Wednesday, April 15, 2009

நீயே நீயே!!!
குறும்பு கொப்பளிக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணின்
முகம் இது இவரின் ஷ்பெஷல். பானுப்ரியாவுக்கு அடுத்து
எனக்கு மிகவும் பிடித்தது இவர்தான்.

இவர் எனக்கு ஒரு ரோல்மாடல் என்று கூடச் சொல்வேன்.

நதியா- இந்தப் பெயரைக்கேட்டாலே போதும்
உள்ளுக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

என் பள்ளிக்காலத்தில் நதியாவின் பெயரில்
காதணி, மாலை, தோடு, ஹேர்கிளிப் ஏன்
நதியா பாவாடை தாவணி செட் என எல்லாம்
நதியாவின் பெயரில் வந்து மார்க்கெட்டில்
குவிந்து கிடக்கும்.

எங்கள் புதுகை சிலோன் வலையல் செண்டர்
போனால் எப்போதும் பெண்களின் கூட்டம் அலைமோதும்
இந்த வகை சாமான்கள் வாங்கத்தான்.”உனக்கு பிடித்த நடிகை என்கிறாய், நதியா
கிளிப்கூட வாங்கி குத்திக்கொள்ளமாட்டாய்!!”
என்று தோழிகள் கேட்பார்கள். அது மட்டும்
எனக்கு பிடிக்காது. நானும் எல்லோரைப்போல்
செய்தால் என் தனித்துவம் இல்லமல் போய்விடுமே!!!

அறிமுகப் படமான பூவே பூச்சடவா பாடல்.
மறக்க முடியுமா??பன்னீரில் குளித்த பூக்கள் மெல்லச் சிரிக்க....என் மாமன் கிட்ட மோதாதே... என மிரட்டும் நதியா.
இன்றும் அதே இளமையுடன், துள்ளலாய் நதியா.
(இவ்வளவு சீக்கிரம் அம்மா நடிகை ஆக்கியிருக்கவேண்டாம்!!!)
பூவே பூச்சடாவாவை ஞாபகப் படுத்தும் பட்டாளம்.


பூக்களைப் பறிக்காதீர்கள்(T.Rajendar இசை) , பாடும்நிலாவே என
எத்தனை படங்கள். சின்னத்தம்பி பெரியதம்பியில்
கலக்கியிருப்பார் நதியா.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

20 comments:

சென்ஷி said...

:-))

நதியா பற்றிய தொகுப்பிற்கு நன்றி.

மிஸஸ்.தேவ் said...

நதியா எனக்கும் பிடிக்கும் புதுகை தென்றல் ...அட்டண்டன்ஸ் போட்டுக்கறேன்ப்பா :)

புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்டா வந்ததுக்கு நன்றி சென்ஷி

எம்.எம்.அப்துல்லா said...

நானும் எல்லோரைப்போல்
செய்தால் என் தனித்துவம் இல்லமல் போய்விடுமே!!!

//

இது அக்கா

:)

புதுகைத் தென்றல் said...

அட்டண்டன்ஸ் மார்க்ட் மிஸஸ். தேவ். :))

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா

எங்க ஆளைக்காணோம்

ராமலக்ஷ்மி said...

//
பன்னீரில் குளித்த பூக்கள் மெல்லச் சிரிக்க....//

டிவியில்தான் பார்க்கணும் என்றில்லை. இந்தப் பாட்டைக் கேட்டாலே அத்தோடு மனக் கண்ணிலேயே விரிந்து விடும் காட்சி... நதியாவின் துடிப்பான இளமையுடன். இசையும் அத்தனை துள்ளலாக இருக்குப் பாடலில்.

//(இவ்வளவு சீக்கிரம் அம்மா நடிகை ஆக்கியிருக்கவேண்டாம்!!!)//

நம்ம சமகாலத்தவர். நம்ம பசங்களும் தோளுக்கு மேலே வளந்தாச்சு. ஹிஹி நம்ம மாதிரி யங் அம்மாதானே. இட்ஸ் ஓக்கேம்மா:)!

VIKNESHWARAN said...

அழகான தொகுப்பு... :))

எம்.எம்.அப்துல்லா said...

//வாங்க அப்துல்லா

எங்க ஆளைக்காணோம்

//

இன்னைக்கு என்னோட தம்பியின் டைரிக் குறிப்புகளைப் படியுங்க. தெரியும் :))

நட்புடன் ஜமால் said...

அன்று முதல் இன்றுவரை

இது நம்ம ஆளு

புதுகைத் தென்றல் said...

நன்றி விக்கி

புதுகைத் தென்றல் said...

படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு அப்துல்லா.
:))

புதுகைத் தென்றல் said...

ஆஹா

பதிவு வருமோ ஜமால்

புதுகைத் தென்றல் said...

நம்ம சமகாலத்தவர். நம்ம பசங்களும் தோளுக்கு மேலே வளந்தாச்சு. ஹிஹி நம்ம மாதிரி யங் அம்மாதானே. இட்ஸ் ஓக்கேம்மா:)!//

:)))))))))

அமுதா said...

/*நானும் எல்லோரைப்போல்
செய்தால் என் தனித்துவம் இல்லமல் போய்விடுமே!!!*/
:-))
எனக்கும் நதியா பிடிக்கும்.

/*இன்றும் அதே இளமையுடன், துள்ளலாய் நதியா.
(இவ்வளவு சீக்கிரம் அம்மா நடிகை ஆக்கியிருக்கவேண்டாம்!!!)*/
ஆமாம், ஆனாலும் உற்சாகமான அம்மா பார்த்தாலே உற்சாகம் வருகிறது.

புதுகைத் தென்றல் said...

உற்சாகமான அம்மா பார்த்தாலே உற்சாகம் வருகிறது.//

ஆமாம் அமுதா.
வருகைக்கு நன்றி

ஆயில்யன் said...

// சென்ஷி said...
:-))

நதியா பற்றிய தொகுப்பிற்கு நன்றி.
//


அண்ணன் வழி :))

ஆயில்யன் said...

நதியா

நதியா

எனக்கு நொம்ப்ப்ப புடிச்ச நடிகையாக்கும் !

மங்களூர் சிவா said...

நல்ல தொகுப்பு.

Thamizhmaangani said...

nathiya simply rocks. அவரோட முதல் படம் பூவே பூச்சுடாவான்னு தெரியாது. தகவலுக்கு நன்றி.