Friday, July 03, 2009

தங்கத்தில் முகமெடுத்து....

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து,
மங்கையென்று வந்திருக்கும்- நிலவோ
நீ மாலை நேர பொன்மஞ்சள் அழகோ...

மீனவ நண்பன்படத்தில் கானகந்தர்வனின்
குரலில் அருமையான பாடல்.

நம் முகத்தை நிஜமாகவே தங்கம்போல் ஜொலிக்க வைக்கலாம்.
எப்படி என்றால் ஃபேசியல் செய்து கொள்வதன் மூலம்
முக அழகு வெளிப்படும்.



முகம் சொறசொறப்பாக இருப்பதாக உணர்கிறீர்களா?
முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் ஏற்படுகிறதா?
அப்படியானால் ஃபேசியல் மிக அவசியம்.

ப்ளாக் ஹெட்ஸ் மூக்கின் மேற்புறத்தில் அசிங்கமாக
இருக்கும். அதை நீக்கவும் ஃபேசியல் உதவுகிறது.
முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய், காய்ந்த சரும
திசுக்கள் இவை ப்ளாக் ஹெட்ஸ் வர காரணம்.

ஃபேசியல் பார்லருக்கு சென்று செய்து கொண்டால்,
சில சமயம் காசுகேற்ற பணியாரம் கிடைக்காத
மாதிரி இருக்கும். நாமே வீட்டில் ஃபேசியல் செய்து
கொள்ளலம். 15 நாட்களுக்கொரு முறை செய்து
கொண்டால் கூட முகம் ஜொலிக்கும்.

(இது ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும்)


வீட்டிலேயே ஃபேசியல் செய்து கொள்வது எப்படி??
வாங்க பார்க்கலாம்.

ஃபேசியலுக்குத் தேவையான சாமான்கள் ஒவ்வொரு
ஸ்டப்பிலும் கொடுத்திருக்கிறேன். நல்ல தரமான
பொருட்களாக பார்த்து வாங்கிக்கொள்ளவும்.

முதல் ஸ்டெப்: கிளன்சிங்.



தரமான கிளன்சிங் மில்கை பஞ்சில் எடுத்துக்கொண்டு
முகம,கழுத்து, பின்னங்கழுத்து, காது, காதின் பின் புறம்
ஆகிய இடங்களில் மெல்ல தேய்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.


இரண்டாவது ஸ்டெப்: ஸ்க்ரப்பிங்.





தரமான ஃபேஸ் ஸ்க்ரப்பை கைவிரல்களில் கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து முகம் முழுதும்(நெற்றி, கண்களுக்கு கீழ், கண்ணம் என
எங்கெங்கெல்லாம் எண்ணெய் பசை அதிகமாகுமோ அங்கெல்லாம்), கழுத்து,
பின்னங்கழுத்து ஆகிய பகுதிகளில் நன்கு தேய்க்கவும்.

கொஞ்சம் ப்ரஷ்ர் அதிகம் கொடுத்து தேய்க்கவும்.



ஸ்கரப்பி்ங் செய்வதன் மிக முக்கிய நோக்கம்
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை எடுத்து
முகத்தை ஃப்ரெஷ்ஷாக காட்டுவது.

முகத்தை நீர் கொண்டு கழுவி,
மெல்ல துடைக்கவும்.

மூன்றாவது ஸ்டெப்: ஸ்டீமீங்

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்துக்கொண்டு
ஜலதோஷம் பிடித்த பொழுது முகத்துக்கு ஆவி
பிடிப்போமே அப்படி முகமுழுதும் ஆவி பிடிக்கவேண்டும்.


இது முகத்திலிருக்கும் துவாரங்கள் திறக்க உதவும்.
சாதாரண தண்ணீர் அல்லது ரோஜா இதழ்கள், மல்லிப்பூ
துளசி போன்றவை நீரில்சேர்த்தும் ஸ்டீம் செய்யலாம்.
10 முதல் 15 நிமிடங்கள் வரை ஸ்டீமிங் செய்ய வேண்டும்.
ப்ளாக் ஹெட்ஸ் போன்றவற்றை சற்றே டிஷ்யூ பேப்பர்
கொண்டு அழுத்தினால் வந்துவிடும்.(ஸ்டீமிங்கிற்கு
பிறகுதான் இது செய்யப்பட வேண்டும்)

நான்காவது ஸ்டெப்: மாஸ்க்.
நம் முகத்தின் தன்மை எது வென்று தெரிந்துக்கொண்டு
மாஸ்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உலர்ந்த சருமத்துக்காரர்கள் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை
மோரில் அல்லது பாலாடையில் கலந்து போடலாம்.

எண்ணெய் சருமத்துக்காரர்கள் மோர்,பாலாடை
போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முல்தானி மட்டியை, பன்னீரில் கலந்து
போடுவது மிகச் சிறந்தது.



2 வெள்ளரித்துண்டங்களை கண்களில் வைத்து முகத்தில்
இருக்கும் மாஸ்க் காயும் வரை வைகக்வும்.

ஐந்தாவது ஸ்டெப்: துவாரங்களை அடைத்தல்.

மாஸ்க் நன்கு காய்ந்து முகம் டைட்டாக இருப்பது
போல் உணரும் நிலையில் கொஞ்சம் வெதுவெதுப்பான
நீர்க்கொண்டு கழுவவும். திறந்திருக்கும் துவாரங்கள்
அடைக்கப்பட இது உதவும்.





ஆறாவது ஸ்டெப்: டோனிங்.

நல்ல தரமான டோனர் அல்லது மாய்ச்சுரைசிங் கிரீம் கொண்டு
முகம் ,கழுத்து பகுதிகளில் அழுத்தம் கொடுத்து
மசாஜ் போல் செய்ய வேண்டும். இது முகத்திற்கு
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.






அவ்வளவுதான்,30 அலல்து 45 நிமிடங்களில் அழகான முகம் ரெடி.

குறிப்புக்கள்:

1.மாஸ்க் போட நேரமில்லை என்றால் அதற்கு முன்பு
வரை ஸ்டெப்களை தொடர்ந்து மாஸ்கிற்கு பதில்
EVER YOUT PEEL OFF போன்றவற்றை உபயோகிக்கலாம்.

2. மாசாஜ் செய்யும் பொழுது அதிக அழுத்தம் கூடாது.

3. வீட்டிலேயே ஃபேஸ் ஸ்கரப் தயாரிக்க.
ஆண்டாள் ஸ்நான பவுடர் ஒரு பாக்கெட் வாங்கி
வைத்துக்கொண்டால் அருமையான நேச்சுரல் ஸ்க்ரப்.

4. முகத்தை கழுவ சோப் உபயோகிப்பதை விட
Face wash உப்யோகிப்பது சாலச் சிறந்தது.
எண்ணெய் சருமத்துக்காரர்கள் குளியல்தவிர
இரண்டுமுறை முகம் கழுவுவதால் முகத்தில்
கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


அப்பல்ஸ், அலம்பல்ஸ் இல்லாமல் அழகாத்தான்
இருக்கேன் என்று சொல்லிக்கொள்பவர்கள் கண்ணாடியில்
ஒரு தடவைக்கு 4 தடவை சரியாக பார்த்துக்கொள்ளவும்.

ஃபேசியல்ஸ் செய்து கொள்வது அழகூட்ட அல்ல.
முகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள.
தூய்மையாக இருக்கும் எதுவும் அழகுதான்.

எந்த பூச்சும், மேக்கப்பும் இல்லாமல் முகத்தையும்,
கழுத்தையும் அழகாக்கும் ஒரு வழிதான் ஃபேசியல்.
மேக்கப் போடுவதை விட ஃபேசியல் மிகச் சிறந்தது.


இந்த வார விடுமுறையில் ஃபேசியல் செய்து
பாருங்கள்! புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்!!

இனிதான வாரவிடுமுறைக்கு என் வாழ்த்துக்கள்

பெடிக்யூர் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே:

12 comments:

நட்புடன் ஜமால் said...

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து,
மங்கையென்று வந்திருக்கும்- நிலவோ
நீ மாலை நேர பொன்மஞ்சள் அழகோ...\\


உள்ளே போய்ட்டு அப்படியே சொக்க வைக்கும் குரலும் வரியும் ...

நட்புடன் ஜமால் said...

இனிதான வாரவிடுமுறைக்கு என் வாழ்த்துக்கள் \\


நன்றிக்கோவ்!

மற்றவை அவுட் ஆஃப் சம்பேரூந்து ...

Anonymous said...

சூப்பர் பதிவுப்பா, அப்படியே என்ன மேக்கப் எப்படி பண்றதுன்னு தெரிஞ்ச அதையும் போடுங்கள்...

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு தென்றல்.

pudugaithendral said...

உள்ளே போய்ட்டு அப்படியே சொக்க வைக்கும் குரலும் வரியும் ...//
இந்த தலைப்பு தோணியதும் ஒரு 6 முறையாவது ம்யூசிக் ப்ளக் இனில் இந்த பாட்டை கேட்டிருப்பேன்.

pudugaithendral said...

மற்றவை அவுட் ஆஃப் சம்பேரூந்து ...//

அப்படிஎல்லாம் ரங்கமணிகள் எஸ் ஆகக்கூடாது.

உங்க வீட்டு அம்மிணிக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்து, செஞ்சுக்க சொல்லிக்கொடுத்து(வாய்ப்பும், மனசும் இருக்கறவங்க செஞ்சும் விட்லாம்)
நல்ல பேரு வாங்கணும்

pudugaithendral said...

சூப்பர் பதிவுப்பா,//

நன்றி மயில்.
அப்படியே என்ன மேக்கப் எப்படி பண்றதுன்னு தெரிஞ்ச அதையும் போடுங்கள்.//

ஆஹா, எனக்கு சென்சிடிவ் தோல் என்பதால் எந்த மேக்கப் அப்பும் போடுவதே இல்லை.
அதிக பட்சமா கண்களுக்கு கண்மைதான்.

ஆக மேக்கப் பத்தி ஐடியா லேது... சாரி

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி

நர்சிம் said...

//தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து,
மங்கையென்று வந்திருக்கும்- நிலவோ
நீ மாலை நேர பொன்மஞ்சள் அழகோ...
//

மிகவும் பிடித்த பாடல்.

மங்களூர் சிவா said...

/
(இது ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும்)
/

இப்பிடி எல்லாம் ஃபேஷியல் செஞ்சிகிட்டா, தங்கமணியை காலேஜ்ல ட்ராப் செய்ய ஒத்துக்க மாட்டாளே!
:))))))))))))))))

மங்களூர் சிவா said...

ஃபேஷியல் எப்படி செய்வது என்ற விளக்கம் சூப்பர்!

butterfly Surya said...

அருமையான பாடல் வரியுடன் மேக்கப் வாசிகளுக்கு அவசியமான பதிவு...