Thursday, June 04, 2009

நானும் பாராட்டிக்கறேன்..

எங்க பாக்காமலேயே போய்விடுவேனோன்னு நினைச்சேன்.

பார்த்து பரவசப்பட்டேன். நான் சொல்வது எங்க ஊரு
பசங்க படத்தை. :))

என்னுடைய முந்தைய பதிவு

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை பார்க்கும்
”பாக்கியம்” எனக்கு கிடைக்கவில்லை. பேரில் மட்டும்
எங்க ஊர் இருந்ததா? இல்ல எங்க ஊரையும் காட்டினாங்களான்னு
தெரியாது. ஆனா பசங்க படம் எனக்கு பெரிய எதிர்
பார்ப்பை உண்டாக்கியிருந்தது. என் எதிர்பார்ப்பு
மகிழ்வையே தந்துச்சு.

ச்சும்மா கலக்கியிருக்காங்க....

கதையெல்லாம் சொல்ல மாட்டேன். படத்தை
தியேட்டரில் பார்த்துகிட்டே நம் பள்ளி நாட்களுக்குச்
செல்லும் சுகமான அனுபவத்தை எல்லோரும்
பெறணும். ஆங்கில வழி கல்வி தடத்தை விட
என்னைப்போல தமிழ் வழியில் படிச்சவங்களுக்கு
சத்தியமா இந்தப் படம் ஒரு கொசுவத்திதான்.


அட நம்ம ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்,
நமனசமுத்திரம் பிரிட்ஜ், நச்சாந்துபட்டி ஸ்கூல்,
திருமயம் கடை, பஸ்டாண்ட்
அப்படின்னு எந்த இடம்னு தேடிகிட்டே இருந்ததுல
படத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்க முடியாம
போயிடிச்சு... கண்முன்னே ஃப்ரேம் பை ஃப்ரேம்
எங்க ஊரு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு.

எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த குடும்பத்தினர்
“இது எந்த இடமோ? கோயம்புத்தூர் பக்க்மா?
ச்லாங் டிஃப்ரண்டா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாங்க. ”ஹலோ இது புதுக்கோட்டைங்க,
எங்க ஊரு அப்படின்னு சொல்லணும்னு
மனசு துடிச்சிச்சு”!!

முறுக்குக்கு பேர் போன மணப்பாறையிலிருந்து
ஹீரோ கலக்கியிருக்காரு(பசங்கதான் ஹீரோன்னாலும்)
செல்போன் ரிங்க்டோன் மறக்கவே முடியாது.

படம் சூப்பர்னு ஒவ்வொருத்தரும் பாராட்டும்போது
நான் காலரை தூக்கிவிட்டுகிட்டேன்!! :))

பெரியவங்களுக்கும் பாடம் இருக்கு. குழந்தையின்
நிலையிலிருந்து பார்க்கும்போது பெத்தவங்க
செய்யும் தவறு புரியும்.

படத்தயாரிப்புக்குழுவினர்,நடித்தவர்கள், ஜேம்ஸ் வசந்தன்
அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.(பாட்டு சூப்பர் ஜேம்ஸ்)

பார்க்காம விட்டுடாதீங்க...

21 comments:

நட்புடன் ஜமால் said...

அவசியம் பார்க்கிறோம் அக்கா

புகழன் said...

இப்பத்தான் படத்தைப் பார்த்தேன்.
தற்செயலா உங்க ப்ளாக்கை படித்தால் பசங்க படத்தோடு பாராட்டு விமர்சணம்.
படம் நல்லா இருந்துச்சு
உங்க பாராட்டும்தான்.

எம்.எம்.அப்துல்லா said...

நம்பூர்னாலயே நாலுவாட்டி பார்த்தேன்.

:)

மங்களூர் சிவா said...

நல்லவேளை புதுக்கோட்டையிலிருந்து சரவணன் நீங்க பாக்கலை அதுக்கு சந்தோஷப்பட்டுக்கங்க!

'பசங்க' மங்களுர்ல இன்னும் வரலை பாத்துடுவோம்!!

:))

இராகவன் நைஜிரியா said...

அவசியம் பார்க்கின்றேன்.

இந்தியா வரும் போதி பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் இதுவும் உண்டுங்க..

கோபிநாத் said...

\\”ஹலோ இது புதுக்கோட்டைங்க,
எங்க ஊரு அப்படின்னு சொல்லணும்னு
மனசு துடிச்சிச்சு”!!
\\

அட பட்டுன்னு சொல்லியிருக்க வேண்டாமா!!! என்னக்கா நீங்க ;)))

\\பெரியவங்களுக்கும் பாடம் இருக்கு. குழந்தையின்
நிலையிலிருந்து பார்க்கும்போது பெத்தவங்க
செய்யும் தவறு புரியும்\\

குழந்தைங்க முன்னாடி சண்டை போடுவதை பற்றி சீன் செம சீன் ;)

நல்ல படம் ;)

pudugaithendral said...

நாலுவாட்டியா!!!!

அது சரி. ஆஷிஷும் அம்ருதாவும் கூட இன்னொரு வாட்டி பாக்கலாம்மான்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. நேரமில்லை

pudugaithendral said...

வாங்க புகழன்,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.

மிக்க நன்றி

pudugaithendral said...

கண்டிப்பா பாருங்க ஜமால்

pudugaithendral said...

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் நீங்க பாக்கலை அதுக்கு சந்தோஷப்பட்டுக்கங்க!//

:))))

pudugaithendral said...

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் நீங்க பாக்கலை அதுக்கு சந்தோஷப்பட்டுக்கங்க!//

:))))

pudugaithendral said...

இந்தியா வரும் போதி பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் இதுவும் உண்டுங்க..//

உங்கள் திட்டம் நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

சொல்லியிருக்கலாம் கோபி,

பொறந்த ஊரு பெருமை ரொம்பதான்னு சொல்லிடுவாங்களோன்னு தான்.

:))) மிக அருமையான படம்

Dhiyana said...

இன்னும் பார்க்கலை.. கண்டிப்பா பார்க்கனும்.

அமுதா said...

/*ச்சும்மா கலக்கியிருக்காங்க....*/
வழிமொழிகிறேன்

pudugaithendral said...

கண்டிப்பா பார்க்கனும்.//

யெஸ்ஸு

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமுதா,

உங்களை சந்திச்சதும் மகிழ்ச்சி

Thamiz Priyan said...

அக்கா.. நானும் பார்த்துட்டேன்.. கலக்கலா இருந்தது.

Kumky said...

பச்சை கலர் டெம்ப்ளேட் அழகா இருந்தது.
பசங்க” டொரண்ட்டில் டவுண்லோட் ஆயிட்டிருக்கு.பார்த்துட்டு பதில் சொல்றேன்.
சொந்த ஊருன்னாலே ஒரு பெருமைதானேங்க்கா.....
அதும் நீங்க வெளியிலருந்து பார்க்கும் போது ஒவ்வொரு இடமும் பரவசமா இருந்திருக்கும்.அது பதிவுலயே ஆர்வமா தெரியுது.

pudugaithendral said...

நானும் பார்த்துட்டேன்.. //

ஓ சந்தோஷம்

pudugaithendral said...

நீங்க வெளியிலருந்து பார்க்கும் போது ஒவ்வொரு இடமும் பரவசமா இருந்திருக்கும்.//

ஆமாங்க,

எத்தனை வாட்டி அந்த இடங்களுக்கு போயிருப்போம், அது திரையில் வரும்போது ஹைன்னு மனசுல ஒரு குதூகலம்.

டவுன்லோடிங்கா!!!!!

சரி சரி லிங்க் அனுப்புங்க