Monday, July 06, 2009

தோட்டம் பார்க்க வாங்க..

வடக்கு 4ல் (புதுகையில் எங்கள் வீடு) இருந்த பொழுது
மிகச்சிறிய இடம். அதில் கறிவேப்பிலை, வாழை,
துளசி, செம்பருத்தி ஆகிய செடிகள் இருந்தன.

எப்போதும் காய்க்கும் முருங்கைமரமும் உண்டு.

பச்சை பசேல் என்ற இயற்கை அழகு கண்ணிற்கு
குளிர்ச்சி தரும். இலங்கையை எனக்கு மிகவும்
பிடித்ததன் காரணமே அதன் பசுமை தான்.அங்கே மிகச் சிறிய வீடுகளில் கூட கண்டிப்பாய்
செடி வைத்திருப்பார்கள். நாங்கள் இருந்த வீட்டில்
எப்போதும் பூக்கும் நந்தியாவட்டை பூ, துளசி
சில க்ரோட்டன்ஸ் வகைகள் வைத்திருந்தேன்.
வாழை, கறிவேப்பிலை எல்லாமும் உண்டு.

எங்கள் வீட்டு வேலைகாரம்மா மேரி அந்த
கறிவேப்பிலையின் வாசத்தை மிகவும் மெச்சிக்கொள்வார்.

இவைகளை விட்டு வர மனசில்லாமல் வந்தேன்.

இங்கு வந்த பிறகு இதற்கு முன் இருந்த வீட்டில்
வைத்திருந்த செடிகள் இங்கே வந்த பிறகு அதிக
வெயிலுக்கு காய்ந்து போய்விட்டன.

புதிதாக தோட்டம் போட முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில்தான் அமுதாவின் இந்தப் பதிவு.
ஆஹா!! இதையும் ஒரு தொடர் பதிவாக்கலாமே
என்று போட்டோ எடுத்து உங்களுக்காக இதோ...


பால்கனியை விட காலியாக இருக்கும் காரிடாரில்
வைத்தால் கதவு திறந்ததும் கண்ணிர்க்கு குளிர்ச்சியாக
இருக்குமென என் தோட்டம் இங்கே..

வெண்டக்காயும், கத்திரிக்காயும் விதை இன்னும்
முளைக்கவில்லை.வரவேற்க வாசற்படியில் ரெடியாய் ஒரு செடி
வரவேற்பரையிலும் பசுமைக்காக ஒரு சின்ன ஏற்பாடு:


பூத்துக்குலுங்கும் செடிகள்:


ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)
அப்படின்னு கயல்விழி கேட்டிருந்தாங்க.

கயல்விழி, அமுதா எங்கிருந்தாலும் வாங்க.
மற்ற நண்பர்களும் எங்க வீட்டு தோட்டத்தை பார்க்க
வந்திருக்காங்க.

தோட்டம் வெச்சிருக்கறவங்க எல்லோரையும் தொடர் பதிவுக்கு
அழைக்கிறேன். உங்க தோட்டத்தையும் பார்க்க ஆவல்..

18 comments:

நட்புடன் ஜமால் said...

வரவேற்பரையிலும் பசுமைக்காக ஒரு சின்ன ஏற்பாடு:\\

இது ரொம்ப அருமை அக்கா ...

மங்களூர் சிவா said...

எங்க வீட்டு தோட்டத்தை (மங்களூர்) சீக்கிரம் ஆர்குட்ல படமா போடறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா வச்சிருக்கீங்க உங்க வீட்டுத்தோட்டம் .. :) சின்னத்தொட்டின்னாலும் அழகா பூத்திருக்கு நந்தியாவட்டை..

ஜானி வாக்கர் said...

வெள்ளை அரளி கொள்ளை அழகு.

அமுதா said...

வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல். அழகான தோட்டம். எங்க வீட்டு தோட்டத்தை பற்றியும் ஒரு நாள் போடறேன்.

வண்ணத்துபூச்சியார் said...

அருமை...

படங்களும் அழகு...

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜமால்

புதுகைத் தென்றல் said...

ஆர்குட்ல்யும் போடுங்க, தனிப்பதிவாவும் போடுங்க.

இதைப்பாத்து 4 பேர் செடி வளர்த்தா நமக்குத்தானே நல்லது

புதுகைத் தென்றல் said...

அழகா வச்சிருக்கீங்க உங்க வீட்டுத்தோட்டம் ..//

நன்றி
சின்னத்தொட்டின்னாலும் அழகா பூத்திருக்கு நந்தியாவட்டை..//

ஆமாம் கயல்,

கொழும்பு வீட்டுத் தோட்டத்தை ஞாபகப்படுத்திக்கத்தான் நந்தியாவட்டையை வெச்சேன்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜானிவாக்கர்

புதுகைத் தென்றல் said...

அழகான தோட்டம்.//

நன்றி

எங்க வீட்டு தோட்டத்தை பற்றியும் ஒரு நாள் போடறேன்.//

மீ த வெயிட்டிங்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

மணிநரேன் said...

தோட்டம் நன்றாக உள்ளது.

புதுகைத் தென்றல் said...

நன்றி மணிநரேன்

Sutharsshini said...

பச்சை பசேல் என்ற இயற்கை அழகு கண்ணிற்கு
குளிர்ச்சி தரும். இலங்கையை எனக்கு மிகவும்
பிடித்ததன் காரணமே அதன் பசுமை தான்.//
எங்கள் இலங்கை உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி .
ஆச்சரியமான ஒற்றுமையாக எங்கள் வீட்டு வரவேற்பறை மேசை போலவே உங்களதும் இருப்பதுவும் மகிழ்ச்சி ;))))
உங்கள் பதிவுகளை சமீப காலமாக தொடர்ந்து படிக்கிறேன் நன்றாக உள்ளது :).
இன்னும் இன்னும் அதிகமாக உங்கள் தோட்டம் செழிக்கட்டும்..........
Sutharsshini

புதுகைத் தென்றல் said...

வாங்க சுதர்ஷினி,

7 வருடம் கொழும்புவில் இருந்து அனுஅனுவாக இலங்கையை அனுபவித்திருக்கிறேன்.


//ஆச்சரியமான ஒற்றுமையாக எங்கள் வீட்டு வரவேற்பறை மேசை போலவே உங்களதும் இருப்பதுவும் மகிழ்ச்சி //

சந்தோஷமோ சந்தோஷம்.
உங்கள் பதிவுகளை சமீப காலமாக தொடர்ந்து படிக்கிறேன் நன்றாக உள்ளது //

மிக்க நன்றி
இன்னும் இன்னும் அதிகமாக உங்கள் தோட்டம் செழிக்கட்டும்......//

வாழ்த்துக்கு நன்றி

2009kr said...

கடந்த 15 வருசங்களாக புதுகோட்டை வாசியான எனக்கு உங்களின் இந்த பிளாக் மிகவும் பிடித்து இருக்கிறது. உங்களின் எழுத்துக்களில் இந்த ஊரின் மீது நீங்கள் வைத்திருக்கும் சொந்தவூர் பாசம் நன்றாக தெரிகிறது. மிகவும் அமைதியான ஊர் இது.

புதுகைத் தென்றல் said...

வாங்க 2009கே ஆர்,

புதுகையில் வசிக்கீறீங்களா?? நல்ல ஊரு. வருகைக்கு மிக்க நன்றி.