துன்பமும் இன்பமும் நிறைந்ததுதான் நம்வாழ்க்கை.
துன்பத்தில் சோர்ந்து போவதும், இன்பத்தில்
அமிழ்ந்து போவதும் இயல்பு.
துன்பம் நேர்கையில் யாழெடுத்துயாரும்
இன்பம் சேர்க்க மாட்டோம். மாறாக
இந்த நிலைத்தந்த இறைவனை திட்டி தீர்ப்போம்.
“என்ன நினைத்து என்னை படைத்தாயோ!
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ?
முன்னம் இருந்த நிலை மறந்தாயோ?
முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ?”
எனும் பாடல் வரிகள் மனதில் ஓடும்.
நானும் அப்படித்தான் இருந்தேன்.
எனக்கு ஏன் இந்த நிலை என்று மனம் குமுறி
உள்ளுக்குள் அழுதிருக்கிறேன்.
ஆஷிஷ்க்கு 1 வயது இருக்கும். கடுமையான
குளிர் ஜுரம் எனக்கு வந்திருந்தது. இரவு 12 மணிக்கு
ஆரம்பித்து விடியும் வரை குளிர் வாட்டும், தாப ஜுரம்
அடிக்கும். (அயித்தான் ஊரில் இல்லாத பொழுது)
மறுநாள் காலையில் சாதரணமாக எழுந்து
“எனக்குத்தான் ஜுரம் இருந்ததா? என்று
கேட்கும் அளவுக்கு நார்மலாக இருப்பேன்.
என் அன்றாட வேலையையும் செய்வேன்.
இதே நிலை தொடர்ந்தது. தனதுடூரை
அவசரமாக முடித்து பாதியிலேயே ஊர் திரும்பினார்
அயித்தான். காலையில் அவர் வரும்பொழுது
ஜுரம் குறையவேயில்லை.
மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 104 டிகிரி ஜுரம்.
ஸ்ட்ரெச்சரில் வந்தாயாம்மா? என்று மருத்துவர்
கேட்டார்.”இல்லையே! நடந்துதான் வந்தேன்!”
என்றேன். ”ஆண்டவனருள்! “என்று சொல்லி
மருந்து கொடுத்தார்.
வெளியே வரும்பொழுது என் கண்ணில் பட்டது
மணலில் பாதச் சுவடுகள் எனும் வால் ஹேங்கர்.
ஆஹா, கருணையுடன் தன் குழந்தை கஷ்டப்படக்கூடாது
என இறைவன் என்னை தன் கையில் அல்லவா ஏந்தி
நடந்திருக்கிறான்!!
எவ்வளவு திட்டியிருப்போம்!!
குழந்தையின் கை கண்ணில் பட்டுவிட்டால் பெற்றோர்
வெட்டியா எறிவார்கள்!! அப்படித்தான் குழந்தை நான்
திட்டியதை இறைவன் பொருட்படுத்தாமல் என் ரணங்களுக்கு
மருந்தாக, துன்பத்தில் பாதம் என்னை நோக நடக்கவிடாமல் தன்
கைகளில் தாங்குகிறான் என புரிந்தது.
இப்போதெல்லாம் எதற்கும் கவலைப்படுவதில்லை.
”பாதச் சுவடுகளை” நினைத்துக்கொண்டு
“எல்லாம் அப்பா பார்த்துக்கொள்வார்!” என்றிருக்கிறேன்.
17 comments:
//குழந்தையின் கை கண்ணில் பட்டுவிட்டால் பெற்றோர்
வெட்டியா எறிவார்கள்!! அப்படித்தான் குழந்தை நான்
திட்டியதை இறைவன் பொருட்படுத்தாமல் என் ரணங்களுக்கு
மருந்தாக, துன்பத்தில் பாதம் என்னை நோக நடக்கவிடாமல் தன்
கைகளில் தாங்குகிறான் என புரிந்தது.///
வெள்ளிகிழமை
டக்கர் போஸ்ட்டு பாஸ் :)
அக்கா டெம்ப்ளேட்
அழகு...
மிக அழகு
:)
வாங்க பாஸ்,
வெள்ளிக்கிழமை சிறப்பு பதிவு உங்கஸ்டைல். மீ த ஃபாலோயிங் பாஸ்
தாங்க்யூ அப்துல்லா
டெம்ப்ளேட்
தென்றலாக இருக்கின்றது ...
டெம்ப்ளேட் பதிவு ரெண்டுமே சூப்பர் கலா அக்கா:)
டெம்ப்லேட் மாத்துவதில் நீங்கதான் நம்பர் 1.
பாராட்டுக்கு நன்றி ஜமால்
தாங்க்யூ வித்யா
wow very nice post. நானும் அடிக்கடி படித்து பார்த்துக்கொள்கிறேன் இனிமேல்.
அற்புதமான பதிவு..
என்னுடைய வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன் ...!
நன்றி சிவா
ஆஹா சஞ்சய் தேவா சொல்வதை நல்லா கேட்டுக்கோங்க.
பாராட்டுக்கள் போகட்டும் சஞ்சய்க்கு
இதோ வந்திடறேன் நேசமித்ரன், நீங்களும் அடிக்கடி வாங்க
நெகிழ்வான பதிவு.
நன்றி தமிழர்ஸ்
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே
Post a Comment