Thursday, April 23, 2009

என்னால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. ஏன்??? எதற்கு???

இணையத்தில் என் முதல் உறவு மைஃபிரண்ட். அதன்பிறகு
அறிமுகம் மங்களூர் சிவா. இப்போது பலரும் என் நட்புலகில்,
உறவாகி இருக்கிறார்கள்.

எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒருமுறையாவது
இந்தக் கேள்வியை கேட்கத் தவறியதில்லை.

அது என்ன கேள்வி?

“சாப்டாச்சா?” என்பதுதான். உடன் கிடைக்கும் பதில்
”இல்லை” என்பதுதான். கேட்கும் பொழுது மனதுக்கு
மிகவும் கஷ்டமாக இருக்கும். சில சமயம் மணி மதியம்
3 தாண்டியிருக்கும் அப்போதும் சாப்பிடவில்லை,
வேலை அதிகம் என பதில் வரும்!! :(



இந்தக் கேள்வியை நான் கேட்க அவசியம் என்ன?

”முக நக நட்பது நட்பது நட்பன்று
நெஞ்சத்தக நக நட்பது நட்பு” இந்த குறளின்
அர்த்தம் மனதில் பசு மரத்தாணிபோல் பதிந்துவிட்டது.

அக்கா என்றோ, தோழியாகவோ என்னை பார்க்கும்
உறவில், நட்பில் உண்மையாக இருப்பது என் பழக்கம்.
அந்த உரிமையில் தான் இந்தக் கேள்வியை
கேட்பது அவசியம் என நினைக்கிறேன்.

இப்படி கேட்காவது ஒருவர் இருக்கிறாரே! என
நினைத்தாவது நேரத்துக்கு சாப்பிடச் செல்லவைக்க
ஒரு முயற்சி.

மும்பையில் நான் வேலை பார்த்த பொழுது என்
டப்பா என் உடன் வேலை பார்த்த தமிழக பையன்கள்,
கையில் தான் இருக்கும். நான் அவர்கள் கடையில்
வாங்கிச் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.

வீட்டு சாப்பாட்டுக்கு அப்படி ஒரு ஏக்கம்!!!

“முன்னாடி எல்லாம் ஹோட்டலில் சாம்பார் அதிகம்
கொடுத்தாக்க திட்டுவோம். இப்போ ஊருக்கு போய்
இரண்டு இட்லிக்கு 1/4 பக்கெட் சாம்பார் ஊத்தி சாப்பிட
மாட்டோமான்னு இருக்கு” என்ற அவர்களின் ஏக்கங்கள்.



இவைகள் உங்களுக்கும் இருக்கும் என்பது தெரியும்.
பலர் கடல் கடந்து, சிலர் குடும்பத்தை பிரிந்து
வெளி மாநிலங்களில்,(தமிழ் நாட்டுக்குள்ளேயே தன்
குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும் உண்டு).

வேலை தரும் பளுவில் உணவு இரண்டாம்பட்சமாகிறது.
பல நிறுவனங்களில் உணவு இடைவேளை என்பதே
கிடையாது. ஆனாலும் எப்படியாவது நேரத்தை நாம்
ஏற்படுத்திக்கொண்டு நேரத்துக்கு உண்ணவேண்டும்.




அஷ்ட கஷ்டப்பட்டு சம்பாதி்ப்பது அளவாக உண்டு,
ஆனந்தமாக வாழத்தானே!!!
சரியாக உணவளிக்காமல் இருப்பது மிகத் தவறு.
சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்.
அப்படி இருக்க வேளை தவறி உண்வது ஏன்?

இதனால் வரும் விளைவுகள் உங்களுக்குத் தெரியாமல்
இல்லை. ஆனாலும் வேலை பளு அது இது என்று
காரணம் சொல்வது நல்லாயில்லை சொல்லிட்டேன்!!!


இம்புட்டு சொல்கிறேனே!! நான் எப்படி?

”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!!”
அப்படின்னு சாப்பிட ஆரம்பிச்சிருவேன். :)))

(பல நேரங்கள் கணிணிமுன் அமர்ந்து சாட்டிக்கொண்டே
தான் ஈட்டிங்க் :)) ))

ஆன்லைனில்தான் அடிக்கடி சாப்டாச்சான்னு கேட்டு
ஆளைக் கொல்லுறீங்க. இப்ப எதுக்கு இந்த்ப் பதிவு??

படிப்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சக்தி
நம் மூளைக்கு உண்டு.

”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!!”
அப்படின்னு ஒரு பாட்டை வேற எடுத்து விட்டிருக்கேனா
1 மணி அடிச்சதும் என் பதிவு ஞாபகம் வரும், உடன்
சாப்பிட போகணும்னு தோணும். (பசிங்கற உணர்வை
அடக்கி வைக்க முடியாமா சாப்பிட ஓடூவீங்கள்ல!!)

இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் என்
அன்பு வேண்டுகோள்...
என்னன்னு சொல்லத் தேவையில்லை, புரிஞ்சிருக்கும்.

அதே தான்....

சரி மணி 12.30 ஆகம்போவுது. நான் போய்
உணவு மேசையை ரெடி செய்யறேன். குட்டீஸ்
வந்ததும் சாப்பிடணும்.

இன்றைய மெனு என்னன்னு சொல்லி வைத்தெரிச்சலை
கொஞ்சம் கொட்டிக்க வேணாமா?? :)))

ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,
கமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,
தொட்டுக்க வெங்காயம்..ஸ்ஸ்ஸ் அம்புட்டுதான்.

டாடா!!

33 comments:

Vidhya Chandrasekaran said...

சாப்பிடுங்க:)

butterfly Surya said...

ஜமால் சாப்பிட போயிட்டாரா..??

ஆளை காணோம்...

நானும் சாப்பிட்டு வரேன்.

pudugaithendral said...

நான் சாப்பிடறேன்

நீங்க நேரத்துக்கு சாப்பிடறது முக்கியம், அப்பத்தான் ஜூனியரை கவனிக்க தெம்பு இருக்கும்.

pudugaithendral said...

ஜமால் லீவுல ஊருக்கு போயிட்டார் வண்ணத்துப்பூச்சியாரே,

சாப்பிட்டு வாங்க.

கவிதா | Kavitha said...

சூப்பர் மெனு சாப்பிடுங்க.. :)))

தேவன் மாயம் said...

ஏங்க குழம்பு வைக்காம ஏமாத்தீட்டமாதிரி தெரியுதே!!

pudugaithendral said...

நேத்துதான் நம்ம பக்கத்து வெண்டக்காய் புளிக்குழம்பு செஞ்சேன் தேவா.

பசங்களுக்கு பருப்புபொடி ரொம்ப இஷ்டம். அதான்.

pudugaithendral said...

ஹாஹா,

வருகைக்கு நன்றி கவிதா

தேவன் மாயம் said...

முட்டைகோஸ் பொரியல்,
கமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்///

நல்லாத்தான் இருக்கு!!

தேவன் மாயம் said...

சிக்கன் 65, சிக்கன் குழம்பு,கீரை பொரியல்,மிளகு ரசம், தயிர், அப்பளம் இதுதான் இன்று மெனு!!

காலையில் குழிப்பணியாரம் , சட்டினி,இனிப்பு குழிப்பணியாரம்!!!

pudugaithendral said...

super menu deva.

enjoy

S.Arockia Romulus said...

ipavee pasikuthe,,,,,,

மணிநரேன் said...

//அது என்ன கேள்வி?
“சாப்டாச்சா?” என்பதுதான்.//

அன்பினால் எழுந்த கேள்விதானே இது. நட்புறவுகளிடம் இந்த கேள்வியும், அதன்பின் உள்ள கரிசனமும் இல்லாத நாட்களுண்டோ....

மெனு ;)

ஆகாய நதி said...

நல்ல மனசு! :)

நல்ல உணவு! :) பசிக்குது நான் சாப்பிட போறேன்...

நிகழ்காலத்தில்... said...

அன்பை வெளிப்படுத்த தொடங்கும் ஆரம்ப வார்த்தை சரிதான்.

உடல் ஆரோக்கியத்திற்கு அன்போடு கேட்டுவிட்டு, அதற்கு அப்புறம் மன ஆரோக்கியத்திற்கு என்ன கேட்பீங்க?

வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

:-))

தேங்க்ஸ்க்கா...!!!!!!!!!

சுரேகா.. said...

அக்கறையுடன் அக்கா!

நீங்கதாங்க பக்கா!

மணக்குது சாப்பாடு!

Sasirekha Ramachandran said...

//ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,
கமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,
தொட்டுக்க வெங்காயம்..ஸ்ஸ்ஸ் அம்புட்டுதான்.//

ambuttudhanaa?

pudugaithendral said...

வாங்க மணிநேரன்,

உங்க முதல் வருகைக்கு நன்றி

SK said...

இப்போ காலைலயே நாங்க லஞ்ச் சாப்பிட போகணும் அதுதானே உங்க எண்ணம் .. நல்ல இருங்க அப்பு :) :)

அதுவும் படம் எல்லாம் பாத்தா வாய் ஊருது :) :)

pudugaithendral said...

வாங்க ஆகாயநதி,

சாப்பிடப்போறேன்னு சொன்னதிலேயே மனசு குளுந்து போச்சு

எம்.எம்.அப்துல்லா said...

சரி நான் சாப்பிடக் கிளம்புறேன்

:))

pudugaithendral said...

உடல் ஆரோக்கியத்திற்கு அன்போடு கேட்டுவிட்டு, அதற்கு அப்புறம் மன ஆரோக்கியத்திற்கு என்ன கேட்பீங்க?//

மன ஆரோக்கியமும் முக்கியம்.

மனசுவிட்டு சொல்லணும்னா எனக்கும், என் நட்புக்களுக்கும் தயக்கமே இருக்காது. மடை திறந்து கொட்டிகிடுவோம்ல. :))

pudugaithendral said...

நீங்க எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்கன்னு புரிஞ்சிருச்சு சென்ஷி

pudugaithendral said...

வாங்க புதுகை ப்ளாக்கர்கலின் தலைவரே.

உங்களுக்கும் அக்காவா!!! என்ன அண்ணாத்தே இது. :))

(பந்த் என்பதால் வீட்டுக்குளேயே இருக்கீக போல அதான் பின்னூட்டம் எல்லாம் வருது)

pudugaithendral said...

//ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,
கமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,
தொட்டுக்க வெங்காயம்..ஸ்ஸ்ஸ் அம்புட்டுதான்.//

ambuttudhanaa?//

இன்னிய பொழுதுக்கு அம்புட்டுதான்.
:))

pudugaithendral said...

இப்போ காலைலயே நாங்க லஞ்ச் சாப்பிட போகணும் அதுதானே உங்க எண்ணம் .. நல்ல இருங்க அப்பு :) :)

அதுவும் படம் எல்லாம் பாத்தா வாய் ஊருது :) :)//


:)))))))))))))))

pudugaithendral said...

குட் பாய்,

சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க அப்துல்லா

SK said...

ஆந்த்ரா மீல்ஸ் நினைவு பண்ணிட்டீங்களே :(

நான் போய் எப்படி என்னோட சமையலை சாப்பிடுவேன் இன்னைக்கு :) :)

ஆந்த்ரா புல் மீல்ஸ் பார்சேல் :) :)

வல்லிசிம்ஹன் said...

தென்றல் எங்க வீடிலியும் இதே வழக்கம்.
சின்னவன் கோபித்துக் கொள்ளுவான். ஏம்மா முதக் கேள்வியே சாப்பிட்டாச்சாதனா.
வேலை முடிஞ்சாதானே சாப்பிட முடிம்னு.
இப்போதெல்லாம் அவர்களெ சொல்லிவிடுகிறார்கள்.
ஆமா ஆச்சு என்று.
உங்கள் நினைவு தான் எனக்கும். அதுசரி இரவு உணவு ரெடியா:)

நல்வாழ்த்துகள் ஒரு நல்ல மனதுக்கு.

pudugaithendral said...

ஆந்த்ரா புல் மீல்ஸ் பார்சேல் //

அனுப்பி வெச்சிட்டேன். :))

pudugaithendral said...

இரவு உணவு ரெடியா//

வாங்க வல்லிம்மா,

இரவு உணவு ப்ரெட் மசாலா டோஸ்ட், பசங்களுக்கு வெயிலின் குளிர்ச்சிக்காக கொஞ்சமாக தயிர் சோறு.

இப்பத்தான் முடிச்சேன்.

pudugaithendral said...

எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களை பாத்து கத்துக்கிட்டதுதான் வல்லிம்மா. வருகைக்கு மிக்க நன்றி.