Monday, May 11, 2009

அருமையான உணவுக்கு ஒரு இடம்

மதியம் ஒரு மணி ஆகியும் கூலாக ஆவக்காய் ஊறுகாய்
போட்டுக்கொண்டிருந்த என்னை சந்தேகத்துடன் பார்த்து
கொண்டிருந்தார்கள் பிள்ளைகள் இருவரும்.

மின்னல் வேகத்திலாவது சாப்பாடு வந்துவிடும்
என்பது அவர்களுக்கு தெரியும் அதனால் ஒன்றும்
கேட்கவில்லை.


அயித்தான்,” சரி ரெடியாகுங்க லஞ்சுக்கு வெளில
போறோம்!!!” என்றதும் ,”எங்க போறோம்?”
என கேள்விக் கணைதான். ”போர இடத்துக்கு
தகுந்தாப்ல ட்ரெஸ் போட்டுக்கணும்!!”
அப்படி இப்படின்னு வாயிலேர்ந்து வார்த்தையை
பிடுங்க பார்த்தாலும் வாயை மூடிக்கிட்டு
சர்ப்ரைஸ மெயிண்டென் செஞ்சோம்.

இந்த வழியில போனா இந்த ஹோட்டல்னு
நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க பசங்க.:))

ஹை! உத்சவ் போறோம் என்று சொல்லவும்
கார் திவோலி தியேட்டருக்கு பக்கது பில்டிங்கான
உத்சவ் ஹோட்டல் வாசலில் நிற்கவும் சரியாக
இருந்தது.

UTSAV, Tivoli Road,, Begumpet Police Lines,
Hyderabad - 500003 இதுதான் முகவரி.

இந்த உணவகத்துக்கு கிடைத்திருக்கும்
விருதுகள்:

HYDERABAD'S FINEST RESTAURANT BY (Diner's
club international Food utsav)

AP TOURISM'S Award of excellence
(2003-04, 2004-05, 2005-06, 2006-07)

Best restaurant of the year awarded by
Association of Catering Professionals)
2001-02, 2003-04, 2004-05, 2005-06,
2006-07)

டைம்ஸ் ஃபுட் அவார்ட் அவர்களால்
பெஸ்ட் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட்
எனும் விருதும் கிடைத்திருக்கிறது.

வெஜ், நான் வெஜ் மிக்சிங் இல்லாமல்
வெஜிடேரியன் உணவு மட்டும் கிடைப்பது
இங்கே சிறப்பு.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை
DAKSHIN THALI மதிய உணவு வேளையில்
கிடைக்கும்.

திங்கள் முதல் வெள்ளிவரை LUNCH BUFFETயும்
உண்டு.

வார இறுதிகளில் BUFFET EXOTICA
பலவிதமான வட மற்றும் தென்னிந்திய,
சைனீச் உணவுவகைகள் கிடைக்கும்.

இரவு வேளைகளில் அலாக்ரடி மெனு.

உணவின் தரத்தை பார்க்கும்பொழுது
விருது வழங்கியதில் தப்பே இல்லை
என்று அடித்துச் சொல்லலாம்.

சுவை, மணம், குணம் எல்லாம் கலந்த
ஒரு படைப்பு. நீர் மோர் அன்லிமிட்டடாக
தந்து கொண்டே இருப்பார்கள். இது தாலி மீல்ஸ்,
புஃபே எல்லாவற்றிலும் உண்டு.

வார இறுதி BUFFET EXOTICA
ரேட்ஸ் இப்படி இருக்கும்,

ADULTS - 350 + TAX
KIDS - 150 + TAX

நேற்றைய மெனு என்னவென்று
சொல்லாவிட்டால் தப்பாச்சே. :))

BUFFET EXOTICA மெனு

தக்காளி சூப்/வெஜிடபில் கிளியர் சூப்

உருளை வெஜி/ பனீர் வெஜி

சாலட் வகைகள்
மினி ஊத்தப்பம், தேங்காய் சட்னி

பனிர் பட்டர் மசாலா, பாலக் பஞ்சாபி
ஸ்டைல், வெண்பொங்கல், கடி பகோடி

வெஜ் நூடில்ஸ், காலிஃபளவர் கோப்தா,
தால் ஃப்ரை, சாம்பார், சாதம், ரசம்,
தயிர் சாதம், ஊறுகாய் வகைகள்

அப்பளம்.

பாஸ்தா வகைகள்,

டெசர்டுக்கு : தவா மிட்டாய்(பலவகையான
இனிப்புக்களை கிண்ணத்தில் போட்டு சூடாக
ரபடி போட்டு தருவார்கள்)

கேக், ஐஸ்கிரீம்.

அன்லிமிடட் மோர் கடைசியாக பீடா ஒன்று.

ஹைதைக்கு அடிக்கடி விசிட் அடிக்கும்
ஆதி, நர்சிம் கவனத்திற்கு.
”மிஸ் பண்ணாம ஒரு தபா இந்த ஹோட்டல்
போய் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்”.

22 comments:

ஆயில்யன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


(பெருமூச்சு எப்படி விடறது புரிய மாட்டிக்கிது :()

நிஜமா நல்லவன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

ஏங்க இந்தக் கொல வெறி; தங்கமணி குழந்தைகளை கூட்டீட்டு ஊருக்குப் போயிட்டதால காஞ்சுபோய்க் கிடக்கிற இந்த நேரத்துல?

pudugaithendral said...

மீ த பர்ஸ்டா வந்த ஆயில்யனுக்கு
நன்றி

pudugaithendral said...

அட இத பார்றா நம்ம நிஜமா நல்லவனும் வந்திருக்காக

:))

pudugaithendral said...

வாங்க வடகரை வேலன்,

:)))

Hari said...

இந்த ஹோட்டலுக்கு இன்னும் சென்றதில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல விவரங்கள். ஹைதை வந்தால் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

தமிழ் அமுதன் said...

///ஏங்க இந்தக் கொல வெறி; தங்கமணி குழந்தைகளை கூட்டீட்டு ஊருக்குப் போயிட்டதால காஞ்சுபோய்க் கிடக்கிற இந்த நேரத்துல?//
reppittu

Thamira said...

உடனே டிக்கெட்டு போடுங்கடா ஹைதைக்கு..

எம்.எம்.அப்துல்லா said...

//உடனே டிக்கெட்டு போடுங்கடா ஹைதைக்கு.. //

உடனே டிக்கெட்டு போடுங்கடா ஹைதைக்கு.. எனக்கும் சேர்த்து

இராகவன் நைஜிரியா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உங்களால முடியுது போயிட்டு வந்துடீங்க...

நாங்க அதை நினைச்சுப் பார்த்து கொஞ்சம் திருப்தி அடைஞ்சுக்க வேண்டியிருக்குஞ்க

சின்னப் பையன் said...

உடனே டிக்கெட்டு போடுங்கடா ஹைதைக்கு.. எனக்கும் சேர்த்து

சரவணகுமரன் said...

யப்பா...

pudugaithendral said...

மறக்காம ஒரு வாட்டி போயிட்டு வாங்க ஹரி.

pudugaithendral said...

ஹைதை வந்தால் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.//

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

ரிப்பீட்டா.. ஜீவன் எல்லாம் ரெம்ப கஷ்ட படறீங்க போல இருக்கு.

pudugaithendral said...

உடனே டிக்கெட்டு போடுங்கடா ஹைதைக்கு..//

வாங்க ஃப்ரெண்ட்.

pudugaithendral said...

ஆஹா அப்துல்லா, ச்சின்னப்பையன் எல்லோரும் வர்றீங்களா??

அப்ப சரி, உத்சவ்லேயே பதிவர் சந்திப்பு வெச்சுக்கலாம்.

:))

pudugaithendral said...

உங்க எல்லார் சார்பாவும் தான் நான் போயிட்டு வந்தேன் இராகவன்.

:))

pudugaithendral said...

ஏன் என்னாச்சு சரவணகுமரன்?!!!

மங்களூர் சிவா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


(பெருமூச்சு எப்படி விடறது புரிய மாட்டிக்கிது :()