Tuesday, April 07, 2009

என்னால் மறக்கமுடியாத ஒரு நாள்!!!

அன்று ஆஷிஷ்ற்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்காக
மாம்பலம் பீ.எஸ்.மூத்தா பள்ளிக்கு செல்லவேண்டிய நாள்.
பெற்றோர் இருவரும் உடன் வரவேண்டும் என்று
கட்டாயம் போட்டிருந்தார்கள். ஆனால் சென்றது
ஆஷிஷும் ஸ்ரீராமும் மட்டுமே!!!!

ஆஷிஷின் முறை வந்ததும் தந்தையும், மகனும்
மட்டும் உள்ளே சென்றார்கள். குறிப்பிட்டு
சொன்ன பிறகு தாய் வரவில்லையே என்ற
யோசனையில் பிரின்சிபல் அவர்கள்
“அம்மா எங்கே? ஏன் வரவில்லை?”
என்று கேட்க, ஸ்ரீராம் வாய் திறக்குமுன்னரே
ஆஷிஷ்,” அம்மாவுக்கு இன்னைக்கு ஆபரேஷன்!
ஆஸ்பிடலில் இருக்காங்க. நீங்க சீக்கிரம்
இண்டர்வியூ முடிச்சிட்டீங்கன்னா, நான்
போய் அம்மாவிடம் இருப்பேன்னு” சொல்ல
ஆசிரியர் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல்
”அட்மிட்டட்” என்று சொல்லி விட்டார்.
அப்படி என்ன ஒரு ஆப்பரேஷன்?

1.15 நாளாக அவதியுற்ற டைபாய்டு
வயிற்றில் ஒரு கட்டியாக உருமாறிவிட்டிருந்தது.

2. சிஸ்டோசில் என்று சொல்லப்படும்
சிறுநீர்ப்பை இறக்கம்(ஆஷிஷை உண்டாகியிருக்கும்பொழுது
அதிக கணமான் என் மாமியாரை தூக்கி சேவை
செய்ததனால் வந்தது)

3. அப்பண்டிசைட்ஸ் வெடித்து உடல் முழுதும்
பரவி விட்டது.


ஏப்ரல் 19 2000ஆம், வருடம் அன்றுதான்
ஆஷிஷின் இண்டர்வியூ + எனக்கு ஆப்பரேஷன்
நடந்தது. தாம்பரத்தில் இருக்கும் வீ.என்.ஹாஸ்பிடல்
அங்குதான் அட்மிட் ஆகி நடந்தது. இது என்
மாமாவுக்குச் சொந்தமானது.(அம்மாவுக்கு தூரத்து
உறவு)

வயிறு பெரிதாக ஊதி, அதி பயங்கர வாந்தி
ஏதும் உண்ணமுடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டேன்.
மூக்கில் ட்யூப் போட்டு ”பைல்” கலெக்ட்
செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

ஆப்பரேஷன் சக்ஸஸ். ஆனால் என்ன காரணமோ
என்னால் கண்ணைத் திறக்கமுடியாமல் மயக்கமாகவே
கிடந்தேன்.

எல்லாம் சரியாக நடக்க இது என்ன சோதனை?
உடம்பிலிருந்து ஏதோ வெள்ளை வெள்ளையாக
பஞ்சுபோல் வெளியாகிக்கொண்டிருந்தது!!!

நிலமை தீவிரமாகிவிட்டதை உணர்ந்து
மேலும்சிறப்பு மருத்துவர்களை வரவ்ழைத்தார்
மாமா.(அப்போது மாமா ராமசந்திராவிலும்
வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.மாமா
குழந்தைகள் மருத்துவ நிபுணர்)

ஆப்பரேஷன் ஃபார்மாலிட்டியாக உறவினர்களிடம்
”கையெழுத்து” வாங்குவார்கள். ஆப்பரேஷ்ன்
முடிந்த பிறகும் இருக்கும் என் உடல்நிலையால்
“முடிந்தால் காப்பாற்றுவோம்” என மறுமுறை
அயித்தானிடம் கையெழுத்து வாங்க வேண்டிய
நிலை.

எல்லோரும் ஒருநாள் சாகவேண்டியதுதான்
ஆனாலும் நான் இறந்தால் 3 மாதக் கைக்குழந்தையான
அம்ருதாவையும், 31/2 வயது ஆஷி்ஷையும்
வைத்துக்கொண்டு அயித்தான் என்ன கஷ்டப்படப்
போகிறாரோ??!! என்பதுதான் என் கவலையாக
இருந்தது. அந்தக் கஷ்டம் அவர் படக்கூடாது
என போராட ஆரம்பித்தேன். நான் இறக்க
மாட்டேன்! பிழைத்து வருவேன்! என
திடமாக நம்பினேன்.


பேச முடியாது, மூக்கில் ட்யூப்! பசி எடுக்கும்
ஆனால் சாப்பிட முடியாது.(டாக்டர்.நாகராஜ்
மாமா வந்து என்னை பார்க்கும்போதெல்லாம்
”பசிக்குதுமாமா!” என்பேன். மாமாவின் வீடு
ஆஸ்பிடலுக்கு மேலே தான். பாட்டியிடம்
போய்”எனக்கு சாப்பாடு வேண்டாம். கீழே
பசிக்கு சாப்பிடமுடியாமல் கலா அவஸ்தை
படுகிறாள்” என் அழுவாராம். :( )

அத்தை மகளீர் மருத்துவ நிபுணர். அம்ருதாவின்
பிரசவம் பார்த்ததும் அத்தைதான். பல மருத்துவர்கள்
வந்து பார்ப்பார்கள். பல ஸ்பெஷலிஸ்டுகள்!!
”முடிந்தவரை பார்ப்போம்!!” என்று சொல்லி
கொஞ்சம் கொஞ்சம் கை விரிக்க ஆரம்பித்தார்கள்.


3 மாதக் குழந்தை அம்ருதா என் நாத்தனார் வீட்டில்.
யாரிடமும் போகமாட்டேன் என்று ஆஷிஷ் அப்பாவுடன்
அலுவலகம், சில நாள் தான் மட்டும் அப்பா வரும்வரை
வீட்டில் தனியாக இருப்பது என இருந்த நிலை கேட்டு
கண்ணீராக வரும். ”குழந்தைகளைப் பார்த்தே
ஒரு வாரமாகிவிட்டது”! அத்தையிடம் கண்ணீர் விட
அறைக்கு வெளியே அம்ருதாவின் முகத்தைக் காட்டினார்கள்.
ஆஷிஷ் வந்து பார்த்துவிட்டு,” நான் அப்பா கூட இருக்கேன்.
சீக்கிரம் வாம்மா!!” என்றான்.


யேசுநாதர் உயிர்த்தெழுந்த
நந்நாள் அன்றுதான் பைல் வருவது நின்று மூக்கிலிருந்து
ட்யூபை அகற்றினார்கள். அதுவரை 110 பாட்டில்கள்
சலைன் மட்டுமே என் உணவாக இருந்தது. அன்றுதான்
முதன் முதலாக செரல் சாப்பிட்டேன். படுத்த
படுக்கையாக இருந்த நான் நடக்க ஆரம்பித்தேன்.
என் நம்பிக்கை வீணாகவில்லை. ஆம்
நானும் உயிர்த்தெழுந்தேன். ”பிழைப்பது கடினம்”
என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் பிழைத்தது
புனர்ஜென்மம் தான். அந்த மருத்துவமனையில்
வேலை பார்க்கும் ஜான் அண்ணாவும் அவரது
மனைவியும் எனக்காக தினமும் பிரார்த்தித்தார்களாம்.
ஈஸ்டர் அன்று நான் எழுந்ததில் அவர்களுக்கு
பெருமகிழ்ச்சி.


ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வுகளை என் மனம்
அசைபோடாமல் இரு்க்காது.

நான் உயிர்த்தெழுந்தது என் தன்னம்பிக்கையால்தான்
என டாக்டர் மாமா எப்போதும் சொல்வார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளன்று
மாமா என்னையும் அயித்தானையும் அழைத்து
தனியாகச் சொன்னது இப்போதும் என் காதில்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

“நீ தன்னம்பிக்கை பெண்தான். அதில் எந்த
மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் ஒரு குழந்தை
மருத்துவ நிபுணணாக நான் வியப்பது ஆஷிஷைப்
பார்த்துதான். தன் தாயை இவ்வளவு மோச
மான உடல்நிலையைப் பார்த்த பிறகும்
தைரியமாக உலாவருகிறான். இதுவே
மற்ற குழந்தையாக இருந்திருந்தால் அந்தக்
குழந்தையை அட்மிட் செய்யும் அளவுக்கு நிலமை
மோசமாக இருக்கும். ஐ அம் ரியலி ப்ரவுட்
ஆஃப் ஆஷிஷ் அண்ட் யூ” என்றார்.

தாயைப்போல பிள்ளை என்பார்கள். என்னைப் போல்
ஆஷிஷும் இருப்பதில் ஆண்டவனுக்கு நன்றி.

இது நடந்து 6 மாதத்தில் அயித்தானுகு இலங்கைக்கு
மாற்றலாகிவிட்டது. வேறு வேலைக்கு போகவும்
முடியாது(ஆஸ்பிடல் செலவு வேறு கன்னாபின்னாவென்று
ஆகிவிட்டிருந்தது) நானும் பிள்ளைகளும் மட்டும்
சென்னையில் தனியாக.


”எந்த தைரியத்தில் என்னை இப்படி தனியாக
விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்!!” என்று கேட்டபோது
அயித்தான் சொன்னது “உன் தன்னம்பிக்கை மேல்
எனக்கு பரிபூர்ண நம்பிக்கை” என்று. :))))

33 comments:

S.Arockia Romulus said...

இனி ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் ,நிச்சயம் என்னால் மறக்க முடியாது? ரொம்ப கஷ்டபட்டுட்டீங்க போல......

ஆ.ஞானசேகரன் said...

//“உன் தன்னம்பிக்கை மேல்
எனக்கு பரிபூர்ண நம்பிக்கை” என்று. :)))) //

வாவ்வ்வ்வ்.. சொல்ல தெரியவில்லை

நட்புடன் ஜமால் said...

அட அடுத்தா!

நட்புடன் ஜமால் said...

\\15 நாளாக அவதியுற்ற டைபாய்டு
வயிற்றில் ஒரு கட்டியாக உருமாறிவிட்டிருந்தது.\\

அவ்வளவு டேஞ்சர் மேட்டரா அது.

நட்புடன் ஜமால் said...

\\”எந்த தைரியத்தில் என்னை இப்படி தனியாக
விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்!!” என்று கேட்டபோது
அயித்தான் சொன்னது “உன் தன்னம்பிக்கை மேல்
எனக்கு பரிபூர்ண நம்பிக்கை” என்று. :))))\\

ஹா ஹா ஹா

ரொம்ப நல்ல மாம்ஸ்

அமுதா said...

/*நான் உயிர்த்தெழுந்தது என் தன்னம்பிக்கையால்தான்
என டாக்டர் மாமா எப்போதும் சொல்வார் */
உடல் நலமின்றி இருக்கும்பொழுது தன்னம்பிக்கை நிச்சயம் தேவை..

/*தன் தாயை இவ்வளவு மோச
மான உடல்நிலையைப் பார்த்த பிறகும்
தைரியமாக உலாவருகிறான்...*/
இதுவும் ஆச்சர்யம் தான்.

தன்னம்பிக்கை என்றும் எல்லா விஷயங்களிலும் நீடிக்கட்டும்

pudugaithendral said...

வாங்க ரோமுலஸ்,

ரொம்ப கஷ்டபட்டுட்டீங்க போல....//

நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய.

pudugaithendral said...

வாங்க ஞானசேகரன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

ஆமா ஜமால்,

நம்ம நேரல் நல்லாயிருந்தா டைபாயிட் கூட கட்டியாகி வயித்துல இருந்திடுமாம்.

:))

நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி பாருங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பா பாவம்..தனியா இருப்பாரேன்னு துணைக்கு இருந்திருப்பானா இருக்கும் .. ஆஷிஷ்.. :))

pudugaithendral said...

தன்னம்பிக்கை என்றும் எல்லா விஷயங்களிலும் நீடிக்கட்டும்//

எப்பவும் என்னுடம் இருக்கும் விடயத்தில் தன்னம்பிக்கையும் ஒன்று அமுதா.

pudugaithendral said...

:)//

:)))))

www.narsim.in said...

_______

pudugaithendral said...

அப்பா பாவம்..தனியா இருப்பாரேன்னு துணைக்கு இருந்திருப்பானா இருக்கும் .. ஆஷிஷ்..//

இருக்கும். குண்டன். ரொம்ப நல்ல பிள்ளை

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்கும்போது கஷ்டமா தெரிஞ்சாலும்,
இந்தப் பதிவு ஒரு தன்னம்பிக்கை பூஸ்ட் மாதிரி...

pudugaithendral said...

நன்றி அம்ரிதவர்ஷிணி அம்மா.

pudugaithendral said...

வாங்க நர்சிம்.

கோடெல்லாம் பலமா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

இந்தப் பகிர்ந்தலுக்கு நன்றி. அமித்து அம்மாவை வழிமொழிகிறேன்:
//இந்தப் பதிவு ஒரு தன்னம்பிக்கை பூஸ்ட்//

நாகை சிவா said...

பகிர்ந்தமைக்கு நன்றி!

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிவா

Anonymous said...

அழுதுவிட்டேன்..

pudugaithendral said...

அழப்ப்டாது தூயா. அடுத்த பதிவுல சிர்க்க வெச்சிட்டேன்.

விக்னேஷ்வரி said...

படிச்சதுக்கப்புறம் மனசு கனமா ஆகிடுச்சு. உங்க தன்னம்பிக்கையைப் புகழ வார்த்தைகள் இல்லை. Hats off.

எம்.எம்.அப்துல்லா said...

அந்த மருத்துவமனையில்
வேலை பார்க்கும் ஜான் அண்ணாவும் அவரது
மனைவியும் எனக்காக தினமும் பிரார்த்தித்தார்களாம்.
ஈஸ்டர் அன்று நான் எழுந்ததில் அவர்களுக்கு
பெருமகிழ்ச்சி.

//

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதநல்லிணக்க்கம் போற்றும் உங்க நல்ல மனசுக்கு இன்னும் நூறாண்டு நலமோடு இருப்பீர்கள்.

Kamal said...

i don't know what to say.. i cried when i read this... hats of to ur confidence....

ச.பிரேம்குமார் said...

படிக்கவே மிகவும் வேதனையாக இருந்தது :(

தன்னம்பிக்கை கொண்ட உங்களுக்கும் உங்கள் செல்வத்திற்கும் வாழ்த்துகள்

pudugaithendral said...

நூறாண்டு நலமோடு இருப்பீர்கள்.//

நன்றி அப்துல்லா

pudugaithendral said...

தன்னம்பிக்கையைப் புகழ வார்த்தைகள் இல்லை//

நன்றி விக்னேஷ்வரி

pudugaithendral said...

ஆஹா உங்களை அழவைத்துவிட்டேனெ காமராஜ்.

வருத்தப்படாதீங்க. இதெல்லாம் வாழ்க்கையில சகஜ்ம்

pudugaithendral said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ப்ரேம்குமார்

goma said...

இறைவன் சோதனையைத் தரும் பொழுது கூடவே அதைச் சமாளிக்க தைரியத்தையும் தருவார்..ஒரு சிலரால்தான் சங்கடத்துக்குப் பின்னே வரும் சல்யூஷனைப் பார்க்க முடிகிறது .புதுகைத்தென்றலும் அவர்களில் ஒருவர்.

pudugaithendral said...

வாங்க கோமா,

வருகைக்கு மிக்க மிக்க நன்றி