Saturday, June 20, 2009

அன்புள்ள அப்பா...

ஹலோ ரமணி சார்,

இன்றைக்கு தந்தையர் தினம். அதான் உங்களுக்கு
ஒரு கடிதம் எழுதலாம்னு... (ரொம்ப நாளாச்சுப்பா)

போன்ல யாரு கூட பேசினாலும் முதல் வாக்கியம்
”வணக்கம் ரமணி” என்ற சுய அறிமுகம் + வாழ்த்துக்களுடன் தான்
உங்க உரையாடல் துவங்கும்.

வாழ்த்தும்போது வளமான வாழ்வு, மனம்போல வாழ்வு
இதைத் தவிர வேறு வாழ்த்து வாயில் கேட்டதேயில்லை.


ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மட்டுமல்ல
எனக்கு எப்போதும் தந்தையர் தினம் தான்.

பக்தி செய்யும் போது இறைவனை தந்தையாகத்தான்ப்பா
பார்க்கிறேன்.

சூர்ய வம்சம் படத்தில் ஒரு வசனம் வரும் அப்பா.(உங்களுக்கு
மிகவும் படமாச்சே) உளிக்கு தப்பின கல் சிற்பம் ஆவதில்லை.

ஆமாம், என்னை எப்படி எல்லாம் செதுக்கினீங்க. அதன்
பலனை நான் இப்ப சந்தோஷமா அனுபவச்சிகிட்டு இருந்தேன்.

அடிக்கடி டூருக்கு போகும் வேலை உங்களுக்கு. ஊருக்கு போகும்
அந்த நாட்களில் உங்கள் லுங்கியைக்
கையில் பிடித்துக்கொண்டுதான் என் இரவுகள் கழியும்.
பல முறை ஜுரம் கூட வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

3 மாதம் சிலோனை சுற்றி பார்க்கப்போகிறேன் என்று
கிளம்பியவர், ஒரே மாதத்தில் திரும்பிய காரணம்
அங்கே என் மற்றும் தம்பியின் வயதொத்த பிள்ளைகள்
இருவரை பார்த்ததும் எங்கள் ஞாபகம் அதிகமாகி
திரும்பியது தான் என தெரிந்த போது பலரின்
புருவம் உயர்ந்தது.


தினமும் இரவு நான் தூங்கிய பிறகு வீட்டிற்கு வரும்
நீங்கள் எனக்காக வாங்கி வந்த தின்பண்டத்தை நான்
தூக்கத்தில் எழுந்து திண்ணாவிட்டால் எப்படி கோபப்படுவீர்கள்??

சைக்கிள் கற்றுக்கொண்டதற்கு, வேகமாக டைப் அடிப்பதற்கு
என எல்லாவற்றிற்கும் எனக்கு நீங்கள் தரும் ட்ரீட் இதோ.
இன்றும் இதில்லாமல் என்னால் முடியாது.
நீங்கள் வைக்கும் ரசத்துக்கு நானும் தம்பியும் அடிமை.
உங்களைப் போல் நானும் நல்ல ரசம் வைப்பதை ருசித்து
நீங்கள் அடித்த கமெண்ட்” என் கை மணம் அப்படியே உன்
கிட்ட இருக்கு”!!!

சமீபத்தில் எனக்கு கைவலி அதிகமாகி அவதி பட்ட பொழுது
போனில் நீங்கள் ,”புதுகைக்கு கிளம்பி வாம்மா! நான் சமைத்து
போடுகிறேன்” என்று சொன்ன பொழுது நீங்கள் அம்மாவா? அப்பாவா?
என நினைத்து குழம்பினேன்.

தந்தையின் நிலை நாம் பெற்றோர் ஆகும் போதுதான் தெரியும்.
இன்று என் பிள்ளைகளை வளர்க்க நீங்கள் கற்றுக்கொடுத்த
பாதைதான்.


என் பதிவுகளில் நிறைய்ய இடங்களில் நீங்கள் இருப்பீர்கள்
அப்பா. அந்தப் பதிவுகளின் தொ்குப்பு சில இங்கே.

கலர் டீவி

உங்கள் பிறந்த நாள் பதிவு

சைக்கிள் கற்ற அனுபவம்

இனியும் உங்களைப் பற்றி நிறைய்ய எழுதுவேன் அப்பா.

மனமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்.

அன்னை அன்பைத் தருகிறாள். தந்தை அறிவைத் தருகிறார்
என்பது உலக வழக்கு. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
தந்தைக்கும் என் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
எம்டன் மகள்

35 comments:

நட்புடன் ஜமால் said...

தந்தைகளுக்கு வாழ்த்துகள்

எங்களை தந்தையாக்கிய குழந்தைகளுக்கும்.

நட்புடன் ஜமால் said...

தாயுமானவர் ...

சென்ஷி said...

:-))

சூப்பர் வாழ்த்து!

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜமால்

நாமக்கல் சிபி said...

டச்சிங்க் ஒன்!

தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

நன்றி சென்ஷி

புதுகைத் தென்றல் said...

நன்றி சிபி

ஜானி வாக்கர் said...

வணக்கம்,

பதிவு அருமை, கொடுத்து வைத்த மகள் + அப்பா.

தராசு said...

நல்ல வாழ்த்துங்கக்கா,

அப்பா என்பது ஒரு அனுபவிக்க வேண்டிய உறவு.

வெண்பூ said...

சூப்பர் பதிவு தென்றல்.. ரமணின்னு பெயரோட ஆரம்பிச்சு அப்பான்னு முடிச்சது நல்லா ரசிக்க வெச்சது. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

உறவின் அருமை புரிந்தால் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் ஜானி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி ஜானி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் தராசு,

(ஆமாம் எல்லோரும் என்னிய அக்கான்னு கூப்பிடறீங்க.. நிஜமாவே நீங்க எல்லோரும் என்னிய விட பெரிய்வங்களா இருப்பீங்களோன்னு தோணுது)

புதுகைத் தென்றல் said...

ரமணி சார் மகள் என்பதுதான் என் அடையாளம் வெண்பூ, அதான் அப்படி ஆரம்பிச்சேன். :))(அப்துல்லாவை கேளுங்க சொல்வாரு)

நிஜமா நல்லவன் said...

கலக்கல் பதிவு!

நிஜமா நல்லவன் said...

/என்றும் அன்புடன்
எம்டன் மகள்/


super!

எம்.எம்.அப்துல்லா said...

//ஆமாம், என்னை எப்படி எல்லாம் செதுக்கினீங்க. //

அப்பா உதைத்ததை இவ்வளவு நாகரீகமா சொல்லுறீங்க

:)))

எம்.எம்.அப்துல்லா said...

தொழிலில் இக்கட்டான நிலை ஏற்பட்டபோது ரமணிசார் குடுத்த லோன் பற்றி எங்க அப்பா இப்பவும் சொல்வார்.

எம்.எம்.அப்துல்லா said...

//(ஆமாம் எல்லோரும் என்னிய அக்கான்னு கூப்பிடறீங்க.. நிஜமாவே நீங்க எல்லோரும் என்னிய விட பெரிய்வங்களா இருப்பீங்களோன்னு தோணுது)

//

எல்லோரையும் நான் அண்ணன் என்பதுபோல் எல்லாரும் உங்கலை அக்காங்குறாங்க. நீங்க எல்லாருக்கும் வலையுலக அக்கா

:))
:)

எம்.எம்.அப்துல்லா said...

ரமணி சார் மகள் என்பதுதான் என் அடையாளம் வெண்பூ, அதான் அப்படி ஆரம்பிச்சேன். :))(அப்துல்லாவை கேளுங்க சொல்வாரு)

//

இப்பவும் எங்கூர்ல கலா அப்பிடின்னா யாருக்கும் தெரியாது. ஆனா ரமணிசார்னா கிட்டத்தட்ட எல்லாருக்கும் தெரியும்

:)

அபி அப்பா said...

அய்யோ அழுகையா வருது! உங்க பதிவை படீத்து முடிக்கும் இதே நேரம் அபிகிட்டே இருந்து ஒரு மெயில். நெகிழ்ந்து விட்டேன்!

மணிநரேன் said...

எம்டன் மகளின் அழகான கடிதம் :)

//ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மட்டுமல்ல
எனக்கு எப்போதும் தந்தையர் தினம் தான்.//

மகுடம் சூட்டிய வரிகள்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

புதுகைத் தென்றல் said...

அப்பா உதைத்ததை இவ்வளவு நாகரீகமா சொல்லுறீங்க//

ஆமாம் அந்த அடி உதை தானே இன்னைக்கு நம்மளை ஒழுங்கா வெச்சிருக்கு.

புதுகைத் தென்றல் said...

தொழிலில் இக்கட்டான நிலை ஏற்பட்டபோது ரமணிசார் குடுத்த லோன் பற்றி எங்க அப்பா இப்பவும் சொல்வார்.//

ஆஹா, அப்பாவா லோன்கொடுத்தார். கூட்டுறவு வங்கியில லோனுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாரு..

புதுகைத் தென்றல் said...

எல்லோரையும் நான் அண்ணன் என்பதுபோல் எல்லாரும் உங்கலை அக்காங்குறாங்க. நீங்க எல்லாருக்கும் வலையுலக அக்கா//

ஆஹா,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

ஆஹா அபி அப்பா அழுவாதீங்க,

தந்தை மகளுக்கு இடையே பாசப்பிணைப்பு தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்

புதுகைத் தென்றல் said...

எம்டன் மகளின் அழகான கடிதம்//

நன்றி மணி்நரேன்,

அந்தப் படம் என் வாழ்வில் ஒரு பகுதி என கருதுகிறேன்

மங்களூர் சிவா said...

அருமையான பதிவு.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

வித்யா said...

தந்தையர் தின வாழ்த்துகள் கலா அக்கா.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சிவா

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

துபாய் ராஜா said...

அருமையான பதிவு.

அன்பு தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நம்ம தந்தையர் தின கவிதை இங்கே சென்று படியுங்கள். http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_20.html

ராமலக்ஷ்மி said...

தந்தையர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்!

அப்பாவைப் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் தென்றல்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி