ஆண்டவனை பார்க்கணும், அவனுக்கும் ஊத்தணும்
அப்ப நான் கேள்வி கேட்கணும் சர்வேசா!!!
தலையெழுத்தெந்த மொழியடா!!
தப்பிச்செல்ல என்ன வழியடா!!! இது ஒரு
பிரப்லமான திரைப்படப்பாடல்.(படத்தின் பெயர்
ஞாபகம் இல்லை. நடிகர் சத்யராஜ் என்பது
மட்டும் ஞாபகம் இருக்கு)
என் குறை உன் காதிலேயே விழாதா??
காது செவிடாகிப்போச்சா? என நமக்கு
துன்பம் நேரும் போதெல்லாமோ நாம்
கேட்ட வரம்(!!!) கிடைக்காத போதோ
திட்டுவோம்.
நம் குறைகள், முறைகள், பிரார்த்தனைகள்
அவன் காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
நாமும் நாம் கேட்டதெல்லாம் வரமாக
கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
BRUCE ALMIGHTY படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்த படத்தில் வரும் ஒரு காட்சி மிக மிக பிடிக்கும்.
எப்போதும் “அடுத்தவனின் இடத்தில் நாம் இருந்து
பார்த்தால்தான் அவனது பிரச்சனை நமக்குத் தெரியும்”,
என்று சொல்வார்கள்.
ஆண்டவன் இடத்துக்கு நம்மால் போக முடியாது.
ஆனால் இந்தப் படம் ஒரு சராசரி மானுடனுக்கு
ஆண்டவன் தன் சக்திகளை அளி்க்க, மானுடன்
ஆண்டவனாக என்ன செய்தான்? என்பதைச் சொல்லும்
படம். ஜிம் கேரி நடிப்பு எப்போதும் பிடிக்கும்.
Morgan Freeman நடிப்பு அபாராம்.
படத்தை விடுங்கள் படத்தில் நான் குறிப்பிடும் காட்சி
மக்களின் குறைகள் ஆண்டவனாக மாறிய புரூஸின்
காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரால்
நிம்மதியாக இருக்கவே முடியாது. எப்போதும்
மரணஓலம், காப்பாற்று என்று அபயம் கேட்பவர் ஒரு
பக்கம், அது கொடு, இது கொடு என கேட்பவர்
என பாவம்!!! அப்போது புரூஸ் பிரார்த்தனைகளை
ஃபைலாக்கி பார்த்தால் அவர் இருக்கும் இடமே
தெரியாத அளவு ஃபைல்களால் நிறைந்துவிடும்.
கணிணியில் இமெயில் ஆக்கினால் ஏற்படும்
விளைவு
இங்கே இருக்கிறது.
ஆண்டவனின் நிலை பரிதாபமானது. முருகன், ஏசு,
அல்லா என தனித்து பார்க்காமல் இறைவன் ஒருவனே
என அனைவரும் நினைக்க வேண்டும் என்று பொதுவாக
கூறுவார்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும்
பிரார்த்திக்கும் போது அவரின் நிலையை எப்போதாவது
யோசித்திருப்போமா!!
நம் முன்னோர்கள், ஆன்மீக வாதிகள் யோசித்திருக்கிறார்கள்.
ஆம் பக்தி செய்வதில் பிள்ளையாய், தந்தையாய், தாயாய்
நினைத்து பக்தி செய்வது போல் சரணாகதி எனும் ஒரு
வகை உண்டு. மொத்தமும் உன் காலடியில்! என் வாழ்வு
இனி உன் பொறுப்பு என அவன் காலடியில் வைத்தால்
மாட்டேன் என்றா சொல்லப்போகிறான்!!!!
தன் குழந்தைக்குபசிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும்.
எந்த சமயத்தில் பசிக்கும், என்ன விரும்பி சாப்பிடுவான்?
என்றும் தெரியும். அதனால்தானே குழந்தை எந்தக்
கவலையும் இல்லாமல் இருக்கிறது!!!
தன் குழந்தையின் தேவையை நிறைவேற்றவும்,
மிகச் சி்றந்த வாழ்க்கையை அளிக்க வேண்டுமென்பதற்காகவும்
தானே தந்தை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்.
அப்படி இருக்க உலகத்தில் இருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் தந்தையான அவனுக்குத் தெரியாதா?
நம்மை எப்படி ”வளர்க்க”வேண்டுமென்று!!
இன்னொரு விடயம் இருக்கு.
அதை கொடு, இதைக்கொடு என நாம்
கேட்பதை இறைவன் கொடுக்கிறான் என்றே
வைத்துக்கொள்வோம், ஆனால் ஆண்டவன்
அதை விட மிகச்சிறந்த ஒன்றை நமக்குத் தர இருந்து
நாம் கேட்டோம், குழந்தை மனது வருத்தப்படக்கூடாது
என நினைத்து கேட்டது குறைவானதாக இருந்தாலும்
கொடுத்துவிடுவான். இழப்பு நமக்குத்தான்.
இந்த பாடெல்லாம் படவேண்டாம் என்பதால்தான்
சரணாகதியே மேல். எல்லாம் அவன் செயல்
என்று கைகளை மேலே காட்டிவிட்டு நாம்
ஒன்றும் செய்யாமல் இருப்பது சரணாகதி அல்ல.
“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய்வருத்தக் கூலி தரும்” எனும்
வள்ளுவரின் வாக்கை மறந்துவிட வேண்டாம்.
நாம் நமது வேலையை ஒழுங்காக பார்ப்போம்.
அவன் தன் வேலையை ஒழுங்காக பார்ப்பான்.
இங்கேதான் கீதையின் சாராம்சம் வருகிறது.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”
தட்டவும் வேண்டாம் கேட்கவும் வேண்டாம்
அவன் தானே தருவான்.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் அவன்.
அவனிருக்க பயமேன்!!!!
************
ஓட்டு போடுங்கன்னு சொல்ல மாட்டேன்
போடுவீங்கன்னு தெரியும்
18 comments:
நான் கடவுள் இருக்காருன்னு நம்புறேன். ஆனால் வேண்டிக்கிறதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாம போயிருச்சு.
இப்ப எல்லாம் அத குடு, இத குடுன்னு வேண்டிக்கிறதேயில்ல.
வேண்டிக்காம இருக்கதுலயும் ஒரு நல்லது இருக்கு, நாம கடவுள்கிட்ட அத குடு, இத குடுன்னு வேண்டிக்கிட்டேயிருந்து, அது கிடைக்காம போச்சுன்னா அவரு மேல கோவம் வரும், அப்ப கடவுள் இல்லைன்னு சொல்ற நிலை கூட வரும். அதுக்கு என்னையப் போல பேசாம இருந்துட்டா நல்லதுல்ல?
அந்த சத்யராஜ் படம் - மக்கள் என் பக்கம்..
அக்கா மீ த ஃபர்ஷ்ட்டா??
நான் உங்க கட்சிதான் ஜோசப்,
ஆனா விரக்தியால இல்ல அவன் கண்டிப்பா பாத்துப்பான் எனும் நினைப்புதான். அனுபவம் தான்.
நன்றி சென்ஷி
இல்ல அப்துல்லா ஜோசப் தான் ஃபர்ஷ்டு
வெள்ளி ஸ்பெஷல் ஆன்மீக டச் அளித்திக்கொண்டிருக்கும் பாஸுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :)))
தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்!
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன்!
அப்படின்னா அப்துல்லா ஜோசப்பு தொல்ஸ் தான் மீத பஷ்ட்டா???
அவ்வை சண்முகி மாதிரி இருக்கே!
அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!
That song is from Makkal en pakkam, a film based on Rage of Angels, a Sidney Sheldon Novel.
ஆடி வெள்ளி வரப்போகுதுல்ல பாஸ். அதுக்குத்தான் முன்னோட்ட பதிவுகள் :))
தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்!
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன்!//
ஆமாம், ஆமாம்
அவ்வை சண்முகி மாதிரி இருக்கே//
:))))))))
பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி கலையரசன்
நன்றி அழகன்
எது நடந்ததோ இது நன்றாகவே நடந்தது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை தென்றல். அதனாலேயே எதுக்கும் வருந்தாமல் நிம்மதியா இருக்க முடிகிறது.
நேத்து நான் பேரண்ட்ஸ் கிளப் படித்துப் பார்த்தேன். ஒரு முறை படித்த நினைவு. ஆனால் முழுமையாக படித்ததில்லை. இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை. நல்ல பயனுள்ள பதிவுகள் எழுதுயுள்ளீர்கள்.
வருகைக்கு நன்றி தீஷு,
ஒரு மாண்டிசோரி ஆசிரியையாக என்னால் முடிந்ததை அங்கே பதிவிட்டு பகிர்ந்துகொள்கிறேன்.
Post a Comment