Monday, April 13, 2009

தென்றல் அப்டேட்ஸ்

எப்போதும் காலை பார்க்கில் வாக்கிங் போவேன்.
சில சமயம் வார இறுதியில் மாலை வேலைகளில்
பிள்ளைகளுடன் போவேன். அவர்கள் இருவரும்
கொஞ்ச நேரம் பூப்பந்து ஆட விட்டு நான் வாக்கிங்
போவேன். 4 ரவுண்ட் நடந்துவிட்டு பிள்ளைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடுவேன். இருவருக்கும்
ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

இந்த முறை என் தங்கை, அத்தையின் பேத்தி
அனைவரும் அணியில் சேர செம ஆட்டம்தான்.

ஒரு அம்மா பிள்ளைகளுடன் வந்தார். பார்க்கினுள்
வந்த நொடியிலிருந்து போனை காதிலிருந்து
எடுக்கவேயில்லை....
புடவையை எடுத்துச் சொருகிக்கொண்டு
ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டெ
உடன் வந்தவருடன் பூப்பந்தாடினார்.
செம ஆட்டம்!! (அவரின் பிள்ளைகள் விளையாட
சான்ஸ் கேட்டபோதும் கொடுக்காமல் தான் மட்டுமே
விளையாடியது தான் எரிச்சலூட்டியது)

***********************************************

பூப்பந்தாட்டம் என்றால் எப்போதும் நினைவுக்கு
வருவது ஜானகிராம் மாமாதன். இவர்
அம்மா வேலை பார்த்த புதுகை ஸ்ரீ சுப்பராமய்யர்
பள்ளியி்ல் ப்யூனாக வேலை பார்த்தார்.

ப்யூன் வேலை பார்த்துக்கொண்டே மாமா
பூப்பந்தாட்டத்தில் பல டோர்னமெண்டுகள்
விளையாடி ஜெயித்திருந்தார். பள்ளி
வேலைகளுக்கு இடையே ப்ரேக் கிடைத்தால்
பூப்பந்து மட்டை பின்னிக்கொண்டிருப்பார்.
மாமாவின் கைகளால் பின்னப்பட்ட
மட்டைகள் புதுகையில் பலரின் கைகளில்
தவழ்ந்திருக்கிறது.



மாமாவைப் பற்றி எழுதப் போகிறேன் என்று
அம்மாவிடம் சொன்னதும் அம்மா சொன்னது,
“ஜானகிராம் அண்ணா ப்யூனாக இருந்தாலும்
அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலை பார்க்கத்
தகுதியுடைய்வராக இருந்தார். அனைத்தும்
கச்சிதமாக செய்யவேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்” என்று பாராட்டினார்.

*********************************************
Dr. PRANATHI REDDY இவர்தான் தற்போது
என்னுடைய மருத்துவர். ஹைதையில் மிகச்
சிறந்த மகளீர் மருத்துவ நிபுணர்.
இவரின் கணிவான பேச்சுக்கு நான் அடிமை. ரெயின்போ
மருத்துவமனையில் இவரை சனிக்கிழமை
தொடர் மருத்துவத்திற்காக சந்தித்தேன்.

(டாக்டரை சந்திக்கும் முன் அவரது
அசிஸ்டென்டை சந்திக்க வேண்டும்
அவரை சந்திக்கச் சென்றது அயித்தானுக்கு
டென்ஷன். டாக்டர்.பிரணதி அவர்கள்
என் நிலையை மிகச் சரியாக புரிந்து
கொண்டுள்ளார். வேறு மருத்துவரை
மாற்ற வேண்டாமே என்று டென்ஷன்
பட்டுவிட்டதாக்ச் சொன்னார்.:)) )


இவரைப்பற்றி என் முந்தைய பதிவு இங்கே. மனதை மயிலிறகால்
வருடுவதுபோல் பேசும்பொழுது மருத்துவர்களின்
மேல் நம்பிக்கை வருகிறது. இன்னும் 6 மாதத்திற்கு
தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

*************************************
பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி
தனது மகளுக்கு சளி உபாதைக்கு என்னென்ன
மருந்து கொடுத்தார் எனச் சொல்லும் இளவரசுக்கு
“அதெல்லாம் மருந்து கொடுக்கத்தான் நாங்க
படிச்சு மருத்துவரா இருக்கோம்னு” ஜெயராம்
சொல்வார். தானே மருத்துவம் பாத்துக்குவது
தவறுதான்னாலும் இப்போ இருக்கும் மருத்துவர்களை
பார்க்கும்பொழுது ஒரு பாட்டுதாங்க ஞாபகதுக்கு வருது
“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”

ரமணாபட மருத்துவர்கள் தான் அதிகம்.
மருத்துவ காப்பீடு செய்திருக்கிறோம் என்று
தெரிந்தால் போதும் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்
என கூட்டி விடுவார்கள்.
சின்னச் சின்ன உபாதைகளுக்கும் பெரிய லிஸ்ட்
மருத்துவம், பெரி........ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்
டெஸ்ட்கள்.

என்னதான் செய்வது புரியலை!!! இதுதான் பலரின்
நிலை.

********************************

13 comments:

butterfly Surya said...

அப்டேட்ஸ்.. நிறைவு..

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\\சின்னச் சின்ன உபாதைகளுக்கும் பெரிய லிஸ்ட்
மருத்துவம், பெரி........ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்
டெஸ்ட்கள்.\\

தவிர்க்க முடிவதில்லை

நட்புடன் ஜமால் said...

இப்படி எதுவுமே செய்யாட்டி

டாக்டர்தானா அவருன்னு நாமளும் நம்பமாட்டோம்

மங்களூர் சிவா said...

\\சின்னச் சின்ன உபாதைகளுக்கும் பெரிய லிஸ்ட்
மருத்துவம், பெரி........ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்
டெஸ்ட்கள்.\\

தவிர்க்க முடிவதில்லை

/
நட்புடன் ஜமால் said...

இப்படி எதுவுமே செய்யாட்டி

டாக்டர்தானா அவருன்னு நாமளும் நம்பமாட்டோம்
/

haa haa

well said

pudugaithendral said...

ஆஹா இந்த முறை வண்ணத்துப்பூச்சியார்தான் மீ த பர்ஸ்டா??
வாழ்த்துக்கள்

pudugaithendral said...

இப்படில்லாம் சொல்லி நம்ம மனசை நாமே தேத்திக்க வேண்டியதுதான் ஜமால்

சந்தனமுல்லை said...

வந்தாச்சா! என்னடா ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்! :-)

ஆகாய நதி said...

//
அவரின் பிள்ளைகள் விளையாட
சான்ஸ் கேட்டபோதும் கொடுக்காமல் தான் மட்டுமே
விளையாடியது தான் எரிச்சலூட்டியது)
//

என்ன தாயோ அவர்!

நீங்கள் குறிப்பிட்ட அந்த மருத்துவரைக் காண் வேண்டும்... :)

pudugaithendral said...

வந்தாச்சா! என்னடா ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்!//

:)))))) ச்சும்மா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க ஆசைப்பட்டேன். இப்ப வந்திட்டோம்ல

pudugaithendral said...

வாங்க ஆகாய நதி,
எனக்கும் அந்தம்மா மேல கோபமா வந்துச்சு. கேட்டும் கிடைக்காம பாவம் அந்தப் பையன் சோகமா ஒரு இடத்துல உக்காந்திருந்தான் :((

//நீங்கள் குறிப்பிட்ட அந்த மருத்துவரைக் காண் வேண்டும்.//

சென்ஷி said...

//(அவரின் பிள்ளைகள் விளையாட
சான்ஸ் கேட்டபோதும் கொடுக்காமல் தான் மட்டுமே
விளையாடியது தான் எரிச்சலூட்டியது)//

:((

வருத்தபடவேண்டிய விஷயம் தான்!!

pudugaithendral said...

வாங்க சென்ஷி,

வருத்தமாத்தான் இருந்துச்சு. :((

நிஜமா நல்லவன் said...

/“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”/


நல்ல பாட்டு...!