Wednesday, July 01, 2009

சிக்கி... சிக்கி..

அப்பாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இது.
பாய்க்கடையில் 1 ரூ்பாய்க்கு வாங்கி வருவார் அப்பா. மேலே
தேங்காப்பூவெல்லாம் தூவி சூப்பரா இருக்கும்.

ஒழுங்கா சைக்கிள் ஓட்டினா, சொன்னபடி
வேலைகளை முடிச்சிருந்தா, ஹிந்தி எக்ஸாம்ல
பாஸ் செஞ்சா என எல்லாத்துக்கும் எனக்கு
அப்பா தரும் ட்ரீட் கடலை உருண்டை.

ஒரே ஒரு மாதம் பள்ளத்தூர் ஆச்சி காலேஜ்
ஹாஸ்டலில் தங்கி இருந்த என்னை பார்க்க
வந்த போது அல்லது பார்க்க வருபவர்களிடமெல்லாம்
அப்பா கொடுத்தனுப்பியதும் இது தான். :))

”ஏன்ப்பா கடலை உருண்டையே வாங்கித்தர்றீங்க”?
அப்படின்னு தெகிரியமா கேட்டப்போ அப்பா சொன்னது,
“இது உடம்புக்கு நல்லது. வெல்லம் இரும்புச் சத்து
தருது. வேர்க்கடலை உடலுக்கு நல்லது. சல்லிசான
விலையில உடலுக்கு நல்லதாச்சேன்னு வாங்கி
கொடுத்தேன். பிடிக்கலைன்னா வேற ஏதாவது
வாங்கித் தர்றேன்” என்றார்.

பழகிபோயிவிட்டாதல் கடலை உருண்டை பிடித்த
பண்டமாகிவிட்டது.

மும்பையிலிருந்து கிளம்பும்போதே மாமா
ஞாபகமா சொல்லி அனுப்புவார். ”புனேல
லோனாவாலா சிக்கி கிடைக்கும். தூங்கிடமா(!!)
வாங்கிகிட்டுவா!”

எல்லா இடத்திலும் கடலைமிட்டாய், கடலை
உருண்டை கிடைக்கிறது. ஆனாலும் லோனாவாலாவில்
புகழ் பெற்றது.
லோனாவாலாவின் இருக்கும் புகழ்பெற்ற சிக்கி
கடையின் போட்டோ இது.
முப்பது வகையான சிக்கிக்கள்.
(பலதுக்கு பேருதான் தெரியாது)

பாதாம், பிஸ்தா, எள்ளு என
பல வகைகள்சிக்கி பற்றியவிக்கிப்பீடியா:


சென்ற முறை மாமா வந்திருந்த போது
5 பாக்கெட் சிக்கி வாங்கி வைத்திருந்தேன்.
மாமா வந்ததும் கையில் கொடுத்த போது
சின்ன பிள்ளையாய் “ஹை என்னோட
ஃபேவரீட்!! இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு?!”
என ஆச்சரியப்பட்டார்.

சென்ற வாரம் இங்கே லோக்கலில் இருக்கும்
அத்தை மகள் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அக்காக்கு பூ, அக்காவின் மகளுக்கு பிறந்த
நாள் என்பதால் உடை எல்லாம் வாங்கிக்கொண்டேன்.
ஞாபகமாக 2 சிக்கி பாக்கெட். இது பாவாவுக்கு(அக்கா
கணவர்).

கையில் கொடுத்ததும் ,”விலையுயர்ந்த ஸ்வீட் வாங்கிக்
கொண்டுவந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷ
பட்டிருக்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்ததை
கொண்டு வந்து கொடுத்திருக்காய்” என அக மகிழ்ந்தார்.

அல்ப காசுக்கு வாங்கின பொருளாக என நினைக்காமல்
அவர்களுக்கும் சந்தோஷம். அவர்களின் சந்தோஷம்
கண்டு எனக்கும் சந்தோஷம்.

சரி யாருக்கெல்லாம் கடலை மிட்டாய் பிடிக்கும்?
ஆளுக்கொன்னு எடுத்துக்கோங்க.:))

21 comments:

அமுதா said...

நீங்க ஏன் எனக்கு "சிக்கி" வாங்கிட்டு வரலை? இந்த ஃபோட்டோ போட்டு ஏமாத்தற வேலை எல்லாம் செல்லாது ...

தீஷு said...

எனக்கும் கடலை மிட்டாய் ரொம்ப இஷ்டம். மதுரைல கமர்கெட் என்று ஒரு மிட்டாய் கிடைக்கும். ரொம்ப டேஸ்டா இருக்கும்.

ஜீவன் said...

;)

அபி அப்பா said...

எனக்கு பிடிக்கும். அதுவும் மாயவரம் பியர்லெஸ் தியேட்டரில் கிடைக்கும் கடலை உருண்டையை விட கடலை கேக் அதும் சின்ன சைஸ் கேக் ரொம்ப பிடிக்கும். ஸ்வீட் பதிவு!

நட்புடன் ஜமால் said...

நல்லா ‘சிக்கி’ட்டிய போல ...

Balaji said...

no need to go to pune .. Best kadali mattai is from Kovilpatti (my native place) try once..it is crisp and less sweet and tasty

VS Balajee

அ.மு.செய்யது said...

அட‌ நானும் பூனேவில‌ தான் இருக்கேன்.இந்த‌ விச‌ய‌ம் தெரியாம‌ போச்சே.

அடுத்த‌ முறை வ‌ரும்போது கொஞ்ச‌ம் சிக்கிய‌ உசார் ப‌ண்ணிர‌ வேண்டிய‌து தான்.

புதுகைத் தென்றல் said...

நீங்க ஏன் எனக்கு "சிக்கி" வாங்கிட்டு வரலை? இந்த ஃபோட்டோ போட்டு ஏமாத்தற வேலை எல்லாம் செல்லாது ...//

அடுத்த முறை கண்டிப்பா வாங்கி கிட்டு வர்றேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க தீஷூ,

கமர்கட் சூப்பரா இருக்கும். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஸ்மைலிக்கு நன்றி ஜீவன்

புதுகைத் தென்றல் said...

எனக்கு பிடிக்கும். //
சேம் பளட்
ஸ்வீட் பதிவு!

நன்றி

புதுகைத் தென்றல் said...

நல்லா ‘சிக்கி’ட்டிய போல ..//

யெஸ்ஸு

புதுகைத் தென்றல் said...

வாங்க பாலாஜி,

நம்ம் ஊர்லயும் நல்லதா கிடைக்கும். பூனா சிக்கி அங்க ஃபேமஸ். உங்க ஊரு சிக்கியும் ஒரு பார்சல் அனுப்பிவிடறது. :))

புதுகைத் தென்றல் said...

செய்யது நீங்க துபாய்ல இருக்கறாதல்ல நினைசுகிட்டு இருக்கேன்.

ஆஹா அடுத்த முறை ஹைதை வந்து இங்கேயிருந்து உங்க ஊருக்கு போங்க.

புனேயில என்னன்ன ஃபேமஸுன்னு லிஸ்ட் கொடுக்கறேன். :)))

புதுகைத் தென்றல் said...

அடுத்த‌ முறை வ‌ரும்போது கொஞ்ச‌ம் சிக்கிய‌ உசார் ப‌ண்ணிர‌ வேண்டிய‌து தான்.//

உசார் பண்ணி அக்காக்கும் கொடுத்திட்டு போங்க. :))

நாஞ்சில் நாதம் said...

கோவில்பட்டி கடலைமிட்டாயி தன இங்க பேமசு. ஊருக்கு போறப்ப எல்லாம் ரெண்டு பாக்கெட் கண்டிப்பா வாங்கறது உண்டு

அ.மு.செய்யது said...

//புதுகைத் தென்றல் said...
செய்யது நீங்க துபாய்ல இருக்கறாதல்ல நினைசுகிட்டு இருக்கேன்.

ஆஹா அடுத்த முறை ஹைதை வந்து இங்கேயிருந்து உங்க ஊருக்கு போங்க.

புனேயில என்னன்ன ஃபேமஸுன்னு லிஸ்ட் கொடுக்கறேன். :)))
//

நான் இஙக் வந்து 4 மாசம் தாங்க ஆகுது.

எனக்கு தெரிஞ்சது பூனாவுல ஃபேமஸூ பாவ்பாஜி.வடா பாவோ.வேறென்னன்ன இருக்கு..லிஸ்ட் அனுப்புங்க ..

மங்களூர் சிவா said...

கல்ல மிட்டாய்க்கு பேர்தான் சிக்கியா?? இருக்கட்டும் இருக்கட்டும்.

SP.VR. SUBBIAH said...

சிறுவனாக இருந்தபோது தேவகோட்டையில் உள்ள ஆயா வீட்டி வளர்ந்தவன் நான். நிறையக் கடலை உருண்டைகளைத் திண்றிருக்கிறேன்

அப்போது ஒரு ரூபாய்க்கு 32 கடலை உருண்டைகள்

இன்றைய நிலவரம்: அதே கடலை உருண்டையின் விலை ஒரு ரூபாய்!

வண்ணத்துபூச்சியார் said...

சென்னையில் புகழ்பெற்ற “ரஜாராம்” சிக்கியும் நல்லா இருக்கும்.

சிக்கி சொன்னவுடன் என்னவோ நினைவுக்கு வருது...

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே