Friday, June 19, 2009

விளக்கேற்று... விளக்கேற்று... வெள்ளிக்கிழமை...

என் அம்மம்மா ஒரு கதை சொல்வார். ”சம்பத் சுக்ரவாரம்”
எனும் விரதத்தின் கதை அது. 7 வீடுகள் வரிசையாக இருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் காலை காட்சி எப்படி என்பதை கையில்
துணி மூட்டையுடன் பெண் ஒருவர் பார்த்து வருவார்.

ஒரு வீட்டில் இரவு போடப்பட்ட பாய், தலையணை
சுருட்டப்படாமல் அப்படியே இருக்கும்.

ஒரு வீட்டில் கிழிந்த உடையுடன் வீட்டுத் தலைவி
சுற்றிக்கொண்டிருப்பாள்.

ஒரு அம்மாள் தலையை விரித்து போட்டு நடுவீட்டில்
பேன்பார்த்துக்கொண்டிருப்பாள்.


மற்றொரு வீட்டில் கணவன் மனைவிக்குள் குடுமி, பிடி சண்டை நடக்கும்.

வேறொரு வீட்டில் கணவன் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்க
பெண் அழுதுகொண்டிருப்பாள்.

இப்படி 6 வீடுகள் அவந்தரையாக கிடக்க ஒரு வீட்டில்
அவர்கள் மிக ஏழ்மையாக இருந்தாலும் சுத்தமாக
வாசல் தெளித்து கோலம்போட்டு, மாவிலை வைத்து,
சாம்பிராணி வாசத்துடன் இருக்கும். துணி மூட்டையுடன்
இருக்கும் அந்த பெண் லட்சுமி தேவி எனவும் அன்னை
நிரந்தரமாக அந்த கிரகத்தில் வசிப்பதாகவும் கதை
இருக்கும்.

இந்தக் கதை சொல்லிகொடுக்கும் கருத்து எப்போதும்
நம் வீடு சுத்தமாக, சுகமாக, இனிமையாக இருக்கவேண்டும்
என்பதே.

ரெயிகி கற்கும் வரை இந்த திருஷ்டி கழித்தல் ஆகியவற்றின் மீது எனக்கு
நம்பிக்கை இருந்ததில்லை. அடுத்தவரின் நெகட்டிவிட்டி,
கண் திருஷ்டி எப்படி நம் அவுராவை தாக்குகிறது என்று தெரிந்தது
முதல் “cleansing” (திருஷ்டி கழித்தல்) கண்டிப்பாய் செய்துவிடுவேன்.


குமுதமோ விகடனோ ஞாபகம் இல்லை. அதில் வெளிவந்த
கதை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும்
ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக
வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.
ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும்
வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு.
ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார்.

ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
,
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும்
பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம்.
ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை
அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி
விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க
போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும்
தாயார் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள்
இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.




கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல
அங்கே செல்கின்றனர் இருவரும்.


மணம் வீசும் மலர்களின் வாசம்...



அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம்
அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.

கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி
கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்த்தாக கதை போகும்.

உளவியல் ரீதியாகவும் இது உண்மை. மலருக்கு மருத்துவ
குணம் இருக்கிறது. தீபத்தின் ஒளியில் மன இருளும் அகலும்.

இப்படி பூக்களால் அலங்காரம் செய்து வைத்து..


அழகாக விளக்கேற்றி வரவேற்பரையில் வைத்தால்..



அழகு மட்டுமல்ல அந்த இடமே பவித்ரமாகும்



வீடும் கோவிலாக நிம்மதி தரும். கிராமங்களில்
இன்றும் செவ்வாய், வெள்ளி வீடு முழுதும் தூபம் காட்டும்
பழக்கம் இருக்கிறது.

வாய்ச்சண்டை தகராறு இல்லாத வீடே கிடையாது.
அப்படி இருக்கும்பொழுது அந்த வார்த்தைகள் நம் வீட்டிற்கு
நெகட்டீவ் எனர்ஜியாகி இருக்கும் பாசிடிவ் எனர்ஜியை
வேலை செய்ய விடாமல் தடுக்கிறது. தூபங்கள், மணியோசை
போன்றவை நெகட்டிவிட்டியை விரட்டி பாசிடிவிடியை
அதிகமாக்குகிறது.

நெகட்டிவிட்டி இல்லாத பொழுது, பாசிட்டிவிட்டி அதிகமாக
வேலை செய்து நன்மையைத் தரும். குடும்பத்தில் அமைதியைத் தரும்.
மனதில் அமைதி தவழ எல்லோரும் இன்முகத்துடன் இருப்பதால்
அவரவர் வேலையை தவறில்லாமல் செய்வதால் ஐஸ்வர்யம்
பெருகும். லட்சுமி தேவி என்றும் நம்மு்டன் இருப்பாள்.

13 comments:

ஆயில்யன் said...

//வெள்ளி வீடு முழுதும் தூபம் காட்டும்
பழக்கம் இருக்கிறது.//

இப்பத்தான் கம்ப்யூட்டர் சாம்பிராணி ப்போட்டு ரூம் புல்லா புகையை ஃபில் அப் பண்ணிட்டு இருந்தேன் பாஸ் :)))

வெள்ளி ஸ்பெஷல் சூப்பர் :))))

pudugaithendral said...

பக்திமணம் கமழ வெள்ளிகிழமை விடுமுறையை கொண்டாடறீங்களா பாஸ்??

சூப்பர்

தேவன் மாயம் said...

வெள்ளிக்கிழமை செய்யவேண்டியவை அருமைங்க!!!

தேவன் மாயம் said...

பதிவிலேயே பக்திமணம்
கமழுது!!!

pudugaithendral said...

வெள்ளிக்கிழமைன்னு இல்லாம எல்லா நாளும் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்ல தேவா..

அமுதா said...

நல்ல விஷயம்.

மங்களூர் சிவா said...

மிக அருமையான பதிவு. பேச்சிலரா இருந்தப்பதான் ஏனோ தானோ என்று இருந்தாச்சு, இனிமேல் இதைப்போல் எல்லாம் கண்டிப்பாக செய்யவேண்டும் , செய்வோம்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமுதா

pudugaithendral said...

கண்டிப்பா செய்யுங்க சிவா

நட்புடன் ஜமால் said...

கமல் நடித்த படப்பாடலை தலைப்பா வச்சிருக்கீங்க

அப்படியே நினைவலைகள் போகுது அந்த படத்துக்குள்ளே ...

வெள்ளி என்றாலே ஒரு சுகந்தம் மனதிற்குள்ளும் ...

அதிலும் கல்ஃப் காரவங்களுக்கு இன்னும் அதிகமாயிருக்கும் அன்று விடுப்பாச்சே ...

ராமலக்ஷ்மி said...

இந்த பாஸிடிவ் எனர்ஜியில் எனக்கும் ரொம்ப நம்பிக்கை உண்டு. நல்ல பதிவு தென்றல்.

pudugaithendral said...

கமல் ரசிகருக்கு தலைப்பு ரொம்பவே பிடிச்சிருச்சு போல

வருகைக்கு நன்றி ஜமால்

pudugaithendral said...

ஹை உங்களுக்கும் பிடிக்குமா??

சந்தோஷம் ராமலக்‌ஷ்மி