அமிர்தம் வேண்டுமா?? ஆவக்காய் வேண்டுமா என்று
தெலுங்கர்களிடம் கேட்டால் யோசிக்காமல் டக்கென
வரும் பதில் “ஆவக்காய” என்பதாகத்தான் இருக்குமென
சொல்வார்கள். ஆவக்காய் மீது இருக்கும் ப்ரியம் அப்படி!!!
ஆவக்காய இல்லாத ஆந்திரா சாப்பாடு முழுமை பெறாது.
எனக்கு ஆவக்காய் அறிமுகமானது என் அம்மமமாவால்தான்.
மிக அருமையாக ஊறுகாய் போடுவார் அம்மம்மா.
திருமணம் முடிந்து ஹைதைக்கு வந்ததும் ஆவக்காய்
போடக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சங்கல்பமே
எடுத்துக்கொண்டேன். :))
ஆவக்காய் போடுவது ஏதோ பண்டிகை போல இருக்கும்.
பெரிய ஊறுகாய் ஜாடி வாங்கி, கழுவி வெயிலில் காயவைத்து
தயாராக வைத்திருப்பார்கள்.
மார்கெட்களில் பச்சை மாங்காயின் வாசம் மூக்கைத்
துளைக்கும். ”கச்சக் கச்சக்கென்று” ஓட்டோடு
மாங்காயை துண்டங்களாக்கி கொண்டுவருவோம்.
(அந்த வாசனையே... வாசனை)
பாந்தமாக துணியில் காயவைத்து, துடைத்து,
உள்ளே இருக்கும் மெல்லிய தோலை எடுத்து
ஆவுப்பிண்டி(கடுகுப்பொடி)காரம், உப்பு,
நல்லெண்ணெய் கலந்து அதில் துண்டங்களைப்
போட்டு பிசறி ஜாடியில் எடுத்து வைத்துக்கொண்டால்
ஒரு வருடமானாலும் கெடாது.
ஆவக்காயில் பலவகைகள் உண்டு.
வெந்தய ஆவக்காய்
வெல்ல ஆவக்காய்
எள்ளு ஆவக்காய்
மாகாய
இஞ்சி ஆவக்காய
பூண்டு ஆவக்காய
சோற்றுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் என்ற நிலைபோய்
ஊறுகாய்க்கு தொட்டுக்கொள்ள சோறு எனும் நிலை
ஆவக்காய் சாப்பிடும்போது ஆகிவிடும். ருசி அப்படி.
(என் மகன் நெஸ்டம் சாப்ப்டும் குழந்தையாய்
இருந்த பொழுது ஆவக்காய் தொட்டுக்கொண்டுதான்
சாப்பிடுவான் :))
முதல் சோறு ஆவக்காய் போட்டு பிணைந்ததாக
இருந்தால் சொர்கம் தான். :)) தொட்டுக்கொள்ள
தயிர் அருகில் இருந்தால் வேறு சமையலே
வேண்டாம்.
ஆவக்காய் தெலுங்கர்களால் அதிகம் விரும்பப்படுவதால்
“ஆவக்காயரா” என்பது அவர்களின் செல்லப்பெயராகிவிட்டது.
இந்த முறை ஆவக்காய் போடும் போது ஏகப்பட்ட
புக்கிங் ஆகிவிட்டது. என் மாமா மகள் தனக்கு மட்டும்
பெரிய்ய்ய்ய்ய்ய்ய பாட்டில் 2 பாட்டில் அனுப்பிவைக்கச்
சொல்லி விட்டாள்.
ஊறுகாய் மிக ருசியாக வந்திருக்கிறது. அயித்தானுக்காக
ஆவுப்பிண்டி(ஊறுகாய் பொடி) அதிகம் வருவது போல்
போட்டிருகிறேன். (காய் கொஞ்சம் பொடி அதிகம்)
21 comments:
யக்கோவ் பசிக்குதே!
பேரக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதே!
பாஸ் தொட்டுக்க ஒண்ணுமே இல்லாம உக்காந்திருக்கேன் பாஸ் இப்ப போய்....??? :(
சரி நான் போய் மாங்காய் ஊறுகாய் எடுத்துட்டுவந்து அதை ரெண்டாவது படத்தை பார்த்துக்கிட்டே தின்னுடறேன் :)
சென்னைக்கு ஒரு ஜாடி பார்சல் ப்ளீஸ்
அடுத்த ஃப்ளைட்ட பிடிச்சு வாங்க தம்பி
சரி நான் போய் மாங்காய் ஊறுகாய் எடுத்துட்டுவந்து அதை ரெண்டாவது படத்தை பார்த்துக்கிட்டே தின்னுடறேன்//
:))
சென்னைக்கு ஒரு ஜாடி பார்சல் ப்ளீஸ்//
எம்புட்டு நல்ல மனசு உங்களுக்கு. ஜீவ்ஸ் தம்பி ரெண்டு ஜாடி போதும்னு சொல்லியிருந்தாரு.
:)))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
எனக்கு ஒரு சின்ன ஜாடி:)!
ஆவக்காயில் இவ்வளவு வகையா?
ஆவக்காய இல்லாத ஆந்திரா சாப்பாடு முழுமை பெறாது.
எனக்கு ஆவக்காய் அறிமுகமானது என் அம்மமமாவால்தான்.
மிக அருமையாக ஊறுகாய் போடுவார் அம்மம்மா.///
உறுகாய் குளோசப் படம் பார்த்தாலே ஊத்துதே தண்ணி நாக்கில்!!
காரம் அதிகமாயிட்டோ பரிசல்
எனக்கு ஒரு சின்ன ஜாடி//
பெண்ணின் மனதைத்தொட்டு படத்துல விவேக் காமெடில வர்றமாதிரி சின்ன குண்டானாட்டம் இருக்குமா ராமலக்ஷ்மி!!
:))))))
ஆமாம் தேவா ஆவக்காயில் அம்புட்டு வகை இங்கே போடறாங்க.
ஞாயிறு சென்னை வரும்போது எனக்கு ஒரு பாட்டில் பார்சல்ல்ல்ல்ல்
:)
கடைசி படத்தைப் பார்த்துவிட்டு நாக்கில் ஜலம் கொட்டுகிறது..
சென்னை வரும்போது எனக்கு ஒரு பாட்டில் பார்சல்ல்ல்ல்ல் //
ஆஹா, சென்னைக்கு என் உடுப்புக்களை விட ஊறுகாய் பார்சல்தாண் கொண்டு போக முடியும் போல இருக்கே!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாக்கில் ஜலம் கொட்டுகிறது..//
:)))))))
/
என் மகன் நெஸ்டம் சாப்ப்டும் குழந்தையாய்
இருந்த பொழுது ஆவக்காய் தொட்டுக்கொண்டுதான்
சாப்பிடுவான் :))
/
:))))))))))
இப்ப எப்படி இப்பவும் அப்படியேதானா ஆஷிஷ்?
ஊறுகாய் நாக்குல எச்சில் ஊறுது ஆனா ப்ளட் ப்ரெஷர் ஏற்கனவே 20 பாயிண்ட் அதிகமாச்சே
:(((
வாங்க சிவா,
அதெல்லாம் மாத்த முடியுமா.
ப்ர்ஷரா????
Post a Comment