Monday, July 06, 2009

அம்ருதா மொழி...

ஆஷிஷ் சென்னையில் ஆரம்பக்கல்வி கற்றதனால்
அவன் ஆங்கில உச்சரிப்புக்கள், வாசிப்புக்கள்
சாதாரண இந்திய பிரஜையின் உச்சரிப்புபோலிருக்கும்.

அம்ருதாவின் பள்ளிக்கல்வி ஆரம்பம் பிரிட்டிஷ்
முறைக் கல்வியில். இதனால் இருவரையும்
படிக்க வைக்கும்பொழுது செம கலாட்டாவாக இருக்கும்.

அம்ருதாவின் உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும்.
உச்சரிப்பை விட ஸ்பெல்லிங்கிற்கு படிக்கும்பொழுதுதான்
காமெடியே.

ஏ,பி,சி,டி என உச்சரிக்கும் எழுத்துக்கள் உண்மையில்
அப்படி உச்சரிக்கக்கூடாது. இது நான் மாண்டிசோரி
பயிற்சி எடுக்கும்போது தெரிந்தது.

Phonetic sound a-எ/அ b-ப c -க d-ட இப்படித்தான்
அம்ருதாவுக்குத் தெரியும்.

cat- கஎட என படிப்பாள் அம்ருதா.
BIG- பி இ க

இப்படிச் சொல்லிக்கொடுக்கும்பொழுது உச்சரிக்கும்
விதத்திலேயே எழுத ஈசியாக இருக்கும் என
அங்கே அப்படி சொல்லிக்கொடுப்பார்கள்.

இது ஆரம்பத்தில் எனக்கும் புதிராகத்தான் இருந்தது.
பிறகு எனக்கு வசதியாகிவிட்டது. அம்ருதாவுக்கு
ஸ்பெல்லிங் சொல்லிக்கொடுக்க ஆஷிஷ் முயலும்போதெல்லாம்
இந்த உச்சரிப்பு வித்யாசத்தில் எப்படி சொல்வது?
என புரியாமல்,”அம்மா, அம்ருதாவோட லாங்குவேஜ்ல{!!)
இதை எப்படி சொல்லணும்”? என்று கேட்பான்.

அயித்தானுக்கும் ஆரம்பத்தில் இதென்ன அம்ருதா லாங்குவேஜ்
என்று புரியாமல் இருந்தது. விவரம் சொன்னதும்
அவரும் பாட நேரத்தில் “சற்றே தள்ளியிரு்ம் பிள்ளாய்”
ஆகிவிட்டார். நாம் சாதரணமாக ஸ்பெல்லிங் படித்ததை
சற்று வித்யாசமாக சொல்வது கடினம்.

காரில் பயணிக்கும் போதெல்லாம் ஆஷிஷும், அம்ருதாவும்
world building விளையாட்டு விளையாடுவார்கள்.
ஆரம்பித்து விட்டு கடைசி எழுத்தை அம்ருதாவுக்கு
எப்படிச் சொல்வது? என என்னிடம் கேட்டு பிறகு
சொல்வான்.

அம்ருதா சொல்லும் வார்த்தைகள் புரிந்த பொழுது
சரி, புரியாவிட்டால் கடைசி எழுத்து என்னவென்று
அம்ருதா யோசித்து சொல்வதற்குள்,” அம்மாவே!
சொல்லட்டும் அம்ருதா!” என்று சொல்லிவிடுவான்.

ஒருமுறை பொனடிக்ஸ் முறை சொல்லிக்கொடுத்தேன்.
ஆனால் குழம்பிப்போவான். இ e/i எதற்கு சொல்ல
வேண்டுமென குழப்பம். v s இவற்றிற்கு
உச்சரிப்பு ஞாபகத்தில் இல்லாமல் குழம்புவான்.

அதனால் இந்த உச்சரிப்புக்கு அம்ருதா மொழி
என்றே பெயராகிவிட்டது வீட்டில். :))


இருவரும் படிப்பதென்னவோ ஆங்கிலம் தான்.
ஆனால் அம்ருதா படிப்பது வேற்றுமொழி என ஆஷிஷும்,
அண்ணா படிப்பது வேற்றுமொழி என அம்ருதாவும்
நினைத்துக்கொள்ளும் அளவுக்கு வீட்டில்
கலாட்டா நடக்கும்.


அம்ருதா கற்ற படி பொனடிக்ஸ் உச்சரிப்புக்கள்:

a- அ/எ, b-ப, c-க, d-ட, e-எ f-ஃப g-க h-ஹ
i -இj-ஜ k-க l-ல m-ம n-ன o-ஒ p-ப q-க்வ
r-ர s-ச t-ட u-உ v-வ

w-வ்வ x - க்ஸ் y-ய z-ஜி


curtain- இதை எப்படி உச்சரிப்போம்.
கர்டைன். ஆனால் ஸ்பெல்லிங் படிக்கும்பொழுது
சி யு ஆர் டி எ ஐ ன் இப்படித்தான் படிப்போம்.

பொனடிக்ஸ் படி எழுதுவதும் படிப்பதும் ஒரே மாதிரிதான்.

curtain- கர் + டெயின்

இது கொஞ்சம் பெரிய சப்ஜகெட்.


இவ்வகை உச்சர்ப்பு ஆரம்பக்கல்வியில் மட்டும்தான்.
1 வகுப்பு துவக்கத்திலேயே சாதரணமாக நம்மைப்போல்
படிக்க,உச்சரிகக் சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.

குழந்தையும் அதை சர்வ சாதரணமாக கற்றுக்கொண்டுவிடும்.

இப்பொழுது நினைத்தாலும் ஆஷிஷ்,அம்ருதாவின் லூட்டிக்கள்
கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும்.

18 comments:

நட்புடன் ஜமால் said...

ஆங்கிலம் கற்போம் வாருங்கள் ...

ஜானி வாக்கர் said...

தலைய சு த் து து சாமி !!

பொனடிக்ஸ் பெண்டு கழற்றிடும் போல இருக்கே.

சுரேகா.. said...

//அம்மா..அம்ருதா லாங்க்வேஜில் இதை எப்புடி சொல்வது?//

இதான் சூப்பரு!

pudugaithendral said...

ஆங்கிலம் கற்போம் வாருங்கள் //

:)))

pudugaithendral said...

பொனடிக்ஸ் பெண்டு கழற்றிடும் போல இருக்கே.//

ஆமாம், நாக்குக்கு நல்ல பயிற்சி.

அதனால்தான் நாம் பேசும் ஆங்கிலத்துக்கும், மேலைநாட்டு ஆங்கிலத்துக்கும் உச்சரிப்பு வித்யாசம் இருக்கும்.


கேரளத்தில் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்கும்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சுரேகா

அமுதா said...

:-))

நாஞ்சில் நாதம் said...

தலைய சு த் து து சாமி !!

பொனடிக்ஸ் பற்றி ஒரு பதிவு போடா முடியுமா? இந்த மேட்டர் புதுசா இருக்கு .

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமுதா

pudugaithendral said...

பொனடிக்ஸ் பற்றி ஒரு பதிவு போடா முடியுமா?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த மேட்டர் புதுசா இருக்கு .//

புதுசு மட்டுமல்ல ரொம்ப பெரிய மேட்டர்.

மங்களூர் சிவா said...

தலைய சு த் து து சாமி !!
:)))))

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

கேரளத்தில் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்கும்.
/

எதுஅந்த
"ஓட்டோவிலே கோலெஜ்-க்கு போறதா??

:))))))))))))))

நிஜமா நல்லவன் said...

தலைய சு த் து து சாமி !!
:)))))

na.jothi said...

யக்கோவ்
கேரளா மக்கள் பேசுறது தான் கரெக்டா:(((

Dhiyana said...

தீஷுவிற்கும் பொனிடிக்ஸ் முறையில் தான் வாசிக்க கற்றுத்தருகிறேன்.

pudugaithendral said...

ஓட்டோவிலே கோலெஜ்-க்கு போறதா//

:)) தங்கமணியை வேலைக்கு இறக்கிவிட மட்டும்தானே காலேஜ் போறீங்க... :))

எதுக்கும் உங்க தங்கமணிகிட்ட ஒரு எச்சரிக்கை செஞ்சு வெக்கணும்

pudugaithendral said...

தலைய சு த் து து சாமி !!//

பத்திரமா பாத்துக்கோங்க

pudugaithendral said...

நல்லது தியானா,

அதுதான் மிகச்ச் சிறந்த முறை. இங்கே வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் அம்ருதாவுக்கு பேச்சில் நிறைய்ய மாற்றம். முற்றிலும் நம்மைப்போல் பேச வந்துவிட்டது. கொஞ்சம் வருத்தமே என்றாலும் அவளை மட்டும் அனைவரும் வித்யசமாக பார்ப்பது குறையும்.