Friday, April 24, 2009

தயிர் எனும் அருமருந்து.

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.





குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.


பாலில் LACTO இருக்கிறது.
தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.






பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

5. ஷ்ரிகண்ட், சீஸ் போன்றவகளை பிள்ளைகளுக்கு
கொடுக்கலாம்.


நான் சிறுபிள்ளையாக இருந்த பொழுது வியாழன் தோறும்
உடையார்தாத்தா கொண்டு வரும் தயிருக்காக காத்திருப்பேன்.
அம்மா வீட்டில் தயிர் செய்வார்கள். ஆனாலும் உடையார்
தாத்தா கொண்டுவரும் தயிர் கத்தி போட்டு வெட்டுவது போல்
கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.

கொட்டாங்குச்சி கரண்டியால் தாத்தா நோகாமல் தயிர்
எடுத்து கொடுக்கும் அழகே அழகு.

30 comments:

நிஜமா நல்லவன் said...

Good Post. Thanks.

puduvaisiva said...

தல கடைகளில் மற்றும் ஓட்டலில் எருமை தயிர் சாப்பிட தாரங்க
. இத சாப்பிட்ட வேலையில யாரவது திட்னாலும் கோபம் வரமாட்டுதுபா. அது என் மனைவி திட்டனாலும் இதே நிலை

ரோட்டில் வண்டியல போகும் போது பின்னால லாரி,பஸ் ஆரன்னு அடிச்சாலும் சட்டுனு ஒரம் போக முடியலபா.

Vidhya Chandrasekaran said...

ஜில் ஜில் கூல் கூல்:)

வல்லிசிம்ஹன் said...

ஒரு தயிர் ரசிகையிடமிருந்து இன்னோரு தயிர் ரசிகைக்கு வாழ்த்துகள். தயிரைச் சாப்பிடும் காலத்தை நான் கடந்துவிட்டேன். இப்போதெல்லாம் நல்ல மோர்தான். எப்படியானாலும் அந்த வெள்ளைப்பண்டம் இல்லாமல் உணவு முடியாது:)

ராமலக்ஷ்மி said...

நானும் வல்லிம்மா மாதிரி தயிரிலிருந்து இப்போது மோருக்குத் தாவி விட்டேன்:)! நல்ல பதிவு தென்றல்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி
நிஜமா நல்லவன்.

pudugaithendral said...

எருமை தயிர் சாப்பிடறாதால இப்படி பக்க விளைவுகள் எல்லாம் வருதா?

புதுசா இருக்கே சிவா!!

pudugaithendral said...

வாங்க ஜில் ஜில் கூல் கூல்

pudugaithendral said...

ஹாஹா வாங்க வல்லிம்மா,

நான் மட்டுமில்ல அம்ருதாவும் தான்.

ஹிந்தியில் அம்ருதாவை இப்படித்தான் சொல்வேன், ”அம்ருதாக்கோ தஹிகே பினா ஜிந்தஹி நஹி”(தயிர் இல்லையேல் உயிர் இல்லை)

pudugaithendral said...

ஓ மோரா ராமலக்‌ஷ்மி,

அதுவும் பெஸ்ட்தான். மோர் சோறு போட்டால் அம்ருதா என்னை மேலும் கீழும் பார்ப்பாள். ஆஷிஷ் ஏம்மா தயிர் செய்யலியா என்பான்!!!

நானானி said...

என்னால் கட்டித்தயிரை விட முடியவில்லை. ஆனாலும் குறைத்துக் கொண்டேன். இப்பவும் ஊருக்குப் போனால் மதனி எனக்காக கட்டித்தயிர் வைத்திருப்பார்கள். இட்லி, சட்னி, மொளகாப்பொடியோட கொழப்பியடிக்க.

சின்னவளான போதில் தயிர்க்காரி வீட்டுக்கு வருவாள். அவள் கூடையில் கட்டித்தயிர் இருக்கும், சொன்னாமாதிரி கொட்டாங்கச்சி கரண்டியால்தான் அள்ளித்தருவாள். கையில் வாங்கிவாங்கிக் குடிப்பேன். தயிரோடு வெண்ணெய் இருக்கும், அவ்வாய்ச்சியர் காய்ச்சிய நெய்யுமிருக்கும், நல்ல மணத்தோட!!சிட்டியில் இதெல்லாம் எங்க பாக்க?

தேவன் மாயம் said...

நல்ல பதிவு..

Thamiz Priyan said...

எனக்கு தயிர், மோர் ரொம்ப பிடிக்கும். ஆனா சளி பிடிக்கும் என்று மனைவி குறைவாகத் தான் தருவாள்.. :(
பிரியாணிக்கு ரெய்தா செம காம்பினேசன்!

தேவன் மாயம் said...

மோர்தான் தற்போது சிறந்தது

pudugaithendral said...

உங்களுக்கும் தயிர் கொசுவத்தி சுத்திடுச்சா நானானி.

வருகைக்கும் தங்களின் இனிமையான் நினைவுகளின் பகிர்தலுக்கும் நன்றி

தேவன் மாயம் said...

மோர் சுத்தமானது சளி பிடிக்காது1

pudugaithendral said...

வாங்க தேவா,

மருத்துவரா உங்க கருத்து சரியாதான் இருக்கும்.

pudugaithendral said...

வாங்க தமிழ்ப்ரியன்,

எல்லோரும் இப்படித்தான் சொல்றாங்க. தினமும் தயிர் சாப்பிடும் எனக்கு சளி எல்லாம் பிடிப்பதில்லீங்க.

அன்புடன் அருணா said...

mmm tanda tanda cool! cool!!
anbudan aruna

pudugaithendral said...

வாங்க கூல் கூல் அருணா.

வருகைக்கும் பாட்டுக்கும் நன்றி.

கானா பிரபா said...

நம்ம ஊரில் கிடைக்கும் பதனீரை இந்த தயிருடன் சாப்பிட எனக்கு கொள்ளை பிரியம், நீங்க சொல்றது போல அது அருமருந்தும் கூட

கானா பிரபா said...

நம்ம ஊரில் கிடைக்கும் பதனீரை இந்த தயிருடன் சாப்பிட எனக்கு கொள்ளை பிரியம், நீங்க சொல்றது போல அது அருமருந்தும் கூட

Thamira said...

நன்றி டாக்டர்.! பதிவை முத்தாய்ப்பாக முடித்திருக்கிறீர்கள்.

Thamira said...

அப்புறம் கானாவின், பதனீர்+தயிர் காம்பினேசன் புதுசா இருக்கே..

SUBBU said...

ஜில் ஜில் கூல் கூல்:)
ஜில் ஜில் கூல் கூல்:)
ஜில் ஜில் கூல் கூல்:)
:)))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க பிரபா,

திச்சமஹாரமா பக்கத்து தயிரும் கீத்துல் பானியும் நினைவுக்கு வருது.

(கீதுல் பானிதான் பதனியா பிரபா??))

pudugaithendral said...

நன்றி டாக்டர்.!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

வருகைக்கு நன்றி ப்ரெண்ட்.

pudugaithendral said...

வாங்க சுப்பு

வருகைக்கு மிக்க நன்றி

மங்களூர் சிவா said...

/
♠புதுவை சிவா♠ said...

தல கடைகளில் மற்றும் ஓட்டலில் எருமை தயிர் சாப்பிட தாரங்க
. இத சாப்பிட்ட வேலையில யாரவது திட்னாலும் கோபம் வரமாட்டுதுபா. அது என் மனைவி திட்டனாலும் இதே நிலை
/

அடடா அற்புதம் எருமை தயிருக்கு இப்படி ஒரு சக்தியா??

உடனே உபயோகிக்க ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!!

:)))))))))

மங்களூர் சிவா said...

என் சாய்ஸ்-ம் தயிரைவிட மோர்தான்.