இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல.
பலரின் அனுபவமாக இருந்திருக்கும் என்பதில்
சந்தேகமேயில்லை.
ஏர்போர்டுகளில் இருப்பது போல் ரயில்வேஷ்டேஷன்களிலும்
ட்ராலி இருந்தால் இந்த போர்டர்களுடன் போராட வேண்டியிருக்காதே
என்று அத்தனை பேரும் அலுத்துக்கொண்டிருப்போம் தானே!!
ரயில்வே ஷ்டேஷனில் இத்தனை தான் கூலி என எழுதி
வைத்திருந்தாலும் அடாவடியாக பேசுவது, ரயில் நிற்குமுன்னே
பயணிகளை இறங்கவிடாமல் பெட்டிக்குள் ஏற முயல்வது,
தெனாவெட்டாக பேசுவது என எல்லா ”சிறப்பு” அம்சங்களும்
இல்லாத போர்ட்டர் ஒருவரை நாம் கண்டிருந்தால் நாம்
ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்கிறோம் என்று
அர்த்தம்!!!!
வேறு வழியில்லாததால் அதிகாலையில் இவர்களுடன்
சண்டையிட்டு போகும் இடத்திற்கு தாமதமாகுமே!
என எப்படியோ பேரம் பேசி, மூட்டையைத் தூக்கிச்
செல்வார்கள்.
போர்ட்டர்கள் மேல் எப்போதும் எனக்கொரு மரியாதை +
இரக்க குணம் உண்டு. நம்மால் சுமக்க முடியாத
சுமையையும் அவர் ஒருவரே தலையிலும், கைகளிலும்
தாங்கி தன் பிழைப்பை நடத்துகிறாரே என்று
நியாயமான கூலிதான் கொடுப்பேன். அடாவடியாக
பேசுவர்கள் மீது கோபம் தான் வரும்.
வடிவேலு சொல்வது போல் ” அந்த அடாவடிக்கும்
ஆண்டவன் முற்றுபுள்ளி வெச்சிட்டான்ல்!வெச்சிட்டான்ல”
என எகத்தாளம் போடத் தோணுது. இப்போது
எவரும் யாரும் கொண்டு செல்வது ட்ராலி பேக்தான்.
என்ன ஒரு சொளகர்யம் இதில்!!. சின்ன புள்ளைங்களும்
சர்.. சர்ர்..ன்னு இழுத்துகிட்டு வந்திடலாம். போர்டர்களூடன்
மல்லுகட்ட வேண்டியதில்லை என்பதே பெரிய சந்தோஷம்.
ஆனால் சந்தோஷமும் படமுடியவில்லை. போர்ட்டர்கள்
ட்ராலி பேக் கொண்டு செல்லும் அதிக பயணிகளைப்
பார்த்துக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிருக்க
வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள்.
”என்னது உங்க மாப்பிளை ஃப்ளைட்ல வந்தாப்லயா?
கேவலமா இருக்கு!!!!” என விகடனில் ஜோக் போடும்
அளவுக்கு விமான டிக்கெட்கள் விலை குறைந்து
கிடைக்க பலரும் விமானத்தில் தான் பறந்தார்கள்.
இப்போது நிலை மாறி அதிகமாக ரயில் பயணத்தைதான்
அனைவரும் தேர்ந்தெடுக்கிறார்கள். (பெங்களூர்,
ஹைதை போன்ற ஊர்களில் ஒதுக்கு புறமாக
விமானநிலைய வைத்திருப்பதால் விமான நிலயத்துக்கு
காரில் செல்லவே 500 ஆகிறது)
வி.ஐ.பி சூட்கேஸ் (வெறும் பொட்டியே செம கணம்)
பயணத்துக்கொண்டு செல்வதை பெருமையாக நினைத்தவர்கள்
கூட இப்போது ட்ராலி பேக்தான். இந்த நிலையில்
கஷ்டபடுவது போர்டர்கள்தான். இந்த பெட்டிகள்
அவர்களின் வயிற்றில் அடித்த மாதிரிதான் இருக்கின்றன.
முன்பு ஒரு கதை(யா)(கட்டுரையா)படித்தேன்.
கோவில்களில் கற்பூராரத்தியின் போது சிகண்டி,
தவில்,சங்கம்,மணி இன்னும் சில மங்கள் வாத்தியங்கள்
இசைப்பார்கள். அதற்கென ப்ரத்யேக வாசிப்பவர்கள்
கோவிலிலேயே இருந்து 3 கால பூஜைக்கும் வாசிப்பார்கள்.
ஆனால் சமீபகாலமாக கோவிலுக்குச் செல்லும் அனைவர்களும்
மின்சாரத்தில் இயங்கக்கூடிய பஞ்சவாத்தியம் ஒலிப்பதை
கேட்டிருப்பீர்கள். சுவிட்சு ஒண்ணைத் தட்டிவிட்டால்
டம் டம்மென வாத்திய ஒலி வருகிறது.
பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!! வேலையில்லாமல் அவர்கள்
ஹோட்டல்களில் சர்வராகவோ, மாவரைப்பவராகவோ
வேலை பார்ப்பது போல் அந்தக் கதை/கட்டுரையில்
இருக்கும். அவர்களின் நிலை இப்படியும் ஆகுமோ
என்று நினைத்து மனது வலித்தது.
ட்ராலி பேக்குகள் நிறைய்ய உபயோகத்தில்
வந்தபின்னர் போர்டர்களின் நிலை என்ன?
எந்த விதத்தில் மாறப்போகிறது???????
45 comments:
present!
Template மாறிடுச்சா?
சரி பதிவை நிஜமாவே படிக்க போறேன்!
//பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!//
:(((
நாதஸ்வர ஓசையும் மேளச்சத்தமும் ஒலிக்க இடம் இப்பொழுது திருமண மண்டபங்களில் மட்டுமே என்றாகி அதுவும் குறையத்தொடங்கி விட்டது!
திருவிழா காலங்களில் மட்டும் இறைவன் மீது கொண்ட பக்தியில் பலர் இசையால் வாழ்த்துக்கின்றனர்!
/இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல.
பலரின் அனுபவமாக இருந்திருக்கும் என்பதில்
சந்தேகமேயில்லை./
எது?
/ஏர்போர்டுகளில் இருப்பது போல் ரயில்வேஷ்டேஷன்களிலும்
ட்ராலி இருந்தால் இந்த போர்டர்களுடன் போராட வேண்டியிருக்காதே
என்று அத்தனை பேரும் அலுத்துக்கொண்டிருப்போம் தானே!!/
ரைட்டு!
/ரயில்வே ஷ்டேஷனில் இத்தனை தான் கூலி என எழுதி
வைத்திருந்தாலும் அடாவடியாக பேசுவது, ரயில் நிற்குமுன்னே
பயணிகளை இறங்கவிடாமல் பெட்டிக்குள் ஏற முயல்வது,
தெனாவெட்டாக பேசுவது என எல்லா ”சிறப்பு” அம்சங்களும்
இல்லாத போர்ட்டர் ஒருவரை நாம் கண்டிருந்தால் நாம்
ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்கிறோம் என்று
அர்த்தம்!!!!/
இதில் என்ன சந்தேகம்?
/அடாவடியாக
பேசுவர்கள் மீது கோபம் தான் வரும்./
பாஸ்...ரொம்ப கோவப்படாதீங்க...:)
/வடிவேலு சொல்வது போல் ” அந்த அடாவடிக்கும்
ஆண்டவன் முற்றுபுள்ளி வெச்சிட்டான்ல்!வெச்சிட்டான்ல”
என எகத்தாளம் போடத் தோணுது./
:))))
ரொம்ப நாளைக்கப்புறம் வலைப்பூ பக்கம் வந்திருக்கும் நிஜமா நல்லவனின் வருகைக்கும் பின்னூட்டங்களூக்கும் நன்றி
நாதஸ்வர ஓசையும் மேளச்சத்தமும் ஒலிக்க இடம் இப்பொழுது திருமண மண்டபங்களில் மட்டுமே என்றாகி அதுவும் குறையத்தொடங்கி விட்டது!
திருவிழா காலங்களில் மட்டும் இறைவன் மீது கொண்ட பக்தியில் பலர் இசையால் வாழ்த்துக்கின்றனர்!//
ஆமாம் பாஸ்
/ட்ராலி பேக்குகள் நிறைய்ய உபயோகத்தில்
வந்தபின்னர் போர்டர்களின் நிலை என்ன?
எந்த விதத்தில் மாறப்போகிறது???????/
போர்ட்டர்கள் என்றில்லை வாழ்க்கையோட்டத்தில் பல தொழில்கள்/தொழிலாளர்களின் நிலை பல்வேறு விதமான மாற்றங்களால் நலிந்து காணாமல் போய்க்கொண்டு தான் இருக்கிறது. மாற்றங்களை ஏற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது தான்!
ட்ராலி இருந்தால் நல்லாத்தானிருக்கும்.
இது போன்ற ட்ராலி் சற்றே வசதியானவர்கள் வாங்கி வருவார்கள்,
மேலும் அவர்கள் வைத்திருக்கும் பொருட்களும் அதெற்கேற்றார் போல் இருக்கும்.
ஏழ்மை மக்கள் போர்டர்களோடு பிரச்சனை இல்லை, அதற்கு தேவையுமிருக்காது,
ட்ராலி வந்தால் இது போன்றோர்களுக்கு உதவும்.
(அதுலையும் லஞ்சம் அடிக்கலாம்) :(
100க்கு 90 பேர் அநியாய கூலி கேட்ப்பவர்கள்தான் என் தனிப்பட்ட அனுபவமும் கூட.
இதில் அனுதாபப்பட ஒன்றும் இல்லை.
:)
madam .. now even school bag has come up with trolley.. !!!
VS Balajee
வருகைக்கு நன்றி ஜமால்
ஆஹா,
காட்டான கோபத்தோட இருக்காப்ல இருக்கு சிவா??
ஸ்மைலிக்கு நன்றி வித்யா
வாங்க பாலாஜி,
ஸ்கூல் பேக்கும் ட்ராலிபேக்காகிடுச்சு. அதை வாங்கிக் கொடுத்தா பிள்ளைங்க இழுத்துகிட்டு போக வசதின்னு நினைப்போம். ஆனா...
முதல் மாடி, இரண்டாம் மாடி என மாடிகளில் வகுப்புக்கள் நடக்கும்பொழுது அதை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் நடக்க பிள்ளைகள் மிகவும் கஷ்டபடுகிறார்கள். :(
true.. hate heavy school bag! Hate to hear auto bell in temple..it more of noice than sweet bell sound..
vivid reader of blogs- mothers and parents blogs.. All the best..
VS Balajee
//
மங்களூர் சிவா said...
100க்கு 90 பேர் அநியாய கூலி கேட்ப்பவர்கள்தான் என் தனிப்பட்ட அனுபவமும் கூட.
இதில் அனுதாபப்பட ஒன்றும் இல்லை.
//
பெரிய ரிப்பீட்டேய்.. ஒரு சின்ன சேஞ்ச்.. 100க்கு 99 பேர், அந்த மீதி ஒருத்தனை எல்லாரும் பொழக்கத் தெரியாதவன்னு திட்டுவாங்களா இருக்கும்..
ஓ! இதானா விஷயம்...புரிந்தது :)
நன்றி பாலாஜி
ஒரு சின்ன சேஞ்ச்.. 100க்கு 99 பேர், அந்த மீதி ஒருத்தனை எல்லாரும் பொழக்கத் தெரியாதவன்னு திட்டுவாங்களா இருக்கும்..//
:))) வலைச்சர ஆசிரி்யருக்கு வாழ்த்துக்கள்
இதானா விஷயம்...புரிந்தது //
:)))))))))
பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!! வேலையில்லாமல் அவர்கள்
ஹோட்டல்களில் சர்வராகவோ, மாவரைப்பவராகவோ
வேலை பார்ப்பது போல் அந்தக் கதை/கட்டுரையில்
இருக்கும். அவர்களின் நிலை இப்படியும் ஆகுமோ
என்று நினைத்து மனது வலித்தது.
...புதுகைத் தென்றல்
மேற்கூறியவர்கள் நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் டாக்டராகவோ,மென்பொருள் கணினியாளராகவோ....மாறி இருக்கலாம் இல்லையா[மனவலி குறைந்துவிட்டதா...நீங்கள் வயிற்றுவலி மாத்திரை கேட்டீர்கள்,நான் மனவலிக்கு மாத்திரை தந்துவிட்டேன்]
ஆனாலும் இந்த பக்தி மெஷின் இருக்கிறதே[மனிதர்களது பக்தியும் இன்று இயந்திரத் தனமாகித்தான் மாறியிருக்கிறது...அதை பிறகு பார்ப்போம்]ஒரே சமயத்தில் காதைத் துளைக்கும் வண்ணம் அந்த ஒலிகள் எழுப்பப் பட்டவுடன் பக்தர்கள் எல்லோரும் பயந்து போய் நிஜமாகவே பய பக்தியுடன் இறைவனை வணங்க வைத்து விடும்.
ஒரு முறை பெங்களூரில் ஒரு கோயிலில் ,பஞ்ச வாத்தியம் தொடங்கியவுடன் என்னவோ ஒரு வாத்தியம் குறைந்தாற்போல் நம் செவிப்பறையையும் சேர்த்துத் தட்டுவது போல் ஆடிப் போய்விட்டேன்...அந்த இரைச்சலில் என் ஹார்ட்டின் லப் டப் கூட தெளிவாகக் கேட்டது.
சென்னை போர்ட்டர்களுக்கும், சென்னை ஆட்டோக்காரர்களுக்கும் நான் இரக்கப்படுவதாக இல்லை.!
திருமணமாகி நானும் மனைவியும் சென்னையிலிருந்து திரும்பும்பொழுது எங்களிடம் இருந்தது ரெண்டு bag ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் பாத்திரங்கள்.
கல்யாணமான புதுசாச்சே வெயிட் தூக்க சொல்லவேண்டாம் என்கிற ஒரு பாசத்தில் (அப்ப கல்யாணம் ஆன கொஞ்ச நாள் கழிச்சின்னா சொல்லுவியான்னு ரிவிட் அடிக்கப்பிடாது) போர்ட்டரை கூப்பிட்டேன் அதை இரண்டு ப்ளாட்பாரம் தாண்டி கொண்டு சேர்க்க 400 ரூபாய் கேட்டான் (அவனுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு). எனக்கு ஒரு நிமிடம் பயங்கர அதிர்ச்சி.
ஒரு வேளை பணத்துக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதா சென்னையில் இல்லை நாந்தான் ரொம்ப மதிக்கிறேனா என்று.
பின்னர் போர்ட்டர் இல்லாமல் நாங்களே எடுத்து சென்றுவிட்டோம். இந்த சம்பவத்திற்கு முன்பும் சிலதடவை இது போல நேர்ந்திருப்பதால் போர்ட்டர் அப்படின்னாலே அலர்ஜிதான் :((((
போர்ட்டர்கள் தங்கள் பணிகளை நன்றாக செய்த காலம் மலை ஏறி விட்டது என்று தோன்றுகிறத.ு.
காசிகுடா ஸ்டேஷனில் காலை வேளைகளில் தவிக்கும் பயணிகளை பார்த்தால்.
பெட்டிகளை தூக்கி கொண்டு, மாடி ஏறும் போது, போர்ட்டர்கள் கண்ணிலேயே படுவதில்லை.
பலமுறை இதை அனுபவித்தாகி விட்டது.
, எத்தனை புகார்களும் கொடுத்தாயிற்று. ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை.
So back to the first line of my comment..:-))))))))
டாக்டராகவோ,மென்பொருள் கணினியாளராகவோ....மாறி இருக்கலாம் இல்லையா//
அவர்களின் பிள்ளைகள் ஆகியிருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தவர்கள்????
[மனவலி குறைந்துவிட்டதா...நீங்கள் வயிற்றுவலி மாத்திரை கேட்டீர்கள்,நான் மனவலிக்கு மாத்திரை தந்துவிட்டேன்]
நன்றி கோமா
சென்னை போர்ட்டர்களுக்கும், சென்னை ஆட்டோக்காரர்களுக்கும் நான் இரக்கப்படுவதாக இல்லை.!//
ஆமாம் ஃப்ரெண்ட், அதைப்பத்தியும் புலம்பனும் வர்றேன்..
பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!! வேலையில்லாமல் அவர்கள்
ஹோட்டல்களில் சர்வராகவோ, மாவரைப்பவராகவோ
வேலை பார்ப்பது போல் அந்தக் கதை/கட்டுரையில்
இருக்கும். அவர்களின் நிலை இப்படியும் ஆகுமோ
என்று நினைத்து மனது வலித்தது.//
எல்லாத்துறையிலும் இயந்திரங்கள் கால்த்தின் கட்டாயம்!!
பலருக்கும் நிறைய்ய கசப்பான அனுபவங்கள் இருக்கு சிவா. ஆனாலும் தன் வேலையைச் சரிவர செய்யாதவர்களை ஏதும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.
வாங்க வெற்றிமகள்,
உங்க கருத்துக்கு நன்றி
//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
சென்னை போர்ட்டர்களுக்கும், சென்னை ஆட்டோக்காரர்களுக்கும் நான் இரக்கப்படுவதாக இல்லை.!//
டபுள் ரிப்பீட்டேய்.
வணக்கம்,
ஒவ்வொரு முறையும் ரயில் நிலையங்களுக்கு செல்ல நேரும்போது என் மனைவியிடம் புலம்புகிற விஷயம் இது. யூனியன் அரசியல், ஓட்டு வங்கி அரசியல் என்று பல காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு இருபது வருடங்கள் சென்றால் போர்டர்களும் வாத்தியக் கலைஞர்கள் போல காணாமல் போகலாம். அப்போது ட்ராலிகளைக் கொண்டு வந்துதான் ஆகவேண்டும்.
நீங்களும் ஹைதராபாத் என்று தங்கள் பின்னூட்டம் வழியாக அறிந்தேன். நல்லதாகப் போயிற்று. விரைவில் ஒரு ஹைதிராபாத் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாத்துறையிலும் இயந்திரங்கள் கால்த்தின் கட்டாயம்!!//
ஆமாம் தேவா
வருகைக்கு நன்றி தராசு
ஆமாங்க விஜயகோபால்,
சீக்கிரம் நம்ம ஊர்லயும் நடத்துவோம்.
/*ட்ராலி பேக்குகள் நிறைய்ய உபயோகத்தில்
வந்தபின்னர் போர்டர்களின் நிலை என்ன?
எந்த விதத்தில் மாறப்போகிறது???????*/
உண்மை. ஆனால் போர்ட்டர்கள் டிக்கட்டுக்கு கொடுக்கும் பணத்தை விட அதிகமாக சுமக்க கேட்கிறார்கள். இதற்கும் ஒரு வரைமுறை கொண்டு வரலாம். ஆனால் இயந்திரமயமாகும் உலகில் எல்லாம் மாறுகிறது. ஒரு கதவு மூடினாலும் இன்னொன்று திறக்கும்... நிலை மாறிக் கொண்டே இருக்கும் உலகு இது
ஆமாம் அமுதா,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
விஜயகோபால் அவர்களுக்கு நன்றி.
புதுகை தென்றல், உங்கள் பதிவுகள் சிம்பிள் அண்ட் சூப்பர்!
பாராட்டிற்கு மிக்க நன்றி வெற்றிமகள்
Post a Comment