என்ன எல்லோரும் சொளக்கியமா?
சென்னையில் பதிவர் சந்திப்பு இருக்கும்
என்று சொல்லியிருந்தேன். நானானி
அவர்களின் ஏற்பாட்டால் மிக
சிறப்பாக நடந்தது.
திங்களன்று மதியம் 3 மணிக்கு R.A Puram
அம்பேத்கர் மண்டபத்தில் பதிவர் சந்திப்பு
நடந்தது. முக்கியமான பங்கு நானானி அவர்களுக்குத்தான்.
நானானி, கோமா, வல்லி சிம்ஹன்,
அமுதா கலந்து கொண்டோம். பர்மிஷன்
போட்டுக்குகொண்டு எட்டியாவது பார்த்துவிட
வேண்டும் என்று வந்திருந்தார் அமுதா.
நானானிம்மா, வல்லிம்மா இருவரும்
இனிமையாக எழுதுவதைப்போலவே,
இனிமையாக அன்பாக பேசுகிறார்கள்.
அன்பைக் கொட்டும் அந்த வார்த்தைகள்
மனதுக்கு இதமாக இருக்கிறது.
குட்டி பதிவர்களாக ஆஷிஷும், அம்ருதாவும்
கூட கலந்து கொண்டார்கள்.
வெயிலையும் மீறி இதமானகாற்று வீசிக்கொண்டிருந்தது.
பரஸ்பர அறிமுகம் முடிந்து
கலந்துரையாடிக்கொண்டிருந்தோம்.
ஸ்நாக்ஸ் ஜூஸ் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்
நானானியும் கோமாவும். உங்கள் அன்பை
என்னவென்று சொல்வது!!!!
வேறு சிலரும் கலந்து கொள்வதாக இருந்தது.
வார இறுதியாக இருந்தால் அனைவரும்
கலந்து கொண்டிருப்பார்கள். அலுவலக
நாளாக இருந்ததால் பலரால் கலந்து
கொள்ள முடியவில்லை.:(
சர்ப்ரைஸ் விசிட்டாக அப்துல்லாவும்
வந்து கலந்துக்கொள்ள பிள்ளைகள்
இருவரும் ஒரே சந்தோஷம்.
“மாமா, உங்க பாட்டு பாடுங்க”! என்று
அம்ருதா அடம் பிடிக்க...
“உங்க பாட்டை கம்ப்யூட்டரில் வெச்சு
கேட்டுகிட்டுத்தான் வேலை நடக்குது!!”
அப்படின்னு சொல்லி மாமாவை பாட
வைக்க முயற்சி செஞ்சாங்க.
குரல் கட்டி போயிருந்த நிலமையிலும்
ஒரு வரி மருமகபிள்ளைகளுக்காக
பாடிவிட்டுத்தான் சென்றார்.
”இந்த சந்திப்பு உனக்காக. அனைவருக்காகவும்
வார இறுதியில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்து சந்திக்கலாம்”, என்று நானானிம்மா
சொன்ன பொழுது மனசுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது.
25 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்!
//ஸ்நாக்ஸ் ஜூஸ் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்
நானானியும் கோமாவும். உங்கள் அன்பை
என்னவென்று சொல்வது!!!!//
பாஸ் நீங்க ஒண்ணும் உங்க கையால செஞ்சு எடுத்துட்டு போகலயா பாஸ்....?
//“உங்க பாட்டை கம்ப்யூட்டரில் வெச்சு
கேட்டுகிட்டுத்தான் வேலை நடக்குது!!”
அப்படின்னு சொல்லி மாமாவை பாட
வைக்க முயற்சி செஞ்சாங்க.//
என்னது அப்படின்னு சொல்லியா....?
அவ்வ்வ்வ்வ்
நான் செஞ்சு எடுத்துப்போக சந்திப்பு
ஹைதையில் நடக்கலையே!!!
நானும் மிஸ் பண்ணிட்டேன்க்கா. செல்லும் ரிப்பேர்:(
இனிமையாக அமைந்த சந்திப்பைக் கொண்டாடும் இதமான பதிவு!
குட்டி பதிவர்களாக ஆஷிஷும், அம்ருதாவும்
கூட கலந்து கொண்டார்கள்.\\
சந்தோஷம் அக்கா
:)
அக்கா கவிதை எழுதியிருக்காங்கன்னு நினைத்தேன்
மடக்கி எழுதினால் கவிதையென்று யாரோ சொன்னாங்களே ...
நானானி, கோமா, வல்லி சிம்ஹன்,
அமுதா கலந்து கொண்டோம். பர்மிஷன்
போட்டுக்குகொண்டு எட்டியாவது பார்த்துவிட
வேண்டும் என்று வந்திருந்தார் அமுதா.
நானானிம்மா, வல்லிம்மா இருவரும்
இனிமையாக எழுதுவதைப்போலவே,
இனிமையாக அன்பாக பேசுகிறார்கள்.
?////
பதிவர் சந்திப்பா!! நடத்துங்க!!
உங்க நம்பருக்கு போன் போட்டு போட்டு அலுத்துட்டேன்.
(ஆமா அதென்ன சம்பந்திங்க ரெண்டு பேரும் ஒரே பாட்டை காலர் ட்யூனா வெச்சிருக்கீங்க.... என்ன ஒரு சம்பந்திங்கன்னு பேர் வாங்கவா????))
ஆமாம் ராமலக்ஷ்மி,
ரெம்ப எஞ்சாய் செஞ்சோம்
மடக்கி எழுதினால் கவிதையென்று யாரோ சொன்னாங்களே ...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் கவிதை எல்லாம் எழுதி கவிதைக்குஅவமரியாதை செய்ய மாட்டேன்.
பதிவர் சந்திப்பா!! நடத்துங்க!!//
:))) நீங்க மதுரையில நடத்தினீங்க. நாங்க சென்னையிலே நடத்தினோம்
வேறு சிலரும் கலந்து கொள்வதாக இருந்தது.
வார இறுதியாக இருந்தால் அனைவரும்
கலந்து கொண்டிருப்பார்கள். அலுவலக
நாளாக இருந்ததால் பலரால் கலந்து
கொள்ள முடியவில்லை.:(
sorry thendral.
ஆகா பாட்டாவே சொல்லீட்டீங்களா, நடு நடுவில மானே தேனே போட்டிருக்கலாம் :)
பராவாயில்லை அமித்து அம்மா.
வாங்க ப்ரபா
//(ஆமா அதென்ன சம்பந்திங்க ரெண்டு பேரும் ஒரே பாட்டை காலர் ட்யூனா வெச்சிருக்கீங்க.... என்ன ஒரு சம்பந்திங்கன்னு பேர் வாங்கவா????))
//
ஹி...ஹி..ஹி..
:)
okies.
செல்லும் இடம் எதுவானாலும் செல்லின்றி செல்லற்க,
செல்லின்றி சென்றால்,சில சந்திப்புகள் செல் செல் என்று சென்றுவிடும்.
சொல் ரிப்பேர் எழுதிக்காட்டலாம் செல் ரிப்பேர் ஆனால் சொல்லவே முடியாது.
வித்யாவுக்காக புனையப்பட்ட செல் கவிதை
அடுத்த சந்திப்பு ஆர்.ஏ.புரம் சங்கீதா என்று நானானியும் நானும் சேர்ந்து உரையாடலில் போது முடிவு செய்திருக்கிறோம் .
சந்திப்போமா .
அப்துல்லா பாடலுக்கான ’லின்க்’குக்காகக் காத்திருக்கிறேன்
உன் தலைப்பால் அம்பேத்கார் மண்டபமே அழகாகியது. ஆதே லிங்க்-க்காக நானும் காத்திருக்கிறேன்.
அப்துல்லா பாடல் கேட்டுவிட்டேன்.சூப்பர் ஹிட்.எஃப் எம் இனி அதிரும்ல...
சொல்லவேயில்லை.!
Post a Comment