Thursday, May 21, 2009

தென்றல் அப்டேட்ஸ் 21/5/09

4 நாள் வந்ததும் தெரியவில்லை. போனதும்
தெரியவில்லை. :)

பெரிய மாம்ஸ், சின்ன மாம்ஸ், அவர்களது
குடும்பத்தினர், அம்மம்மா, தாத்தா என
செம ஜாலியாக இருந்தோம்.

பழங்கதைகளை தூசி தட்டி ஞாபகப்படுத்தி
பேசிக்கொண்டோம்.

திருமணத்துக்கு முந்தைய சமையல் பயிற்சியில்
நொந்து போயிருந்த மாம்ஸ்கள் இப்போதைய
என் கைப்பக்குவத்தில் மலைத்துவிட்டார்கள். :))

ஆந்திரா ஸ்டைல் மிளகுக் குழம்பு செய்திருந்தேன்.
மிளகு காட்டு சூப்பரா இருக்கு இன்னும் கொஞ்சம்
போடு என்று கேட்டு வாங்கி பெரிய மாமா சாப்பிட்டார்.

***************************************

என் திருமண வீடியோவை மாம்ஸ் மற்றும்
அனைவரும் இப்போதுதான் முதல் முறையாக!!!
பார்த்தனர். அப்போது 9 மாதக் குழந்தையாக
இருந்த பெரிய மாம்ஸின் இரண்டாவது மகள்
தன்னை, தான் அடித்த லூட்டிகளை வெட்கத்துடன்
பார்த்தாள்.

விவரம் புரியாமல் என் தம்பியை திருமணம்
செய்து கொள்வதாக சொல்லி அவனை அப்போது
கலங்கடித்துக்கொண்டிருந்த பெரிய(மாமா) மகள் சசி
இப்போது கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறாள்.
“பாவம் பாவா! என்னாள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்”
என்று பரிதாப்பட்டாள்.
************************************
சின்ன மாமாவுடன் செல்லச் சண்டையும் நடந்தது. :)))

ஞாயிற்றுக்கிழமை அதி காலையே மற்றவர்கள் வந்து
விட சின்ன மாம்ஸும், பெரிய மாம்ஸின் மகளும்(
அவளுக்கு ஏதோ எண்ட்ரன்ஸ் எக்சாம் இருக்க அதை
முடித்து வந்தாள்) ஞாயிற்றுக்கிழமை இரவுதான் வந்தார்கள்.
அதனால் திங்கள் கிழமை சின்ன மாம்ஸை ஷ்பெஷலாக
கவனிக்க திட்டம் போட்டு வைத்திருந்தேன்.

மாமாவுக்கு பிடித்த சமையல் முடித்து வெங்காய
பக்கோடாவும், ரஸமலாயும் சர்ப்ரைஸாக வாங்கி
வரச் சென்று வருவதற்குள் மாமா சாப்பிட ஆரம்பித்து
விட்டார்.” உனக்காகத்தானே மாமா! வாங்கப்போனேன்.
சேர்ந்து சாப்பிட வருவதற்குள் என்னை விட்டு ஏன்
தனியாக சாப்பிட்டாய்” என்று சண்டை போட்டேன்.

“ஐயோ தெரியாதேடா! கண்ணம்மாவுக்கு என்
பக்கத்திலேயே இலையை போடு!!!” என்று
அத்தைக்குச் சொல்ல 7 வயது மாமா மகள்
“அதென்ன அண்ணியை கண்ணம்மா
என்று கூப்பிடறீங்க!!!” என்று ஆச்சரியமாக
கேட்டாள். “நான் தூக்கி வளர்த்த பெண்ணாச்சே!”
என்று ஒரே பாசமழை தான்:))) எல்லாவற்றையும்
புதிதாக பார்த்துக்கொண்டிருந்தார் அத்தை.
(சின்ன மாமாவுக்கு திருமணமாகி 9 வருடங்கள்தானே
ஆகிறது)

*****************************************

சில்க்கூரி பாலாஜி கோவிலுக்குச் சென்று
திரும்பும் பொழுது சர்ப்ரைசாக 5 கிலோ
மாம்பழங்களுடன் வந்தார் பெரிய மாம்ஸ்.
”உனக்கு பிடித்த ஆம்ரஸ் செய்து கொடுக்கவேயில்லை
என்று உன் பூவாஜி”!!(பெரிய மாம்ஸின் மனைவியை
அப்படித்தான் அழைப்பேன். பூவா என்றால் அத்தை
(அப்பாவின் தங்கை) என்று அர்த்தம். என் அப்பாவுக்கு
தூரத்து உறவில் தங்கை முறை)என்று சொல்லிவிட்டு
மிக்ஸியில் போட்டு அடிக்காமல் தன் கைகளாலேயே
மாம்பழத்தை பிழிந்து அருமையார ஆம் ரஸ்
செய்து வைத்தார் மாமா. இரவு உணவுக்கு பிறகு
அருமையாக ஆனந்தமாக மாமா செய்து கொடுத்த
ஆம் ரஸ் அனைவரும் சாப்பிட்டோம்.
எனக்கு மட்டும் அதிகம் இனித்த மாதிரி இருந்தது.

பாசம் அதிமாயிடுச்சோ!!!!

*****************************************

வெளியில் செல்ல திட்டமிட்டிருந்த பொழுது
வருணபகவானும் வெளியில் வந்து பார்வை இட
திட்டமிட்டுவிட்டார். அதனால் வீட்டுக்குள்
இருக்க நேர மாலை 7 மணி துவங்கி நள்ளிரவு
ஒரு மணி வரை சந்தமாமா, ஆ நலுகுரு ஆகிய
தெலுங்கு படங்கள் பார்த்தோம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒரு சேர அமர்ந்து
சிரித்து, கமெண்டடித்து படம் பார்த்தோம்.

தூங்கப்போகும் முன் பெரிய மாம்ஸ் சொன்னது,
“இப்படி அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு, மகிழ்ந்து,
சினிமா பார்த்து எத்தனை நாளாச்சுடா!! இந்த
சந்தோஷம் காசு கொடுத்து வாங்க முடியுமா!!”

*************************************

21 comments:

நிஜமா நல்லவன் said...

:)

pudugaithendral said...

:)//

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த
சந்தோஷம் காசு கொடுத்து வாங்க முடியுமா!!”

//

yeh!yeh!yeh!

:)

சென்ஷி said...

:-))

மாம்ஸ், குழந்தைங்க, பூவாஜி, ஆம்ரஸ்...

களைகட்டியிருக்கும் வீடு!!

தேவன் மாயம் said...

ஆந்திரா ஸ்டைல் மிளகுக் குழம்பு செய்திருந்தேன்.
மிளகு காட்டு சூப்பரா இருக்கு இன்னும் கொஞ்சம்
போடு என்று கேட்டு வாங்கி பெரிய மாமா சாப்பிட்டார்.
///

பசியைத் தூண்டுகிறீர்களே! நீங்க பன்றது ஞாயமா?

pudugaithendral said...

வாங்க அப்துல்லா

pudugaithendral said...

களைகட்டியிருக்கும் வீடு!!//

பசங்க படப்பாட்டுத்தான் ஞாபகம் வந்துச்சு சென்ஷி.

ஆனந்தம் விளையாடும் வீடு....

pudugaithendral said...

பசியைத் தூண்டுகிறீர்களே! நீங்க பன்றது ஞாயமா?//

ஏதோ என்னால முடிஞ்து. :))))))

Sampath said...

அங்கங்க நடுவுல 'லாலாலா' bgm போட மறந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன் ... :) :)

நட்புடன் ஜமால் said...

\\சந்தோஷம் காசு கொடுத்து வாங்க முடியுமா!!”
\\


never ...

வல்லிசிம்ஹன் said...

அன்பு நடமாடும் வீடு.
ஆனந்தம் விளையாடும் வீடு.
இதில் மாமன் கைச்சோறு இனிப்பதில் அதிசயம் இல்லை தென்றல்.

நீங்கள் பதிவு எழுதியதால் இப்போது என் மனம் தித்திக்கிறது:)
வாழ்க குடும்ப வளம்.

Vidhya Chandrasekaran said...

:))

கோபிநாத் said...

ஒரே பாசமழை!! ;)))

பதிவை படிக்கும் நானும் கூடவே இருந்தது போல இருக்கு..டங்கஸ் ;)

Nagendra Bharathi said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

கடைக்குட்டி said...

2தலைவரே சொல்லி இருக்காரே..


“சந்தோஷந்தாங்க முக்கியம் !!”

pudugaithendral said...

அங்கங்க நடுவுல 'லாலாலா' bgm போட மறந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன் //

மைண்ட்ல வெச்சு அடுத்த முறை யூஸ் செஞ்சுக்கறேன்.

:))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

pudugaithendral said...

நீங்கள் பதிவு எழுதியதால் இப்போது என் மனம் தித்திக்கிறது//

சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டா எம்புட்டு பேருக்கு சந்தோஷம் தருதுன்னு இப்ப தெரியுது வல்லிம்மா

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி வித்யா.

pudugaithendral said...

பதிவை படிக்கும் நானும் கூடவே இருந்தது போல இருக்கு.//

ரெம்ப சந்தோஷமுங்க.

pudugaithendral said...

முதல் வருகைக்கு நன்றி நாகேந்திர பாரதி