும்:)
இங்க எங்க ஊட்டுலயும் ஒன்னு இருக்கு, வேயிங் ஸ்கேலைதான் சொன்னேன். அது ஊருக்கு போகும் பொழுது பேக்கேஜ் வெயிட் செக் செய்யமட்டும்தான் யூஸ் ஆகும்.
வாங்குன காசை விட அதிகமாவே பயன் படுத்திட்டீங்க....
இங்கையும் இந்த கதை எல்லாம் உண்டுக்கா...ஊருக்கு போகும் போது வெயிட் மிஷின் வாங்குவோம்..அதுக்கு அப்புறம் தினமும் இதே கதை தான் ;)))
செம ஜாலியாக இருக்கும் வெயிட் பார்க்கும் போது ;)
பாவம் எடை மெஷின்.. (அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..)
நீங்க வெயிட் பார்ட்டிக்கா...அறிவுல சொன்னேன்
:))
தென்றல், இந்த வெயிங் மெஷின் மாதிரி பேஜார் எதுவும் இல்ல.
நம்ம ஊரில வாங்கினது எப்பவும் வஞ்சி...க்கும்.
வெளியூர் மாடல்னா அது பவுண்ட்ஸ்ல காமிச்சு சோதிக்கும்.
ஒரே வழி. ஊருக்குப் போகும்போது சூட்கேஸை நிறுக்கறத்துக்கு மட்டும் உபயோகப் படுத்திட்டு,நாம் ஏறி நின்னா ஒருவேளைக் குறைச்சுக் காட்டுமோ என்னவோ:))
வாங்க தூயா.
வாங்குங்க அப்புறம் நான் பதிவுல போட்டதுதான் நடக்கும் வித்யா.
:))
அது ஊருக்கு போகும் பொழுது பேக்கேஜ் வெயிட் செக் செய்யமட்டும்தான் யூஸ் ஆகும்.//
எப்படியோ உபயோகமாகுதுல்ல
:))
வாங்குன காசை விட அதிகமாவே பயன் படுத்திட்டீங்க....//
இல்லாட்டி சாமிகுத்தமாயிடுமே ரோமுலஸ்
செம ஜாலியாக இருக்கும் வெயிட் பார்க்கும் போது //
நமக்கு ஜாலிதான். மிஷின் தான் பாவம்
ஆமாம் ஃப்ரெண்ட்.
வெயிட் பார்ட்டிக்கா...அறிவுல சொன்னேன்//
நம்பிட்டேன் அப்துல்லா.
அவ்வ்வ்வ்வ்
ஒரே வழி. ஊருக்குப் போகும்போது சூட்கேஸை நிறுக்கறத்துக்கு மட்டும் உபயோகப் படுத்திட்டு,நாம் ஏறி நின்னா ஒருவேளைக் குறைச்சுக் காட்டுமோ என்னவோ//
நல்ல யோசனையா இருக்கே. மூச்சுவாங்க 1 மணிநேரம் நடந்துட்டு வந்து மிஷின்ல நின்னாலும் அதே எடையைத்தான் காட்டும். 100 கிராமாவுது குறைச்சுகாட்டுமான்னு பாப்போம். ம்ஹூம்.
ஹஹ்ஹா...சின்ன வயசுலே, எங்க வீட்டிலே நானும் என் தம்பியும் அடித்த லூட்டிதான் நினைவுக்கு வருது! அதுவும் குளிக்கறதுக்கு முன்பும் பின்பும், ஷூ போட்டு/போடாம...ஆனா அதெல்லாம் ஒரு ஆறு மாசம்தான்..அப்புறம் திரும்ப சேனல் சண்டைதான்!
ஹா...ஹா....ஹா....
! அதுவும் குளிக்கறதுக்கு முன்பும் பின்பும், ஷூ போட்டு/போடாம...//
:)))))))
சிரிச்சாச்சா சந்தோஷம் நிஜமா நல்லவன்
:))
டிஜிட்ல் வாங்கிட்டீங்க போல அதான் உயிரை விட்டுருச்சு போல...
முள் உள்ளது வாங்கிக்கோங்க. தினமும் எடை சோதித்து நாள்காட்டி ல குறிச்சு வைங்க.
மாதம் ஒரு முறை எடை சரியாக காட்டுகிறது என்று சில்லரை சாமான்களை வைத்து சரி பாருங்க (with Packed Dhaal, sugar etc)
எந்த பிரச்சனையும் வராது!
டிஜிட்டல் பேட்டரி இல்லாமல் AC volt ல வேலை செய்வது நல்லா இருக்கும்!
டிஜிட்ல் வாங்கிட்டீங்க போல அதான் உயிரை விட்டுருச்சு போல...//
ஆஹா என் மிஷின் கெட்டுப்போச்சுன்னு நினைச்சிட்டீங்களா!! நல்லாத்தான் இருக்கு. வெயிட் மிஷின் தன்னோட நிலமையை கதையாச் சொன்னா எப்படி இருக்கும்னு நினைச்சேன். அதை என் வார்த்தைகளில் பதிவாக்கினேன் சிவா.
டிஜிட்டலில்தான் எடை துல்லியமா இருக்கும்.
உங்க கருத்துக்களையும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.
சேம் பிளட்!
எங்க வீட்டுலயும் ஒரு எடை பாக்குற மிஷின் இருக்கு. இங்கயும் தினைக்கும் எடை பாக்குறோம் சில தடவை ஒரு நாளில் பலதடவை கூட.
கல்யாணத்துக்கப்புறம் 6,7 கிலோ எடை கூடிப்போச்சு எதாச்சும் செய்யணும் :((((
Post a Comment