Thursday, July 02, 2009

என்ன கொடுமை இது??!!!! :))

கமிட்டி மீட்டிங் நேற்றும் தொடர்ந்தது.


கமிட்டி பத்தின போஸ்ட் இங்க இருக்கு

”இந்த மாசத்துலேர்ந்து உங்க பாயிண்ட்ஸ் & பாக்கெட்
மணி 500 ரூபாயாக்கலாம்னு இருக்கோம்.”

”ஹை ஜாலி, அப்ப வருஷத்துக்கு 6000, பேங்கல
போட்டுக்கலாம், அப்புறமா பெருசா ஏதாவது
வாங்கிக்கலாம்” இது ஆஷிஷ்.

”ஆமாண்ணா” இது அம்ருதம்மான்னு சொல்லணுமா!!

நான் சொல்றது மொத்தத்தையும் கேட்டுட்டு அப்புற்மா
கொண்டாடலாம்.

”சரி சொல்லுங்க!”

”பாக்கெட் மணி அதிகமாக்கினதுக்கு காரணம் அப்படியே
பேங்கல போட்டுக்கறதுக்கு இல்லை!! செலவும்
செய்யணும். உங்க ஸ்டேஷனிரி, செருப்பு
தைக்கறது,கிப்ட் எல்லாத்துக்கும் அதுலேர்ந்துதான்
எடுத்துக்கணும்.”

”ஐயோ!”எல்லாம் எங்க பாக்கெட் மணியிலேர்ந்துன்னா எப்படிம்மா?”
அப்ப மணி கணிசமா குறையேமே!!”

”ஆமாண்ணா, கிப்டுக்கு இனிமே அதிகமா பட்ஜட்
வேண்டாம்”

“நீ 100 ருபீஸ் போடு, நான் 100 ருபீஸ் போடறேன்”
அதுல வாங்கிக்கலாம்”.

(தன் பணம் குறையுதுன்னதும் என்னமா சிக்கன
பட்ஜட் போடறாங்க. அவ்வ்வ்வ்வ்)”இன்னொரு முக்கியமான விஷயம்!! அங்க கட்டு,
இங்க கட்டுன்னு பாயின்ட்ஸ் கட்டானா உங்க
பாக்கெட் மணியும் குறையும். அதனால் நல்லா
ப்ளான் செஞ்சுக்கோங்க, ஒழுங்கா பாயிண்ட்ஸ்
கட்டாகம பாத்துக்கோங்க.”

”பர்த்டே மாசா மாசம் வரப்போறதில்லை.
கிப்ட் செப்டம்பர், அக்டோபர், ஜனவரிலதானே!!
பிரச்சனையில்லை”


”அண்ணா, எனக்கு தீபாவளிக்கு, பொங்கலுக்கு
பணம் தரணும், மறந்திடாதே!!”

”ஆமாம் ரக்‌ஷா பந்தனுக்கும், கருடபஞ்சமிக்கும்
நீ எனக்கு பணம் தரணும் அதுவும் லிஸ்ட்ல
போட்டுக்கோ”

(தன் வரும்படியை கரீக்டா ஞாபகம் வெச்சிருக்குங்க
இரண்டு பிள்ளைகளூம்.. தேறிடுவாங்க...)

திட்டமெல்லாம் நீங்க போட்டுக்கோங்க.
நாங்க வாங்கித் தர்றதுக்கு மேல
கடைக்கு போகும்போதெல்லாம் எனக்கு அந்த
பொம்மை, இந்த பொம்மை, அடிக்கடி புது ஷூ,
எல்லாம் கேட்டா நாங்க வாங்கித் தர மாட்டோம்!
உங்க பாக்கெட் மணிதான் செலவு செஞ்சுக்கணும்”.

”எங்க பணத்துலேர்ந்துன்னா வேணவே வேணாம்.
நாம டாய்ஸ் வேணும்னு கேப்போம் அம்ருதா??
அம்மா,அப்பா வாங்கிகொடுப்பதோடயே சந்தோஷமா
இருப்போம்!! இல்ல பாப்பா!!!”

அடப்பாவிகளா!ன்னு இந்த பாட்டைத்தான் நினைச்சுகிட்டேன்.

ஆனா எந்த எண்ணத்துக்காக பாயிண்ட்ஸ் போட்டு,
பாக்கெட் மணி கொடுத்து, அதை சேமிக்க
பேங்க அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேனோ!!
அது சரியா ஒர்க்கவுட் ஆகிடிச்சு.

பணத்தோட அருமை புரியுது பசங்களுக்கு.
அனாவசிய செலவு தப்புன்னு தெரியுது.
சேமிப்பு அவசியம்னுபுரிஞ்சது.

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா சொல்லிக்கொடுத்த
பாயிண்ட்ஸ்& பாக்கெட் மணி திட்டத்துக்கு்
நான் மேலும் மெருகூட்டி போட்டுவைத்த
சேமிப்புத் திட்டம் ஓகே கண்மணின்னு பாடிக்கிட்டேன்.

27 comments:

நட்புடன் ஜமால் said...

(தன் பணம் குறையுதுன்னதும் என்னமா சிக்கன
பட்ஜட் போடறாங்க. அவ்வ்வ்வ்வ்)\\


ஹா ஹா ஹா

ஆனாலும் ஆரோக்கியம் ...

நட்புடன் ஜமால் said...

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா சொல்லிக்கொடுத்த
பாயிண்ட்ஸ்& பாக்கெட் மணி திட்டத்துக்கு்
நான் மேலும் மெருகூட்டி போட்டுவைத்த
சேமிப்புத் திட்டம் ஓகே கண்மணின்னு பாடிக்கிட்டேன்.\\

அவங்களுக்கும் பகிர்ந்துகிட்ட தங்களுக்கும் நன்றி :)

சென்ஷி said...

:)

வித்யா said...

குட்.

மயில் said...

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா சொல்லிக்கொடுத்த
பாயிண்ட்ஸ்& பாக்கெட் மணி திட்டத்துக்கு்
நான் மேலும் மெருகூட்டி போட்டுவைத்த
சேமிப்புத் திட்டம் ஓகே கண்மணின்னு பாடிக்கிட்டேன்.//

அது என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க.. பதிவு போட்டுருகீங்கள?

தீஷு said...

Really superb idea.. எனக்குக்கூட சிறு வயதிலேயே செலவு செய்தல், சேமிப்பு, சிக்கனம் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும் என்று ஆசை. இப்ப தீஷு வயசுக்கு ஏற்ப உண்டியல் தான் வச்சிருக்கோம். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். அவளுக்கு ஆரம்பிக்கிறதிலிருந்து அனைத்தும் புரிய வேண்டும் என்பது என் எண்ணம். பாயிண்ட்ஸ் ஸிஸ்டம் நல்ல ஐடியா. அந்த பதிவுல அன்னைக்கு கமெண்ட் போட முடியததுனால சொல்ல முடியல..பகிர்வுக்கு நன்றி.

ஜானி வாக்கர் said...

நல்ல திட்டம், சீக்கிரம் வீட்டுல அறிமுக படுத்த இருக்கேன்.

இத்தனை நாள் தோணவே இல்ல.

பகிர்தலுக்கு நன்றி.

இப்ப்டி இன்னும் ஏதாவது திட்டம் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இது நம்ம ஆளு said...

அண்ணா,
பிரமாதம் :)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

ஸ்மைலிக்கு நன்றி சென்ஷி

புதுகைத் தென்றல் said...

அது என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க.. பதிவு போட்டுருகீங்கள?//

இதே பதிவுல ஹோம் மேனேஜ்மண்ட் கமிட்டின்னு ஒரு பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கேன். அதுல கோல்டன் ரூல்ஸ் பத்தின பதிவுக்கு லிங்க்ஸ் இருக்கு மயில்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

சேம் ப்ளட்டா இருக்கீங்க தீஷு அம்மா,

மொதல்ல உண்டியல்தான் நானும் வெச்சிருந்தேன். போன வருஷம் தான் கிட்ஸ் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன்.

வங்கி வழக்கமெல்லாம் தெரிஞ்சிகட்டும்னு ஆரம்பிச்சேன்.
வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

இப்ப்டி இன்னும் ஏதாவது திட்டம் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.//

கண்டிப்பா பகிர்ந்துகொள்வேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

அண்ணா,//

:))))))))) தம்பி இது யக்கோவ்.


பிரமாதம் :)//

தாங்ஸ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்

இது நம்ம ஆளு said...

வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

கோபிநாத் said...

ஆகா...கலக்குறிங்க..கலக்குறாங்க ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க குட்டீஸும் பணம் காசுல கெட்டியா இருக்காங்கப்பா.. :( அப்பாக்கிட்டயே அக்கவுண்ட்... என் பணம் உங்ககிட்ட 6000 இருக்குப்ப்பா..நியாபகம் இருக்குல்லன்னு அடிக்கடி கேட்டுப்பாங்க..:)

நாஞ்சில் நாதம் said...

சிறு வயதிலேயே வரவு செலவு தெரிஞ்சுகிட்டா பெரியவங்க ஆன சேமிப்பு, சிக்கனம் தான வரும். நல்லதொரு குழந்தை வளர்ப்பு முறை.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கோபி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் கயல்,

போன மாசம் கைமாத்தா 600 ரூபாய் வாங்கிகிட்டேன், அடிக்கடி ஞாபகப்படுத்துதல் நடக்குது. :)

புதுகைத் தென்றல் said...

நல்லதொரு குழந்தை வளர்ப்பு முறை.//

நன்றி நாஞ்சல் நாதம் அவர்களே

அ.மு.செய்யது said...

இது என்ன சர்வ சிkக்ஷ அபியான் திட்டம் மாதிரியா ?‌

மங்களூர் சிவா said...

wow fantastic!

/
புதுகைத் தென்றல் said...

போன மாசம் கைமாத்தா 600 ரூபாய் வாங்கிகிட்டேன், அடிக்கடி ஞாபகப்படுத்துதல் நடக்குது. :)
/

லேட் ஃபீஸ், பெனால்டி எல்லாம் சேத்து போட்டு 1000 ரூபாயா ரிடர்ன் பண்ணீடுங்க இதுதான் இந்த நாட்டாமை தீர்ப்பு!

:))))))))

புதுகைத் தென்றல் said...

இது என்ன சர்வ சிkக்ஷ அபியான் திட்டம் மாதிரியா ?‌/

:)))

புதுகைத் தென்றல் said...

லேட் ஃபீஸ், பெனால்டி எல்லாம் சேத்து போட்டு 1000 ரூபாயா ரிடர்ன் பண்ணீடுங்க இதுதான் இந்த நாட்டாமை தீர்ப்பு!//

நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு.

600 ரூபாய் கைமாத்துக்கு திரும்ப கொடுக்கும் போது 1000 ரூப்யா? கட்டுப்படியாகாது. :))

$anjaiGandh! said...

:)