Tuesday, June 09, 2009

அம்மம்மோய்! அப்பப்போய் மாயாஜாலமாம்!!!

சென்னையில் விழா முடித்து நேராக சென்றது
மாமல்லபுரத்திற்கு. அங்கே பஸ்டாண்டிற்கு அருகில்
இருக்கும் மாமல்ல ஹெரிடேஜ் ஹோட்டலில்
தங்கினோம்.

ஈ.சி.ஆர் ரோடில் இருக்கும் மாயாஜால்லில்
”பசங்க” படம் பார்க்கச் சென்றோம். ஹைதையில்
மல்டிப்ளக்ஸில் 200 ரூபாய் டிக்கட். மாயாஜாலில்
140. பரவாயில்லையே!! என நினைத்துக்கொண்டே
புக் செய்து சென்றோம்.

எங்கள் கார் உள்ளே செல்லவும் ரஜினி காந்த்
அவர்களின் கார் வெளியே செல்லவும் சரியாக
இருந்தது. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னைப்
பார்க்க கொடுத்துவைக்கவில்லை. :))

வார இறுதியோ, வேலை நாளோ இங்கே ஹைதையில்
ஐமேக்ஸ், ஐநாக்ஸ், பீவீஆர் எல்லாம் வழியும்.
செம பிசி ஏரியா. வெள்ளிக்கிழமை சாயந்திரம்
காற்று வாங்கிக்கொண்டு கிடந்த மாயாஜாலை
ஆச்சரியமாக பார்த்தோம்.

படம் ஆரம்பிக்க நேரம் இருக்கவே பிள்ளைகள்
பெளலிங் விளையாண்டார்கள். தியேட்டருக்குச்
சென்றோம். ஆள் அரவமே இல்லை. 6.45 மணிக்கு
ஷோ. டிக்கெட் கிழிக்கும் ஆளைக்கூட காணவில்லை.

5 நிமிடத்தில் ஒருவர் வந்து தியேட்டருல் சென்றோம்.
ஆள் அரவமே இல்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருந்தது
தியேட்டர்!!!! ஐமாக்ஸ், பீவிஆர்
போல் உள்ளமைப்பு இருக்கும்னு நினைச்சோம்.
நாங்கள் 4 பேர் மட்டும் தான் அங்கே.

இன்னைகு ஷோ உண்டா? இல்லை கேன்சலா?
யாரும் வராவிட்டால் படம் பார்க்க முடியாமல்
போய்விடுமே!! பசங்க படம் பார்க்க முடியாமலேயே
போய்விடுமோ!! என்று ஏகப்பட்ட குழப்பத்துடன்
உட்கார்ந்திருந்தோம். 7 மணி வாக்கில் 10 பேர்
இருந்தோம் தியேட்டரில். மெல்ல ஏழு பதினைந்து
மணி வாக்கில் படம் ஆரம்பித்தார்கள்.( பாதி தியேட்டர்
நிரம்பியிருந்தது)

அருமையான படம். ரசித்தோம். 10 மணிக்கு மேல்
ஆகிவிட்டது படம் முடிய. வயிற்று பசி கிள்ள
கீழே இருக்கும் ஃபுட் கோர்ட் சென்றோம். நூடில்ஸ் கிங்கில்
”சாரி வீர் ஆர் க்ளோஸ்ட்” என்றார்கள். இருந்தது
மெர்ரி ப்ரவுனும், யூ எஸ் பிட்சாவும் தான்” :((

இங்கே ஹைதையில் ohri'sல் வைரிட்டி கிடைக்கும்.
வேறு வழியில்லாமல் அன்று பிட்சா சாப்பிட்டோம்.
பசங்க வெஜ் பர்கர் வித் ஹேப்பி மீல் வாங்கிக்
கொண்டார்கள்.

டோல்கேட்டுக்கு அந்தப் பக்கம் இருப்பதாலேயே
மாயாஜால் வார நாட்களில் காற்று வாங்குவதாக
டிரைவர் சொன்னார். இருக்கலாம். அதற்காக
நம் இந்திய உணவு வகைகள் அதிகம் இல்லாத
ஃபுட் கோர்ட் எல்லாம் டூ மச். ஒரே ஆறுதலாக
மெர்ரி ப்ரவுனில் குழந்தைகளுக்கான ஹேப்பி மீலில்
பெப்ஸி, கோக் போன்றவை தராமல் ஆரஞ்சு ஷ்குவாஷ்
கொடுத்தது.

ஐமாக்ஸ், பீவீஆர் ரேஞ்சுக்கு எதிர் பார்த்து சென்ற
மாயாஜால் பிடிக்கலை.

நைட் அண்ட் லைஃப் இஸ் சோ எங் அண்ட்
பியூட்டிஃபுல் இன் ஹைதராபாத் :))

19 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்! :)))

ஆயில்யன் said...

பாஸ் டைட்டிலு ச்சும்மா செம டெரரா இருக்கு :))

ஆயில்யன் said...

//
எங்கள் கார் உள்ளே செல்லவும் ரஜினி காந்த்
அவர்களின் கார் வெளியே செல்லவும் சரியாக
இருந்தது///

தலைவரு கார் போன என்ன பாஸ் நீங்க அவரை பார்த்துட்டு வரவேண்டியதுதானே?

:)))))

pudugaithendral said...

வாங்க பாஸ் வாங்க,

மாயாஜாலில் நிஜமாவே தனியா தியேட்டரில் உட்காரும் அனுபவம் நிஜமாவே டெர்ரரா இருக்கு பாஸ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

மாயாஜாலில் எப்போ போனா கூட்டமிருக்கும்னு தெரியாம போயிருக்கீங்க:):):) அவங்க நம்பிருக்கறது காலேஜ்களையும், ஐடி மக்களையும். வீக் என்ட்னா சென்னைக்குள்ள இருக்க திரயரங்குகளில்தான் மக்கள் கூட்டமிருக்கும்:):):)

வெண்பூ said...

சென்னையில எனக்குத் தெரிஞ்சு நான் பாத்த மட்டமான குவாலிட்டி ப்ரொஜக்ஷன் அங்கதான் பாத்தேன்... :(((

தூரமும் அதிகம், படம் குவாலிட்டியும் இல்லை. அதே காசுக்கு சிட்டிக்குள்ளயே சத்யமும், ஐ நாக்ஸிம் இருக்குறப்போ எதுக்காக மக்கள் அங்க போகப் போறாங்க..

கோபிநாத் said...

\\அம்மம்மோய்! அப்பப்போய் மாயாஜாலமாம்!!!"\\

அக்கா இதெல்லாம் எங்கை மாதிரி யூத்துங்க போற இடம் ;))))

ஆனாலும் தலைப்பு டாப்பு ;)

pudugaithendral said...

வாங்க ராப்,

மாயாஜால் கூட்டத்தை பார்க்கவா போனேன். சென்னையில் இருக்கப்போகும் நேரம் குறைவு. பசங்க படத்தை மிஸ் செஞ்சிட கூடாது என்பதால்தான் மாயாஜாலை செலக்ட் செஞ்சோம்.

pudugaithendral said...

தூரமும் அதிகம், படம் குவாலிட்டியும் இல்லை. //

ஆமாம் வெண்பூ

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோபி

Vidhya Chandrasekaran said...

மாயாஜாலின் ஒரே அட்வாண்டேஜ் ஓரளவுக்கு ஈஸியாக டிக்கெட் கிடைக்கும். நத்திங் எல்ஸ்:)

நட்புடன் ஜமால் said...

”பசங்க” படம் பார்க்கச் சென்றோம். \\

பசங்களோடு ...

நட்புடன் ஜமால் said...

ஐமாக்ஸ்\\

நானும் என் பேர்தான் போட்டு இருக்கீங்கன்னு தான் நினைத்தேன்.

சென்ஷி said...

:-))))))

butterfly Surya said...

படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

குடும்பத்துடன் பார்க்கலாம்.

pudugaithendral said...

ஆமாம் வித்யா

pudugaithendral said...

ஆமாம் ஜமால் பசங்களோடு பசங்களை எஞ்சாய் செஞ்சோம்

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி சென்ஷி

pudugaithendral said...

பசங்க படத்தை பாராட்டி தனிப்பதிவே போட்டாச்சே வண்ணத்துப்பூச்சியார்.