Monday, June 08, 2009

பராக்! பராக்! வருண தேவன் பராக்!!!!

ஹைதையின் பேர் கேட்டாலே எல்லோரும் சொல்வது
ஐயோ! வெயில் தாங்க முடியாதே!! என்பதுதான்.

ஆனால் அந்த இரண்டு மாதங்களையும் தாண்டிவிட்டால்
வாழ்க்கை இங்கே ஒரு சொர்க்கம் தான். ஹைதையை
நான் மிகவும் விரும்ப இதுவும் ஒரு காரணம்.

ஹைதை வெயிலை விட சென்னை வெயிலுக்குத்தான்
ரொம்ப திண்டாடிவிட்டோம். உஸ் புஸ்ஸுன்று
தாங்கவே முடியவில்லை.(ஏசி கூட வேலை செய்யாது
போல இருக்கு சென்னையில் :( )

ஹைதையில் பெய்யென பெய்யும் மழையாக
ஜூன் மாதம் கட்டாயம் மழைக்காலம் துவங்கிவிடும்.
”ஆஷாட மேகம்”(ஆடிமாத மேகம்) என்று
பொதுவாகச் சொன்னாலும் ஜ்யேஷ்ட(ஆனி) மாதமே
மழை வந்துவிடும்.


இந்த வருடம் பருவமழை சற்று முன்னதாகவே
தொடங்கிவிட்டது. சென்ற மாத கடைசியிலேயே
மழை அப்பப்போ பெய்தது. கடந்த சனிமுதல்
மாலை வேளைகளில் மழை பொழிய துவங்கிவிட்டது.

2 நாள் மழைக்கு ஊரே ஏசி போட்டாற்போல்
ஆகிவிட்டது. :)))

இனி ஜாலி ஜாலி ஜிம்கானா தான்.

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோன்னு என்று
மழைக்காலப் பாடல்களில் மூழ்க வேண்டியதுதான்.Get Your Own Hindi Songs Player at Music Plugin

மழைக்காலத்தில் மயிலின் மனது மகிழ்வது போல்
என் மனமும் மகிழ்வுடன் இருக்கும். எவ்வளவு
மழை பெய்தாலும் சந்தோஷமே. துணி காயவில்லை,
வெளியே போகமுடியவில்லை, என அங்கலாய்க்கமாட்டேன்.
ஆனந்தமாக அனுபவிப்பேன். வெயிலின் கொடுமை
இரண்டு மாதமே! அழகான மழைக்காலம், ஆனந்தமான
குளிர்காலம் என அடுத்த மார்ச் வரை ஹைதை
ஒரு சொர்க்கமே!!!என் மகனுக்கு மழைக்காலம் என்றால் பக்கோடா/பஜ்ஜி வித்
மசாலா டீ தான் :)) அவரும் மழை விரும்பியாச்சே!!!!


இதனால் தான் இந்தியாவில் எங்கே இருக்கலாம்?
என்ற கேள்வி மனதில் எழுந்த பொழுது கண்ணை
மூடிக்கொண்டு ஹைதைக்கு டிக்கெட் வாங்கியது. :)))

11 comments:

நட்புடன் ஜமால் said...

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ\\

ரம்யமான பாடல்...

நட்புடன் ஜமால் said...

\\துணி காயவில்லை,
வெளியே போகமுடியவில்லை, என அங்கலாய்க்கமாட்டேன்.\\

ரொம்ப நல்ல அக்கா!

எதார்த்தத்தை ஏற்றகொள்ளனும்.

வெயில் அடிக்கையில்

உஸ் ஆ ரொம்ப வெயில் ...

மழை பெய்தால்

ஒரே நச நசன்னு விட மாட்டாங்குதுப்பா ...

இப்படியா புலம்பல்ஸ் இல்லாம இருப்பது தான் வாழ்வை ருசிக்க வைக்கும்

எதனையும் அதுவாக ஏற்றுகொள்ளனும் ...

நட்புடன் ஜமால் said...

\\பக்கோடா/பஜ்ஜி\\

ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும் இத்தோடு உட்கார்ந்து மழையை இரசித்து கொண்டே அதுவும் ‘ரம்மி’ ஆடினால்

ஆஹா! ஆஹா! அருமை...

வித்யா said...

நடத்துங்க. வயித்தெரிச்சல்:)

Vetrimagal said...

Gandipet தண்ணி குடித்த பிறகு மற்ற ஊர்களில் வசிப்பது முடியாமல் போகிறது!

50 வருடங்களாக இங்கே வசிக்கிறேன். உங்கள் உற்சாகம் மகிழ்ச்சியாக உள்ளது!

புதுகைத் தென்றல் said...

எதனையும் அதுவாக ஏற்றுகொள்ளனும் //

ஆமாம்

புதுகைத் தென்றல் said...

வயித்தெரிச்சல்//

:)))))))))))

புதுகைத் தென்றல் said...

50 வருடங்களாக இங்கே வசிக்கிறேன்.//


கொடுத்து வெச்சவங்க.
உங்கள் உற்சாகம் மகிழ்ச்சியாக உள்ளது//

உங்களின் வருகையால் என் மனமும் மகிழ்வாக இருக்கு. அடிக்கடி வாங்க

ஆதிமூலகிருஷ்ணன் said...

வயித்தெரிச்சலைக்கிளப்பாமல் பஜ்ஜி போட்டு வைத்துக் கொண்டு ஒரு மழைநேர மாலையில் கூப்பிடவும். (ரெண்டு பேர் வருவோம். நாலு பஜ்ஜி பத்தாது. ஒரு அண்டா நிறைய பண்ணவும்.)

புதுகைத் தென்றல் said...

(ரெண்டு பேர் வருவோம். நாலு பஜ்ஜி பத்தாது. ஒரு அண்டா நிறைய பண்ணவும்.)//

ஆஹா வாங்க,

தேக்சா நிறைய்ய டீயும் ரெடியா வெச்சிடறேன். ஹைதராபாத் ஷ்பெஷல் மிர்ச்சி பஜ்ஜியும் கட்டாயம் உண்டு.

வண்ணத்துபூச்சியார் said...

அருமை...

உங்களுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.

உடனே பார்க்கவும்

http://mynandavanam.blogspot.com/search/label/FAQ