Wednesday, June 17, 2009

எங்க ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுபோச்சுண்ணே....

””நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!!!”” அப்படின்னு
கேட்டுக்க வேண்டிய நிலமையா போச்சு...

எங்க ஊரு (ஹைதை :) ) ரொம்ப நல்ல ஊரா இருந்துச்சு.
என்னிய பொறுத்தவரைக்கும் எந்த ஊர்ல ஆட்டோகாரங்க
வாய்ச்சண்டை போடாம தன் ஊருக்கு வரும் விருந்தினரை(!!)
மனிதரா மதிச்சு பேசி வண்டில போக வேண்டிய இடத்துக்கு
கூட்டிகிட்டு போறாரோ அது ரெம்ப நல்ல ஊரு.

ஹைதை அப்படித்தான் இருந்துச்சு. செகந்திராபாத்
ஷ்டேஷனில் இறங்கியதும் வெளியே வந்தால் ஆட்டோக்கள்
வரிசையாக இருக்கும். அருகில் போலிஸ்காரரும் இருப்பார்.
பயணிகள் ஏறிக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தைச்
சொன்னால் போதும். ஆட்டோ அண்ணன்கள் எந்த தகறாரும்
செய்யாமல் மீட்டர் போட்டு கூட்டிச் செல்வார்கள்.



சிடிக்குள் எங்கு செல்லவேண்டுமென்றாலும் மீட்டர்தான்.
சிலர் சூடு வைத்தாலும், மீட்டர் போட்டு கூட்டிகிட்டு போறாங்க,
பேரம் பேசுதல், வாய்சண்டை இல்லாமல் நிம்மதியா
போய்கிட்டு இருந்துச்சு.


அப்படியே இருந்துட்டா?? நிலை மாறும் உலகில் யாரு ஒரு
ஹைதை ஆட்டோ அண்ணாத்தே சென்னைக்கு ஒரு விசிட்
அடிச்சிட்டு வந்திருப்பாரு போல!!!

அட! நம்ம சகாக்கள் அடுத்த ஊர்ல கொள்ளையில்ல
அடிக்கறாங்க!!! அப்படின்னு பாடம் கத்துகிட்டு வந்து
இங்க இருக்கற ஆட்டோ அண்ணன்களுக்கு சொல்லி கொடுத்து
விட்டாங்க போல!! இப்ப இங்க நிலமையே தலைகீழாகிப்போச்சு!!!


ஆட்டோன்னு கூப்பிட்டா தலையை வலமும் இடமும் ஆட்டிட்டு
போயிடறாங்க...

சிலர் இன்னும் மேல் வண்டி காலியா இருந்தாக்கூட நிக்காம
சர்ருன்னு போயிடறாங்க.

தப்பித்தவறி வர்றவங்களும் மீட்டர்லாம் போடறதே இல்லை.
சென்னைப்பாடத்தை கரெக்டா ஃபாலோ செய்யறாங்க.
ஃப்ளாட் ரேட்தான். இதுல ஒரு சந்தோஷம் என்னன்னா!
சென்னையில இருக்கற மாதிரி அடாவடி இல்ல. மீட்டரை
விட அஞ்சோ, பத்தோ கூட இருக்கும் அம்புட்டுதான்.

மினிமம் ரேட் (12 ரூபாய்) வரக்கூடிய இடங்களுக்கு
அநியாயமா 20, 25, 30ன்னு ரேட் பேசுவாங்க.


மீட்டர் போட்டு ஒட்டுற சில நல்ல உள்ளங்களும்
இருக்காங்க.

எங்க ஊரு கெட்டுபோச்சுன்னு புலம்பினாலும்
எனது சென்னை விசிட்டுகளின் போது ஒவ்வொருமுறையும்
அயித்தானுக்கும் ஆட்டோக்காரர்களுக்கு சண்டை
நடக்காமலேயே இருககாது!! (கோபமே படாத
மனிஷனையும் சண்டை போட வெச்சு புண்ணியம்
கட்டிகிடுவாங்க)

அவங்களுக்கு இருப்பது வாயா!! இல்ல வேறு
ஏதேனுமான்னு புரியலை. ஆட்டோல யாரும்
ஏறாட்டி அன்னைக்கு வீட்டுல அடுப்பு எரியாதுன்னாலும்
“தெனாவெட்டா” பேசென்ஜர்ஸை” அவர்கள்
நடத்தும் விதம் படித்த நமக்கு அவமானமாக
இருக்கும். இப்படி ஆட்டோவுல போறதுக்கு
நடந்தே போகலாம்னு”! தோணும். அந்த அளவுக்கு
மோசம்.




எனது சமீபத்திய சென்னை விசிட்டில் ஆட்டோக்காரர்களுக்கு
அநியாயாமாக பணம் அழுதேன். நல்ல உள்ளம் படைத்த
ஒரு ஆட்டோக்காரர் ,”இது அடாவடின்னு எனக்கும் தெரியுதும்மா.
மீட்டர் வெச்சிருக்கோமே தவிர யாரும் போடுவதேயில்லை.
அடுத்தவங்கதான் போடறதில்லை, நாமளாவது போடலாமேன்னு
பாத்தா மத்த ஆட்டோக்காரங்க தகராறு செய்யறாங்கம்மா.
அதனால்தான் போகவர ஆகும் சார்ஜை(ஒன்வேயா இருந்தாலும்!!)
பயணிகள் கிட்ட வாங்கறோம்.
அரசு ஏதும் செய்ய மாட்டீங்குது” என்று என்னிடமே
புலம்பினார்.

பாஷா படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் பாடலில் சுத்தமாக
நிஜமில்லை. இது ரஜினி என்னும் ஒரு நடிகர் ஆட்டோக்காரனாக
நடிக்க அவருக்காக எழுதப்பட்ட பாடல் என்பது என் எண்ணம்.



சிங்காரவேலன் படத்தில் கமல் சென்னைக்கு வந்து ஆட்டொக்காரர்களிடம்
படும் அவஸ்தை, கருவாட்டு வாசத்துக்கு ஆட்டோக்காரர் படும்
அவஸ்தை இதெல்லாம் ஒரு முறை நினைச்சு பாத்துக்கோங்க.
சூப்பர் காமெடில்ல..அந்த வீடியோ தேடினேன். கிடைக்கலை.


ஆட்டோக்காரர்களின் ஓட்டும் விதம் அவர்களால் ஏற்படும்
விபத்துக்கள் எல்லாவற்றையும் யோசிச்சுத்தான் சிங்கையில்
ஆட்டோக்கு நோ சொல்லிட்டாங்க.

ஆட்டோக்காரர்களிலேயே மிகச் சிறந்தவராக நான் கருதுவது
அண்ணன் ரவியைத்தான் அவரைப்பற்றிய பதிவு இங்கே..


சிலரை மாற்ற முடியாது அதில் ஆட்டோக்காரர்களுக்குத்தான்
முதலிடம்...

15 comments:

butterfly Surya said...

Oh. World is changing ....from Good To Bad...

pudugaithendral said...

Good To Bad...//

இல்லை

BAD TO WORSE :((

நட்புடன் ஜமால் said...

அட! நம்ம சகாக்கள் அடுத்த ஊர்ல கொள்ளையில்ல
அடிக்கறாங்க!!! அப்படின்னு பாடம் கத்துகிட்டு வந்து
இங்க இருக்கற ஆட்டோ அண்ணன்களுக்கு சொல்லி கொடுத்து
விட்டாங்க போல!! இப்ப இங்க நிலமையே தலைகீழாகிப்போச்சு!!!
\\

என்னத்த சொல்ல ...

நல்லத எங்கனா கத்துகிறாங்களா !

பட்டாம்பூச்சி said...

எல்லாம் அவர்கள் தயவை சில சமயம் நாட வேண்டிய நிலையில் இருக்கும் நம்ம தலை எழுது. வேற என்னத்த சொல்றது?

Vetirmagal said...

ஆமோதிக்கிறேன்...;-)

ஒரு ஆறுதல் , இங்கே ஹைதையில் இன்னும் மரியாதை குறைவாக பேசுவதில்லை. தெலங்காணா பண்பாடு ஒரு நல்ல வழக்கம்!

தேவன் மாயம் said...

ஆட்டோக்காரர்களின் ஓட்டும் விதம் அவர்களால் ஏற்படும்
விபத்துக்கள் எல்லாவற்றையும் யோசிச்சுத்தான் சிங்கையில்
ஆட்டோக்கு நோ சொல்லிட்டாங்க.
//
அப்படியா? பரவாயில்லையே!!

pudugaithendral said...

நல்லத எங்கனா கத்துகிறாங்களா //

அப்படி செஞ்சிட்டா அது சாமி குத்தமாயிடுமில்ல

pudugaithendral said...

ஆமாம் பட்டாம்பூச்சி,

அவர்களை நாடி நாம் இருப்பது போல் நம்மை நாடித்தானே அவர்களும் இருக்கிறார்கள்.

காந்திஜி அவர்கள் சொல்லியிருப்பது போல் கஸ்டமர் தான் ஒரு வியாபாரத்திற்கு முக்கியமானவர். எனவே அவரை தெய்வமாக போற்றவேண்டும்.

அதெல்லாம் காத்தோடு போயிடுச்சு

pudugaithendral said...

ஆமாம் வெற்றிமகள்,

அதனாலேயே மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறது

pudugaithendral said...

ஆமாம் தேவா,

எம்புட்டோ கேட்டும் ஆட்டோக்கு நோன்னு சொல்லிட்டாங்க.

pudugaithendral said...

நம் ஊர் போக்குவரத்தும் நமக்கு ஒரு சாபம். அதனாலேயே இந்த ஆட்டோக்காரர்களை நம்ப வேண்டியிருக்கிறது. அடி முதல் நுனி வரை உட்கார்ந்து யோசித்து தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை.

நம்ம மக்களுக்கு அம்புட்டு தூரம் நல்லது செய்ய அரசியல்வாதிகளுக்கு மனசிருக்கா என்ன???

Thamira said...

நான்கு வருடங்களுக்கு ஹைதை ஆட்டோ அனுபவங்கள் மறக்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இருந்தன. இப்போது ஆட்டோ அதிகம் பயன்படுத்துவதில்லையாதலால் தெரியவில்லை. சென்னை வழக்கம் அங்கேயுமா..? வெளங்கிச்சு போங்க..

மங்களூர் சிவா said...

சென்னை சென்றால் தவிர்க்காமல் கால் டாக்ஸி பயன்படுத்தவும் 10 ரூபாய் அதிகம் ஆனாலும் பரவாயில்லை. டீசண்ட் & கன்வினியன்ட்.

pudugaithendral said...

வாங்க ஆதி,

இன்னமும் மொத்தமா சென்னையாகிடலை. அப்படி ஆகிடக்கூடாதேன்னு பிராத்தனை செய்ய வேண்டியதுதான்.

pudugaithendral said...

கால் டாக்ஸி காரங்க கூடவும் கஷ்டம்தான் சிவா. ஃபாஸ்ட்ராக் காரங்க சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்ததாக சரித்தரமே கிடையாது. அப்படியே நம்ம நாட்டு பக்சுவாலிட்டிக்கு பேர் போனவங்க அவங்க.