Saturday, May 16, 2009

HEARTIEST WISHES TO மாம்ஸ்

சனிக்கிழமை நோ பதிவுடே என்றாலும் பதிவு
போட்டே ஆகவேண்டும் என்பதால் இந்தப் பதிவு.

அன்னையர் தினத்துக்கு தனிப்பதிவு போடவில்லை.
பெற்ற பாசத்தை விட வளர்த்த பாசம் அதிகம்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்வில்
அது உண்மை.

அம்மா வேலைக்குச் சென்றதாலும், அம்மம்மா
லோக்கலிலேயே இருந்ததாலும் என்னை
வளர்த்தது அம்மம்மாதான். அம்மா என்றுதான்
அழைக்கிறேன்.

”தாயைப் பார்த்து பெண் எடு” என்று சொல்வார்கள்.
என் அம்மம்மாவின் பெயர் தான் எனக்கு
துருப்பு சீட்டாக இருந்தது. ராஜலட்சுமியின்
பேத்தி, TRAINED BY ராஜலட்சுமி இதுதான்
எனக்கு +பாயிண்ட்.

படிக்காத மேதை அம்மம்மா.
அம்மம்மாவைப் பார்த்து நான் அடிக்கடி
பாடும் வரிகள்

“தலைதான் முன்னல நரையாச்சு அம்மாடி
அதுவும் அழகாச்சு” :)))




ஐ லவ் யூ அம்மா.


****************************************

இன்று என்னுடைய சின்ன மாம்ஸ் (மாமா)
தனது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.
சின்ன மாம்ஸ் ஆனா வீட்டில் எல்லோரும்
செல்ல மாம்ஸ் என்றுதான் சொல்வாங்க.

மாமாவுக்கு நான் செல்லமா, எனக்கு மாமா
செல்லமா என்று கன்ஃப்யூசிங் தான்.

என்னைவிட 5 வயது மூத்தவர். எனக்கு
அண்ணனாக எப்போதும் துணையிருப்பவர்.
சிறுவயதில் எங்கள் இருவருக்கும் குடிமிபிடி
சண்டை நடக்கும். :))

ஆனாலும் அம்மா(என் முதுகில்) தனிஆவர்த்தனம்
வாசிக்கும்போது அம்மாவுடன் சண்டை போடும்
அன்பு உண்டு.

எனக்காக ஒரு சாக்லட் கிடைத்தாலும் அதில்
சரிபாதி மாமாவுக்காக எடுத்து வைத்து
கொடுப்பேன்.

***************************************
நாளை 17ஆம் தேதி பெரிய மாம்ஸ்
சத்யா மாமா தனது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார்.

சத்யாமாமாவுக்கு அறிமுகம் தேவையில்லை.

இவரைப்பற்றிய பதிவுக்கு இங்கே


இந்த வருடம் சிறப்பு என்னவென்றால் மாமா தனது
பிறந்த நாளைக்கொண்டாட ஹைதைக்கு வருகிறார்.

தடபுடலான ஏற்பாடுகள் செய்துகொண்டிருகிறேன். :))

நாளைக் காலையில் அம்மம்மா, தாத்தா, மாம்ஸ்,
அத்தைஸ், குட்டீஸ் எல்லோரும் வரப்போறாங்க.

தனது பர்த்டே ட்ரீட்டாக சத்யாமாமா தனது
கையால் செய்யப்போகும் பாவ் பாஜிக்காக
மீ த வெயிட்டிங்.(வேணுங்கறவங்க காலை
உணவுக்கு வந்திடுங்க)

12 comments:

Ungalranga said...

ஆஹா.. அம்மம்மாவுக்கு நல்லதொரு பாடல் ...

மற்ற உங்கள் உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!!

Vidhya Chandrasekaran said...

என்னுடைய வாழ்த்துகளும்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அம்மா ;)

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

ஜமாய்ங்க தென்றல்:)!

மங்களூர் சிவா said...

இரண்டு மாம்ஸ்க்கும் என்னுடைய வாழ்த்துகளும்.

தேவன் மாயம் said...

மாமாக்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

butterfly Surya said...

வாழ்த்துக்கள்!!

Thamira said...

உங்க பதிவுக்குன்னு பேசாம வாழ்த்துகள்னு டெம்பிளேட் பின்னூட்டம் ரெடி பண்ணி சேவ் பண்ணி வச்சுக்க வேண்டியதுதான். அவ்வளவு நன்மனம் உங்களுக்கு.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.!

அன்புடன் அருணா said...

என்னுடைய வாழ்த்துகளும்.
அன்புடன் அருணா

நட்புடன் ஜமால் said...

எல்லோருக்கும் வாழ்த்துகள்

pudugaithendral said...

வாழ்த்துச்சொல்லிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்