Wednesday, June 10, 2009

தக்‌ஷின் சித்ரா விசிட்

அடுத்த நாள் காலை உணவு முடித்து கிளம்பினோம்.
தக்‌ஷின் சித்ரா பார்க்க போகத்திட்டம். வழியில்
இருந்த நுங்குகளைக் காட்டி நான் செய்து விளையாடிய
நுங்கு வண்டியைப்பற்றிச் சொல்ல, கெட்டியாக
இருக்கும் அந்த ஓட்டில் எப்படிம்மா செய்வீர்கள்? என்று
கேட்க சாலை ஓரத்தில் காரை நிறுத்தி

நுங்கு வாங்கி சாப்பிட்டுக்கொண்டே ஒரு நுங்கு பழத்தை
எடுத்து வண்டி செய்து காட்டினேன். “ஹை நல்லா
இருக்கே, எப்படி தள்ளுவீங்க? என கேட்க” டீ வடிவ
குச்சியைத் தேடி கிடைக்காமல் சொல்லிக் காட்டினேன்.

சூப்பர்மா! என்றார்கள் பிள்ளைகள்.

தக்‌ஷின் சித்ரா- தென்னகத்துக்கு ஒரு மாதிரி.
தென்னகத்து வீடு வகைகளின் மாதிரிகள்,
உபயோகிக்கும் வகை சாமான்கள் என
அருமையாக இருந்தது. பிள்ளைகளுக்கு
மிகவும் பிடித்தது செட்டிநாட்டு வீடுதான்.

ஆம்பூர் வீட்டுக்கு முன்னால்
பாண்டி விளையாடும் கட்டம்
போட்டு வைத்திருக்க மகளுக்கு பாண்டி
விளையாடச் சொல்லிக்கொடுத்துக்கொண்டே
நானும் சிறுமியாகி விளையாடினேன்.

அப்பாவையும், மகனையும் காணோம்.
திரும்பி பார்த்தால் இருவரும் கிளி ஜோசியக்காரரிடம்
உட்கார்ந்திருந்தார்கள். :))

ஆஷிஷுக்கு ரொம்ப நாளாகவே அது என்ன கிளி ஜோசியம்?
என பார்க்க ஆசை. கிரகம் கிளி ஜோசியத்தில்
அவனைப் பற்றி சொன்னது எல்லாம் சரியாகவே
இருக்க, அயித்தானும் பார்த்துக்கொண்டார்.
அதுவும் சரியாக இருந்துவிட என்னை உட்கார
வைத்து என் பெயர் சொல்லி பார்க்க “ஊராருக்கு
உதவி இ.வா இருப்பேன்” என்ற உண்மையை
படரென போட்டு உடைத்தார்.(மொத்தமும் சரியாக
இருந்தது) அடுத்து அம்ருதம்மா. ஹி ஹி
இதுவும் சரியா இருந்து தொலைத்துவிட்டது.


ஜோசியத்தையே நம்பாத நான் இதையா நம்புவேன்.
சரிப்பா! ஏதோ ஃப்ளூக்குல அவங்க சொல்றது
உண்மையா இருக்கு. அடுத்த நடக்க போறதை
சொல்லியிருக்காருல அது நடக்கட்டும், அப்புறம்
நம்பறேன் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினேன்.

குயவர் வீட்டில் பிள்ளைகள் பானை (சின்னதுதான்)
செய்தனர். இன்னொரு வீட்டில் பனை ஓலையில்
கூடை பின்னக் கற்றனர். இருவருக்கும் ஒரே பெருமை.
அந்தக்கால மாவு அரைக்கும் எந்திரம் (திரகலி என்று
தெலுங்கில் தெரியும், தமிழில் தெரியலை. அரிசியை
போட்டு சுற்ற மாவு வருமே!) அதில் மாவு அரைத்தார்கள்
அண்ணனும் தங்கையும்.

இவ்வளவு கொஞ்சத்துக்கே கை வலிக்குதே! நிறைய்ய
மாவு அரைக்க எம்புட்டு வலிக்கும்!! என்று கேட்டார்கள்.
அதுதான் கைக்கு எக்ஸர்ஸைஸ் என்று சொல்ல
வியந்தார்கள்.

ஓடு, முற்றம், தோணித்தகரம்(மழை நீர் ஓட்டிலிருந்து
கீழே விழ வைக்கப்படும் தகரம்) எல்லாம் காட்ட
கட்டடக்கலையை வியந்து பார்த்து தெரிந்து கொண்டார்கள்.


வெயிலில் சுற்றி களைத்துப்போனாலும் தென்னகத்தின்
அழகை ரசித்தோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா
வீடுகளும் இருந்தன.

தக்‌ஷின் சித்ராவில் சுற்றிய போது மனதில்
பட்ட விஷயம் ஒன்றுதான். அவ்வளவு
பெரிய இடத்தில் பல அரிய விடயங்களை அழகாக
நிர்மாணித்திருக்கிறார்கள். எங்கே ஆரம்பித்து
எங்கே முடிப்பது? என்பது புரியாமல் சுற்றிக்கொண்டே
இருக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் முறைப்படுத்திருக்கலாமோ!!
என்று தோன்றியது.

ஆனாலும் தக்‌ஷின் சித்ராவில் பாராட்டப்படவேண்டிய
விடயம் ”ஹனலி” எனும் ஹோட்டல். இதை நிர்வகிப்பது
பிரபல அறுசுவை நடராஜன் அவர்கள்.

பிசிபேளாஹுலி், வாழைககாய் பொரியல், கடலைப்பருப்பு
போட்ட கோஸ் கூட்டு வீட்டுச் சாப்பாட்டை நினைவூட்டியது.

8 comments:

ஆயில்யன் said...

தக்‌ஷின் சித்ரா பற்றி கேள்விப்பட்டதுண்டு பாஸ்!


இந்த வாட்டி டூர்ல அங்க எல்லாம் போய் வந்தீங்கன்னு சொல்றச்ச சூப்பரா இருக்கு :)))

பாஸ் நோ போட்டோஸ் :(

நட்புடன் ஜமால் said...

வாழைக்காய் பொறியல்

நம்ம ஃபேவரைட் ...

pudugaithendral said...

பாஸ் நோ போட்டோஸ் //

போட்டோ எடுத்திருக்கு பாஸ். எல்லாம் அயித்தானின் லேப்டாப்ல இருக்கு.

போட்டோக்களை மட்டும் தனிப்பதிவா போட்டுடலாம்

pudugaithendral said...

வாழைக்காய் பொறியல்

நம்ம ஃபேவரைட் ...//
:))

Vidhya Chandrasekaran said...

போட்டோ செஷனுக்கு வெயிட்டிங்:)

goma said...

நுங்கு வண்டிக்கு தேவை டி வடிவ குச்சி இல்லை ஒய் வடிவ குச்சி
நாங்கல்லாம் அப்படித்தான் வண்டு ஓட்டி இருக்கோம்..
உங்கள் சுற்றுலா சிறப்பிதழ் வாசிக்க வாசிக்க மஹாபலிபுரமும் தக்‌ஷின் சித்ராவும் ,என்னை” ரா ரா சுத்திப்பார்க்க ரா ரா...”ன்னு அழைக்குதுகள்

goma said...

என் பதிவுக்கு வருகை தந்தவர் புதுகைத் தென்றல் வழிகாட்டி வந்ததாக அறிந்து மகிழ்ச்சி.வந்து பார்த்தேன் உங்கள் நோட்டீஸ் போர்டில்... என் கிர்ர்ர்ர்ர்ணி...

இராகவன் நைஜிரியா said...

தக்‌ஷின் சித்ரா பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இதுவரைப் போனதில்லை.

இந்த தடவை போவதற்கு முயற்சி செய்யணும்.