Friday, June 26, 2009

இறைவன் ஒருவனே!!

திருமணமான புதிது. அயித்தான் மும்பையில் மீட்டிங்கிற்கு
போய்விட நான் சென்னையில் அயித்தானின் அண்ணன்
வீட்டில் இருந்தேன்.

“சென்னையில எங்கங்கம்மா பாத்திருக்க?” என மாமா
கேட்டார்.

சிர்ப்புதான் என் பதில்!!! எங்கேயும் போனதில்லை.
திருமணமாகி 1 மாதத்துக்குள் ஹைதையில் பக்கத்திலிரூக்கும்
கடைதான் தெரியும். அப்படி இருக்க சென்னை???


என்ன பையன்ம்மா இவன்!! (:)எனக்கு சப்போர்ட் செய்து
அயித்தானை திட்டவும் ஒருத்தர் இருந்தார்,
அவர் இப்ப இல்லாதது வருத்தமே :(((( )
”சரி வா நான் அழைச்சுகிட்டு போறேன்! என்று மாமா
அஷ்டலட்சுமி கோவில், பீச் அழைத்துச் சென்றார்.

அருகிலே இருந்த சாந்தோம் சர்சுக்கு அழைத்துச் சென்றார்.
மனமார பிரார்த்தித்தேன். இப்படி ஒரு நல்ல உறவைகொடுத்ததற்கு.

“அப்பா,அம்மாகிட்ட சொல்லாதே! என்னடா சர்ச்சுக்கெல்லாம்
கூட்டிகிட்டு போயிருக்கானேன்னு நினைப்பாங்க! எல்லாம்
ஒரே சாமிதாம்மா!” என்றார். அப்பா அப்படி நினைக்க
மாட்டார்.

அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தது எல்லா மதமும் ஒன்றே,
எல்லா தெய்வமும் ஒன்றுதான் என்று சொன்ன போது
சந்தோஷப்பட்டார்.

அப்பாவைப்போன்றே எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து
அன்பாக பார்த்துக்கொள்ளும் உறவு புகுந்த வீட்டிலும்
கிடைத்தது பாக்கியம்.


திருச்சி ரேடியோவில் பக்தி நிகழ்ச்சியில் அனைத்து மதங்களின்
பாடல்களும் இடம் பெறும். அதைக் கேட்காமல் விட்டால்
ஏதோ மனது பாரமாகவே இருக்கும். இன்று நாகூர் ஹனிபா
பாட்டு வரணும், குழலும் யாழும் பாட்டு வருமா? என
ஒரு சின்ன சஸ்பென்ஸ். இந்த நிகழ்ச்சி மட்டும்தான்
திட்டு வாங்காமல் முழுமையாக கேட்பேன் என்பதால்
கூடுதல் மகிழ்ச்சி. :)))

Get this widget | Track details | eSnips Social DNAஎனது விஷ் லிஸ்டில் பாக்கி இருப்பது வேளாங்கன்னியும்,
நாகூர் தர்காவும். இறைவனின் அருளால் அதுவும் விரைவில்
நிறைவேறும் என நினைக்கிறேன்.

இறைவனை நோக்கிச் செல்ல இருக்கும் பலவழிகள் தான்
மதங்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாடல்கள் எப்படி??? ஓட்டு போட்ட்டுட்டு போங்க.

16 comments:

ஆயில்யன் said...

இறைவனிடம் கையேந்துங்கள் பர்ஸ்ட் டைம் வீடியோவில பார்க்குறேன் - முன்பு தூர்தர்ஷனில் பார்த்ததுதான் -

குறையொன்றுமில்லை எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு பாஸ் சூப்பரூய்ய்
:))

நட்புடன் ஜமால் said...

\\அப்பாவைப்போன்றே எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து
அன்பாக பார்த்துக்கொள்ளும் உறவு புகுந்த வீட்டிலும்
கிடைத்தது பாக்கியம்.
\\

மிக்க சந்தோஷம்

:)

எல்லோருக்கும் இங்கனம் அமைந்து விட்டால் ...

துவரங்குறிச்சி காதர் ஒளி said...

இறைவன் ஒருவன் தான் அதில் எந்த மற்றமும் இல்லை.
அவன் எப்படி இருப்பான். அவனது இயல்புகள் என்ன?
அவனை எப்படி நேசிப்பது எப்படி வணன்க்குவது.
என்று தெரிந்து கொல்லுங்கள்.

புதுகைத் தென்றல் said...

அடுத்த பாட்டும் கேட்டிங்களா பாஸ்

குழலும் யாழும்குரலினில் தொனிக்க யேசுதாஸ் பாடல்.

புதுகைத் தென்றல் said...

எல்லோருக்கும் இங்கனம் அமைந்து விட்டால் ...//

பிரச்சனையே இல்லாத அழகான வாழ்க்கை அனைவருக்கும் அமைந்துவிடும்

புதுகைத் தென்றல் said...

அவன் எப்படி இருப்பான். அவனது இயல்புகள் என்ன?
அவனை எப்படி நேசிப்பது எப்படி வணன்க்குவது.
என்று தெரிந்து கொல்லுங்கள்.//

அழகா சொல்லியிருக்கீங்க காதர்,

வருகைக்கு மிக்க நன்றி

கோபிநாத் said...

அருமையான பகிர்வு அக்கா...காலையில பாடல்களை கேட்கும் போது மனசு அமைதியாக இருக்கு..நன்றி ;)

ஜானி வாக்கர் said...

புகுந்த வீட்டில் எல்லோருக்கும் தங்கள் கணவரின் உடன் பிறப்பை போல் நல்ல தோழமையுடன் தந்தையாக அமைந்து விட்டால் வேறென்ன கவலை.

மங்களூர் சிவா said...

குறை ஒன்றும் இல்லை ரொம்ப ஃபேவரிட்!

சூப்பர்.

புதுகைத் தென்றல் said...

காலையில பாடல்களை கேட்கும் போது மனசு அமைதியாக இருக்கு.//

சந்தோஷம் கோபி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜானி,

ஆவது பெண்களால் மட்டுமல்ல பல சமயங்களில் ஆண்களாலும் கூடத்தான்.

சமூகம் ஆண்களின் கையில்தான் இருக்கிறது

புதுகைத் தென்றல் said...

அப்படியா சிவா,

சந்தோஷம்

thevanmayam said...

குறையொன்றும் இல்லை
இறைவனிடம் கையேந்துங்கள் இரண்டும் சூப்பர் பாடல்கள்
உங் களின் பகிரும் விதம் அருமை

சுவனப்பிரியன் said...

புதுகைத் தென்றல்!

//எனது விஷ் லிஸ்டில் பாக்கி இருப்பது வேளாங்கன்னியும்,
நாகூர் தர்காவும். இறைவனின் அருளால் அதுவும் விரைவில்
நிறைவேறும் என நினைக்கிறேன்.//

பல மதங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் வர வேண்டும். மேலும் நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாகூர் தர்காவுக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே தமிழில் குர்ஆனை வாங்கி படியுங்கள். இறைவனைப்பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். பி.ஜெய்னுல்லாபுதீன் மொழி பெயர்த்த குர்ஆனை படித்தீர்கள் என்றால் விளங்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

நாகூர் தர்ஹாவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காக இன்னும் தர்ஹாக்களை சிலர் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி தேவா,

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுவனப்ப்ரியன்