இசை நமக்கு புத்துணர்ச்சி தந்து மனதை
இலகுவாக்குகிறது.
நிஜ வாழ்வில் யாரும் டூயட் பாடுவதில்லை..
சோக கீதம் வாசிப்பதில்லை. ஆனால்
பாடல்கள் கேட்காமல் யாராலும் இருக்க
முடியாது.
ரேடியோவை மட்டுமே நம்பி வாழ்ந்த
காலங்களில் எத்தனை பேர்வீடுகளில்
ரேடியோவுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தோம்.
அலுவலகம் செல்லும் வரை அலறிக்கொண்டிருக்கும்
பக்கத்து வீட்டு ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு
நம் வீட்டு ரேடியோவும் அலறும்.
பிறகு டேப்ரிக்கார்டர். ஆஹா சவுண்ட் எஃபக்டுக்காக
இதுவும் அலறும். தான் இந்த வீட்டில் இருக்கிறோம்
என்று டேப்ரிக்கார்டர் தன் குரலில் தானே கட்டியம்
கூறும்!!!!
காலங்கள் மாறினாலும் மாறாதது இசையை
கேட்பது. சாஸ்திரிய சங்கீதமோ, கர்நாடக
சங்கீதமோ, ராக் ம்யூசிகோ, திரைப்படப்பாடல்களோ
கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறதே
தவிர குறையவில்லை.
ஆனால் கேட்கும் விதம் மாறிவிட்டது.
செல்போனிலோ, ஐபாட்டிலோ பாடல்கள்
கேட்பதுதான் இப்போதைய ஃபேஷன்.
பிறருக்கு துன்பம் தராமல் ஹெட்போன் மாட்டிக்கொண்டு
பாட்டு கேட்கிறார்கள். ஆனால் அதிலும் பிரச்சனை
இருக்கு. பாட்டு கேட்பவருக்கு பிரச்சனை.
””யார் பெத்த புள்ளையோ!!! தானா பேசிக்கிட்டு
போகுது!!” என கமெண்டடிக்கும் நிலையில் இன்றய
இளைஞர்கள் எப்போதும் ஹெட்போனும் கையுமாக
இருக்கிறார்கள்.
இப்படி ஹெட்போனோடு ரோட்டில் நடக்கும் பொழுது
வண்டிக்காரர்கள் எழுப்பும் சத்தம் கூட காதில் கேட்காது!
தன் நிலை மறந்து மூழ்கிக்கிடக்கும் அபாயம்
இருக்கிறது. இந்த அபாயம் மட்டுமா!!
கேட்கும் சக்தியை இழக்கும் அபாயம் இருப்பதாக
வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒலி் அளக்கப்படும் அளவை டெசிபல் என்கிறோம்.
அதிக பட்ச சத்தம் 194 டெசிபல். இரகசியமாக
பேசும் பொது ஏற்படும் ஒலி 30 டெசிபல் இது ஆகக்குறைந்தது.
நாம் சாதரணமாக பேசும்பொழுது ஏற்படும் ஒலியின்
அளவு 60 டெசிபள். ஹேர் டிரையர் ஏற்படுத்தும் சத்தம்
85 டெசிபல். இதற்கு மேல் கேட்கும் எந்த அளவும்
காதைச் செவிட்டாக்கும்.(ஆம்புலன்ஸ், ஜெட் எஞ்சின்
எழுப்பும் ஒலிகள் 120,140 டெசிப்ல்கள்)
நம் ஐபாட் அல்லது எம்பி3 ஒலிக்க வேண்டிய
டெசிபல் 60 முதல் என்றாலும் சிலர் 120 டெசிபல்
வரை வைத்துக்கொள்வார்கள். இதனால்
காது அடையும் பாதிப்பிற்கு அந்தக் காதிற்கு
ஒரு வாயையாவது ஆண்டவன் வைத்திருந்தால்
சொல்லியழும்!!! (அப்போது கூட காதுக்கு
கேட்கும் தன்மை இருக்க வேண்டும்)
குறைபாடு ஏற்படாமல் நம் காதுகளை பாதுகாப்பது எப்படி?
குறைந்த அளவில் பாடல்களை கேட்கும் வழக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
sound isolating earphones வகைகள்
பாடலையும், இசையையும் பிரித்து பாடலைதுல்லியமாக
கேட்க செய்யுமாம். இவ்வகை இயர் போன்களுக்கு மாறலாம்.
அருகில் இருக்கும் நண்பர்களிடம் தனது ஐபாட்டிலிருந்து
வரும் சத்தம் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டால்
அவரது பதில் “ஆம்” என்றால் சத்தம் அதிகமாக
இருக்கிறது என்று அர்த்தம். உடன் வால்யூமை
குறைத்துக்கொள்ளலாம்.
விட்டமின் A,C,E and Magnesioum இவை நம்
காதுகளை பாதுகாக்கிறதாம்.
சுற்றுப்புரத்தை மாசுபடுத்துவதில் சத்தமும்
ஒரு மூலகாரணி. ஆனால் அதைப் பற்றி
யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
இப்போது அதிகம் ஹெட்போன் அதிக சத்தத்தோடு
மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதி விரைவில்
Hearing aid உதவி இல்லாமல் வாழப்போவதில்லை
என அபாயச்சங்கு ஊதுகிறார்கள் மருத்துவர்கள்.
அவர்கள் காதில் கேட்க வேண்டுமே....
14 comments:
சமூக அக்கறையுள்ள பதிவு, போன் பேசியே ஒரு பக்கம் காது ரிப்பேராகிவிட்டதால் நான் ஹெட்போனில் இசையெல்லாம் கேட்பதில்லை..
நல்ல எச்சரிக்கை பதிவு! அவசியமானதும்.
//””யார் பெத்த புள்ளையோ!!! தானா பேசிக்கிட்டு போகுது!!” //
:))!
காற்றினிலே வரும் கீதம் டைட்டில் பார்த்ததுமே பாடல் வரிகள் மெல்ல முணுமுணுக்க தொடங்கிவிட்டேன் :))
நிறைய நிறைய நல்ல விசயம் டெல்’லியிருக்கீங்க தாங்க்ஸ் :)
மீ த பர்ஸ்டு நீங்களா ஃப்ரெண்ட்
போன் பேசியே ஒரு பக்கம் காது ரிப்பேராகிவிட்டதால்//
கர்ணனின் கவசகுண்டலம்போல போனைக் காதோடு வெச்சுகிட்டே இருந்திருப்பீங்க
வாங்க ராமலக்ஷ்மி,
எச்சரிக்கைதான். மனது தாங்காமத்தான் இந்தப் பதிவு
வாங்க ஆயில்யன்,
வரிகள் மெல்ல முணுமுணுக்க தொடங்கிவிட்டேன்//
குட்
வருகைக்கு நன்றி பாஸ்
\\நிஜ வாழ்வில் யாரும் டூயட் பாடுவதில்லை..
சோக கீதம் வாசிப்பதில்லை. ஆனால்
பாடல்கள் கேட்காமல் யாராலும் இருக்க
முடியாது.\\
நிதர்சணம்
//இன்றய
இளைஞர்கள் எப்போதும் ஹெட்போனும் கையுமாக
இருக்கிறார்கள்.//
இளைஞிகலும்ந்தான் :))))))))))))
வருகைக்கு நன்றி ஜமால்
இளைஞிகலும்ந்தான் //
போட்டோவை நல்லா பாருங்க சுப்பு
ஆதிமூலகிருஷ்ணன் said...
போன் பேசியே ஒரு பக்கம் காது ரிப்பேராகிவிட்டதால்...
இது தப்பு. பாட்டு வாங்கி வாங்கியே காது ரிப்பேராகிவிட்டதால்....
இது தப்பு. பாட்டு வாங்கி வாங்கியே காது ரிப்பேராகிவிட்டதால்....//
இப்படி உண்மையை படார்னு போட்டு உடைக்கலாமா கிருபா. ஃப்ரெண்ட் பாவம் :))
சூப்பர்.
என் போன்லயும் எம்பி3 எஃப் எம் எல்லாம் இருந்தாலும் ஹெட்போன் எங்க இருக்குன்னு தேடினாதான் கிடைக்கும் பயன்படுத்தறதில்லை.
Post a Comment